04 Jan 2023

Kunamennum Kundreri Nindraar Thirukkural Meaning

குறள்/ Kural: 29 with Meaning in Tamil and English

திருக்குறள் – kural and its explanation given below.

  • குறள் எண் – 29
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – பாயிரவியல்
  • அதிகாரம் – நீத்தார் பெருமை

குறள் எண் : 29


குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.

Transliteration:

Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu.





குறள் விளக்கம்/ Thirukkural meaning in Tamil and English:

மு.வ உரை:

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்..

கலைஞர் மு.கருணாநிதி உரை:

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

Translation:

The wrath ’tis hard e’en for an instant to endure,
Of those who virtue’s hill have scaled, and stand secure.

Explanation:

The anger of those who have ascended the mountain of goodness, though it continues but for a moment, cannot be resisted.

For other kurals in நீத்தார் பெருமை / Neeththaar Perumai, check the link – Neeththaar Perumai Adhikaram Kurals

To see all 1330 Thirukkural with meaning in both Tamil and English PDF, Check the link – Thirukkural with meaning PDF



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *