18 Jul 2022

Samacheer Kalvi 8th Social Civics Unit 2 in Tamil

8th Social Science Civics Unit 2 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 8 Social New Syllabus 2022 Civics Unit 2 – குடிமக்களும் குடியுரிமையும் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Social Science History Book Portion consists of  08 Units, Geography Book Portions Consists of 08 Units, Civics Book Portions Consists of 07 Units, Economics Units Consists of 02 Units.  Check Unit-wise and Full Class 8th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Civics Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 8th Social Science Book Back Questions with Answer PDF:




8th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 8th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Civics questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 02: குடிமக்களும் குடியுரிமையும் Book Back Answers in Tamil

Civics (குடிமையியல்) – அலகு 02

குடிமக்களும் குடியுரிமையும்

 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

1. கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
அ) பிறப்பின் மூலம்
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
இ) வம்சாவழியின் மூலம்
ஈ) இயல்பு குடியுரிமை மூலம்
விடை:
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்

2. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
அ) பகுதி II
ஆ) பகுதி II பிரிவு 5-11
இ) பகுதி II பிரிவு 5-6
ஈ) பகுதி I பிரிவு 5-11
விடை:
ஆ) பகுதி II பிரிவு 5-11

3. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) இந்திய தலைமை நீதிபதி
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ஒரு நாட்டின் _____________, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
விடை:
குடிமக்கள்

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
விடை:
ஒற்றைக்

3. இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ______________ என அழைக்கப்படுகிறார்.
விடை:
வெளிநாட்டு வாழ் இந்தியன்

4. மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் __________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
விடை:
குடிமை பொறுப்பை

5. _____________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
விடை:
உலகளாவிய குடியுரிமை

III. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.
விடை:
தவறு

2. வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.
விடை:
தவறு

3. அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.
விடை:
சரி

4. நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.
விடை:
தவறு




IV. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க

1. ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது

அ) i மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii, iv சரி
ஈ) i, ii, iii சரி,
விடை:
ஆ) i மற்றும் iii சரி

2. கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்லல
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) காரணம், கூற்று இரண்டும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்ததைகளில் விடையளி

1. குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
விடை:
குடியுரிமை இரண்டு வகைப்படும்
இயற்கை குடியுரிமை:
ஒருவர் பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமையே இயற்கை குடியுரிமையாகும்.

இயல்புக் குடியுரிமை:
இயல்பாக விண்ணப்பித்து ஒருவர் பெறும் குடியுரிமையை இயல்புக் குடியுரிமை என்பர்.

2. ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை?
விடை:
ஓர் இந்தியக் குடிமகன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட உரிமைகளை அனுபவிக்கிறார்.

  • அடிப்படை உரிமைகள்
  • மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்ட மன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை
  • இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் உறுப்பினராவதற்கான உரிமை

3. நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக
விடை:

  • அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
  • சட்டத்துக்கு கீழ்படிதல்
  • சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.

4. இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் இந்திய குடிமகனாவதற்கு ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

  • பிறப்பால் குடியுரிமை பெறுதல்
  • வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்
  • பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
  • இயல்பாக விண்ணப்பித்து குடியுரிமை பெறுதல்
  • பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்

5. 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. மேலும் இச்சட்டம் இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை கூறுகிறது.

VI. விரிவான விடையளி

1. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
விடை:
குடியுரிமை ரத்து பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.

    1. குடியுரிமையை துறத்தல் (தானாக முன் வந்து குடியுரிமையைத் துறத்தல்)
      • ஒருவர் வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
    2. குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)
      • ஓர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்டுகிறது.
    3. குடியுரிமை மறுத்தல்: (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
        • மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் முதலியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.

Other Important Links for 8th Social Science Book Back Answers Tamil Medium:

Click Here to download Samacheer Kalvi’s 8th Social Science Book Back Answers Tamil – 8th Social Science Book Back Answers Tamil Medium




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *