30 May 2022

Samacheer Kalvi 6th Geography Term 3 Unit 1 Answers in Tamil

Samacheer Kalvi 6th Geography Term 3 Unit 1 Social Book Back Question and Answers:

Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 3 அலகு 1 –  தென்னிந்திய அரசுகள் Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 08 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science Geography Book Back Unit 1 Term 3 Answers PDF in Tamil:




Samacheer Kalvi 6th Social Geography Book Back Unit 1 Term 3 Answers/Solutions Guide PDF:

Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் – பருவம் 3

புவியியல் அலகு 1  தென்னிந்திய அரசுகள்

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

1. ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?
அ) கருங்கடல்
ஆ) மத்திய தரைக்கடல்
இ) செங்கடல்
ஈ) அரபிக்கடல்
விடை: ஈ) அரபிக்கடல்

2. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி
அ) தீபெத்
ஆ) ஈரான்
இ) தக்காணம்
ஈ) யுனான்
விடை: ஆ) ஈரான்

3. நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது –
i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்
ii) சராசரி மழையளவு 200 மி.மீ ஆகும்.
iii) சராசரி வெப்பநிலை10°C ஆகும். மேற்கண்ட கூற்றுகளில்
அ) i மட்டும் சரி
ஆ) ii மட்டும் iii சரி
இ) i மற்றும் iii சரி
ஈ) மற்றும் ii சரி
விடை: அ) 1 மட்டும் சரி

4. பட்டியல் I ஐ பட்டியல் | உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.

6th Social Science Book
விடை: அ) 2, 3, 4, 1

5. இந்தியா ……. உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
அ) துத்தநாகம்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) நிலக்கரி
விடை: ஆ) மைக்கா

6. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை
அ) ஆல்ப்ஸ்
ஆ) பைரனீஸ்
இ) கார்பேதியன்
ஈ) காகஸஸ்
விடை: ஆ) பைரனீஸ்

7. ‘ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது. சரியான தெரிவினைத் தேர்வு செய்க.
அ) இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன.
இ) இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன.
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரி
விடை: ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

8. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
அ) ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
ஆ) ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன.
இ) ஐரோப்பாவின் பெரும்பாலான ஆறுகள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
ஈ) ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்.
விடை: ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன.

9. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) மெஸ்டா – ஸ்பெயின்
ஆ) ஜூரா – பிரான்ஸ்
இ) பென்னின்ஸ் – இத்தாலி
ஈ) கருங்காடுகள் – ஜெர்மனி
விடை: இ) பென்னின்ஸ் – இத்தாலி

10. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
அ) ஐஸ்லாந்து
ஆ) நெதர்லாந்து
இ) போலந்து
ஈ) சுவிட்சர்லாந்து
விடை: அ) ஐஸ்லாந்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தாரஸ் மற்றும் போன்டைன் மலைத்தொடர்கள் ……… முடிச்சிலிருந்து பிரிகின்றது.
விடை: ஆர்மினியன்

2. உலகின் மிக ஈரப்பதமான இடம் ……….
விடை: மௌசின்ராம்

3. உலகிலேயே ………… உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.
விடை: பேரீச்சம் பழங்கள்

4. ஐரோப்பாவையும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் கடல்வழி …..
விடை: சூயஸ் கால்வாய்

5. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ……..
விடை: டினிக்லிங்

6. ஐரோப்பாவின் இரண்டாம் இரண்டாவது உயரமான சிகரம் ……..
விடை: மாண்ட் பிளாங்

7. ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை ………
விடை: கண்ட காலநிலை

8. வட கடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம் ………..
விடை: டாகர் பாங்க்ஸ் (Dogger Banks)

9. ஐரோப்பாவின் மக்களடர்த்தி …….
விடை: சதுர கிலோமீட்டருக்கு 34 நபர்கள்

10. …………. ஆறு ஐரோப்பாவில் உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்து செல்கின்றது.
விடை: டான்யூப்

III. பொருத்துக:

6th Social Science book back in Tamil

விடை:
1. யூப்ரடீஸ் சடைக்ரிஸ்
2. அதிக மழை
3. தாய்லாந்து
4. நார்வே
5. ஸ்பெயின்




IV. மேலும் கற்கலாம்:

1. கூற்று (A) : இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது.
காரணம் (R) : இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
அ. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.
ஆ. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ. (A) சரி. ஆனால் (R) தவறு.
ஈ. (A) தவறு. ஆனால் (R) சரி
விடை: ஈ. (A) தவறு. ஆனால் (R) சரி

2. கொடுக்கப்பட்ட ஆசியா வரைபடத்தில் குறி குறியீடுகள் : க்கப்பட்டுள்ள 1, 2, 3 மற்றும் 4 என்பன கீழ் கண்ட சமவெளிகளைக் குறிக்கின்றன.
6th Social Science in Tamil Medium
A. சிந்து – கங்கை சமவெளி
B. மஞ்சூரியன் சமவெளி
C. மெசபடோமியா சமவெளி
D. சீனச் சமவெளி

வரைபடத்தில் உள்ள எண்ணுடன் சமவெளிகளைப் பொருத்தி, பின் கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

6th Social Book Back Solutions
விடை : ஆ) 2 1 3 4

3. கொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை
அ) கரும்பு
ஆ) பேரிச்சம்பழம்
இ) ரப்பர்
ஈ) சணல்

6th Social Science Book Back Questions and Answers in Tamil
விடை: ஆ) பேரிச்சம்பழம்




V. சுருக்கமான விடையளி:

1. ஆசியாவில் உள்ள முக்கிய மலையிடைப் பீடபூமிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அனடோலிய பீடபூமி
  • ஈரான் பீடபூமி
  • திபெத்திய பீடபூமி

2. ‘மான்சூன் காலநிலை பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:

  • தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகள் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும்.
  • கோடை காலம் அதிக வெப்பமும் ஈரப்பதத்துடனும், குளிர்காலம் வறண்டும் காணப்படும்.
  • கோடை காலப் பருவமழைக் காற்றுகள் இந்தியா, வங்காள தேசம், இந்தோ – சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனா ஆகிய இடங்களுக்கு அதிக மழைப்பொழிவைத் தருகின்றன..

3. நிலத்தோற்றங்கள் ஆசியாவின் மக்கள் தொகை பரவலை எவ்வாறு பாதிக்கின்றது?
விடை:

  • உலக மக்கள் தொகையில் பத்தில் ஆறுபங்கு ஆசியாவில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட – இயற்கைக் கூறுகளினால் ஆசியாவின் மக்கட்பரவல் சீரற்றுக் காணப்படுகிறது.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி மிகக் குறைந்து காணப்படுகிறது. (சதுர கிலோமிட்டருக்கு 143நபர்கள்)

4. ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • டோக்கியோ
  • ஷங்காய்
  • சிங்கப்பூர்
  • ஹாங்காங்
  • சென்னை
  • மும்பை
  • கராச்சி
  • துபாய்

5. ‘வேறுபாடுகளின் நிலம்’ ஆசியா நிரூபி.
விடை:
உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியா வேற்றுமையின் இருப்பிடம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்

  • ஆசியா பல்வேறுபட்ட நிலத்தோற்றங்களைக் கொண்டது (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், விரிகுடாக்கள், தீவுகள்)
  • அது பல்வேறு காலநிலைகளைக் கொண்டது (நிலநடுக்கோட்டிலிருந்து துருவப்பகுதி வரை)
  • பல இனங்கள், மொழிகள், சமயங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆசிய மக்களால் பின்பற்றப் படுகின்றன.

6. ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை?
விடை:

  • சியாரா நெவேடா பைரினீஸ்
  • ஆல்ப்ஸ்
  • அப்னின்ஸ்
  • டினாரிக் ஆல்ப்ஸ்
  • காகசஸ்
  • கார்பேதியன்

7. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகள் யாவை?
விடை:

  • வோல்கா
  • டான்யூப்
  • நீப்பர் ரைன்
  • ரோன்
  • போ
  • தேம்ஸ்

8. ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்ட நாடுகளின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:

  • பிரான்ஸ்
  • ஸ்பெயின்
  • இத்தாலி
  • சிசிலி

9. ஐரோப்பாவின் மக்கள் தொகையைப் பற்றிச் சிறு குறிப்புத் தருக.
விடை:

  • ஐரோப்பா கண்டம் ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டது.
  • 2018ல் ஐரோப்பாவின் மக்கள்தொகை 742 மில்லியன் (உலக மக்கள் தொகையில் 9.73 சதவீதம்) ஐரோப்பிய மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 34 நபர்கள்

10. ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிடு.
விடை:

  • கிறிஸ்துமஸ்
  • ஈஸ்டர்
  • புனித வெள்ளி
  • புனிதர்கள் நாள்
  • ரெடன்டோர்
  • டோமாட்டினா
  • கார்னிவல்

VI. வேறுபடுத்துக்:

1. மலையிடைப் பீடபூமி மற்றும் தென்பீடபூமி
விடை:
மலையிடைப் பீடபூமி

  • அனடோலிய பீடபூமி
    (போன்டைனிலிருந்து டாரஸ்மலை வரை)
  • ஈரான் பீடபூமி
    (எல்பர்ஸிருந்து ஜாக்ரோஸ் வரை)
  • திபெத்திய பீடபூமி
    (குன்லுனிலிருந்து இமயமலை வரை)

தெற்கு பீடபூமிகள்

  • அரேபிய பீடபூமி (சௌதி அரேபியா)
  • தக்காண பீடபூமி (இந்தியா)
  • ஷான் பீடபூமி (மியான்மர்)
  • யுனான் பீடபூமி (சீனா)
    இப்பீடபூமிகள் வடக்கு பீடபூமிகளைக்
    காட்டிலும் உயரம் குறைந்து காணப்படுகின்றன.

2. வெப்பப் பாலைவனம் மற்றும் குளிர்பாலைவனம்
விடை:
வெப்பப் பாலைவனம்

  • அரேபிய பாலைவனம் (சௌதி அரேபியா)
  • தார் பாலைவனம்
    (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

குளிர்பாலைவனம்

  • கோபி பாலைவனம்
  • தக்லாமக்கன் பாலைவனம்
    ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம்
    அரேபிய பாலைவனமாகும்.

3. தூந்திரா மற்றும் டைகா
விடை:
தூந்திரப்பிரதேசம்

  • ஆர்டிக் மற்றும் வட ஸ்காண்டினேவிய உயர்நிலங்கள் தூந்திர வகை இயற்கைத் தாவரங்களைக் கொண்டுள்ளன.
  • இங்கு லிச்சன்ஸ் மற்றும் பாசி வகைகள் காணப்படுகின்றன.
    டைகா (ஊசியிலைக்காடுகள்)
  • தூந்திரப்பிரதேசத்தின் தெற்கில் அமைந்துள்ள நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் டைகா (ஊசியிலை) காடுகள் காணப்படுகின்றன.
  • இக்காடுகளில் பைன், ஃபிர், ஸ்புரூஸ் மற்றும் லார்ச் போன்ற முக்கிய மரவகைகள் காணப் படுகின்றன.

4. வடமேற்கு மேட்டு நிலம் மற்றும் ஆல்பைன் மலைத்தொடர்
விடை:
வடமேற்கு உயர்நிலங்கள்

  • இப்பிரதேசம், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மலைகள் ற்றும் பீடபூமிகளை உள்ளடக்கியது.
  • இது பிளவுபட்ட கடற்கரையினைக் கொண்டது. இக்கடற்கரைகள் பனியாறுகளால் உருவானவை.
  • இங்குள்ள அதிகமான ஏரிகள் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களாக செயல்படுகின்றன.
  • ஆல்பைன் மலைத்தொடர் ஆல்பைன் மலைத்தொடர் தெற்கு ஐரோப்பிய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான இளம் மடிப்பு மலைகள் ஆகும்.
  • சியாரா நெவேடா, பைரினீஸ், ஆல்ப்ஸ், அப்னின்ஸ், டினாரிக் ஆல்ப்ஸ், காகசஸ் மற்றும் கார்பேதியன் ஆகியவை முக்கிய மலைத்தொடர்கள்.
  • பைரனீஸ் மலைகள் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் இயற்கை எல்லையாக விளங்குகின்றன.




VII. காரணம் தருக:

1. ஆசியா, அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
விடை:
ஆசியா அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது ஏனெனில்

  • ஆசியாவின் முக்கிய உணவுப் பயிர்களில் நெல் (அரிசி) ஒன்றாகும். உலகிலேயே மிக அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா
  • மியான்மர், ஜப்பான், வங்காளதேசம், தாய்லாந்து ஆகியவை பிற நெல்விளைவிக்கும் நாடுகள்.
  • அதிக மழைப்பொழிவு, செழுமை வாய்ந்த சமவெளிகள் மற்றும் மனிதவளம் அகியவற்றை
    பெற்றிருப்பதால் பருவமழை பெய்யும் ஆசியப்பகுதிகள் நெல்விளைய ஏற்ற பகுதிகளாகத் திகழ்கின்றன.
  • தென்கிழக்கு ஆசியாவின் ‘அரிசிக்கிண்ணம்’ என தாய்லாந்து அழைக்கப்படுகிறது.

2. ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். ஏனெனில்
விடை:

  • வட அரைக்கோளத்தில் பரவியுள்ள ஆசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு பல வகையான நிலத்தோற்றம் மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது.
  • உயர்ந்த மலைகள், பீடபூமிகள், பரந்த சமவெளிகள், தீவுகள் மற்றும் தீபகற்பங்கள் ஆகியவை – மக்கிய இயற்கை நிலத் தோற்றங்களாகும்.
  • வற்றாத ஆறுகள் பல்வேறு நிலப்பரப்புகளில் பாய்கின்றன. இந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பழமையான நாகரிகங்களின் தொட்டிலாகும்.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி குறைந்து காணப்படுகிறது. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 143 நபர்கள்.
  • ஆசியா உலகின் பரப்பளவில் 30 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும், உள்ளடக்கியது.

3. ஐரோப்பா மிகப்பெரிய தீபகற்பம் என அழைக்கப்படுகின்றது.
விடை:
ஐரோப்பா மிகப்பெரிய தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்

  • ஐரோப்பா வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
  • அது 10.5 மில்லியன் ச.கிமீ பரப்பளவைக் கொண்டது.
  • அது வடக்கே ஆர்டிக் பெருங்கடல், தெற்கே கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கே யூரல் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

4. மேற்கு ஐரோப்பாவானது உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான கால நிலையைப் பெற்றுள்ளது.
விடை:
மேற்கு ஐரோப்பா உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான காலநிலையைப் பெற்றுள்ளது ஏனெனில்

  • வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகள் பொதுவாக லேசான ஈரப்பதமான காலநிலையைக் கொண்டிருக்கும்.
  • வட அட்லாண்டிக் வெப்பக்கடல் நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்கு பகுதிக்கு மிதமான வெப்பத்தை அளிக்கிறது.

VIII. ஒரு பத்தியில் விடையளி:

1. ஆசியாவின் வடிகால் அமைப்பைப் பற்றி விவரி?
விடை:

  • ஆசியாவின் பெரும்பான்மையான ஆறுகள் மத்திய உயர் நிலங்களில் தோன்றுகின்றன.
  • ஓப், எனிசி, லேனா ஆகிய முக்கிய ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இவை குளிர்காலத்தில் உறைந்துவிடுகின்றன.
  • வற்றாத ஆறுகளான பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை, ஐராவதி போன்றவை உயர்ந்த மலைகளில் தோன்றுகின்றன. இவை குளிர் காலத்தில் உறைவதில்லை.
  • யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் மேற்கு ஆசியாவில் பாய்கின்றன.
  • அமூர், ஹோவாங்கோ, யாங்சி மற்றும் மீகாங் போன்றவை தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பாய்கின்றன. யாங்சி ஆசியாவின் மிக நீளமான ஆறு.

2. ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்களைப் பற்றி விவரி?
விடை:
ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்கள்:
இரும்புத்தாது : ஆசியா உலகிலேயே மிக அதிகமான இரும்புத்தாது வளத்தைக் கொண்டுள்ளது. சீனா, இந்தியா, துருக்கி, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இரும்புத்தாது இருப்புள்ள நாடுகளாகும்.

நிலக்கரி : நிலக்கரி படிம எரிபொருள். உலகிலேயே அதிக நிலக்கரி இருப்பு ஆசியாவில்தான் உள்ளது. ஆசியாவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா.

பெட்ரோலியம் : பெட்ரோலியம் கனிம எண்ணெய் வளம். பெட்ரோலிய இருப்புகள் தென் மேற்கு ஆசியாவில்தான் அதிகமாக காணப்படுகின்றன. சௌதி அரேபியா, குவைத், ஈரான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரேபிய குடியரசு ஆகியன பெட்ரோலிய உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள். தெற்கு சீனா, மலேசியா, புரூனே, இந்தோனேசியா, இந்தியா, ரஷ்யா போன்றவை பெட்ரோலிய உற்பத்தி செய்யும் பிற நாடுகள்.

  • பாக்ஸைட் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் காணப்படுகிறது.
  • மைக்கா அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா.
  • தகரம் மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

3. பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?
விடை:

  • செங்குத்தான பாறைகளுக்கிடையே உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை ஆகும்.
  • இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைக்கின்றன.
  • கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன.
  • கடந்த காலங்களில் நடைபெற்ற பனியாறுகளினால் உருவானவை பிளவுபட்ட கடற்கரைகள்
  • பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது. எ.கா. நார்வே.

4. ஐரோப்பாவின் காலநிலைப் பிரிவுகளைப் பற்றி விவரி?
விடை:

  • ஐரோப்பிய காலநிலை மித வெப்ப மண்டல காலநிலை முதல் துருவ காலநிலை வரை வேறுபட்டுக் காணப்படுகிறது…
  • தென்பகுதியில் காணப்படும் மத்திய தரைக்கடல் பகுதி காலநிலை மிதமான கோடைகாலமும் குளிர்கால மழையும் கொண்டது.
  • மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் பொதுவாக லேசான. ஈரப்பதம் வாய்ந்த காலநிலையைக் கொண்டிருக்கும்.
  • மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் காலநிலை ஈரப்பதம் வாய்ந்த கண்ட காலநிலை
  • வடகிழக்கில் துணை துருவ மற்றும் தூந்திரக் காலநிலை காணப்படுகிறது.
  • ஐரோப்பா முழுவதும் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து வீசுகின்ற மேற்கத்திய காற்றுகளின் மிதமான தாக்கத்திற்கு உட்படுகின்றது.

X. செயல்பாடு:

1. கீழ்க்கண்டவற்றைப் பூர்த்தி செய்க.
என்னுடைய மாவட்டம் ……… என் மாவட்டம் 1………. 2 ……… 3 ……….. க்குப் புகழ் பெற்றது. என் மாவட்டத்தின் எல்லைகள், வடக்கே … … கிழக்கே ……….. தெற்கு ……… மற்றும் மேற்கே ……. ஆகும். இது ……. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது …… வட்டங்களையும், …………. கிராமங்களையும் கொண்டுள்ளது……………………… ஆகியன முக்கிய மலைகள் / சமவெளிகள் /பீடபூமிகள் ஆகும். (அனைத்தும் இருந்தாலும் எழுதவும்) ………… ஆறுகள் என் மாவட்டத்தில் பாய்கின்றன. ……….. . ஆகிய மரங்களும் ………………….. ஆகிய வனவிலங்குகளும் உள்ள ன…………. …………… போன்ற முக்கிய தனிமங்கள் இங்குக் கிடைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு ……………… தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. இங்கு விளையும் முக்கிய பயிர்கள் …
………… ஆகும். (கடலோர மாவட்டம் என்றால் மீன் வகைகள்) மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை …………. நாங்கள் ……….. விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
விடை:
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், குற்றாலம், அல்வா, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை, 16 வட்டங்கள், 559 கிராமங்கள், பொதிகை மலை, தாமிரபரணி சமவெளி, தக்காணப் பீடபூமி விளிம்பு, தாமிரபரணி, சிற்றாறு, மணிமுத்தாறு, பனை, வேம்பு, தென்னை , குரங்குகள், புலிகள், யானைகள், கருங்கல், சுண்ணாம்புக்கல், தோரியம், சிமெண்ட், பருத்தி ஆலை, பாத்திரங்கள், நெல், பருத்தி, கரும்பு, 3322644, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ்,

2. ஐரோப்பாவை இருப்பிடமாகக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நீ எந்த நாட்டை தேர்வு செய்வாய்? காரணங்களைப் பட்டியலிடுக.

3. ஆசியாவின் ஏதாவது ஒரு பிரதேசத்தைத் தேர்வு செய்க. ஆசியா வரைபடத்தில் இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலைக் குறிக்கவும். அது தொடர்பான படங்களை ஒட்டி வரவும்.

Other Important links for 6th Social Science Answers in Tamil:

Click Here to download complete 6th Social Science solutions Tamil Medium – Samacheer Kalvi 6th Social Science Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *