30 May 2022

Samacheer Kalvi 6th Civics Term 3 Unit 2 Answers in Tamil

Samacheer Kalvi 6th Civics Term 3 Unit 2 Social Book Back Question and Answers:

Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா- விடைகள் பருவம் 3 அலகு 2 – உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 08 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science Civics Book Back Unit 2 Term 3 Answers PDF in Tamil:




Samacheer Kalvi 6th Social Civics Book Back Unit 2 Term 3 Answers/Solutions Guide PDF:

Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் – பருவம் 3

குடிமையில் – அலகு 2 – உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ….. அமைக்கப்படுகிறது.
அ) ஊராட்சி ஒன்றியம்
ஆ) மாவட்ட ஊராட்சி
இ) வட்டம்
ஈ) வருவாய் கிராமம்

2. தேசிய ஊராட்சி தினம் ……. ஆகும்.
அ) ஜனவரி 24
ஆ) ஜீலை 24
இ) நவம்பர் 24
ஈ) ஏப்ரல் 24

3. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் …
அ) டெல்லி
ஆ) சென்னை
இ) கொல்கத்தா
ஈ) மும்பாய்

4. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ……….
அ) வேலூர்
ஆ) திருவள்ளூர்
இ) விழுப்புரம்
ஈ) காஞ்சிபுரம்

5. மாநகராட்சியின் தலைவர் …… என அழைக்கப்படுகிறார்
அ) மேயர்
ஆ) கமிஷ்னர்
இ) பெருந்தலைவர்
ஈ) தலைவர்

II. நிரப்புக

1. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் …….. ஆகும்.
விடை: தமிழ்நாடு

2. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு …………..
விடை: 1992

3. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் …………. ஆண்டுகள்.
விடை: 5

4. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ……. ஆகும்.
விடை: வாலாஜாபேட்டை நகராட்சி

III. பொருத்துக

6th social science book back questions with answer in tamil
விடை:
1. நிரந்தர அமைப்பு
2. வட்டார வளர்ச்சி அலுவலர்
3. செயல் அலுவலர்
4. மாநிலத் தேர்தல் ஆணையம்




IV. விடையளிக்கவும்.

1. உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரைக் எழுதவும்?
விடை:
ஆம். திருநெல்வேலி மாநகராட்சி

2. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யாது?
விடை:
உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் உள்ளூர் அமைப்புகளின் திறமையான செயல்பாட்டிற்கும் மக்களை நேரடியாக ஈடுபடுவதற்கு அவசியமாகும்.

3. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி

4. நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி.

5. கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாவர்?
விடை:
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்

  • ஊராட்சி மன்றத் தலைவர்.
  • பகுதி உறுப்பினர்கள்
  • ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.

6. மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைப் பட்டியலிடுக.
விடை:

  • குடிநீர் வசதி
  • தெரு விளக்கு அமைத்தல்
  • தூய்மைப் பணி
  • மருத்துவச் சேவை
  • மாநகராட்சிப் பள்ளிகள்
  • பிறப்பு, இறப்பு பதிவு இன்னும் பிற

7. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக.
விடை:
வீட்டு வரி, தொழில் வரி, கடைகள் மீதான வரி, குடிநீர் இணைப்புக்கான கட்டணம், நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு, மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு இன்னும் பிற

8. கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை? அந்நாள்களின் சிறப்புகள் யாவை?
விடை:

  • கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2, ஆகிய நாட்களில் நடைபெறும்.
  • தேசிய விழா தினமாக இந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

9. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:
கிராம சபை அமைத்தல், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு, இட ஒதுக்கீடு, தேர்தல், பதவிக்காலம், நிதி க்குழு, கணக்கு மற்றும் தணிக்கை, இன்னும் பிற

10. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • கிராமத்து பஞ்சாயத்துகளின் திறமையான செயல்பாட்டுக்கு கிராமப்புற சபா மிகவும் அவசியமானதாகும்.
  • இது சமூக நலனுக்கான திட்டங்களை தீட்டுதல் மற்றும் செயல்படுத்துவதில் பொது மக்கள் பங்கேற்பைப் மேம்படுத்துகிறது.

V. உயர் சிந்தனை வினா

1. கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
விடை:

  • இந்திய நாடு ஒரு அகன்ற நாடாகும். ஒரே ஒரு அரசாங்கத்தால், நாட்டின் முழு நிர்வாகத்தையும், கவனிக்க இயலாது.
  • நமது இந்திய அரசமைப்புச்சட்டம் மூன்று நிலைகளில் நிர்வாகத்தை பிரித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்.
  • உள்ளாட்சி அமைப்புகள் கிராமம் மற்றும் நகரங்களின் உள்ளூர் நிர்வாகத்தை கவனித்துக்
    கொள்ளும்.
  • உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணிகள் :
    • தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்,
    • சாலைகள் மற்றும் பள்ளிகள் கட்டுதல்,
    • குடிநீர் மற்றும் மின்வசதி அமைத்தல்

VI. செயல்பாடுகள்

1. உள்ளாட்சி பிரதிநிதியை நேர்காணல் செய்வதற்காக வினா நிரல் தயாரிக்கவும்.
விடை:

  • நம் பகுதியில் சிறந்த வடிகால் அமைப்பதற்கு தங்களின் திட்டம் என்ன?
  • மகாராஜ நகர், மற்றும் தியாகராஜ நகரை இணைக்கும் பாலக் கட்டுமானம் எப்போது நிறைவடையும்?
  • நம் பகுதியில் தெரு விளக்கு அமைக்கும் பணி எத்தனை மாதங்களில் முடிவடையும்?

2. பள்ளியின் மேம்பாட்டிற்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இருப்பின் கலந்துரையாடுக.
விடை:

  • உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கள் பள்ளியின் மேம்பாட்டிற்காக அபரிமிதமான உதவிகள் செய்துள்ளனர்.
  • பள்ளியின் வளர்ச்சிக்காக அவர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மற்றும் பள்ளியின் பழைய மாணவர்களை நாடி உதவி பெற்றனர்.
  • அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து பள்ளிக்கு தேவையான கணினி, ஆய்வக உபகரணங்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கினர்.

3. நான் உள்ளாட்சி பிரதிநிதியானால்…?
விடை:

  • சிறந்த வடிகால் திட்டம் அமைக்கப் பாடுபடுவேன்.
  • டெங்கு போன்ற தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வழிகளை ஆராய்ந்து செயல் படுத்துவேன்.
  • நன்கு திட்டமிட்ட சாலை வசதிகளையும், நன்கு ஒளியூட்டும் விளக்குகளையும் ஏற்பாடு செய்து மக்கள் நலமுடன் வாழ வழி வகுப்பேன்.

4. உன் மாவட்டத்தில் உள்ள பல வகையான உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையைக் கேட்டறிந்து பதிவிடவும்.
விடை:
மாவட்டத்தின் பெயர் : திருநெல்வேலி
கிராம ஊராட்சி : இராஜகோபாலபுரம்
ஊராட்சி ஒன்றியம் : முத்தூர்
மாவட்ட ஊராட்சி பேரூராட்சி : குலவணிகர்புரம்
நகராட்சி மாநகராட்சி : திருநெல்வேலி மாநகராட்சி

Other Important links for 6th Social Science Answers in Tamil:

Click Here to download complete 6th Social Science solutions Tamil Medium – Samacheer Kalvi 6th Social Science Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *