9th Tamil unit 9.1 – விரிவாகும் ஆளுமை Book Back Questions with Answers:
Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 9 New Tamil Book Back Answers Unit 9.1 – விரிவாகும் ஆளுமை Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Tamil Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Book – unit 9.1 விரிவாகும் ஆளுமை Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
9th Tamil Samacheer Kalvi Book Back Answers
Chapter 9.1 – விரிவாகும் ஆளுமை
கற்பவை கற்றபின்
1. உங்களுக்குப் பிடித்த தமிழ் ஆளுமைகள் குறித்துக் கலந்துரையாடிக் குறிப்புகளை எழுதுக.
விடை:
- பூமிப்பந்து எங்கும் புகழ் பெற்றுத்திகழும் தமிழ் ஆளுமை காமராசர் ஆவார்.
- ஆளுமை என்பது என்னவென்றால் ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள், ஆகியவை உள்ளிருந்து உருவாகி வாழ்க்கைக்காலம் முழுவதும் அவை சீராக அமைவதே ஆளுமை ஆகும்.
- இவ் உரைநடையில் கற்றது போல் பிறர்நலம் பேணுதல், தியாகமும் நேர்மையும் ஆளுமை என்றால் காமராசர் சிறந்த ஆளுமை பண்பு உடையவரே.
- தனது கஷ்டங்களைப் பொருட்படுத்தாது, சதாகாலமும் நாட்டின் நலனில் ஈடுபட்ட உள்ளத்தைப் பெற்றவர். தர்ம சிந்தனையும், நீதியும் உடையவர்.
- மக்களுக்குத் தொண்டு செய்ய நீண்டகாலம் வாழவேண்டும் என்று வாழ்த்தப்பட்டவர்.
- காமராசர் மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு தீர்ப்பதில் வல்லவர், நாட்டம் உடையவர் என்று இந்தியாவிலேயே பெருமையாகப் பேசப்பட்டவர்.
- மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் கூட நிகழாத அற்புதத்தைத் தமிழகத்தில் நடத்தியவர் என்று பெரியாரே புகழ்ந்துள்ளார்.
- கல்விப் புரட்சியும், சமூக நீதிக்கான புரட்சியும் நடத்திக் காட்டியவர்.
- இவரது பொதுவாழ்க்கை நேர்மை, எளிமை, தூய்மை என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. கறைபடியாத கரங்களை உடையவராகத் திகழ்ந்தார்.
தோழர்களே நம் நாடு உருப்பட வேண்டுமானால் குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரைப் படித்துக் கொள்ளுங்கள்; விட்டுவிடாதீர்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். “காமராசரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளு சிக்காது” என்று 82 வயதான தந்தை பெரியாரால் பாராட்டபட்டார். எனில் காமராசரை விட சிறந்த ஆளுமை உண்டோ !
2. உலகத் தமிழ் மாநாட்டு மலர், பொங்கல் மலர், தீபாவளி மலர், போன்றவற்றில் வெளிவந்துள்ள உலகப் பொதுவியல் சிந்தனைகள் குறித்து 5 மணித்துளிகள் பேசுக.
விடை:
அனைவருக்கும் வணக்கம்.
பொங்கல் மலர் ஒன்றில் புதிய சிந்தனைகள் நிறைந்த கருத்தடங்கிய கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.
இளமை நிலையற்றது, வாழ்வு நிலையற்றது. இளமை என்பது அழகு இல்லை அது ஒரு பருவம், அப்பருவத்தில் நன்மை செய்பவர்களாய் நாம் வாழவேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தியது.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்று உலகுக்கு உணர்த்தியவன் தமிழன். பண்டைய தமிழன் சிறந்த உலகப்பொதுமை சிந்தனை உடையவனாக இருந்தான்.
நரையும் மூப்பும் வரும் என்பதை முன்னரே உணர்ந்து காமம், வெகுளி, மயக்கம் என்று கிடைக்காமல் நன்மை செய்யுங்கள் நன்மையே உங்களை நன்னெறிக்கு இட்டுச்செல்லும். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணுங்கள்.
“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்” நாகரிகம் எனப்படா. அனைத்து உயிர்களிடத்தும் உயிர்நேயம் உடையவனே நாகரிகம் உடையவன்.
குளிர்ச்சியான சோலையில் காய்த்திருக்கும் காய்கள் கனிந்தவுடன் உதிர்ந்து விடுவது போல், வாழ்வும் உதிர்ந்துவிடும் தன்மையது. எனவே வாழும்போதே, “மற்று அறிவோம் நல்வினை” என்பதை உணர்வோமாக.
அறிவுடையோர் இவ்வுண்மையை உணர்ந்து கொள்க! இந்த உண்மையை உணராதவரை அறிவில்லாதவர் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
“தோறார் விழியிலா மாந்தர்” என்கிறார்.
இளமை கழிந்து போகுமுன் அருமையான அறச்செயல்களைச் செய்து விட வேண்டும். முதுமையில் எண்ணினாலும், அருஞ்செயலை செய்வதற்குரிய ஆற்றல் இல்லாது போய்விடும், எண்ணும் உலகளாவிய பொதுவியல் சிந்தனையைக் கூறும் இக்கட்டுரை, என் மனதை மாற்றியது. இச்சொற்பொழிவைக் கேட்ட நீவிரும் அறம் செய்ய முயல்க.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
அ) கொம்பு
ஆ) மலையுச்சி
இ) சங்கு
ஈ) மேடு
விடை:
ஆ) மலையுச்சி
2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..
அ) நிலையற்ற வாழ்க்கை
ஆ) பிறருக்காக வாழ்தல்
இ) இம்மை மறுமை
ஈ) ஒன்றே உலகம்
விடை:
ஈ) ஒன்றே உலகம்
குறுவினா
1. தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையரின் சான்றோருக்கும் உள்ள வேறுபாடு யாது?
விடை:
உரோம நாட்டவர் : உரோமையரின் சான்றோர் எழுதும்போது நாம் நம்மவர் என்ற செருக்குடன் உரோமரை கருதியே எழுதுகின்றனர்.
தமிழ்ச் சான்றோர் : எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய கொள்கையை தம் நூல்களில் யாத்துள்ளனர் என்பதே இரு சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
சிறுவினா
1. உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளாக ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?
விடை:
ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர், திருக்குறளைப் பற்றிக் கூறும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலக இலக்கியத்தில் காண்பது அரிது என்பார்.”
அவர் குறிப்பிட்ட அரிய கருத்துகள்:
- மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.
- பிறப்போ சாதியோ சமயமோ மக்களை உயர்த்தவோ, தாழ்த்தவோ, முடியாது.
- இத்தகைய கொள்கைகள் வள்ளுவர் காலத்திற்கு முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன என்று வியக்கிறார்.
2. கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.
விடை:
கோர்டன் ஆல்போர்ட் ஓர் உளநூல் வல்லுநர். அவர் கூறும் மூன்று இலக்கணங்களாவன.
- மனிதன் தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய
- நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.
- பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்க வேண்டும்.
- ஒருவன் அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கண்டுபிடித்து நடத்தல் வேண்டும்.
நெடுவினா
1. தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துகளைத் தனிநாயக அடிகள் வழி நிறுவுக.
விடை:
முன்னுரை:
உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் சான்றாண்மைத்தன்மை. இச்சான்றாண்மைப் பண்பு பண்டைத் தமிழ்ப் புலவர்களால் பாராட்டி பாடப்பட்டுள்ளது. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைப் பண்புகளை அறியலாம்.
யாதும் ஊரே யாவரும் நம்மவரே:
கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் சான்றாண்மைக் கொள்கையை இக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கூறியுள்ளார்.
‘யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவர்’ என்று திருக்குறளும் நம் காலத்திற்கும் பொருந்தி வரும் அறிவுரையைக் கூறியுள்ளது. ஊர், நாடு, கேளிர் என்னும் இச்சொற்கள் பரந்த மனப்பான்மை மனித நலக் கோட்பாடு என்னும் சான்றாண்மையை வலியுறுத்துகிறது
இலட்சியங்களைக் கடைப்பிடித்தல்:
இலட்சியங்களைக் கடைப்பிடிக்கும் சமுதாயம் உயரும். குறிக்கோள் இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும். குறிக்கோள் இல்லாத மனிதன் வெறும் சதைப்பிண்டம் என்பதை, “பூட்கையில் லோன் யாக்கை” போல என்று புலவர் ஒருவர் புறநானூற்றில் கூறுகிறார். குறிக்கோள் வேண்டும் என்பதை வள்ளுவம் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று குறிப்பிடுகிறார்.
பிறர் நலவியலும் ஒற்றுமை உணர்ச்சியும்:
பிறர் நலத்துக்காகப் பணி செய்வதில் தான் ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கை ஆகிறது. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையைப் பின்பற்றினர் தமிழர். இச்செய்தி தமிழ்ச் சான்றோர் தன்னலம் தேடுவதில் இருந்து விடுவித்துப் பிறர் நலம் பேணுவதில் தான் சிறந்தனர் என்பதை உணர்த்துகின்றது. மக்கள் அனைவரும் தன் இனத்தவர் எல்லா உயிர்க்கும் அன்பு காட்டுதல் வேண்டும் என்ற உயரிய சான்றாண்மைப் பண்பை பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒற்றுமை உணர்வு:
பாணர்களும் பாடினிகளும் தமிழ்ப் புலவர்களையும் அரசர்களையும் மக்களையும் நாட்டையும் வேறுபாடு இன்றி பாடியதால் தமிழகம் என்ற ஒற்றுமை உணர்வை உருவாக்கினர். பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலை ஒருவருக்கு ஒருவர் உதவுதல் ஆகிய அவர் தம் அன்பையும் ஒற்றுமை உணர்வையும் பறைசாற்றுகின்றன.
நன்மை செய்தல்:
தமிழ்ச் சான்றோர்களின் இன்றியமையாப் பண்பு, நன்மையை நன்மைக்காக செய்வதுதான் பிறர் போற்றுவார்கள் என்றோ, வேறு நலன்களைப் பெறலாம் என்றோ தமிழர் நன்மைகளைச் செய்யவில்லை என்பதற்குக் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான “ஆய்” சான்றாவான்.
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவினை வணிகன் ஆய்அலன்”, என்று புறநானூறு பாராட்டுகிறது.
பிறர்க்காக நன்மை செய்து வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும் “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற புறப்பாட்டு இப்பண்பையே எடுத்துக்காட்டுகிறது.
முடிவுரை:
இவ்வாறு நம் இலக்கியங்கள் நம் தமிழ்ச் சான்றோர்களின் பண்புகளையும் மக்கட் தன்மையை வளர்க்க முனைந்ததையும் உலகமெல்லாம் தழுவுவதற்கும் உரிய பண்புகளை வளர்த்தனர் என்று தனி நாயக அடிகள் தம் கட்டுரை வாயிலாக நிறுவுகிறார்.
Other Important Link for 9th Tamil Book Back Solutions:
Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers