9th Tamil unit 7.2 – சீவக சிந்தாமணி Book Back Questions with Answers:
Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below.The Samacheer Kalvi Class 9 New Tamil Book Back Answers Unit 7.2 –சீவக சிந்தாமணி Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Book – unit 7.2 சீவக சிந்தாமணி Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
9th Tamil Samacheer Kalvi Book Back Answers
Chapter 7.2 – சீவக சிந்தாமணி
1. அருகிலுள்ள இயற்கைக் காட்சிகளைக் குறிப்பெடுத்து ஓவியம் தீட்டுக.
Answer:
- நான் வசிக்கும் இடத்தின் அருகில், ஒரு குளம் இருக்கின்றது.
- குளத்தைச் சுற்றிலும் வயல் வெளிகள் உள்ளன.
- குளத்தின் கரையில் ஓர் ஆலமரம் உள்ளது.
- பறவைகளும், கிளிகளும் அதில் வசித்து மகிழ்கின்றன. பறவைகள் தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் காட்சி மனதை மயக்கும்.
- வயல் வெளிகளில் கூட்டமாய் உழவர்கள் வேலை செய்யும் போது ஆரவாரம் காணப்படும்.
- மாலை நேரத்தில் மயிலும் தோகை விரித்து ஆடும்.
2. உங்கள் பள்ளி வேரூன்றிய நாள் தொடங்கி வளர்ந்த வரலாற்றையும், அதன் சிறப்புகளையும் கட்டுரையாக்குக.
Answer:
எங்கள் பள்ளி
முன்னுரை : நான் பயிலும் பள்ளி. அரசு மேல்நிலைப் பள்ளி ஆகும். அன்ன சத்திரம் ஆயிரம், ஆலயங்கள் பல்லாயிரம் கட்டுவதைக் காட்டிலும் ஏழைக்கு எழுத்தறிவித்தலே கோடி புண்ணியங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அல்லவா! எழுத்தறிவு கொடுத்துக் கொண்டிருக்கும் அறிவுத் திருக்கோவில் எம் பள்ளி.
தோற்றம் : எங்கள் பள்ளி அப்போதைய ஆங்கில அரசால் 1918 ம் ஆண்டு ஒன்று முதல் எட்டு வரை உள்ள நடுநிலைப் பள்ளியாகத் தோன்றி வேரூன்றி வளர ஆரம்பித்தது.
வளர்ச்சி : பின்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. பின் 1978 இல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, இன்று கம்பீரமாக நகரின் மையத்தில் உள்ளது.
சாதனைகள்:
இந்த ஆண்டு எம் பள்ளி நூற்றாண்டு விழா காண இருக்கின்றது. பல அறிஞர்களை, விற்பனர்களை, சமூக சேவகர்களை, ஊருக்கு உழைக்கும் உத்தமர்களை, மருத்துவர்களை, பொறியாளர்களை, வழக்குரைஞர்களை, அறிஞர்களை, அரசியல்வாதிகளை உருவாக்கி நல்லறிவு புகட்டி, வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவுக் கோயிலாகத் திகழ்கிறது.
முடிவுரை: பல்துறைகளிலும் முத்திரை பதிக்க பலருக்கும் வழிகாட்டிய அறிவுப் பெட்டகமாகவும், பலருடைய வாழ்வை உயரத்திற்குக் கொண்டு சென்ற ஏணியாகவும் இன்று வரை திகழ்கிறது. பல தலைமுறை கண்ட எம் பள்ளி, இன்னும் பல புதிய தலைமுறைகளை உருவாக்க வாழ்த்தி வணங்குகிறேன்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?
Answer:
அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.
ஆ) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்.
இ) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்.
ஈ) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்.
Answer:
அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.
குறுவினா
1. கருக்கொண்ட பச்சைப்பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?
Answer:
கருக்கொண்ட பச்சைப்பாம்பு நெற்பயிர்கள் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.
சிறுவினா
1. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?
Answer:
- வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டில் உள்ள ஊர்களில் நாள்தோறும் ஆயிரம் வகையான உணவுகள் இருக்கும்.
- பசி என்று வருவோருக்கும், நாடி வருவோருக்கும் அறச்சாலைகள் ஆயிரம் இருக்க்கின்றன.
- மகளிர் தம்மை ஒப்பனை செய்ய மணிமாடங்கள் ஆயிரம் இருக்கின்றன.
- செய்தொழிலில் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர்.
- ஏமாங்கத நாட்டிலே இல்லாதவை இல்லை என்னும் வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் குறைவின்றி நிகழ்கின்றன.
நெடுவினா
1. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.
Answer:
முன்னுரை:
சீவகசிந்தாமணியில் “நாமகள் இலம்பகத்தில்” நாட்டு வளம் என்னும் பகுதியில் ஏமாங்கத நாட்டின் வளம், திருத்தக்கதேவரால் நயம்பட உரைக்கப்பட்டுள்ளது. ஏமாங்கதநாட்டு வளம் போலவே எம் ஊரின் வளங்களும் உள்ளன எனில் மிகையாகாது.
வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:
ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும் அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்த து.
தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய் விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும்முன் விழும்வேகத்தில் அருகிருந்த பாக்கு மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை, பலாச்சுளைகளோடு, வாழைப்பழங்களையும் உதிரச்செய்கிறது. இவ்வாறு ஏமாங்கத நாட்டை போலவே எம் ஊரும் முக்கனி வளமும், தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் நிறைந்தனவாய்க் காணப்படுகின்றது.
மண்வீசும் வயல்வளம்:
ஏமாங்கத நாட்டைப்போலவே, நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில் அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. அவ்வொலியால் அந்நீர்நிலையில் உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன. இவ்வாறு எருமைகளும், எருதுகளும், நீரைக் கலக்குவதாலும், சேறுமணமும், நீந்தும் மீன் மணமும் கலந்த வயல்பகுதிகளில் வெள்ளமென உழவர்கள் உழுதிருந்தனர்.
இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்:
கருக்கொண்ட பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள்.
அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன், தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.
ஆயிரம் விழாக்கள்:
வளம்மிக்க எம் ஊரில் ஆயிரம் வகையான உணவு உண்டு. பசியுடன் நாடி வருவோருக்கு உணவு வழங்கும் அறச்சாலைகள் ஆயிரம் உண்டு. மகளிர் ஒப்பனை செய்துகொள்ளும் மணிமாடங்கள் ஆயிரம் உண்டு. சோம்பல் இன்றி தொழில் புரியும் கம்மியர்களும் ஆயிரக்கணக்கானோர் உண்டு. அதனால் திருமணங்களும், விழாக்களும் ஆயிரமாயிரமாய் நடைபெறுகின்றன.
முடிவுரை:
இவ்வாறு ஏமாங்கத நாட்டின் வளம் போலவே, வளமும்;, சிறப்பும் கொண்டனவாய் எம் ஊரும் உள்ளது என்பதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன்.
Other Important Link for 9th Tamil Book Back Solutions:
Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers