9th Tamil unit 6.4 – செய்தி Book Back Questions with Answers:
Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 9 New Tamil Book Back Answers Unit 6.4 – செய்தி Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Tamil Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Book – unit 6.4 செய்தி திருமொழி Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
9th Tamil Samacheer Kalvi Book Back Answers
Chapter 6.4 – செய்தி
கற்பவை கற்றபின்
1. உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறெதுவும் இல்லை – இத்தொடர் குறித்துச் சொற்போர் நிகழ்த்துக.
விடை:
சொற்போர்
“நாளெல்லாம் நன்றொலிக்கும். பாட்டினிலே, நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி.
“இசையால் வசமாகா இதயம் எது” என்றார் மற்றொரு கவிஞர். இசை வாடிய பயிரை வளரச் செய்யும்; மழையைப் பொழியச்செய்யும்; எல்லா வல்ல இறைவனையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் பேராற்றல் வாய்ந்த இசை, உலகில் அமைதியையும் ஏற்படுத்தும் எனில் மிகையாகாது.
“அழகான இசை அது மனித குலத்தின்
உண்மையான நம்பிக்கை”. அன்பையும், அமைதியையும், மன உருக்கத்தையும் இசையால் ஏற்படுத்த முடியும்
உலக அமைதிக்காக ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இசை விழா நடத்தப்படுகிறது. ஆம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இவ்விழா நடைபெற்று வருகிறது.
நம் நாட்டிலும் சிதம்பரம் போன்ற கோவில்களில் உலக அமைதிக்காக, பல மணி நேரங்கள் தொடர் இசை (சான்றாக 12 மணி நேரம், 28 மணி நேரம்) நடத்தப்படுகிறது. அவ்விழாவில் பல மொழி பேசுபவர்கள், பல நாட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். அங்கு, இசை மட்டுமே ஆளுகை செய்கிறது. நாடோ, மொழியோ, பணமோ, பதவியோ, உயர்வோ, தாழ்வோ அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இசை என்றால் “ஒழுங்கு” என்றும் “இசையவைப்பது” என்றும் பொருள் உண்டு. இயற்கையைத் தன் வசப்படுத்தி, இறைவனையே தன் வசப்படுத்தி, இறைவனையே ஆட்கொள்ளும் இசை மனித மனங்களில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் இசைந்து போகச்செய்யும் ஆற்றல் உடையது. எனவே உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறொன்றும் இல்லை.
2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள உங்களுக்குப் பிடித்த செய்யுள் பகுதிகளை வகுப்பில் இசையுடன் பாடி மகிழ்க.
விடை:
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் “செய்தி” கதையின் மூலமாக விளக்குக.
விடை:
முன்னுரை:
இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின் செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது.
இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி என்னும் கதை உணர்த்துகிறது.
வித்வானின் வருகையும், அறிமுகமும்:
நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான்.
வக்கீல் வீட்டில் “பிலிப் போல்ஸ்கா ” என்பவர் தலைமையில் மேற்கத்திய சங்கீதகுழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல் வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
கீர்த்தனம் தொடங்கினார்:
வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது.
போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச் சென்றது.
இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை.
சாமாராகம் :
தஸரிமா……. மா” என்று ஆரம்பித்த ராகம் கொஞ்சம் – கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு ….. மொழி தெரியாத போல்ஸ்காவைத் திரும்பிப் பார்த்தார் வக்கீல் ……
அவன்உடல்ராகத்தோடு இசைந்து அசைந்துகொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து விட்டான். மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். மேடைக்கருகில் வந்து முழந்தாளிட்டு உட்கார்ந்து கையை மேடையோரத்தில் வைத்து முகத்தைப் புதைத்து தவத்தில் ஆழ்ந்தவன் போல் ஆனான்.
சாமா ராகத்தை …….. அனுபவிக்க அவனுக்கு மொழியோ, இனமோ இடையூறு செய்யவில்லை. சாந்தமுலேகா……..
சாந்தமுலேகா …… :
குழந்தையைக் கொஞ்சுவது போல், அந்த அடி கொஞ்சியது. போல்ஸ்காவின் மெய்சிலிர்த்தது. அவனது தலையும், உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக் கொண்டிருந்தன………………
அந்த இசை எனக்காக அனுப்பிய செய்தி …… உலகத்துக்கே ஒரு செய்தி ……. உங்கள் சங்கீதத்தின் செய்தி உணர்வை வெளிப்படுத்த, நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் போல்ஸ்கா தடுமாறினான் …………..
என்ன என்றார் வித்வான் ……..
வக்கீல் மொழி பெயர்த்தல்:
தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான். இரைச்சல், கூச்சல், அடிதடி, புயல், அலை, இடி என ….. ஒரே இரைச்சல்……. அத்தகு போர்க்களத்தினுள் நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்; காண்கிறேன். இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது …. இந்த அமைதி எனக்குப் போதும் என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார் வக்கீல்.
வித்வானின் திகைப்பு:
அமைதியா …… அப்படியா தோணித்து அவருக்கு …… நான் வார்த்தையைக் கூடச் சொல்லவில்லையே ……
மிஸ்டர் போல்ஸ்கா நீங்கள் உணர்ந்தது போல், புயல், இடி என்று சொல்லாவிட்டாலும், இப்பாடல் அமைதி அமைதி என்று அமைதியையே கடைசி இலட்சியமாக இறைஞ்சுகிறது ………. என்று திகைத்துக் கூறினார்.
போல்ஸ்கோ …… பாராட்டல்:
இசையை வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன் என்று வித்வானின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா ………..
முடிவுரை:
நாடு, மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும் இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும்.
இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.
Other Important Link for 9th Tamil Book Back Solutions:
Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers