9th Tamil unit 5.4 – விட்டிற்கோர் புத்தகசாலை Book Back Questions with Answers:
Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below.The Samacheer Kalvi Class 9 New Tamil Book Back Answers Unit 5.4 – விட்டிற்கோர் புத்தகசாலை Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Book – unit 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
9th Tamil Samacheer Kalvi Book Back Answers
Chapter 5.4 – விட்டிற்கோர் புத்தகசாலை
1. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! – கதே
இவை போன்ற பொன்மொழிகள் எழுதி வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
புத்தகம் பற்றிய பொன் மொழிகள்
- தொட்டுப் பார்த்தால் காகிதம்
படித்துப் பார்த்தால் ஆயுதம் - புத்தகமே நம்மைச் சீர்திருத்தும் நண்பன்.
- உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம்
போக விரும்பினால் ஒரு நூலகத்துக்குச் செல் – டெஸ்கார்ட்ஸ் - கைத்துப்பாக்கிகளை விடப் பெரிய ஆயுதம் புத்தகமே – லெனின்
- உடலுக்கு உடற்பயிற்சி போல் மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் ஃபிராய்ட்
- புது வாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்
- நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன். – ஆபிரகாம் லிங்கன்
- எந்தப் புத்தகத்தையும் படிக்காத புத்தகம் என்று சொல்லாதீர்கள்; படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லுங்கள் – விவேகானந்தர்
2. சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ஆம் நாள் தேசிய நூலக நாளாகக் கொண்டாடப்படுவதன் காரணத்தை அறிக.
Answer:
தேசிய நூலக நாள் – காரணங்கள்
- இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளருமான சீர்காழி இராமாமிர்தம் ரங்கநாதன் (சீர்காழி. இரா.அரங்கநாதன்] 09.08.1892 – ல் பிறந்தார். இவரது பிறந்த தினம் “தேசிய நூலக நாள்” ஆகும்.
- இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர், நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் என்னும் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்.
- நூலகவியலின் சிந்தனைகளுக்காக உலக அளவில் பல பரிசுகளைப் பெற்ற பெருந்தகையாளர். இந்திய அரசு இவருக்குப் பத்ம ஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
- இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நூலகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
- நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட “இந்திய
லகவியல் பள்ளியில்” பணியாற்றினார். - வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்தர நூலகங்களில் உறுப்பினராகவும், உயர்பதவிகளையும் பெற்றிருந்தார்.
- ஐதராபாத்தில் உள்ள “நகர நடுவ நூலகத்தில்” இவரது உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
- 27.09.1972ல் பெங்களுரில் இறுதிநிலை அடைந்த, சீர்காழி இரா. அரங்கநாதனின் மேற்கூறிய பெருமைகளே, அவரது பிறந்தநாளை “தேசிய நூலக தினமாக” கொண்டாடு வதற்கான காரணங்கள் ஆகும்.
3. நூலகத்தில் கவிதை, கதை முதலிய நூல்களை நூலாசிரியர் வரிசையிலும் நூலின் அடையாளக் குறியீட்டு எண் அடிப்படையிலும் எவ்வாறு தேடுவது என்பதைத் தெரிந்துகொள்க.
Answer:
- அகரவரிசையில் நூலாசிரியர் பெயர் அறிந்து கொள்ள வேண்டும்.
- நூல்களின் அடையாளக் குறியீட்டு எண்களையும் தெரிந்து கொண்டு தேடுதல் வேண்டும்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
1. ஆ, இ சரி; அ தவறு
2. அ, இ, சரி; ஆதவறு
3. மூன்றும் சரி
4. மூன்றும் தவறு
Answer:
3) மூன்றும் சரி
குறுவினா
1. நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?
Answer:
- உலக அறிவைத் தரக்கூடிய பொது அறிவு நூல்கள்.
- அறநூலாம் திருக்குறள்.
- விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கூறும் அறிவியல் நூல்கள்.
- வீரர்கள், தியாகிகள், கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்.
நெடுவினா
1. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
Answer:
முன்னுரை:
மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலை” என்னும் அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து பார்ப்போம்.
நூலகம்:
ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே .
“வீட்டிற்கோர் புத்தகசாலை” என்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்.
வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.
நூல்கள் :
நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூ ல்களையாவது கற்க முனையுங்கள்.
பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்” கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.
- நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்
- மக்களின் மனமாசு துடைத்தவர்கள்
- தொலைதேசங்களைக் கண்டவர்கள்
- வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை
ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .
முடிவுரை :
கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை அமைப்போம்.
“புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”
என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.
Other Important Link for 9th Tamil Book Back Solutions:
Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers