9th Tamil unit 5.1 – கல்வியில் சிறந்த பெண்கள் Book Back Questions with Answers:
Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below.The Samacheer Kalvi Class 9 New Tamil Book Back Answers Unit 5.1 – கல்வியில் சிறந்த பெண்கள் Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Tamil Unit 5.1 Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Book – unit 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
9th Tamil Samacheer Kalvi Book Back Answers
Chapter 5.1 – கல்வியில் சிறந்த பெண்கள்
1. இன்றைய சாதனைப் பெண்மணிகள் என்னும் தலைப்பில் தொகுப்பேடு உருவாக்குக.
Answer:
சாதனைப் பெண்மணிகள்:
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகள், பலசோதனைகளைக் கடந்து சாதனை செய்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர்கள்.
இந்திரா காந்தி:
இந்திரா பிரியதர்ஷினி, இந்தியாவின் இரும்புப் பெண்மணி. நாட்டின் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது பல விமர்சனங்கள், பல தடைகள் வந்தாலும், தயங்காது துணிச்சலான பல முடிவுகளை எடுத்து பாரத நாட்டை உயரச் செய்தவர்.
அன்னை தெரசா:
கருணையின் மறு உருவம் இவர். அமைதிக்கான “நோபல்” பரிசினையும், இந்திய நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதையும் பெற்றவர். அநாதைகள், ஆதரவற்றவர்கள், நோயாளிகள் என அனைவருக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்த அன்பின் திரு உருவம். அகிலமே “அன்னை ” எனக் கொண்டாடிய பெருமைக்குரியவர்.
எம். எஸ். சுப்புலெட்சுமி:
இசைத் துறையில் உலகப்புகழ் பெற்றவர். ஐ.நா மன்றத்தில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியப் பெண்மணி. பக்திப் பாடல்கள், கீர்த்தனைகள், திரை இசைப் பாடல்கள் என அனைத்து இசைவடிவிலும் முத்திரைபதித்த கலைமாமணி இவர்.
இந்திரா நூயி:
உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான, “பெப்சிகோ”வின் தலைமைச் செயல் அதிகாரி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உருவாக்கியுள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளி சார்ந்த தமிழ்ப் பெண்.
ப்ரித்தி பட்டேல்:
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 44 வயதான இவர் இங்கிலாந்து அமைச்சரவையில் சர்வதேச வளர்ச்சித் துறை மந்திரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
கியாரா நர்கின்:
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி. 16 வயதே ஆனவர். ஆரஞ்சுப் பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவது மூலம் நிலத்தில் நீரைத் தக்க வைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெறலாம் எனக் கண்டறிந்தார். இவர் சமர்ப்பித்த “தண்ணீர் இல்லாப் பயிர்கள் இனி இல்லை ” என்ற ஆய்வுக்கு 50,000 டாலர் பரிசாகப் பெற்றார்.
ஸ்டெஃபி கிராஃப்:
டென்னிஸ் வீராங்கனை, உலகெங்கும் உள்ள பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர், 22 கிராண்ட்ஸ்லாம், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம், கிராண்ட் பிரீ பட்டங்கள் பல பெற்றவர். தற்போது போர்களால் பாதிக்கப்படும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து காத்து வருகிறார்.
செரீனா வில்லியம்ஸ் :
அதிரடியாக ஆடும் டென்னிஸ் வீராங்கனை. நான்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஸ்டெஃபிகிராஃபின் சாதனையை முறியடித்தவர்.
ஜே. கே. ரவுலிங் :
வறுமைச்சூழல், சமூகத்தின் நிராகரிப்புகள் இவைகளையெல்லாம் தாண்டி, “ஹாரி பாட்டர்” கதை எழுதி வெற்றி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பெண்மணி.
மாணவர்களே, இச்சாதனைப் பெண்மணிகளின் புகைப் படங்களையும் திரட்டி, இத்தகவல்களுடன் தொகுப்பேடு தயாரித்துக் கொள்ளுங்கள்.
மேலும், கல்பனா சாவ்லா, மேரிகோம், சானியா மிர்சா, ஸ்குவாஷ் தீபிகா, டாக்டர் சாந்தா என பல சாதனையாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
2. கல்வி குறித்த சிறப்புத் தொடர்கள், பொன் மொழிகளைத் திரட்டிக் கட்டுரை வரைக.
Answer:
தொடர்கள்
- கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- கைப்பொருள் தன்னின் மெய்பொருள் கல்வி
- கல்வி கரையில கற்பவர் நாள் சில
- கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
- கல்வியழகே அழகு
பொன்மொழிகள்
- கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் கடைசி மூச்சு வரை பிறருக்குக் கொடுக்கத்தான்.
- எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.
- கல்வி ஓர் அணிகலன், அணிந்தால் அழகு தரும், அணிவித்தால் சிறப்பினைத் தரும்.
கல்வியின் சிறப்பு
முன்னுரை:
“வெள்ளத்தல் அழியாது வெந்தழலால் வேகாது”
எதனாலும் அழிக்க முடியாத விழுச்செல்வமாம் கல்வியின் சிறப்புகளாவன.
சென்ற இடமெல்லாம் சிறப்பு:
கல்வியெனும் கேடில்லாத செல்வத்தைப் பெற்றவன் எங்கு, எவ்விடம் சென்றாலும் சமூ கத்தால் மதிக்கப்படுகிறான். கற்றவனுக்கு எல்லா ஊரும் சொந்த ஊரே, எல்லா நாடும் சொந்த நாடேயாகும். இதனையே பொய்யாப் புலவனும்,
“யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” என்றார்.
மெய்ப்பொருள் கல்வி:
உலகப் பொருள்களாகிய வீடு, செல்வம், பொன், நிலம் இவையாவும் பருப்பொருள்கள். கள்வனால் களவாடப்படும், வெள்ளத்தால் நெருப்பால் அழியும். ஆனால் கல்வி நுண் பொருளாம் மெய்ப்பொருள் ஆகும். கள்வனால், பகைவனால் கொள்ளப்படாது. கொடுக்க கொடுக்க வளருமேயன்றி குறைவுபடாது. எனவே கல்வி மெய்ப் பொருளாகும்.
நிற்க அதற்குத் தக:
ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனைச் செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் கற்ற கல்வியின் பயன் கிடைக்கும். கற்ற கல்வியின் வழி நடக்கவில்லையெனில் பயன் இல்லை என்பதை.
“கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவன் வழி விளங்கிக் கொள்ளலாம்.
கண்ணுடையோர் கற்றோர்:
முகத்தின் கண்ணானது கற்றவருக்குரிய அடையாளமாகக் கூறப்படுகிறது. கல்வியறிவைப் பெற்றவனே கண்ணுடையவன். அதனைப் பெறாதவனின் கண்கள் கண் எனப்படுவதில்லை. அவை முகத்தின் புண்களே ஆகும்.
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”
கற்பவனே வாழ்பவன்:
மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். “கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகிறான்”. கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதிலலை. அதாவது கற்பவர் நாள் சிலவாக இருந்து அவர்கள் உடல் அழியலாம். ஆனால் அவர் கற்ற, கற்றுக் கொடுத்த கல்வி உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும். எனவே கற்பவன், கல்விக்காக உயிர் கொடுப்பவன் என்றும் வாழ்கிறான்.
முடிவுரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழேழு பிறவிக்கும் உடன் இருந்து வாழ வைக்கும்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவர்க்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து”.
பாடநூல் வினாக்கள்
குறுவினா
1. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
Answer:
- பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம்.
- அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிறுவினா
1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
Answer:
பெண்பாற் புலவர்கள் :
- ஔவையார்
- நக்கண்ணையார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- காக்கைப்பாடினியார் ஆதிமந்தியார்
- வெள்ளிவீதியார் வெண்ணிக்குயத்தியார்
- நப்பசலையார் பொன்முடியார்
- காவற்பெண்டு
- அள்ளூர் நன்முல்லையார் ஆகியோர் ஆவார்.
2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக?
Answer:
இன்றைய பெண்கல்வி
குழுத்தலைவர் ! ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே
நீ எழுதுகோலை எடுக்கவேணும், கையிலே….
மற்றோர் : ஆமா கையிலே….
குழுத்தலைவர் ! ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே , ஏடெடுத்து நீ போகணும்….
மற்றோர் : ஆமா … போகணும்.
குழுத்தலைவர் – சிந்திக்கும் மூளை உனக்கு வேண்டும்.
அம்மா…. நீ நிந்தையைப் பொறுத்துக்கோ
அம்மா… நீ உன் திறமையைக் காட்டு அம்மா…
மற்றோர் ! ஆமா… திறமையைக் காட்டு அம்மா…
குழுத்தலைவர் – முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து முடித்துக் காட்டு
அம்மா நீ … முடித்துக் காட்டு அம்மா ….
மற்றோர் ! ஆமா… முடித்துக் காட்டு…
குழுத்தலைவர் – செல்லம்மா நீ செல் அம்மா பள்ளிக்கு… பட்டம் பெறு அம்மா சட்டம் செய்.
அம்மா… நாடே உன்னை வணங்கட்டும் அம்மா…
மற்றோர் : ஆமா… நாடே உன்னை வணங்கட்டும் அம்மா…
3. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
Answer:
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகள்:
- 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை
- மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
- அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.
4. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.
Answer:
தமிழ்ப்பணியின் சிறப்பு:
- நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.
- இவரது தனித்தமிழ் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தடிகள் பாராட்டிய மூவர் ஆகிய நூல்களை எழுதி தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.
- மேலும், இவருடைய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
நெடுவினா
1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
Answer:
முன்னுரை:
நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பண்டித ரமாபாய்:
1858 -ஆம் ஆண்டு முதல் 1922 – ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், “பெண்மை என்றால் உயர்வு” என்பதற்குச் சான்றாவார்.
ஐடாஸ் சோபியா:
1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.
மூவலூர் இராமாமிர்தம் :
1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.
சாவித்திரிபாய் பூலே :
1831 முதல் 1897 வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.
மலாலா :
பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.
முடிவுரை :
இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே
“புவி வளம் பெறவே புதிய உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே”
Other Important Link for 9th Tamil Book Back Solutions:
Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers