13 May 2022

Samacheer Kalvi 9th Tamil Unit 1.3

9th Tamil unit 1.3 – தமிழ்விடு தூது Book Back Questions with Answers:

Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below.The Samacheer Kalvi  Class 9 New Tamil Book Back Answers Unit 1.3 – தமிழ்விடு தூது Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Book – unit 1.3 தமிழ்விடு தூது Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

9th Tamil Samacheer Kalvi Book Back Answers

Chapter 1.3 – தமிழ்விடு தூது

1. நமது எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதாக எடுத்துரைக்க உதவுவது தமிழ் மொழி என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் உரை ஒன்று எழுதுக.
Answer:
“நண்ணு மிளவைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்த மொழி – எங்கள்
கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தோ டிசைத்த மொழி”

என்று வரத நஞ்சைய பிள்ளை தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுகிறார். “இனிமையும் நீர்மையும் தமிழ் எனல்” ஆகும் என்பது புகழ்மொழியாகும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் பாடினார். தமிழ் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதில் எடுத்துரைக்கத் தக்கதாகும்.

தமிழ் மொழியிலுள்ள சொற்கட்டமைப்பும் வாக்கியக் கட்டுக் கோப்பும் எளிமையாகவும் திறமாகவும் அமைந்துள்ளன. இலக்கணக் கட்டுப்பாடு மொழிக்கு வேலி போன்றது ஆகும். சொற்கள் இலக்கியத்திற்கு என்றும் இலக்கணத்திற்கு என்றும் தனித்தனியே அமைந்துள்ளன.

இலக்கியத்திற்கு இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு சொற்களையும் பயன்படுத்துகிறோம். இலக்கணத்திற்குப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் தனியமைப்புப் பயன்பாட்டுக்குரியது.

தமிழ் மொழியின் இனிமையும் எளிமையும் சமயம் பரப்ப தமிழகத்துக்கு வந்த மேனாட்டுக் கிறித்துவ சமயச் சான்றோர்களைக் கவர்ந்தது. அவர்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் இனிய எளிய தமிழில் எடுத்துரைக்கச் செய்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் தேசியத்தை வளர்த்தது. தேசியம் தமிழை எடுத்துக் கொண்டது. கருத்துகளையும் எண்ணங்களையும் எடுத்துச் சொல்ல முடிந்தது. அறிவியல் நுட்பங்களை எடுத்துச் சொல்ல புதுப்புதுச் சொற்களைப் படைத்து அளித்ததனால் சொல்வளம் பெருகியது. தமிழ் கணினிப் பயன்பாட்டிற்கு வந்தவுடன் கணினித் தமிழ் என்ற துறை முகிழ்த்தது.
நமது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க மொழி பயன்பட்டது. அம்மொழி வழியே கருத்துகளைப் பிறருக்குப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

2. படித்துத் திரட்டுக.
“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க”
– கவியோகி சுத்தானந்த பாரதியார்.

இப்பாடல் காட்டும் இலக்கியங்களின் பெயர்களை வரிசைப்படுத்துக.
Answer:
இப்பாடல் காட்டும் இலக்கியங்கள்

குண்டலமும் – குண்டலகேசி
கைக்கு வளையாபதி – வளையாபதி
சிந்தாமணி – சீவக சிந்தாமணி
பொன்முடி சூளாமணி – சூளாமணி
செங்கோலாய்த் திருக்குறள் – திருக்குறள்
9th New Tamil Book back Answers
பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள்
ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம்
ஈ) தனிப்பாடல்
Answer: இ) சிற்றிலக்கியம்

2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
i) ………………. இனம்
ii) வண்ணம்…………………..
iii) …………… குணம்
iv) வனப்பு …………………….
அ) மூன்று, நூறு, பத்து, எட்டு
ஆ) எட்டு, நூறு, பத்து, மூன்று
இ) பத்து, நூறு, எட்டு, மூன்று
ஈ) நூறு, பத்து, எட்டு, மூன்று
Answer: அ) மூன்று, நூறு, பத்து, எட்டு

3. அழியா வனப்பு, ஒழியா வனப்பு சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு
அ) வேற்றுமைத்தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
Answer: ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறுவினா

1. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
Answer:
இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

நெடுவினா

1. ‘தூது அனுப்பத் தமிழே சிறந்தது’ – தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது ஆகும். வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்றும் இதனை அழைப்பர். தலைவர் தலைவியர்களுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் அன்பு காட்டுவர். அதற்கு அடையாளமாக மாலை வாங்கி வருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகப் பாடுவது ஆகும். இது கலிவெண்பாவால் பாடப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண், தன் காதலைக் கூறிவருமாறு தமிழைத் தூது விடுவதாகப் பாடப்படுவதாகும். கலிவெண்பாவால் பாடப்படும். இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.

விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் :
தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் வீடுபேற்றைத் தரும் கனியே! இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் சிறந்து விளங்கும் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் மகிழ்ந்து விடுக்கும் விண்ணப்பம் ஒன்றுள்ளது அதைக்

கேட்பாயாக. மூவகைப் பாவினங்களிலும் உறவு உண்டோ ?
தமிழே, உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புப் பெற்றனர். நீயும் படிக்கக் கொடுப்பாய். அதனால் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களிலும் உறவு உண்டோ ?

‘சிந்து’ என்றழைப்பது தகுமோ?
தமிழ்ப்பாவகை அனைத்தும் பொருந்தி நின்று என்றுமே சிந்தாமணியாய் இருக்கும் உன்னை , சிந்து என்றழைப்பது உன் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு கூறிய நா இற்று விழும்.

பத்துக் குணங்கள் பொருந்திய தமிழே!
வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம் (அமைதி) இராசசம் (தீவிரமான குணம்) தாமசம் (சோம்பல்) மூன்று குணங்கள் பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக் குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை , காந்தம், வலி, சமாதி எனும் பத்துக் குணங்களைப் பெற்றுள்ளாய்.

நூறு வண்ணங்கள் கொண்ட வண்டமிழே:
மனிதர்களால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை (பொன் நிறம்) பசுமை என ஐந்தே. நீயோ, புலவர்கள் தெளிந்த குறில், அகவல், தூங்கிசை, வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

எட்டழகு பெற்ற கட்டழகுத் தமிழே :
நாவினால் அறியும் சுவைகள் ஆறு. நீயோ, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமனிலை பெற்றுள்ளாய். தமிழை அறியாதவர்களுக்கு அழகு ஒன்றே ஒன்று என்றில்லாமல் அதிகம் உண்டோ ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய்.

Other Important Link for 9th Tamil Book Back Solutions:

Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *