Samacheer Kalvi 9th Science Unit 9 Book Back Questions Tamil Medium with Answers:
Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 9 – அண்டம் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 9 Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:
Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Physics questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.
அலகு 09: அண்டம் Book Back Answers in Tamil
Science (அறிவியல்)
அலகு 09 – அண்டம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
அ) டைக்கோ பிராஹே
ஆ) ஆர்க்கிமிடிஸ்
இ) நிகோலஸ் கோபர் நிக்கஸ்
ஈ) டாலமி
விடை:
இ) நிகோலஸ் கோபர் நிக்கஸ்
2. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?
அ) புதன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெஃப்டியூன்
விடை:
அ) புதன்
3. செரஸ் என்பது ______
அ) விண்க ல்
ஆ) விண்மீ ன்
இ) கோள்
ஈ) சிறுகோள்
விடை:
ஈ) சிறுகோள்
4. A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?
அ) 4
ஆ) 5
இ) 2
ஈ) 3
விடை:
அ) 4
5. _______ ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
அ) 13.7 பில்லியன்
ஆ) 15 மில்லியன்
இ) 15 மில்லியன்
ஈ) 20 மில்லியன்
விடை:
அ) 13.7 பில்லியன்
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. சூரியனின் திசைவேகம் ______ கிமீ/வி.
விடை:
250
2. முனைகளில், சூரியனின் சுழற்சி வேகம் _______
விடை:
குறையும் 36 நாள்கள்
3. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ________
விடை:
ஆர்யபட்டா
4. கெப்ளரின் மூன்றாம் விதியை ______ என்றும் அழைப்பர்.
விடை:
ஒத்திசைவுகளின் விதி
5. நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை ____ ஆகும்.
விடை :
8
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
1. பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்.
விடை:
சரி
2. ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு ஒருமுறை தோன்றும்.
விடை:
தவறு ஹேலிஸ் வால்மீன் 76 ஆண்டுகளுக்கு பின் தோன்றும்.
3. பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்.
விடை:
தவறு பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் அதிகமாக இருக்கும்.
4. புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது. செவ்வாய் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.
விடை:
தவறு
IV. சுருக்கமாக விடையளி.
1. சூரிய மண்டலம் என்றால் என்ன?
விடை:
- சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் வான் பொருள்கள் அனைத்தும் சேர்ந்தது சூரிய மண்டலம் ஆகும்.
- இதில் கோள்கள், வீண்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவை உள்ளது.
2. சுழற்சித் திசைவேகம் வரையறு.
விடை:
- கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவர அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம்.
3. சுற்றுக்காலம் வரையறு.
விடை:
- புவியை ஒரு முறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம். கடந்த தொலைவு
- சுற்றுக்காலம்
4. துணைக்கோள் என்றால் என்ன? துணைக்கோளின் இரு வகைகள் யாவை?
விடை:
ஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்திலுள்ள கோள்களை சுற்றி வரும் பொருள் துணைக் கோள் எனப்படும்.
துணைக்கோளின் இரு வகைகள்
- இயற்கைத் துணைக்கோள் – நிலவு
- செயற்கைத் துணைக்கோள் – செயற்கைக்கோள்
5. ‘உட்புறக் கோள்கள்’ குறிப்பு வரைக.
விடை:
- உட்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கும் உட்புறக் கோள்கள்.
- இவற்றின் புறப்பரப்பு திண்மப் பாறை மேலேட்டால் ஆனது. இவை நிலம் சார்கோள்கள் அல்லது பாறைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
- இவற்றின் உட்பகுதி, புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில், ஒரே வடிவில் உள்ளன.
6. வால் விண்மீன்கள் என்றால் என்ன?
விடை:
- அதி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருட்களே வால் விண்மீன்கள் எனப்படும்.
- இவற்றின் சுற்றுக் காலம் அதிகம். சூரியனை நெருங்கும்போது ஆவியாகி தலை மற்றும் வால் உருவாகும்.
- பல வால் விண்மீன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் தோன்றுபவை. (எ.டு) ஹாலி வால் விண்மீன் 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் தெரியும்.
7. கெப்ளரின் விதிகளை – வரையறு.
விடை:
1. முதல் விதி – நீள் வட்டங்களின் விதி
சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.
2. இரண்டாம் விதி – சம பரப்புகளின் விதி
கோளின் மையத்தையும், சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சமகாலங்களில் சம பரப்புகளை கடக்கிறது.
3. மூன்றாம் விதி – ஒத்திசைவுகளின் விதி
எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.
8. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?
விடை:
- பூமியில் மட்டும் தான் உயிர்வாழ்வதற்கான சூழல் உள்ளது.
- சூரியனிலிருந்து சரியான தொலைவு.
- சரியான வெப்பநிலை
- நீர் ஆதாரம்
- சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி
- கொண்டுள்ளது. இவையே பூமியில் உயிர் வாழ்வதற்கான காரணிகளாகும்.
Other Important links for 9th Science Book Back Answers in Tamil:
Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil