19 May 2022

Samacheer Kalvi 8th Tamil Unit 4.3 Book Back Answers

8th Tamil unit 4.3 – பல்துறைக் கல்வி Book Back Questions with Answers:

Samacheer Kalvi 8th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 8 New Tamil Book Back Answers Unit 4.3 – பல்துறைக் கல்வி Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 8th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Tamil guide Book Back Answers PDF. See below for the New 8th Tamil Book Back Questions with Answer PDF:
8th Samacheer Kalvi Book – unit 4.3 பல்துறைக் கல்வி Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 8th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

8th Tamil Samacheer Kalvi Book Back Answers

Chapter 4.3 – பல்துறைக் கல்வி

கற்பவை கற்றபின்

1. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
விடை:
8th tamil book back questions with answer
மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது …………..
அ) விளக்கு
ஆ) கல்வி
இ) விளையாட்டு
ஈ) பாட்டு

2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் …………..
அ) இளமை
ஆ) முதுமை
இ) நேர்மை
ஈ) வாய்மை

3. இன்றைய கல்வி …………………… நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில்
ஆ) நாட்டில்
இ) பள்ளியில்
ஈ) தொழிலில்

நிரப்புக

1. கவப்பில் …………. உண்டென்பது இயற்கை நுட்பம்.
2. புற உலக ஆராய்ச்சிக்கு …………… கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ……………. இன்பம் ஆகும்.
விடை:
1. வளர்ச்சி
2. அறிவியல்
3. காவிய

பொருத்துக

1. இயற்கை ஓவியம்               – சிந்தாமணி
2. இயற்கைத் தவம்                – பெரியபுராணம்
3. இயற்கைப் பரிணாமம் — பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு                  – கம்பராமாயணம்
விடை:
1. இயற்கை ஓவியம்               –  பத்துப்பாட்டு
2.. இயற்கைத் தவம்               – சிந்தாமணி
3. இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்
4. இயற்கை அன்பு                  – பெரிய புராணம்
குறுவினா

1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
விடை:
இன்றைய கல்வியின் நிலை :
(i) இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.

(ii) குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

(iii) நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகும் என்று இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுகிறார்.

2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
விடை:
நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. முதலில் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும். தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

3. திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
விடை:
இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி.

சிறுவினா

1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை எழுதுக்.
விடை:
(i) தமிழிலேயே கல்வி போதிக்கத் தமிழில் போதிய கலைகளில்லையே; சிறப்பான அறிவியல் கலைகளில்லையே என்று சிலர் கூக்குரலிடுகிறார். அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதல் முதல் தம் தாய்மொழியில் வரைந்து விடுகிறார். அவை பின்னே பல மொழிகளில் பெயர்த்து எழுதப்படுகின்றன.

(ii) அம்மொழிபெயர்ப்பு முறையைத் தமிழர் கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது? குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது. கலப்பில் வளர்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்.

(iii) தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு. ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக் கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

(iv) கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.

2. அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
விடை:
(i) உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ‘அறிவியல்’ என்னும் அறிவுக்கலை.

(ii) உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும். இந்நாளில் இவைகளைப் பற்றிய பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்.

(iii) புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது. நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.

(iv) இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.

நெடுவினா

1. காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
விடை:
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகள் :
(i) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம்.

(ii) நாம் தமிழர்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ செல்ல வேண்டும்.

(iii) தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.

(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ ? தமிழ்க் காப்பியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.

சிந்தனை வினா

1. திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
விடை:
(i) நான் கற்க விரும்புவது இசைக்கல்வி.

(ii) இசைக்கு மயங்காதவர் எவருமில்லை . இறைவனிடம் நாம் பேசுவது இசைமொழியில்தான்.

(iii) ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்களுடைய பாடல்களை இசைத்தே இறைவனை மகிழ்வித்துள்ளனர். இசையானது, கவலை என்ற நோயைத் தீர்க்கும் மருந்தாகும். எனவே நான் இசைக்கல்வியைக் கற்க விரும்புகிறேன்.

Other Important links for 8th Tamil Book Back Solutions:

Click here to download the complete Samacheer Kalvi 8th Tamil Book Back Answers – 8th Tamil Book Back Answers
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *