7th Tamil Term II Unit 2.5 – ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் Book Back Questions with Answers:
Samacheer Kalvi 7th Standard Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and the same is given below. Class seventh candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 7th Tamil Book Back Answers Term 2 Unit 2.5 – ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் Book Back Solutions given below. Check the complete Samacheer Kalvi 7th Tamil Term 2 Unit 2.5 Answers below:
We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard Tamil Term 2 Unit 2.5 – ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் Book Back Questions with Answer PDF:
For Samacheer Kalvi 7th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 7th Tamil Book Back Answers Guide
Samacheer Kalvi 7th Tamil Term 2 Unit 2.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் Book Back Solutions PDF:
Samacheer Kalvi 7th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check the 7th Tamil Term II Unit 2 solution:
7th Tamil Term 2
Chapter 2.5 – ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை …………..
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
Answer: ஆ) 42
2. எழுதினான்’ என்பது ………………..
அ) பெயர்ப் பகுபதம்
ஆ) வினைப் பகுபதம் இ) பெயர்ப் பகாப்பதம்
ஈ) வினைப் பகாப்பதம்
Answer: ஆ) வினைப் பகுபதம்
3. பெயர்ப்ப குபதம் ……………… வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer: இ) ஆறு
4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ……………….
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சந்தி
Answer: இ) இடைநிலை
பொருத்துக:
1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்
2. வினைப் பகுபதம் – மன்
3. இடைப் பகாப்பதம் – நனி
4. உரிப் பகாப்பதம் – பெரியார்
Answers:
1. பெயர்ப் பகுபதம் – பெரியார்
2. வினைப் பகுபதம் – வாழ்ந்தான்
3. இடைப் பகாப்பதம் – மன்
4. உரிப் பகாப்பதம் – நனி
சரியான பகுபத உறுப்பை எழுதுக:
1. போவாள் – போ + வ் + ஆள்
போ – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆள் – படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி
2. நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்
நட – பகுதி
க் – சந்தி
கின்று – நிகழ்கால இடைநிலை
ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக:
1. பார்த்தான் – பார் + த் + த் + ஆன்
பார் – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆன்- படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
2. பாடுவார் – பாடு + வ் + ஆர்
பாடு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி
குறுவினா:
1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
Answer:
(i) ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவதே ஓரெழுத்து ஒரு மொழி ஆகும்.
(ii) எ.கா. (தீ, நீ, வா, போ).
2. பதத்தின் இரு வகைகள் யாவை?
Answer:
பதம் இரண்டு வகைப்படும். அவை, பகுபதம், பகாப்பதம்.
3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
Answer:
அவை யாவை? பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
சிறுவினா:
1. விகுதி எவற்றைக் காட்டும்?
Answer:
சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பே விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம்,
முற்று, எச்சம் போன்றவற்றைக் காட்டும். (எ.கா.) படித்தான் = ஆன் – விகுதி
2. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை இவற்றில் ஏற்படும் மாற்றமே விகாரம் எனப்படும்.
(எ. கா.) வந்தான் = வா – பகுதி வா ‘வ’ எனக் குறுகியது விகாரம்.
3. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பெயர்ப் பகுபதம் ஆறு வகைப்படும். அவை
(i) பொருள் – பொன்னன் (பொன் + அன்)
(ii) இடம் – நாடன் (நாடு + அன்)
(iii) காலம் சித்திரையான் (சித்திரை + ஆன்)
(iv) சினை கண்ண ன் (கண் + அன்)
(v) பண்பு இனியன் (இனிமை + அன்)
(vi) தொழில் – உழவன் (உழவு + அன்)
கற்பவை கற்றபின்:
1. பாடப்பகுதியில் இடம்பெற்ற சொற்களில் பகுபதம், பகாப்பதம் ஆகியவற்றைக் கண்டறிந்து தனித்தனியே தொகுக்க.
Answer:
பகுபதம்
பெயர்ப்பகுபதம் :
பொருள் – பொன்னன் (பொன் + அன்)
இடம் – நாடன் (நாடு + அன்)
காலம் – சித்திரையான் (சித்திரை + ஆன்)
சினை – கண்ண ன் (கண் + அன் )
பண்பு – இனியன் (இனிமை + அன்)
தொழில் – உழவன் (உழவு + அன்)
வினைப்பகுபதம் : உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
பகாப்பதம் :
பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று
வினைப் பகாப்பதம் – நட, வா, படி, வாழ்.
இடைப் பகாப்பதம் – மன், கொல், தில், போல்
உரிப் பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி.
2. உங்கள் வகுப்பு மாணவ – மாணவிகளின் பெயர்களைப் பகுபதம், பகாப்பதம் என வகைப்படுத்துக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
Other Important links for 7th Tamil Book Back Solutions:
For Class 6th to 10th standard book back question and answers PDF, check the link – 6th to 10th Book Back Questions and Answers PDF
Tamil Nadu Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF