23 May 2022

Samacheer Kalvi 7th Tamil Term 1 Unit 3.4 Answers

7th Tamil Term 1 unit 3.4 – கப்பலோட்டிய தமிழர் Book Back Questions with Answers:

Samacheer Kalvi 7th Standard Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and the same is given below. Class seventh candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 7th Tamil Book Back Answers Term 1 Unit 3.4 – கப்பலோட்டிய தமிழர் Book Back Solutions given below. Check the complete Samacheer Kalvi 7th Tamil Term 1 Unit 3.4 Answers below:

We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard Tamil Term 1 Unit 3.4 – கப்பலோட்டிய தமிழர் Book Back Questions with Answer PDF:

For Samacheer Kalvi 7th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 7th Tamil Book Back Answers Guide




Samacheer Kalvi 7th Tamil Term 1 Unit 3.4 கப்பலோட்டிய தமிழர் Book Back Solutions PDF:

Samacheer Kalvi 7th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 7th Tamil Term 1 Unit 3 solutions:

7th Tamil Term 1

Chapter 3.4 – கப்பலோட்டிய தமிழர்

மதிப்பீடு

1. வ.உ.சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.
விடை: –
முன்னுரை :
‘சிதம்பரனாரின் பிரசங்கத்தைக் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும், புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்ற கூற்றின் படி பேச்சாற்றல் மிக்க வ.உ. சிதம்பரனாரின் வாழ்வியல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு மற்றும் பெற்றோர் :
சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் வண்டானம் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் உலகநாத பிள்ளை , பரமாயி அம்மாள் ஆவர்.

வழக்கறிஞர் பணி :
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் தன் தந்தையைப் போன்று வழக்கறிஞரானார். வ.உ.சி. ஏழைகளுக்காக வாதாடினார். சில சமயங்களில் கட்டணம் பெறாமலும் வாதாடினார். சிறந்த வழக்கறிஞர் என்று போற்றப்பட்டார்.

வெள்ளோட்டம் :
இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். வெள்ளையர்களின் கப்பலில் கூலி வேலை செய்யும் நம் நாட்டு மக்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க முனைந்தார். அம்முனைப்பால் ‘சுதேசக் கப்பல் கம்பெனி’ உருவாயிற்று. தலைவராகப் பாண்டித்துரை தேவர் பொறுப்பேற்றார். அவர்கள் வாங்கிய சுதேசக் கப்பல் வெள்ளோட்டத்திற்காகக் கொழும்புத் துறைமுகத்திற்குப் புறப்பட்டபோது அளவிலா மகிழ்ச்சியடைந்தார்.

வெள்ளையர்களின் வீழ்ச்சி :

சுதேசக் கப்பலின் வருகையால் வெள்ளையர்களின் கப்பல் வாணிகம் தளர்ந்தது. வெள்ளையர்கள் பல சூழ்ச்சிகளைச் செய்தனர். வ.உ.சிதம்பரனாருக்குக் கையடக்கம் தருவதாகவும் கூறினர். பலரைப் பயமுறுத்தினர். இறுதியில் அடக்குமுறையைக் கையாண்டனர்.

சுதந்தர நாதம் எழுந்தது :

பரங்கியரை அசைக்க இயலாது என எண்ணி அடிமைப்பட்டனர் மக்கள். எதிர்த்துப் பேசாமல் சலாமிட்டும், தாளம் போட்டும், அரசாங்கப் பதுமைகளாய் ஆடியும், அரசு வாழ்க என்று பாடியும் தன்னிலையறியாமல் இருந்தனர். இச்சூழலில் சுதந்தர நாதம் எழுந்தது.

வந்தே மாதரம் :

சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய வடநாட்டு வீரரான பாலகங்காதர திலகரும். தென்னாட்டில் நாவீறுடைய பாரதியாரும் தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரும் வந்தே மாதரம்’ என்று முழங்கி மக்களிடம் ஆர்வத்தைத் தட்டி எழுப்பினர். பொதுக் கூட்டங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் வ.உ.சி. ‘வந்தே மாதரத்தை அழுத்தமாகச் சொல்லுவார். அதைக் கேட்டு மக்கள் ஊக்கமுற்றனர்.

சிறைத்தண்டனை :

எரிவுற்ற அரசாங்கம் வ.உ.சி. யை எதிரியாகக் கருதியது. அதனால் வ.உ.சி.க்கு ‘இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை’ விதித்தது. ஆறாண்டுகள் கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி ஆற்றினார். சிறைச்சாலையை தவச்சாலையாக எண்ணினார். அவர் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவச்செயல்கள் எண்ணிலடங்காதவை.

சிறைச்சாலையில் வ.உ.சி. :

சிறைச்சாலையில் அவரைப் பலரும் கண்காணித்தனர். கடும்பணி இட்டனர் பலர். ஆனால் அவர் எவரையும் வெறுத்ததில்லை . முறைதவறி நடந்தவர்களை எதிர்த்தார். வரைதவறிப் பேசியவர்களை வாயால் அடக்கினார். ஒரு முறை உடல் நலிந்து, உள்ளம் தளர்ந்து சிறைக்கூடத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு ஜெயிலர், வ.உ.சி.க்குப் புத்திமதிகள் கூறினார். வெகுண்டெழுந்த வ.உ.சி. அடே மடையா! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன்? மூடு வாயை ! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான். உன்னுடைய கவர்னருக்கும் மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான்’ என்று வேகமுறப் பேசினார். மானமிழந்து வாயிலிலிருந்து மறைந்தான் ஜெயிலர்.

சிறையில் தமிழ்ப்பணி :

சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தையும், கடும்பணிபுரிந்தபோது வந்த கண்ணீரையும் தமிழ் நூல்களைப் படித்து மாற்றிக்கொண்டார். தொல்காப்பியம்,

இன்னிலை ஆகிய நூல்களைப் படித்தார். ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி
நூலை மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை இயற்றினார்.

முடிவுரை :

வ. உ. சிதம்பரனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துறைமுகத்தை வந்து பார்த்தார். சுதேசக் கப்பலைக் காணாமல் துயருற்றார். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தார்.

பாயக்காண்பது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்று நாம் அனைவரும் பாடும் நாள் வரவேண்டும் என எண்ணினார். ஆனால் அந்நாள் வந்தபோது அவர் இவ்வுலகில் இல்லை . விடுதலைக்காகப் போராடி நாட்டு மக்களின் துயர் துடைத்த வ.உ.சி. அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்.




கற்பவை கற்றபின்

1. பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பில் உரையாற்றுக.
விடை: –
வணக்கம்!
நான் தான் திருப்பூர் குமரன். என்னைக் கொடிகாத்த வீரன் என்று அன்போடு அழைப்பார்கள். இந்திய விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுள் ஒருவன். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது. அப்போதுதான் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் மறியல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதில் நாங்கள் அனைவரும் தீவிரமாகப் பங்கேற்றோம். அப்போராட்டத்திற்கு நானே தலைமை ஏற்றேன். ஊர்வலத்தில் இந்திய ஒன்றியத்தின் கொடியினை கையில் ஏந்தி அணிவகுத்துச் சென்றேன். அப்போதுதான் நான் காவலர்களால் தாக்கப்பட்டேன். என்னைக் காவலர்கள் தடியைக்கொண்டு மண்டை பிளக்குமாறு அடித்தார்கள். கையில் இந்தியக் கொடியை ஏந்தியபடி நான் மயங்கி விழுந்தேன்.

மயங்கிய நிலையிலும் கொடியைத் தாங்கிப் பிடித்திருந்தமையால் தான் என்னைக் கொடி காத்த குமரன் என்றழைத்தனர். என்னை மருத்துவமனையில் சேர்த்தனர், என் உயிர் பிரிந்தது. என் வருத்தமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்காகப் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருப்பேன். வெள்ளையரிடம் இருந்து நாட்டைக் காக்கும் வரை போராடி இருப்பேன் என்பது தான்.

என்னைப் போன்று பலர் விடுதலைக்காக உழைத்து தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக ஈந்துள்ளனர்.

நீங்கள் சுதந்தரக் காற்றைச் சுவாசிக்க தங்கள் உயிர் மூச்சை விட்டவர் பலர்.
நீங்கள் சுதந்தரம் என்ற பெயரில் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் சீரழித்து விட்டீர்கள். இவற்றை மட்டுமா சீரழித்தீர்கள்? இயற்கையையும் அழித்தீர்கள். மாணவச் செல்வங்களே இனிமேலாவது இந்தத் தவறுகளையெல்லாம் செய்யாமல் நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுங்கள் வளமான நாட்டை உருவாக்குங்கள்.
செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

இன்னிலை ஆகிய நூல்களைப் படித்தார். ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி நூலை மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை இயற்றினார்.

முடிவுரை :
வ. உ. சிதம்பரனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துறைமுகத்தை வந்து பார்த்தார். சுதேசக் கப்பலைக் காணாமல் துயருற்றார். பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே என்று பரிதவித்தார்.

பாயக்காண்பது சுதந்திரவெள்ளம்

பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்று நாம் அனைவரும் பாடும் நாள் வரவேண்டும் என எண்ணினார். ஆனால் அந்நாள் வந்தபோது அவர் இவ்வுலகில் இல்லை . விடுதலைக்காகப் போராடி நாட்டு மக்களின் துயர் துடைத்த வ.உ.சி. அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

கற்பவை கற்றபின்

1. பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பில் உரையாற்றுக.
விடை: –
வணக்கம்!
நான் தான் திருப்பூர் குமரன். என்னைக் கொடிகாத்த வீரன் என்று அன்போடு அழைப்பார்கள். இந்திய விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுள் ஒருவன். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது. அப்போதுதான் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் மறியல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் நாங்கள் அனைவரும் தீவிரமாகப் பங்கேற்றோம். அப்போராட்டத்திற்கு நானே தலைமை ஏற்றேன். ஊர்வலத்தில் இந்திய ஒன்றியத்தின் கொடியினை கையில் ஏந்தி அணிவகுத்துச் சென்றேன். அப்போதுதான் நான் காவலர்களால் தாக்கப்பட்டேன். என்னைக் காவலர்கள் தடியைக்கொண்டு மண்டை பிளக்குமாறு அடித்தார்கள். கையில் இந்தியக் கொடியை ஏந்தியபடி நான் மயங்கி விழுந்தேன். மயங்கிய நிலையிலும் கொடியைத் தாங்கிப் பிடித்திருந்தமையால் தான் என்னைக் கொடி காத்த குமரன் என்றழைத்தனர். என்னை மருத்துவமனையில் சேர்த்தனர், என் உயிர் பிரிந்தது. என் வருத்தமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்காகப் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருப்பேன். வெள்ளையரிடம் இருந்து நாட்டைக் காக்கும் வரை போராடி இருப்பேன் என்பது தான்.

என்னைப் போன்று பலர் விடுதலைக்காக உழைத்து தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக ஈந்துள்ளனர். நீங்கள் சுதந்தரக் காற்றைச் சுவாசிக்க தங்கள் உயிர் மூச்சை விட்டவர் பலர்.

நீங்கள் சுதந்தரம் என்ற பெயரில் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் சீரழித்து விட்டீர்கள். இவற்றை மட்டுமா சீரழித்தீர்கள்? இயற்கையையும் அழித்தீர்கள். மாணவச் செல்வங்களே இனிமேலாவது இந்தத் தவறுகளையெல்லாம் செய்யாமல் நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுங்கள் வளமான நாட்டை உருவாக்குங்கள்.

செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

Other Important links for 7th Tamil Book Back Solutions:

For Class 6th to 10th standard book back question and answers PDF, check the link – 6th to 10th Book Back Questions and Answers PDF

Tamil Nadu Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *