6th Tamil Term 3 Unit 3.4 – அணி இலக்கணம் Book Back Questions with Answers:
Samacheer Kalvi 6th Standard Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and the same given below. Class sixth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 6th Std Tamil Book Back Answers Term 3 Unit 3.4 – அணி இலக்கணம் Book Back Solutions are given below. Check the complete Samacheer Kalvi 6th Tamil Term 3 Unit 3.4 Answers below:
We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Tamil Term 3 Unit 3 Book Back Questions with Answer PDF:
For Samacheer Kalvi 6th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 6th Tamil Book Back Answers Guide
Samacheer Kalvi 6th Term Term 3 Unit 3.4 அணி இலக்கணம் Book Back Answers PDF:
Samacheer Kalvi 6th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 6th Tamil Term 3 Unit 3 solutions:
6th Tamil Samacheer Kalvi Book Back Answers
Term 2 Chapter 3.4 – அணி இலக்கணம்
கற்பவை கற்றபின்
1. பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.
ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.
விடை:
இயல்பு நவிற்சி அணி.
மதிப்பீடு
குறுவினா
1. உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது?
விடை:
உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் இயல்பு நவிற்சியணி.
2. உயர்வு நவிற்சி அணி என்பது யாது?
விடை:
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
சிந்தனை வினா
1. நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த இடம் ஒன்றினை இயல்பு நவிற்சியாகவும் உயர்வு நவிற்சியாகவும் விவரிக்க.
விடை:
இயல்பு நவிற்சி : கன்னியாகுமரி தமிழ்நாட்டின் ஓர் முக்கிய ஊராகும். இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது ஒரு சுற்றுலாத் தலம். இங்கு விவேகானந்தர், காமராசர், காந்தியடிகள் ஆகியோருக்கு நினைவு மண்டபம் உள்ளது. 133 அடி திருவள்ளுவர் சிலை உள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் சாம்பல்(அஸ்தி கரைக்கப்பட்டது.
உயர்வு நவிற்சி :
(i) கன்னியாகுமரி இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஊராகும். இங்கு மட்டும்தான் வங்காள விரிகுடா கடலும், அரபிக்கடலும், இந்திய பெருங்கடலும் சங்கமிக்கிறது.
(ii) இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.
(iii) இங்கு உலகப் புகழ்பெற்ற விவேகானந்தர் நினைவு மண்டபம் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். அந்தளவிற்கு அழகாக இருக்கிறது. வானை முட்டும் அளவிற்கு 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
(iv) இங்குதான் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் சாம்பல் (அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுக்கும், காமராசருக்கும் புகழ்பெற்ற நினைவு மண்டபங்கள் உள்ளது. இவை எல்லாம் கன்னியாகுமரியின் பெருமை ஆகும்.
மொழியை ஆள்வோம்
பேசுக:
1. உங்கள் மீது அதிகம் அன்பு செலுத்துபவர்கள் யார்? நீங்கள் யார்யார் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள்? காரணம் கூறுக.
விடை:
(i) என் மீது அதிகம் அன்பு செலுத்துபவர் என் அம்மா.
(ii) அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என என் உறவினர்கள் அனைவர் மீதும் அன்பு வைத்திருக்கிறேன்.
காரணம் :
நான் ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்கின்றேன். எனக்கு நினைவு தெரியும் போதிலிருந்தே என் வீட்டில், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா என அனைவரும் இருக்கின்றனர். என் நல்லது கெட்டது இவற்றில் எதுவானாலும் என்னோடு
சேர்ந்து மகிழவும் செய்வர் வருந்தவும் செய்வர். எனக்கு நேர்வதை அவர்களுக்கு நேர்ந்ததாக உணர்வர்.
எனக்கு ஏதாவது தேவை என்றால் நான் யாரிடம் வேண்டுமானாலும் கேட்பேன். என் தேவைகள் உடனே பூர்த்தியாகும். அதுமட்டுமின்றி என் வயதில் உள்ள மாமா, அத்தை பிள்ளைகள், பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் அனைவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகுவோம். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
2. நீங்கள் ஒருவருக்குப் பரிசு கொடுக்க விரும்பினால் யாருக்குக் கொடுப்பீர்கள்? என்ன கொடுப்பீர்கள்? எதற்காகக் கொடுப்பீர்கள்?
விடை:
(i) என் நண்பனுக்குப் பரிசு கொடுப்பேன்.
(ii) புத்த கம்.
(iii) எனக்கும் என் நண்பனுக்கும் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். மற்றப் பரிசுகள் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும். ஆனால் புத்தகம் அறிவுப் பொருளாக இருக்கும். புத்தகத்தைப் படித்து அதனால் பெறுகின்ற அறிவை எக்காலத்திலும் மறக்கவியலாது. எனவே, புத்தகத்தை மட்டுமே பரிசாகத் தருவேன்.
3. பின்வரும் தலைப்புகளுள் ஒன்று பற்றி மூன்று மணித்துளிகள் பேசுக.
அ) பொதுநலம்
ஆ) சமூகத்தொண்டு
விடை:
அ) பொதுநலம்:
சுயநலமற்ற நலமே பொதுநலம். சுயநலம் என்பது நம்முடன் பிறந்தது. அதனை யாரும் நமக்குக் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. அது நம் உணர்வோடு கூடியதாக இருக்கும். நமக்கு நம் வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகும் வழக்கம் இருந்தாலே பொதுநலம் வளரும். தன்னலமற்றவராய் வாழ்ந்து இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். அவர்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தங்கள் சுக துக்கங்களுக்கு இடம் கொடாமல் பிறர் நலனை மட்டுமே கருதி வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகும்.
பொதுநலம் நாடுபவர்கள் சுயநலமற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறவியலாது. ஏனெனில் அவர்களிடம் பத்து சதவிகிதமாவாது சுயநலம் இருக்கும். வள்ளுவர். “குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்” என்று கூறியுள்ளார். ஒருவருடைய குணத்தை ஆராயும் போது அவற்றுள் எக்குணம் மேலோங்கி இருக்கின்றதோ அதனை வைத்து அவர் மதிப்பிடப்படுவார்.
அதுபோல்தான் சுயநலமும், பொதுநலமும், சுயநலக்காரர்கள் நூறு சதவிகிதம் சுயநலத்துடன் இருப்பர். பொதுநலக்காரர்கள் பெரும்பான்மை பொதுநலமும், சிறுபான்மை சுயநலமும் உடையவர்களாக இருப்பர். நாணயத்திற்கு இருபக்கம் போன்றதது தான் இச்சுயநலமும் பொதுநலமும்.
தன்னம்பிக்கை எவரிடம் அதிகமாகக் காணப்படுகிறதோ அவரிடம் பொதுநலம் அதிகமாகக் காணப்படும். சமுதாயத்திற்குச் செய்யப்படுகின்ற உதவியே பொதுநலம். பொதுநலம் என்பது பிறரைப் பார்த்து வருவது. பிறர் சொல்லித் தெரிவது. உணர்வோடு தொடர்புடையதாக இருக்கும். மற்றவர்களுக்கு நாம் செய்கின்ற சேவைகள், உதவிகள் எல்லாமே பொதுநலமாகும். கண்தானம், இரத்ததானம், உறுப்புதானம் : என இவையெல்லாமே பொதுநலம்தான். மனிதநேயம் எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கே பொதுநலம் மலர்கிறது.
பொதுநலம் என்பது சுயநலமற்றது. சாதி மதம் பாராதது, ஏழை எளியவர் எனக் கருதாது. பிறருக்காக உழைப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது, பிறரை அரவணைப்பது, ஏழைக் குழந்தைகளைக் கொஞ்சுதல் அவர்களுக்குத் தேவையானவற்றை அளிப்பது இவையெல்லாம் பொதுநலம்தான். பொதுநலம் உடையவரிடம் இருக்க வேண்டியது இனிமை, எளிமை, பொறுமை, பொதுமை ஆகிய பண்புகளாகும். இப்பண்புகளில் சிறந்தவர்கள் நோய்நொடிகளற்று நிம்மதியாக வாழ்வார்கள்.
‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர் பெருமான். அவரன்றோ பொதுநலத்தின் முன்னோடி. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்பதைப் போல் பொதுநலம் அமைய வேண்டும். பொது நலத்தில் நம் உலகத்திற்கே முன்னோடியாக வாழ்பவர்கள் விவசாயிகள்தான். உலகமே அவர்களின் உழைப்பில்தான் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.
அவசர சிகிச்சைக்கான ஊர்தி பொதுநலம் கருதியே இயங்குகிறது. பொதுநலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதால் சுயநலச் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது. பொதுநலம் காப்பவர்கள் சூரியன், சந்திரன் போன்றும் காற்றும் மழையும் போன்று அனைவருக்கும் பொதுவாக இருந்து செயலாற்ற வேண்டும்.
ஆ) சமூகத் தொண்டு :
பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம், சமுதாயம் என அழைக்கப்படுகிறது. அந்த சமுதாயம் மேம்படவும், மக்களின் வாழ்வு மேம்படவும், பலரும் முயல்கின்றனர். குழு அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் தொண்டு செய்கின்றனர். அவ்வாறு மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி செயலாற்றுகிறார்கள். நாம் செய்யும் செயல்களை நம் கடமை என எண்ணிச் செயல்படவேண்டும்.
“உயிர் இனங்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாகும். நடமாடும் கடவுளர்களாகிய மக்களுக்கு ஒன்றைச் செய்தால் அது கோயிலில் உள்ளவர்க்குச் செய்யும் தொண்டாகும்” என்பது திருமூலரின் கருத்து. இவ்வாறு மக்களினத்திற்குச் செய்யும் தொண்டே மகத்தானது.
தற்போது வளர்ந்து வரும். இணையச் செயல்பாடுகளால் சமூகத்தொண்டு செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. புலனம் குழு, முகநூல் போன்றவற்றின் மூலம் பல சேவைகளைச் செய்யவியலும். தற்போதுள்ள தேவைகள் என்று சிந்தித்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழிப் பொருட்கள் பயன்பாடுகளைத் தவிர்த்தல், ஏரி, குளங்கள் தூர் வாருதல், காடுகள் அழிப்பதைத் தடுத்தல், விவசாய நிலங்களை விற்காமல் பார்த்துக் கொள்ளுதல், ஆங்காங்கு மரக்கன்றுகள் நடுதல் போன்றவையாகும். இளைஞர்கள் இவற்றைச் சரிசெய்வதற்கு அரசு உதவியோடும், பொதுமக்கள் துணையோடும் செயலாற்ற வேண்டும்.
கல்வி, சுகாதாரம், விவசாயம் இவையனைத்தும் மக்களின் அவசிய தேவைகள் ஆகும். இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வழி இல்லாத ஊருக்கு வழி அமைத்தல், ஊரைத் தூய்மை செய்தல், தூய்மை பற்றி மக்களுக்கு எடுத்துத் கூறுதல், உடல் நலத்துடன் வாழ்வதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுதல், விழாக் காலங்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். எப்பொழுதும் எவ்வுதவியும் செய்வதற்குத் தயாராய் இருக்க வேண்டும்.
சமூகத் தொண்டினை ஈடுபாட்டுடன் செய்து வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும். துன்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். திறந்த மனமும் அளவற்ற ஆற்றலும் உள்ளவர்களாய் எதையும் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும். உன்னத இலட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்து தொண்டாற்ற வேண்டும். நாட்டைப் பாதுகாப்போம். உயர்த்துவோம்.
அகர வரிசைப்படுத்துக
1. அன்பு
2. ஆடு
3. இரக்கம்
4. ஈதல்
5. உயிர்
6. ஊக்கம்
7. எளிமை
8. ஏது
9. ஐந்து
10. ஒழுக்கம்
11. ஓசை
12. ஔ வை
கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக
அ) அன்பு
ஆ) நட்பு
இ) உதவி
அ) அன்பு :
கேட்டுப் பெறுவதல்ல அன்பு
கேட்காமலே பெறுதல் சிறப்பு
அன்பு பேச்சில் மட்டும்
போதுமா? செயலில் வேண்டாமா?
பகையைப் போக்கிடும் அன்பு
வெற்றியைத் தந்திடும் அன்பு
கண்களில் அன்பைக் காட்டு
கண்முன் கடவுளே நிற்பார்.
ஆ) நட்பு :
காயத்திற்கு மருந்தாகும்
அழியாச் சுவடாகும்
தவற்றைச் சுட்டிக்காட்டும்
குறைகளைத் திருத்தும்
தனிமையை இனிமையாக்கும்
சோர்வில் உற்சாகமூட்டும்
நீயில்லையேல் நான்
மழைக் கானா நிலமாய்
வாடி வருந்துவேன்.
இ) உதவி :
கல்லாதார்க்குக் கல்வியைக் கொடு
இல்லாதார்க்குப் பொருளைக் கொடு
கைகொடுக்கும் கையாய் இருந்திடு
கார்மேகத்தைப் போல் இருந்திடு
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பார்க்காதே
உதவி செய்வதில் தயங்காதே
பிறர்க்கு விதைக்கும் விதையைத்தான் – நீ
அறுவடை செய்வாய் மறவாதே!
பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க
அரசர் ஒருவர் தன் மக்களிடம் ‘அமைதி’ என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது.
அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது.
“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?” என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். “இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். அதற்கு ஓவியர் “மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி” என்றார்.
1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
விடை:
அமைதி என்றவுடன் என் மனதில் தோன்றுவது “தேவையற்ற பேச்சைத் தவிர்த்து, அவசிய வேலைகளை மட்டும் செய்து பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதே அமைதி”. மற்றும் அமைதி என்றால் தியானம் நினைவிற்கு வரும். அன்னை தெரசா நினைவிற்கு வருவார்.
2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?
விடை:
பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்று இக்கதையில் கூறப்படுகிறது.
3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?
விடை:
ஓர் அழகான பெரிய கோவில், அங்குள்ள கருவறை, மண்டபம், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவது போன்ற காட்சி. இக்காட்சியை ஓவியமாக வரைந்து இருப்பேன்.
4. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
விடை:
எங்கே அமைதி?
மொழியோடு விளையாடு
கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.
இவை போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க.
1. நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது.
2. இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது.
3. நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்.
1. நேற்று என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுத்தார்.
2. இன்று என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.
3. நாளை என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுப்பார்.
கட்டங்களில் மறைந்துள்ள அணிகலன்களின் பெயர்களை எழுதுக
எ.கா. கம்ம ல்
அணிகலன்களின் பெயர்கள் :
1. கம்மல்
2. கடுக்கன்
3. சூளாமணி
4. மோதிரம்
5. சிலம்பு
6. வளையல்
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்
1. நான் எல்லாரிடமும் அன்பு காட்டுவேன்.
2. உறுப்பு தானத்தின் இன்றியமையாமையை எனக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துச் சொல்வேன்.
3. பிறருக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன்.
4. பிற உயிர்களைத் துன்புறுத்த மாட்டேன்.
5. எப்போதும் மனிதநேயத்துடன் நடந்து கொள்வேன்.
கலைச்சொல் அறிவோம்
1. மனிதநேயம் – Humanity
2. கருணை – Mercy
4. நோபல் பரிசு – Nobel Prize
3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation
5. சரக்குந்து – Lorry
Other Important links for 6th Tamil Book Back Solutions:
For Class 6th to 10th standard book back question and answers PDF, check the link – 6th to 10th Book Back Questions and Answers PDF
Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF