6th Tamil Term 1 Unit 1.5 – தமிழ் எழுத்துகளின் வகை தொகை Book Back Questions with Answers:
Samacheer Kalvi 6th Standard Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and the same given below. Class sixth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 6th Std Tamil Book Back Answers Term 1 Unit 1.5 – தமிழ் எழுத்துகளின் வகை தொகை Tamil Book Back Solutions given below. Check the complete Samacheer Kalvi 6th Tamil Term 1 Unit 1.5 Answers below:
We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Tamil Term 1 Unit 1 Book Back Questions with Answer PDF:
For Samacheer Kalvi 6th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 6th Tamil Book Back Answers Guide
Samacheer Kalvi 6th Tamil Term 1 Unit 1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை Book Back Answers PDF:
Samacheer Kalvi 6th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 6th Tamil Term 1 Unit 1 solutions:
6th Tamil Samacheer Kalvi Book Back Answers
Term 1 Chapter 1.5 – தமிழ் எழுத்துகளின் வகை தொகை
கற்பவை கற்றபின்
விடை:
எ. கா. கபிலர் – 1 + 1 + 1 + 1/2 = 3 1/2
மாணவர்களைத் தமிழ் எழுத்துகளின் மாத்திரை அளவை அறிந்து கொள்ளச் செய்தல்.
மதிப்பீடு
1. கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக.
விடை:
1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் ………….
விடை: அது
2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் …………………..
விடை : தீ
3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் ……..
விடை: அஃது
மொழியை ஆள்வோம்
கேட்டும் பார்த்தும் உணர்க :
1. இனிய தமிழ் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
விடை:
கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்தல்.
மனதில் உறுதி வேண்டும்.
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்.
கைவசமாவது விரைவில் வேண்டும்.
தனமும் இன்பமும் வேண்டும்.
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்.
காரியத்தில் உறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்.
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
2. தமிழறிஞர்களின் வானொலி, தொலைக்காட்சி உரைகளைக் கேட்டு மகிழ்க.
விடை:
தமிழறிஞர்களின் வானொலி, தொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ்தல். மாணவர்கள் இச்செயல்பாட்டினைத் தாங்களே செய்து பார்க்க வேண்டும்.
3. கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக
1. தமிழ் இனிது
2. தமிழ் எளிது
3. தமிழ் புதிது
விடை:
1. தமிழ் இனிது :
அனைவருக்கும் வணக்கம்! நம் தாய்மொழியாம் தமிழின் இனிமை, எளிமை, புதுமை பற்றிப் பார்ப்போமா! நம் தாய்மொழியாம் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பெயரிட்டபோதே அதன் சிறப்புகளை அனைவரும் அறிவர். இது தனித்து இயங்கும் மொழி, செம்மையான மொழி எனச் சிறப்பிக்கலாம்.
தமிழ் என்றால் அழகு, தமிழ் என்றால் இனிமை. அதனால்தான் இதனைத் தேன்தமிழ், தீந்தமிழ் முதலான சொற்களால் அழைக்கின்றனர். தமிழ் என்ற சொல்லைத் தம்-இழ் எனப் பிரித்தோமேயானால் தம்மிடத்தில் ‘ழ்’ ழைக் கொண்ட மொழி எனப் பொருள் கொள்ளலாம். தமிழில் மூன்று இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்.
“தேனொக்கும் தமிழே! நீ கனி, நான்கிளி
வேறென்ன வேண்டும் இனி?”
“செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!”
இப்பாடல் வரிகள் தமிழின் இனிமையைப் பறைசாற்றும்
2. தமிழ் எளிது :
தமிழ் இனிய தமிழ் என்பதோடு எளிய தமிழ் எனவும் கூறப்படுகிறது. தமிழ் மொழியானது பேசவும் படிக்கவும் மிகவும் எளிதானது. இந்தச் சிறப்பு உலகில் எந்த மொழிக்கும் இல்லாதது. தமிழ் மொழியானது எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிமையான மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள். உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் போதும்.
எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழும். தமிழ்மொழியை எழுதும் முறையும் எளிதானது. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. தமிழ் எழுத்துகள் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு இவற்றின் முயற்சியால் மட்டுமே ஒலிப்பதாக இருக்கும். தமிழ் மிகவும் மென்மையாக ஒலிக்கக்கூடிய மெல்லோசை மொழியாகவே உள்ளதால் எழுதவும் பேசவும் படிக்கவும் எளிமையானதாக உள்ளது.
3. தமிழ் புதிது :
தமிழ் மொழி என்றென்றும் புதிதாக உள்ளது. அதற்குக் காரணம் இன்று வளர்ந்து வரும் அறிவியல், கணினி ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய கலைச் சொற்கள் உருவாகிக் கொண்டே உள்ளன. அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என்று சொல்லும் அளவிற்கு அவற்றின் கலைச் சொற்கள் பெருகியுள்ளன. சமூக ஊடகங்களான செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பயன்படத்தக்க மொழியாகவும் தமிழ்மொழி விளங்குகிறது. இதிலிருந்து தமிழ் இனிது, எளிது, புதிது என்பதை அறியலாம்.
சொல்லக் கேட்டு எழுதுக
ஆசிரியர் சொற்களைச் சொல்லக்கேட்டு மாணவர்கள் எழுதுதல்.
1. இன்பத்தமிழ்
2. சுப்புரத்தினம்
3. பாவேந்தர்
4. செந்தமிழ்
5. உயிரினங்கள்
6. தொல்காப்பியம்
7. பன்னிரண்டு
8. அஃறிணை
9. ஆராய்ச்சியாளர்
10. கருவூலங்கள்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
1. பழமொழியின் சிறப்பு …………….. சொல்வது
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழமையைச்
ஈ) பல மொழிகளில்
2. நோயற்ற வாழ்வைத் தருவது ………….
3. உடல் ஆரோக்கியமே ………………… அடிப்படை.
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
விடை:
1. ஆ) சுருங்கச்
2. சுத்தம்
3. உழைப்புக்கு
4. உணவு, உடை. உறைவிடம்
5. சுத்தம்
பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
விடை:
எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னார்கள்.
விடை:
பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.
ஆய்ந்தறிக
1. பெயரில் தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்றோம்.
S. இனியன், எஸ். இனியன், ச. இனியன் -இவற்றுள் சரியானது எது? ஏன்?
விடை:
ச. இனியன்.
பெயரும் பெயரின் தலைப்பெழுத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும்.
பெயரைத் தமிழிலும் பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் எழுதுவது தவறு.
கடிதம் எழுதுக
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர்
அ.பூங்கோதை
ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப் பள்ளி
அண்ணாநகர், சென்னை -40.
பெறுநர்
வகுப்பாசிரியர் அவர்கள்
ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப் பள்ளி
அண்ணாநகர், சென்னை -40.
மதிப்பிற்குரிய ஐயா/ அம்மா,
வணக்கம், எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள்கள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். .
நன்றி!
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள மாணவி,
அ.பூங்கோதை
இடம் : முகப்பேர்
நாள் : 18.06.2018
பெற்றோர் கையொப்பம்
அருணாச்சலம்.
மொழியோடு விளையாடு
திரட்டுக :
1. மை என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க.
1. கருமை
2. இனிமை
3. பொறுமை
4. பெருமை
5. இளமை
6. சிறுமை
7. கல்லாமை
8. வறுமை
9. தனிமை
10. உவமை
11. அருமை
12. உண்மை
13. இல்லாமை
14. பன்மை
சொல்வளம் பெறுவோம்
1. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
விடை:
(எ.கா.) கரும்பு – கரு, கம்பு
கவிதை – கவி, விதை, கதை, தை
பதிற்றுப்பத்து – பதி, பத்து, பற்று
பரிபாடல் – பரி, பாடல், பா, பால், பாரி
2. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா) விண்மீ ன்
விடை:
பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக
1. அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, அன்பு
அ – _____ தருவது தமிழ்
ஆ – _______ தருவது தமிழ்
இ – _______ தருவது தமிழ்
ஈ – ________இல்லாதது தமிழ்
உ – ________ தருவது தமிழ்
ஊ – ________ தருவது தமிழ்
எ – __________வேண்டும் தமிழ்
ஏ – _________ தருவது தமிழ்
விடை:
அன்பு தருவது தமிழ்
ஆற்றல் தருவது தமிழ்
இன்பம் தருவது தமிழ்
ஈடு இல்லாதது தமிழ்
உவகை தருவது தமிழ்
ஊக்கம் தருவது தமிழ்
என்றும் வேண்டும் தமிழ்
ஏற்றம் தருவது தமிழ்
கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க
1.
விடை:
விடை : 1. பாரதிதாசன்
2. பாரதியார்
3. திருவள்ளுவர்
4. வாணிதாசன்
5. சுரதா
6. ஔவையார்
நிற்க அதற்குத் தக
1. நான் தாய்மொழியிலேயே பேசுவேன்.
2. தாய்மொழியிலேயே கல்வி கற்பேன்.
3. தமிழ்ப்பெயர்களையே சூட்டுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. வலஞ்சுழி – Clockwise
2. இடஞ்சுழி – Anti Clockwise
3. இணையம் – Internet
4. குரல்தேடல் – Voice Search
5. தேடுபொறி – Search engine
6. தொடுதிரை – Touch Screen
7. முகநூல் – Facebook
8. செயலி – App
9. புலனம் – Whatapp
10. மின்ன ஞ்சல் – E-mail
Other Important links for 6th Tamil Book Back Solutions:
For Class 6th to 10th standard book back question and answers PDF, check the link – 6th to 10th Book Back Questions and Answers PDF
Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF