Samacheer Kalvi 6th Science Term 3 Unit 4 Book Back Questions and Answers:
Samacheer Kalvi 6th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 6th New Syllabus Science Term III book back question & answer solutions guide available below for Tamil Medium. 6ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 3 அலகு 4 – நமது சுற்றுச்சூழல் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 6th Science Term 3 Unit 4 Answers in Tamil Medium Questions and Answers can check below.
We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Science பருவம் 3 அலகு 4 – நமது சுற்றுச்சூழல் Book Back Questions with Answer PDF:
For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil
Samacheer Kalvi 6th Science Book Back Chapter 4 Term 3 Solution Guide PDF:
Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அறிவியல் – பருவம் 3
அலகு 4 – நமது சுற்றுச்சூழல்
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.
அ) குளம்
ஆ) ஏரி
இ) நதி
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
2. உற்பத்தியாளர்கள் எனப்படுவை.
அ) விலங்குகள்
ஆ) பறவைகள்
இ) தாவரங்கள்
ஈ) பாம்புகள்
விடை: இ) தாரவங்கள்
3. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு
அ) நெகிழி
ஆ) சமையலறைக் கழிவுகள்
இ) கண்ணாடி
ஈ) அலுமினியம்
விடை: ஆ) சமையலறைக் கழிவுகள்
4. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.
அ) மறு சுழற்சி
ஆ) மீண்டும் பயன்படுத்துதல்
இ) மாசுபாடு
ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்
விடை: இ) மாசுபாடு
5. களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.
அ) நில மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) இரைச்சல் மாசுபாடு
ஈ) அ மற்றும் ஆ
விடை: ஈ) அ மற்றும் ஆ
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.
விடை: முதல்
2. சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.
விடை: காலநிலைக்
3. ______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.
விடை: மறு சுழற்சி
4. நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.
விடை: தீங்கு விளைவித்து
5. 3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.
விடை:
மீண்டும் பயன்படுத்துதல்
III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
1. கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை; சரி.
2. பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை: சரி.
3. மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
விடை.
தவறு – மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
4. அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.
விடை:
தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.
5. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
விடை.
தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
IV. பொருத்துக
.
V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.
1. முயல் → கேரட் → கழுகு → பாம்பு
விடை:
கேரட் → முயல் → பாம்பு → கழுகு
2. மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்
விடை:
ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்
VI. மிகக் குறுகிய விடையளி:
1. சூழ்நிலை மண்டலம் வரையறு.
விடை:
உயிருள்ளவையும், உயிரற்றவையும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பே சூழ்நிலை மண்டலமாகும்.
2. சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?
விடை:
- இயற்கை சூழ்நிலை மண்டலம்
- செயற்கை சூழ்நிலை மண்டலம்
3. மறுசுழற்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
விடை:
- பழைய துணிகள் – காகிதத் தயாரிப்பில் பயன்படுத்துதல்.
- சில வகை நெகிழிகள் – உருக்கி நடைபாதை விரிப்புகள், நெகிழி அட்டைகள், நீர் பாய்ச்சு குழாய்கள் தயாரித்தல்.
4. மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
மாசுபாடுகள் நான்கு முக்கிய வகைகளாக உள்ளன.
- காற்று மாசுபாடு
- நீர் மாசுபாடு
- நில மாசுபாடு
- ஒலி மாசுபாடு
5. நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
நீர் வாழ் உணவுச் சங்கிலி:
நீர் வாழ் தாவரம் → நீர் வாழ்ப்பூச்சி → லார்வா → மீன்
6. மாசுபடுத்திகள் என்றால் என்ன?
விடை:
- மனிதனின் செயல்பாடுகளாள் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
- எந்தப் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றனவோ அவை மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.
(எ.கா) புகை, சாக்கடைக்கழிவுகள், களைக் கொல்லிகள்.
7. பின்வருவன உருவாக்கும் மாசுபாடுகளை எழுதுக.
அ. ஒலி பெருக்கி
ஆ. நெகிழி
விடை:
அ. ஒலி பெருக்கி – ஒலி மாசுபாடு.
ஆ. நெகிழி – நில மாசுபாடு.
VII. குறுகிய விடையளி:
1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?
விடை:
1. பாக்டீரியா, பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள், தாவர, விலங்கின கழிவுகளை நீர், ஆக்ஸிஜன், வெப்பம், சூரிய புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றின் உதவியால் சிதைத்து மண்ணோடு மண்ணாக மட்கச் செய்கிறது. இதற்கு உயிரினச் சிதைவு என்று பெயர்.
2. இவ்வாறு நுண்ணுயிரினங்களால் சிதைவுறக்கூடிய இயற்கைக் கழிவுகளை உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்கிறோம்.
எ.கா. – காய்கறி மற்றும் பழக்கழிவுகள், உணவுக்கழிவுகள், காய்ந்த புல், இலை, தழை, கிளை போன்ற தாவர கழிவுகள், விலங்கின மனிதக் கழிவுகள், இறந்த உடல்கள் போன்ற கழிவுகள்.
2. நீர் மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைக்கலாம்?
விடை:
- மீதமுள்ள எண்ணெய், பழைய மருந்து மற்றும் மருத்துவ கழிவுகள், வேதிக் கழிவுகள் நீருடன் கலத்தலைத் தவிர்க்க வேண்டும்.
- வயலில் பயிர்கள் வளர்வதற்காகப் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மற்றும் உரங்களின் அளவைக் குறைக்க வேண்டும்.
- வீட்டின் கழிவு நீரை வீட்டுத் தோட்டம் அமைத்துப் பயன்படுத்தலாம்.
- குளங்கள், ஏரிகள், ஆறுகளில் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகளைக் கலக்காமல் அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- எப்பொழுதும் குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்ட வேண்டும்.
- தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நீர் கலக்காமல், அவற்றை சுத்திகரிப்பு செய்து பின்னரே நீர் நிலைகளில் கொட்ட அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
3. உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
- ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்களுக்கிடையே உள்ள உணவு உண்ணும் உறவு முறையும், அந்த உயிரினங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையும் உணவுச் சங்கிலி விளக்குகிறது.
- சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் எவ்வாறு ஓர் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு சுழற்சியாகக் கடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
- சூழ்நிலை மண்டலத்தின் மாசுபாட்டினால் உணவுச் சங்கிலியில் உள்ள ஓர் உறுப்பினரின் நச்சுப் பொருள்கள் மற்ற உயிரினங்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள உணவுச் சங்கிலி உதவுகிறது.
VIII.விரிவான விடையளி:
1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
விடை:
2. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
விடை:
வரையறை:
85 dB (டெஸிபல்) அளவுக்கு அதிகமாக மனிதர்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், இசை, வாகனங்கள், ஒலிபெருக்கி இவற்றால் உருவாக்கப்படும் எந்த ஒலியும், ஒலி மாசுபாடு (அ) இரைச்சல் மாசுபாடு எனப்படும்.
பாதிப்புகள்:
அதிகபட்ச இரைச்சலில் அதிக நேரம் இருப்பது உளவியல் மற்றும் உடல் ரீதியான பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- அமைதியான தூக்கம் கெடுகிறது.
- அமைதியாகப் படிப்பதை, வேலை செய்வதைப் பாதிக்கிறது.
- அதிக இரைச்சல் செவிப்பறையைத் தாக்கி, கேட்கும் திறனைப் பாதிக்கிறது.
- உயர் இரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
- நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள், பறவைகள், வீட்டுப் பிராணிகள், நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது.
- கப்பலில் ஏற்படும் இரைச்சலினால் ஆழ்கடல் திமிங்கலங்கள் தங்கள் பாதையிலிருந்து திசை மாறுகின்றன.
IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி:
1. உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
விடை:
- புல்வெளியில் காணப்படும் ஒரு உணவுச் சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தாவரங்கள் – மான் – புலி
- காடுகளில் மான்கள் புற்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன.
- புலிகள் மான்களை வேட்டையாடி உண்கின்றன.
- இயற்கையாகவோ அல்லது மனித செயல்களால் மான்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டால் அதன் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
- இதனால் புலிகளுக்கு தேவையான உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது.
- இதனால் புலிகள் எண்ணிக்கை குறையலாம்.
- மேலும் உணவுக்காக மனிதனையும் தாக்க நேரிடலாம்.
2. கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.
விடை:
- ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சலையும், பெண் அன்பிலிஸ் வகை கொசுக்கள் மலேரியா நோயையும் பரப்புகின்றன.
- இவை மனிதனால் உண்டான நீர் தொட்டிகள், மேல் நிலை தொட்டிகள், குளிர்விப்பான் அடியில் உள்ள நீர்தட்டு போன்றவற்றில் பெருகுகின்றன.
- மேலும் தூக்கி வீசப்பட்ட தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கிண்ணங்கள், டயர்கள் போன்றவற்றிலும் மழை நீர் தேங்கி இருந்தால் இனப் பெருக்கம் செய்து அதிகளவு பெருக்கமடைகின்றன.
- எனவே திறந்த வெளியில் கொட்டப்பட்ட கழிவுகள் கொசுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுவதாலும் தீமை விளைவிக்கும் வைரஸ், பர்கடீரியாக்களை உருவாக்குவதாலும், பரப்புவதாலும் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டக் கூடாது.
- இன்றைய கால கட்டத்தில் கழிவுகள் மிக அதிகமாகி ஆபத்தான டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய்கள் அதிகம் பரவி தீங்கு விளைவிப்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
X. படத்தைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
1. இப்படத்திலிருந்து நீ அறியும் நிகழ்வு எது? விளக்குக.
விடை:
- மேற்காட்டிய படத்தில் பல வகையான கழிவுகள் ஒன்றாக திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது.
- திறந்த வெளிக் குப்பையில் தீப்பற்றி எரிகிறது.
- இதனால் நெகிழிப்பைகள், பைப்புகள், காலணிகள் போன்றவை எரிந்து ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய புகை மற்றும் நச்சுப் பொருள்களைச் சூழ்நிலை மண்டலத்தில் சேர்த்து அதை மாசுப்படுத்தும்.
- வேதிப் பொருட்கள் கலந்த இக்காற்றை உயிரினங்கள் சுவாசிக்கின்றன.
- குப்பைகள் எரிவதால் உருவாகும் சாம்பல் துகள்கள் நிலத்தை மாசுப்படுத்துகின்றன.
- மழை பெய்யும் போது சில அபாயகரமான நச்சுக்கள் நீருடன் கலந்து நிலத்திற்குள் செல்லுகின்றன. நிலத்தடி நீருடனும் கலக்கின்றன.
- நெகிழிப்பைகள் மழை நீரை நிலத்திற்கடியில் செல்ல விடாமல் தடுக்கின்றன.
- இதனால் சிறிய குட்டைகளில் உள்ள நீரில் நெகிழிக் கிண்ண ங்கள், டயர்கள் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா நோய்களைப் பரப்புகின்றன.
- இவ்வாறு திறந்த வெளியில் குப்பை பல்வேறு விதங்களில் சூழ்நிலைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2. குப்பைக் குழிகளில் நிகழும் மாசுபாடுகள் யாவை?
விடை:
1 காற்றுச் சீர்கேடு
2 நில சீர்கேடு
3. நீர் சீர்கேடு
Other Important links for Class 6th Book Back Answers:
Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF
For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil