TNPSC இந்தியப் பொருளாதாரம் – நிதி ஆணையம் –மத்திய, மாநில அரசுகளுக்குகிடையேயான நிதி பகிர்வு:
இந்தியப் பொருளாதாரம்(Indian Economics) questions are more important for the TNPSC Group 2 Prelims Exam. You will get 6 to 8 marks from that Indian Economy portion. On this page, TNPSC Group 2, 2a, and Group 4 TNPSC Indian Economy Study Materials questions with answers in Tamil & English are uploaded. Go through TNPSC Indian Economy Notes, Questions, and Answers below for the prelims exam.
Students who are preparing for the Group exam concentrate more on the maths part. you will easily score more marks in the Economics part. For students’ benefit, we upload TNPSC Indian Economy English and Tamil questions and answers in PDF for download. TNPSC aspirants can download and use it for the group prelims exam. kindly download TNPSC Indian Economy PDF given below:
மத்திய, மாநில அரசின் பணபங்களிக்கும் உறவு வருமான வழிகள்
I. மைய அரசின் வருவாய் மூலங்கள்
மைய அரசின் வரி மற்றும் வரியில்லா வருமான வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை.
1 தொழில் நிறுவனங்கள் மீதான வரி
2. பணம், நாணயங்கள் மற்றும் அந்நியச் செலவாணி
3. சுங்க வரி ஏற்றுமதி வரி உட்பட
4. புகையிலை மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருட்களுக்கான கலால் வரி.
5. வேளாண்மை நிலங்கள் தவிர்த்த பண்ணை வரி
6. நீதிமன்றங்கள் விதிக்காக மத்திய பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்…
7.அயல்நாட்டு கடன்கள்.
8. இந்திய அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்.
9. தபால் துறையின் சேமிப்பு வங்கி.
10. தொலை தொடர்பு துறையின் வருவாய்கள்
11. மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள்
13 மத்திய அரசின் பொதுக்கடன்
14. இரயில்வே
15. மாற்றுச் சீட்டுகள், காசோலைகள் மற்றும் உறுதிமொழி பத்திரங்கள் மீதான வில்லைக் கட்டணம்.
16. இந்திய ரிசர்வ் வங்கி
17. வருமான வரி (வேளாண் வருவாய் தவிர்த்து )
18. சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்படும் வரி (தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவசாய நிலம் தவிர)
19. பங்குச் சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரி.
20. செய்திதாள் மீதான வரி (அதில் வெளியிடும் விளம்பரம் உட்பட) 20. இரயில், கடல் வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி
II மாநில வளங்கள்
1. தல வரி.
2 வேளாண் நிலங்கள் மீதான வரி 3. மது மற்றும் போதைப் பொருட்கள் மீதான கலால் வரி
4. பண்ணை வரி (விவசாய நிலங்கள்)
5. நீதிமன்றங்கள் விதிக்காக மாநில பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்
6. நில வருவாய்
7. மத்தியப் பட்டியலில் இல்லாத ஆவணங்களுக்கான வில்லைக் கட்டணம்.
8. வேளாண் வருமான வரி
9. நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி
10. கனிம வளங்கள் எடுப்பதற்கான உரிம வரி
11. மின்சார நுகர்வு மற்றும் விற்பனைக்கான வரி
12. உள்ளூர் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனை பொருட்களுக்கான நுழைவு வரி
13. செய்தித்தாள் தவிர்த்த இதர பொருட்கள் மீதான விற்பனை வரி
14. செய்தித்தாள் தவிர்த்த இதர விளம்பரங்கள் மீதான வரி.
15. சாலை மற்றும் நீர்வழி மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பயணிகள் மீதான வரி
16. வாகன வரி
17. விலங்குகள் மற்றும் படகுகள் மீதான வரி.
18. வியாபாரம் மற்றும் தொழிலாளர்கள் மீதான தொழில் வரி.
19. பொழுதுபோக்குகள் மற்றும் சூதாட்டங்கள் மீதான வரி.
20. சாலை சுங்க கட்டணம்.
III. நிதிக்குழுவின் வரலாறு:
- இந்திய அரசியலமைப்பு ஷரத்து 280-ன் படி நிதிக்குழு பகுதி சட்டபூர்வ அமைப்பாகும். இது 1951-ம் ஆண்டு மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிதி உறவை வரையறுப்பதற்கு அமைக்கப்பட்டது.)
- நிதிக்குழுமத்தியமற்றும்மாநிலங்களுக்கு இடையேயான சமநிலையின்மையக் குறைப்பதற்கும் (செங்குத்து சமநிலையின்மை ) மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சமமின்மையைக் குறைப்பதற்கும் (படுகிடை சமநிலையின்மை ) முயல்கிறது. இது உள்ளுணர்வினை ஊக்குவிக்கிறது.
- நிதிக்குழு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அது அமைக்கப்படுகிறது. இது ஒரு தற்காலிக அமைப்பாகும்.
- 14வது நிதிக்குழு 2013-ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல்1, 2015 முதல் மார்ச் 2020 வரை செல்லத்தக்கதாகும்.
- 15-வது நிதிக்குழு நவம்பர் 2017-ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைப் படுத்தப்படும்.