15 Mar 2022

TNPSC Indian Economy – Reserve Bank of India in Tamil

TNPSC இந்தியப் பொருளாதாரம் – இந்திய ரிசர்வ் வங்கி :

இந்தியப் பொருளாதாரம்(Indian Economics) questions are more important for the TNPSC Group 2 Prelims Exam. You will get 6 to 8 marks from that Indian Economy portion. On this page, TNPSC Group 2, 2a, and Group 4 TNPSC Indian Economy Study Materials questions with answers in Tamil & English are uploaded. Go through TNPSC Indian Economy Notes, Questions, and Answers below for the prelims exam.

Students who are preparing for the Group exam concentrate more on the maths part. you will easily score more marks in the Economics part. For students’ benefit, we upload TNPSC Indian Economy English and Tamil questions and answers in PDF for download. TNPSC aspirants can download and use it for the group prelims exam. kindly download TNPSC Indian Economy PDF given below:




இந்திய ரிசர்வ் வங்கி வரலாறு நிர்வாகம்:

வரலாறு

  1. 1934ம் ஆண்டு சட்ட விதிப்படி 1935ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது.
  2. ஜனவரி 1ம் தேதி 1949ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டு மத்திய அரசுக்குச் சொந்தமானது.
  3. 1937 ல் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
  4. ஓஸ்போர்ன் ஸ்மித் (Osborne smith) RBI இன் முதல் ஆளுநர் ஆவார்

நிர்வாகம்

  1. மைய வங்கி/மற்ற இந்திய வங்கிகளின் நெறியாளர்
  2. கடைசி நிலைக் கடன் ஈவோன்
  3.  ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள் மற்றும் மைய அரசால் நியமிக்கப்படும் மைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.

பணிகள்

  1. ·காகிதப்பணம் வெளியிடுதல்
  2. அரசின் வங்கியாகச் செயல்படுதல் (அரசிற்கான நிதி வருவாயைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அரசின் செலவினங்களுக்குப் பணம் வழங்குதல்)
  3. இந்திய வங்கி அமைப்புக்களைநெறிப்படுத்துதல்
  4. அந்நியச் செலாவணியின் பாதுகாவலன்
  5. கடன் அளிப்பை நெறிப்படுத்துதல்.

18ம் நூற்றாண்டில் காகிதப் பணம் வெளியிடும் முறை துவங்கியது. தனியார் வங்கிகளான வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் சென்னை வங்கிகள் முதலில் காகிதப் பணத்தை அச்சடித்தது.

ஷெர்ஷா சூரி (Sher shah suri) என்பவரால் ₹1க்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதச் சொல்லான ரௌப்பியா (Raupya) விலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது. இந்தியாவின் பன்முகத் தன்மையை விளக்கும் விதமாக ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் (முன்பக்கத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பின்பக்கத்தில் மற்ற 15 மொழிகளிலும்)

 

பணவியல் கொள்கை (Monetary Policy):

  • பண அளிப்பு மற்றும் வட்டி விகிதத்தை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்படும் பேரினப் பொருளியல் கொள்கையே பணவியல்  கொள்கை எனப்படுகின்றது.
  • பேரினப் பொருளியல் கொள்கைகளான பணவீக்கம், நுகர்ச்சி, வளர்ச்சி மற்றும் நீர்மைத்தன்மை போன்றவற்றை அடைய மேற்கொள்ளும் தேவை சார்ந்த பொருளியல் கொள்கையாகும்.
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின் முக்கியத்துவம் பெற்றதும், 1976-ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மில்டன் ஃபிரைட்மேனால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பணவியல் கொள்கையாகும்.
  • அவர் ஒரு பணவியலாளராக இருந்தும், 1930களில் நிலவிய உலக பெருமந்தத்துக் காரணம் அமெரிக்க மையவங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் பணவியல் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடிகள்தான் என்பதனைத் தனது நூலான “அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு, 1867-1960” (Monetary Historyof the United States, 1867-1960) என்ற நூலில் மிகத் தைரியமாகத் தெரிவித்திருந்தார்.

 

நிதிக் கொள்கை:

  • தற்கால அரசுப் OR பேரினப் பொருளாதாரக் கொள்கையின் முக்கியக் கருவியாக நிதிக் கொள்கை OH உள்ளது.
  • கீன்சின் ‘புதிய பொருளாதாரம்’ மற்றும் உலக பெருமந்தம் ஆகியவற்றால் நிதிக் கொள்கை முக்கியத்துவம் பெறுகிறது.

 

வணிக வங்கிகள்:

  • கடன் பணத்தை உற்பத்தி செய்வதன் மூலம் வியாபார நிறுவனங்களுக்கு குறுகிய காலக்கடன்கள் வழங்கும் நிறுவனங்கள்.

கடன் உற்பத்தி:

  • கடன் மற்றும் முன்பணம் வழங்குதலை பெருக்குதல்.

வங்கியல்லா பண நிறுவனங்கள்:

  • முழுமையான வங்கி உரிமம் இல்லாமலும் மைய வங்கியின் மேற்பார்வைக்கு உட்படாத நிதி நிறுவனங்கள்.

மைய வங்கி:

  • அரசின் பணம், பண அளிப்பு, வட்டி விகிதம் ஆகியவற்றை நிர்வகிக்கும் அமைப்பு. மைய வங்கிகள் வணிக வங்கிகளை மேற்பார்வை இடுகின்றது.

வங்கி விகிதம்:

  • முதல் தர பத்திரங்களை மைய வங்கி மறு கழிவு செய்யும் விகிதம்.

TNPSC Indian Economy – Reserve Bank of India Questions and Answers in Tamil:

சரியான விடையை தெரிவு செய்க:

1. ஒரு வங்கி என்பது

அ) நிதி நிறுவனம்  ஆ) கூட்டு பங்கு நிறுவம்  இ) தொழில்  ஈ) சேவை நிறுவனம்

2. ஒரு வணிக வங்கி செய்யும் சேவை

அ) வைப்புகளை ஏற்றுக் கொள்வது  ஆ) கடன் வழங்குவது  இ) அ மற்றும் ஆ.   ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல

3. வணிக வங்கிகளின் பணிகளின் இருபெரும் பிரிவு

அ) முதன்மைப் பணிகள்  ஆ) இரண்டாம் நிலை பணிகள்  இ) மற்ற பணிகள்  ஈ) மேற்சொன்ன அனைத்தும்

4. வங்கிக் கடன் என்பது எதைக் குறிக்கிறது?

அ) கடன் பணம்  ஆ) முன்பணம்  இ) கடன் பணம் மற்றும் முன்பணம்   ஈ) கடன் பெறுதல்

5. கடன் உருவாக்கம் என்பதன் பொருள்

அ) கடன் மற்றும் முன்பண பெருக்கம்  ஆ) வருவாய்   இ) செலவு   ஈ) சேமிப்பு

6. வங்கியல்லா நிதிநிறுவனங்கள் – ——– வைத்திருப்பதில்லை .

அ) வங்கி உரிமம்  ஆ) அரசு அங்கீகாரம்  இ) பணச்சந்தை அங்கீகாரம்  ஈ) நிதி அமைச்சக அனுமதி

7. மைய வங்கி நாட்டின் அதிகார அமைப்பு.

அ) பணவியல்   ஆ) நிதியியல்   இ) கூலி   ஈ) தேசிய வருவாய்

8. வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது

அ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா   ஆ) நபார்டு   இ) ICICI   ஈ) இந்திய ரிசர்வ் வங்கி

9. கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது

அ) மைய வங்கி   ஆ) வணிக வங்கிகள்   இ) நிலவளவங்கிகள்   ஈ) கூட்டுறவு வங்கிகள்

10. வங்கி விகிதம் என்பது

அ) முதல்நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது   ஆ) வட்டி விகிதம்   இ) அந்நிய செலாவணி

ஈ) வளர்ச்சி விகிதம்

11. ரெப்போ விகிதம் என்பதன் பொருள்

அ) வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

ஆ) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

இ) அந்நிய செலாவணி விகிதம்

ஈ) நாட்டின் வளா;ச்சி விகிதம்

12. நெறிமுறை தூண்டல் என்பது

அ) உத்தமநிலைப் படுத்தல்   ஆ) உச்சநிலைப்படுத்தல்  இ) தூண்டுதல் நடவடிக்கை   ஈ) குறைவுநிலைப்படுத்துதல்

13. விவசாய மறுநிதி மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது

அ) ஜூன் 3, 1963   ஆ) ஜூலை 3. 1963  இ) ஜூன் 1, 1963  ஈ) ஜூலை 1, 1963.

14. நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

அ) ஜூலை 1962   ஆ) ஜூலை 1972   இ) ஜூலை 1982  ஈ) ஜூலை 1882

15. ஏற்றுமதி-இறக்குமதி வங்கி துவங்கப்பட்டது?

அ) ஜூன் 1982   ஆ) ஏப்ரல் 1962    இ) மே 1982    ஈ) மார்ச் 1982

16. மாநில நிதிக் கழகம் எந்த சட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது?

அ) இந்திய அரசு  ஆ) தமிழக அரச   இ) யூனியன் பிரதேசம்  ஈ) உள்துறை அரசு.

17. பணவியல் கொள்கையை வடிமைப்பது

அ) கூட்டுறவு வங்கிகள்   ஆ) வணிக வங்கிகள்  இ) மைய வங்கி   ஈ) வெளிநாட்டு வங்கி

18. நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) இ-வங்கி   ஆ) இணைய வங்கி   இ) ஆர்.டி.ஜி.எஸ்   ஈ) நெப்ட்

19. ஏடிஎம்.(ATM) என்பதன் விரிவாக்கம் என்ன ?

அ) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்     ஆ) சரி செய்து பணம் வழங்கும் இயந்திரம்
இ) தானாக பணம் வழங்கும் முறை     ஈ) எந்த நேரமும் பணம் (Any Tims Money)

20. 2018 ல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த மதிப்பு பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது?

அ) ₹500 மற்றும் ₹1000   ஆ) ₹1000 மற்றும் 2000   இ) ₹200 மற்றும் 1500   ஈ) மேற்சொன்னவை அனைத்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *