15 Mar 2022

TNPSC Indian Economy – Planning Commission and Niti Ayog in Tamil

TNPSC இந்தியப் பொருளாதாரம் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆபயொக்:

இந்தியப் பொருளாதாரம்(Indian Economics) questions are more important for the TNPSC Group 2 Prelims Exam. You will get 6 to 8 marks from that Indian Economy portion. On this page, TNPSC Group 2, 2a, and Group 4 TNPSC Indian Economy Study Materials questions with answers in Tamil & English are uploaded. Go through TNPSC Indian Economy Notes, Questions, and Answers below for the prelims exam.

Students who are preparing for the Group exam concentrate more on the maths part. you will easily score more marks in the Economics part. For students’ benefit, we upload TNPSC Indian Economy English and Tamil questions and answers in PDF for download. TNPSC aspirants can download and use it for the group prelims exam. kindly download TNPSC Indian Economy PDF given below:




முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் – பொருள்

அறிமுகம்

  • பொருளாதார “மேம்பாடு” மற்றும் முன்னேற்றம் ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கக்கூடியவை. பொருளாதார வளர்ச்சி நாட்டு வருமான அதிகரித்தலைக் குறிக்கப் பயன்படும் சொல். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் நிகழும் கருதலாம்.
  • இரண்டாம் உலகப்போர் வரையில் மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும் ஏழை நாடுகளின் பிரச்சினைகளைப் பற்றி வளர்ச்சி படிக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை .
  • அதன் பிறகே பொருளியல் வல்லுநர்கள் நாடுகளின் பிரச்சினைகளை ஆய்வு செய்து புதிய முன்னேற்ற மற்றும் வளர்ச்சிக் கோட்பாடுகளையும், மாதிரிகளையும் (Models) உருவாக்க ஆரம்பித்தனர்.
  • இன்றைய வளரும் நாடுகள் அனைத்தும் இங்கிலாந்து மற்றும் பிற  ஐரோப்பிய நாடுகளிடம் அடிமைப்படுத்தபட்டிருந்த நாடுகள். விடுதலைக்குப் பிறகு இந்த நாடுகள் துரிதமான பொருளாதார முன்னேற்றமடைவதையே விருப்பமாக கொண்டிருந்தன.

 

பொருளாதார முன்னேற்றத்தின் அணுகுமுறைகள்:

  • பொருளாதார முன்னேற்றம் இருவகையான அணுகுமுறையை கொண்டு விளக்கப்படுகிறது முறையே I) பழமையான அணுகுமுறை மற்றும் II) நலம் சார்ந்த புதிய

 

1)பழமையான அணுகுமுறை:

  • இந்த அணுகுமுறை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே முன்னேற்றத்துக்கு விளக்கமளிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்புடன் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பில் விவசாயத்தின் பங்கு குறைந்து தொழில் மற்றும் பணித்துறையின் காரையின் பங்கு உயர்வடைதலையே பழைய அணுகுமுறையில் பொருளாதார முன்னேற்றம் என்கிறது.
  • இது தொழில் துறை வளர்ச்சியை வலியுறுத்தும் அணுகுமுறையாக உள்ளது. தனிநபர் வருமான உயர்வு அடித்தட்டு மக்களின் வருவாயையும் அதிகப்படுத்தும் என்ற எடுகோளின் அடிப்படையில் முன்னேற்றத்துக்கு விளக்கமளிக்கிறது.

2 நலம் சார்ந்த புதிய அணுகுமுறை:

  • பொருளாதார முன்னேற்றம் 1970களில் மறுவரையறை செய்யப்பட்டது.
  • இதன்படி வறுமை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் வேலையின்மை குறைத்தல் மற்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகப்படுத்துதல் ஆகியவை ஒருசேர நிகழ்வதே பொருளாதார முன்னேற்றமாகும்.
  • அந்த காலக்கட்டத்தில் ‘வளர்ச்சியுடன் கூடிய பங்கீடு என்பதே புகழ்பெற்ற முழக்கங்கங்களாயின.
  • ·மைக்கேல் பி.டொடாரோவின் கருத்தின்படி, ‘முன்னேற்றத்தை சமூக அமைட்டி, பொது மக்களின் மனநிலை மற்றும் நாட்டின் நிறுவன அமைப்புகள் ஆகியவற்றில் நிகழும் பெரிய மாற்றங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி, வருவாய் ஏற்றத்தாழ்வினை குறைத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அனைத்தையுமேபொருளாதார முன்னேற்றமாக கருத வேண்டும்’ என்கிறார்,

வளர்ச்சி குன்றிய பொருளாதாரம்:

  • வளர்ச்சி குறைந்த பொருளாதாரம் என்பது ஒரு நாட்டில் குறைவான தலா வருமானம், பரவலான வறுமை, வருவாய் மற்றும் செல்வ பகிர்வில் கடுமையான ஏற்றத்தாழ்வு அதிக மக்கள் தொகை, குறைவான மூலதன ஆக்கம், அதிக அளவு வேலையின்மை, பழமையான உற்பத்தி முறை, எதிரும் புதிருமான பண்புகள் ஒருசேர நிலவுதல் (Dualsm) போன்றவற்றை பண்புகளாகக் கொண்டதாகும்.

வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் பொருள்:

  • வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் என்பது ஒரு நாட்டில், அதிக மக்கள் தொகையினால் உற்பத்தி குறைந்து, அவற்றின் விளைவாக குறைந்த தலா வருமானம் உடைய அதிக மக்களைக் கொண்ட பொருளாதாரமாகும்.

நிதி ஆயோக் (NITI Aayog):

  • National Institution for  Transforming India என்பதன் சுருக்கமே நிதி ஆயோக் என்பதாகும். இதனை இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என புரிந்துக் கொள்ளலாம்.
  • இதனை ஆகஸ்டு 13, 2014-ல் திட்டக்குழுவுக்கு பதிலாக இந்த நிறுவனத்தை உருவாக்கும் முடிவை இந்திய அரசு எடுத்தது. இதன்படி ஜனவரி 1, 2015 அன்று அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் மூலமாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது. இந்தியப் பிரதமரே நிதி ஆயோக்கின் தலைவர்.
  • மத்திய அமைச்சர்கள் உறுப்பினர்கள் ஆவர். இதன் துணைத்தவைரே நிர்வாகத் தலைவராவார். அரவிந்த் பனகரியா இதன் முதலாவது துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார்.

நிதி ஆயோக்கின் பணிகள்:

நிதி ஆயோக்கின் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி

மாநிலங்கள் நாட்டின் கொள்கை வடிவமைப்பதில் துடிப்புடன் பங்கெடுக்கத் தேவையானவற்றை செய்வது

2. நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்

நாட்டின் முன்னேற்றத்திற்கான முன்னுரிமைகள் மற்றும் உத்திகளில் மாநிலங்களையும் இணைத்துக் கொள்ளுதல்

3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்

திட்டமிடல் நடைமுறையை கீழிருந்து மேல் என்ற முறையில் மாற்றம் கொண்டுவருதல்.

4. தொலை நோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்

நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இடைக்கால மற்றும் நீண்டகால தொலை நோக்கு கட்டமைப்பை வடிவமைத்தல்.

5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்

அரசின் கொள்கைகள் வடிவமைப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசுக்கு வெளியில் உள்ள விபுணர்கள் ஒன்றிணைந்து பங்குபெற வைத்தல்.

6.உகந்ததாக்குதல்

அரசின் பல படிநிலைகளில் பணியாற்றுபவர்களை குறிப்பாக பலதுறைகள் ஒன்றிணைந்து செயல்படுமிடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை களைய தொடர்பு கொள்ளுதல், ஒருங்கிணைக்கள் கைகோர்த்தல் மற்றும் கூட்டிணைத்தல் மூலம் உகந்த பணியை நிதி ஆயோக் செய்கிறது.

7. சச்சரவுத் தீர்த்தல்

அரசுத் திட்டங்களை வேகமாக செயல்படுக்க மாநில மைய அரசுகளுக்கு இடையில், மாநிலங்களுக்கிடையில், அரசுத் துறைகளுக்கிடையில் மற்றும் பிற துறைகளுக்கிடையில்

நிலவும் சச்சரவுகளுக்குத் தீர்வுகான ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.

TNPSC Indian Economy - Planning Commission and Niti Ayog in Tamil

 

8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்

வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நிதி வளங்களையும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படும் வகையில் பெற்றுக்கரும் பொறுப்பு அலுவலகமாக நிதி ஆயோக் செயல்படும்.

9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்

கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்க மாநில மற்றும் மைய அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது.

10. திறன் உருவாக்குதல்

அரசுத்துறைகளில் திறனை கோர்க்கவும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், உலக கோவில் தற்போது நடைமுறையில் உள்ள தா கொவு கோள்களை கொண்டும், மேலாண்மை நுட்பங்கள் வழியாகவும் திறன் உருவாக்கும் பணியையும் நிதி ஆயோக் செய்கிறது.

11. கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்

அரசு செயல்படுத்தும் திட்டங்களை நிதி ஆயோக் கண்காணித்து அதன் விளைகளை மதிப்பீடும் செய்கிறது.

அடல் புத்தாக்க கொள்கை, ஆயுஸ்மான் பாரத் அணுகுமுறை ஆகியவை தண்ணீர் வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், இந்திய மருத்துவ கழகத்திற்கு தேசிய மருத்துவ வாரியம் என பெயர் மாற்றம் செய்வதற்கும் நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது நிதி ஆயோக்.

நிதி ஆயோக் பொறுப்புணர்வையும் உருவாக்குகிறது. இதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் புள்ளி விவரத்தை சேகரித்து அவற்றின் செயல்பாட்டை கண்காணிக்கிறது. மாநிலங்களையும்

வரிசைப்படுத்தி போட்டியடிப்படையிலான கூட்டாட்சி உணர்வை வளர்க்கிறது. நிதி ஆயோக்கின் வெற்றியை குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகே கணிக்க முடியும்.

TNPSC Indian Economy – Planning Commission and Niti Ayog Questions and Answers in Tamil:

சரியான விடையை தெரிவு செய்க:

1. வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு கீழ்கண்ட எந்த அனுகுமுறையின் புகழ்பெற்ற முழக்கம் இது.

அ) பழமையான அணுகுமுறை

ஆ) புதிய பொது நல அணுகுமுறை

இ) தொழில் அணுகுமுறை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

2. பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியின் தன்மை இல்லாதவை எது?

அ) வளர்ந்த நாடுகளை பற்றியது

ஆ) படிப்படியான மாற்றம்

இ) எண்களின் அடிப்படையில் அமைந்தது

ஈ) விரிவான கருத்து

3. கீழ்கண்டவற்றுள் எவை பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்

அ) வறுமையின் நச்சு சுழற்சி

ஆ) பெரும் நுகர்வை அதிகப்படுத்துதல்

இ) தொழில்சாலைகள் வளர்ச்சி

ஈ) அதிக அளவில் நகர்மயமாதல்

4. கீழ்கண்டவற்றுள் எந்த பொருளாதாரம் சாராத காரணி, பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது

அ) இயற்கை வளங்கள்

ஆ)மனிதவளங்கள்.

இ) மூலதன உருவாக்கம்

ஈ)பன்னாட்டு வாணிபம்

5. பொருளாதார வளர்ச்சி ——–2 அளவிடுகிறது

அ) உற்பத்தித் திறன் வளர்ச்சி

ஆ) பெயரளவு வருமான அதிகரிப்பு

இ) உற்பத்தி அதிகரிப்பு

ஈ) இவை எதுவுமில்லை

6. அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியின்படி ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன ஏனென்றால்

அ) சேமிப்பு குறைவாகவே உள்ளது

ஆ) முதலீடு குறைவாகவே உள்ளது

இ) திறன் மிக்க அரசு இல்லை

ஈ) அ மற்றும் ஆ

7. கீழ்கண்ட எந்த திட்டத்தில், வேளாண்மை மற்றும் கிராமப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது?

அ) மக்கள் திட்டம்

ஆ) பாம்பே திட்டம்

இ) காந்தியத் திட்டம்

ஈ) விஸ்வேசுவரய்யா திட்டம்

8. கீழ்கண்ட திட்டங்களை அவை முன்மொழியப்பட்ட

ஆண்டின் அடிப்படையில் காலகிரம வரிசைப்படி தொகுத்து விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1) மக்கள் திட்டம் 1) பாம்பே திட்டம் 1) ஜவஹர்லால் நேரு திட்டம் iv) விஸ்வேசுவரய்யா திட்டம்

அ) i) ii) ii) iv)

ஆ) iv) i) ii) i)

இ) i) i) iv) il)

ஈ) ii) i) iv) iii)

9. எம். என் ராய் வழங்கியத் திட்டம் கீழ்கண்டவைகளில் எது?

அ) காங்கிரஸ் திட்டம்

ஆ) மக்கள் திட்டம்

இ) பாம்பே திட்டம்

ஈ) இவை எதுவுமில்லை

10. சுட்டிக்காட்டும் திட்டமிடலைசெயல்படுத்திய நாடு

அ) பிரான்சு

ஆ) ஜெர்மனி

இ) இத்தாலி

ஈ) ரஷ்யா

11. குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு பெயர்

அ) கட்டுப்படுத்தும் திட்டம்

ஆ) கட்டுபாட்டை நீக்கும் திட்டம்

இ) சுழல் திட்டம்

ஈ) சுழற்சியற்ற திட்டம்

12. நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர்

அ) மேம்பாட்டுத் திட்டம்

ஆ) மேம்பாடு இல்லாத திட்டம்

இ) முன்னோக்குத் திட்டம்

ஈ) முன்னோக்கமற்ற திட்டம்

13. நீண்ட காலத்திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் —— மாற்றமாகும்

அ) நிதி

ஆ) வேளாண்மை

இ) தொழில்

ஈ) கட்டமைப்பு

14. சர்வோதாயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்?

அ) மஹாத்மா காந்தி

ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்

இ) எஸ்.என்.அகர்வால்

ஈ) எம்.என்.ராய்

15. இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு —

அ) 1950

ஆ) 1951

இ) 1947

ஈ )1948

16. அடிமைத்தனத்திற்கான பாதை” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

அ) பிரடெரிக் ஹேயக்

ஆ) ஜெ.ஆர் ஹிக்ஸ்

இ) டேவிட் ரிக்கார்டோ

ஈ) டி.ஆர். மால்தஸ்

17. முன்னோக்குத் திட்டத்தின் மற்றொருப் பெயர்———-

அ) குறுகிய கால திட்டமிடல்

ஆ) நடுத்தரக்காலத் திட்டமிடல்

இ) நீண்ட காலத் திட்டமிடல்

ஈ) இவை எதுவுமில்லை

18. நிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக அமைக்கப்பட்டது?

அ) குடியரசு தலைவரின் அவசர ஆணை

ஆ) குடியரசு தலைவரின் சுற்றறிக்கை

இ) அமைச்சரவைத் தீர்மானம்

ஈ) இவை எதுவுமில்லை

19. நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம்

a) National Institute for Transport in India

b) National Institute for Trade in India

c) National Institute for Tomorrow’s India

d) National Institution for Transforming India

20. சட்டப்பூர்வமாக நிதி ஆயோக்கின் தலைவராக கீழ்க்கண்ட எந்தப் பதவியில் உள்ள ஒருவர் செயல்படுவார்?

அ) பிரதமர்

ஆ) குடியரசுத் தலைவர்

இ) உதவி குடியரசுத் தலைவர்

ஈ) நிதி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *