9th Tamil unit 3.1 – ஏறு தழுவுதல் Book Back Questions with Answers:
Samacheer Kalvi 9th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below.The Samacheer Kalvi Class 9 New Tamil Book Back Answers Unit 3.1 – ஏறு தழுவுதல் Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 9th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Tamil Unit 3.1 Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Tamil guide Book Back Answers PDF. See below for the New 9th Tamil Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Book – unit 3.1 ஏறு தழுவுதல் Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 9th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
9th Tamil Samacheer Kalvi Book Back Answers
Chapter 3.1 – ஏறு தழுவுதல்
1. இலக்கியங்கள் காட்டும் ஏறுதழுவுதல் காட்சிகளை உங்கள் பகுதியில் நடைபெற்ற எருது விடும்
விளையாட்டு நிகழ்வுடன் ஒப்பிட்டு வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
உரையாடுபவர்கள் : ஆசிரியர், கபிலன், அமிழ்தன்.
ஆசிரியர் : கலித்தொகை, முல்லைக்கலியில் காளைகள் முட்டியும், மோதியும், எதிர்த்தும், மண்டியிட்டும் வீரர்களைப்போல் பாய்ந்தது என்பதை அறிந்தீர்கள் அல்லவா! அதைப் போல நீங்கள் கண்டனவற்றைக் கூறுங்கள்.
கபிலன் : நண்பா அமிழ்தா! எங்கள் ஊர் சல்லிக்கட்டில் எப்படி வாடிவாசலைத் திறந்தவுடன் நம் ஆசிரியர் கூறியதுபோல காளைகள் வேகமாக வந்தனவல்லவா!
அமிழ்தன் : ஆம் கபிலன்! எனக்கு பாதுகாப்பு தடுப்புக்குப் பின் இருந்து பார்க்கவே பயமாக இருந்தது. கலித்தொகை கூறிய காளைகள் போலவே திமில் பெருத்து இருந்தது அல்லவா!
கபிலன் : ஆம் அமிழ்தா! எப்படி மண்மேடுகளை எல்லாம் தாவி வந்தது பார்த்தாயா!
அமிழ்தன் : ஆம் கபிலன்! சரி! அதன் கொம்பில் சுற்றிய பணம் யாருக்கு!
கபிலன் : இது தெரியாதா அமிழ்தா! அக்காளையை அரவணைத்து அடக்குபவருக்குத்தான்.
அமிழ்தன் : ஆம் கபிலா! நம் இலக்கியத்தில் கூறியதைப் போலவே ஆயுதமே இல்லாமல் அடக்கி, வென்றுவிட்டனரே! மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறதடா!
2. உங்கள் ஊரில் பொங்கல் விழா நடைபெறுகிறது. அவ்விழாவில் சாக்கு ஓட்டம், தவளை ஓட்டம், புட்டியில் தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி, உருளைக் கிழங்கு பொறுக்குதல், ஊசியில் நூல் கோத்தல், கோலம் போடுதல், கயிறு இழுத்தல், மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல், பானை உடைத்தல் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போட்டிகள் குறித்து நேரடி வருணனை செய்க.
Asnwer:
நிகழ்ச்சிநிரல்
1. சாக்கு ஓட்டம்:
சிறுவர்களே! சிறுமியர்களே! முதலாவது நிகழ்ச்சியாக பன்னிரெண்டு வயதுக்குட் பட்டவர்களுக்கு இப்போட்டி. சாக்குக்குள்ள காலை நுழைத்துக் கொண்டு ஓடி வர வேண்டும். சாக்கு இல்லேன்னு சாக்குச் சொல்லாதீங்க. வாங்க… போட்டிக்கு வாங்க!
2. தவளை ஓட்டம்:
தண்ணியில்லா நேரத்தில் தவளை எங்கிருந்து வரும்? அப்படினு நினைக்காதீங்க! குட்டிக் குட்டித் தவளைகள் எட்டி எட்டிப் பாக்குது… தவளைகளே தவ்வித் தவ்விதான் போகனும் எந்திருச்சி ஓடக் கூடாது! வரிசையில் உக்காருங்க… போட்டி தொடங்குது.
3. புட்டியில் தண்ணீ ர் நிரப்புதல்:
மகளிர் வாங்க… உங்க சிக்கனத்தை நான் கண்டுபிடித்துச் சொல்றேன். கையில் தண்ணீர் எடுத்து புட்டியில் நிரப்ப வேண்டும். தண்ணீர் சிக்கனம் இக்கனம் தேவை.
4. இசை நாற்காலி:
சிறுவர்களுக்கு என்று ஒருபோட்டி சிறுமியர்களுக்கென ஒரு போட்டி பாட்டு கேட்டுகிட்டே கவனத்தோடு நாற்காலியில் இடம் பிடிக்கவும். கவனமாக நீங்க இருக்கிறீங்களா… ஒரு தேர்வு.
5. உருளைக்கிழங்கு பொறுக்குதல்: இவ்விளையாட்டில் இரண்டிற்கு மேற்பட்ட எத்தனை நபர்களும் விளையாடலாம்.
சில மீட்டர் இடைவெளியில் இரு பக்கமும் வரிசையாக எத்தனை நபர் விளையாடுகிறார்களோ அத்தனை கட்டங்கள் போட வேண்டும். ஒரு பக்கத்தில் உள்ள கட்டத்திற்குள் தேவைக்கேற்ப உருளைக்கிழங்குகள் வைத்திருக்க வேண்டும். எதிர்பக்கத்தில் உள்ள கட்டம் காலியாக இருக்கவேண்டும். மணி ஒலித்தவுடன் உருளைக்கிழங்கு இருக்கும் கட்டத்திற்கு முன் நிற்பவர்கள் அதிலிருந்து ஒன்று எடுத்து தனக்கு நேர் எதிரே இருக்கும் கட்டத்திற்குள் கொண்டுபோய் வைக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொன்றாக ஓடி வந்து எடுத்து முதலில் நிரப்புகிறவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.
6. ஊசியில் நூல் கோத்தல்:
அறுபது வயதுக்கு மேற்பட்ட தாத்தா பாட்டிக்குத்தான் இந்தப்போட்டி. எடுக்கவோ? கோக்கவோ? எடுத்துக் கோக்க வேண்டும். சிறுவராக இருக்கும். போதே காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிட்டால் தான் இப்ப கோக்க முடியும்.
7. கோலம் போடுதல்:
பெண்களுக்கான போட்டி. வாசலில் போடும் வண்ணக் கோலங்கள்! உங்கள் மன எழுச்சிகளை அந்த கோலத்தில் காணலாம். இளங்காலைப் பொழுதில் ஓசோனிலிருந்து வரும் தூய காற்று உங்களுக்கு இயற்கை தந்த இன்பப் பரிசு.
8. கயிறு இழுத்தல்:
நம்ம ஊர் இளைஞர்களை இரண்டு அணியாகப் பிரித்து அங்கே கிடக்கிற வடக்கயிறு ஆளுக்கொரு பக்கம் பிடித்து இழுக்கனும். இழுக்கும் போது கயிறு அறுந்தா நாங்க பொறுப்பில்லை!
9. மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல்:
வேகம்… சைக்கிள், வண்டி, வாகனங்கள் எதிலுமே வேகம்… வேகம்… ஆனா இங்கே மெதுவாக ஓட்டவேண்டும். காலை கீழே ஊன்றினால் போட்டியிலிருந்து நீக்கப்படுவீர்கள், வேகமாகப் போனாலும் நடுவர்கள் போட்டியிலிருந்து நீக்கிடுவார்கள். கவனமாகப் போய் பரிசைப் பெறுங்கள்.
10. பானை உடைத்தல்:
மேலே பானை தொங்கும். நீளகம்பு தருவோம். ஆனா துண்டுல உங்க கண்ணை இறுக்கமாகக் கட்டிவிடுவோம். பார்வையாளர்கள் கவனமாக இருக்கவேண்டும். இளைஞர்கள் வேகத்தில் வந்து உங்கள் தலையைப் பதம் பார்த்து விடக் கூடாது!
எல்லோரும் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்!
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பொருந்தாத இணை எது?
அ) ஏறுகோள் – எருதுகட்டி
ஆ) திருவாரூர்- கரிக்கையூர்
இ) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
Answer:
ஆ) திருவாரூர் – கரிக்கையூர்
2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
Answer:
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
3. சொற்றொடர்களை முறைப்படுத்துக.
அ) ஏறுதழுவுதல் என்பதை
ஆ) தமிழ் அகராதி
இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
i) ஆ, அ, இ
ii) ஆ, இ, அ
iii) இ, ஆ, அ
iv) இ, அ, ஆ
Answer:
i) ஆ, அ, இ
குறுவினா
1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
Answer:
ஜ(ச)ல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல், காளை விரட்டு, மாடுபிடித்தல், எருதுகட்டி, ஏறுவிடுதல் எனப் பல்வேறு வடிவங்களில் ஏறுதழுவுதல் அழைக்கப்படுகிறது.
2. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
முல்லைக் கலியில், ஏறுதழுவுதல் என்றும் சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களில் ‘ஏறுகோள்’ என்றும் கண்ணுடையம்மன் பள்ளு என்ற சிற்றிலக்கியத்தில் ‘எருதுகட்டி’ என ஏறுதழுவுதல் பற்றி குறிக்கப் பெற்றுள்ளன.
3. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.
Answer:
ஏறுதழுவுதல் குறித்த பல நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இடங்கள்:
- சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட “எருது பொருதார் கல்” ஒன்று உள்ளது.
- கோவுரிச் சங்கன் கருவந்துறை எனும் ஊரில் எருதோடு போராடி இறந்து பட்டான். சங்கன் மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் ஒன்றுள்ளது.
- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கரிக்கையூரில் மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் காணப்படுகிறது.
- திமிலுடன் கூடிய காளை ஒன்றை அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவினா
1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
Answer:
ஏறுதழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருதநிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.
2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
Answer:
தமிழக உழவர்கள், தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். அவ்விழாவின்போது, மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடிகயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டுவர். பின்னர் பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர். இதன் தொடர்ச்சியாக வேளாண குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.
நெடுவினா
1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
Answer:
இளைஞர்களின் வீரம்:
வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை மாடுகள். முல்லை மற்றும் மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர் தம் வாழவோடு பின்னிப் பிணைந்து பண்பாடாகியுள்ளது ஏறுதழுவுதல். ஏறுதழுவுதல் தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு; இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு. இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
வன்மமும், போர்வெறியும்:
மேலை நாடுகளுள் ஒன்றான ஸ்பெயினில், காளைச் சண்டை தேசிய விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது. அதில் காளையை அடக்கிக் கொல்பவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவர். காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் காளை கொல்லப்படுவதும் உண்டு. மேலை நாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளை விளையாட்டு, மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையுமே வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.
அன்பும் வீரமும்:
தமிழகத்தில் நடைபெறும் ஏறுதழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக்கூடாது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர். அடக்க முடியாத காளைகளும் உண்டு. எனவே, காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
Other Important Link for 9th Tamil Book Back Solutions:
Click here to download the complete Samacheer Kalvi 9th Tamil Book Solutions – 9th Tamil Book Back Answers