04 May 2022

Samacheer Kalvi 9th Social Science Unit 9 in Tamil

9th Social Science History Unit 9 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Social New Syllabus 2022 History Unit 9 – புரட்சிகளின் காலம் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Social Science History Book Portion consists of  11 Units. Check Unit-wise and Full Class 9th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Social Science History Unit 9 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Social Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check History questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes. Check Samacheer Kalvi 9th Social Science Unit 9 in Tamil below,

அலகு 9: புரட்சிகளின் காலம் Book Back Answers in Tamil

History(வரலாறு) – அலகு 09

புரட்சிகளின் காலம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி ………… ஆகும்.
அ) நியூயார்க்
ஆ) பிலடெல்பியா
இ) ஜேம்ஸ்ட வுன்
ஈ) ஆம்ஸ்டெர்டாம்
விடை: இ) ஜேம்ஸ்டவுன்

2. பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ………….
அ) மிரபு
ஆ) லஃபாயெட்
இ) நெப்போலியன்
ஈ) டான்டன்
விடை: ஆ) லஃபாயெட்

3. லஃபாயெட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர் ………………. எழுதப்பட்டது.
அ) சுதந்திர பிரகடனம்
ஆ) பில்னிட்ஸ் பிரகடனம்
இ) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.
ஈ) மனித உரிமை சாசனம்
விடை: இ) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.

4. ……….. இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.
அ) டிரன்டன்
ஆ) சாரடோகா
இ) பென்சில் வேனியா
ஈ) நியூயார்க்.
விடை: ஆ) சாரடோகா

5. பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக …………… இருந்தது.
அ) வெர்செயில்ஸ்
ஆ) பாஸ்டைல் சிறைச்சாலை
இ) பாரிஸ் கம்யூன்
ஈ) ஸ்டேட்ஸ் ஜெனரல்
விடை: அ) வெர்சே மாளிகை

6. ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ………… போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.
அ) வெர்ணா
ஆ) வெர்செயில்ஸ்
இ) பில்னிட்ஸ்
ஈ) வால்மி
விடை: ஈ) வால்மி

7. ‘கான்டீட்’ என்ற நூல் ………… ஆல் எழுதப்பட்டது
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) டாண்டன்
விடை: அ) வால்டேர்

8. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் ……………
அ) ஜெரோண்டியர்
ஆ) ஜேக்கோபியர்
இ) குடியேறிகள்
ஈ) அரச விசுவாசிகள்
விடை: அ) ஜெரோண்டியர்

9. ……………. ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதிப் போர் முடிவுக்கு வந்தது.
அ) 1776
ஆ) 1779
இ) 1781
ஈ) 1783
விடை: ஈ) 1783

10. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ……… ஆகும்.
அ) இயல்பறிவு
ஆ) மனித உரிமைகள்
இ) உரிமைகள் மசோதா
ஈ) அடிமைத்தனத்தை ஒழித்தல்
விடை: அ) இயல்பறிவு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் …………..
விடை: பெஞ்சமின் பிராங்கிளின்

2. பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு ……..
விடை:  1775

3. ………… சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.
விடை: செலவாணி

4. பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் ……….. ஆவார்.
விடை: மிரபு

5. சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும் விழா நடத்தியதால் …………… கில்லட்டினால் கொல்லப்பட்டார்.
விடை: ஹொபாட

6. பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது ………. நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
விடை: வெர்னே

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி:

1. i) கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவார்.
ii) பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது
iii) குகேவக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்.
iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.
அ) i)மற்றும்
ii) சரியானவை
ஆ) iii)சரி
இ)iv)சரி
ஈ) i)மற்றும்
iv) சரியானவை
விடை:
ஈ) i) மற்றும்
iv) சரியானவை

2. i) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.
ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றிபெற்றன.
iii) வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர்.
iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது.
அ) i) மற்றும்
ii) சரியானவை
ஆ) iii)சரி
இ) iv)சரி
ஈ) i)மற்றும்
iv)சரியானவை
விடை:
அ) i) மற்றும்
ii) சரியானவை

3. கூற்று (கூ) : ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.
காரணம் (கா) : ஆங்கிலேய நிதி அமைச்சர் அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினர்.
அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை: இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

4. கூற்று (கூ) : கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்புரட்சி செய்தனர்.
காரணம் (கா) : அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பவில்லை
அ) கூற்றும் காரணமும் தவறானவை
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
விடை: இ) கூற்று சரி, காரணம் தவறு




IV. பொருத்துக:

1. ஜான் வின்திராப்            -அ)  பிரான்சின் நிதி அமைச்சர்
2. டர்காட்                                 -ஆ)  ஜூலை 4
3. சட்டத்தின் சாரம்           – இ) இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்
4. மேரி அண்டா ய்னெட் – ஈ) மாசாசூசட்ஸ் குடியேற்றம்
5. ஏழாண்டுப் போ ர்          – உ) பதினாறாம் லூயி
6. அமெரிக்கச் சுதந்திர தினம் – ஊ) மான்டெஸ்கியூ

விடை: 1 – ஈ, 2 – அ , 3 – , 4 – உ , 5 – இ, 6 – ஆ

V. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமான விடையளி:

1. பியூரிட்டானியர் என்போர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?
விடை:

  • இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட மதச்சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகளே பியூரிட்டானியர் என்று அழைக்கப்பட்டனர்.
  • இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் அரசர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
  • எனவே அவர்கள் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பியூரிட்டானியர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறினர்

2. குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?
விடை:

  • இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறிஸ்துவ மதக்குழுவின் உறுப்பினர்கள் குவேக்கபர் எனப்பட்டனர்.
  • இவர்கள் புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவமும் சடங்கு சம்பிரதாயங்களையும் சமயக்குருமார் அமைப்பையும்
    எதிர்த்த னர்.

3. ‘பாஸ்டன் தேநீர் விருந்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
விடை:

  • 1773 ல் குடியேற்ற மக்கள் அமெரிக்கப் பூர்வீக குடிமக்களைக் போன்று மாறுவேடம் பூண்டு கப்பல்களில் ஏறி அதிலிருந்த தேயிலையைக் கடலில் வீசினர். இந்நிகழ்ச்சி பாஸ்டன் தேநீர் விருந்து’ எனப்படுகிறது.
  • இந்நிகழ்ச்சி இங்கிலாந்துக்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குடியேற்ற நாடுகளுக்குமிடையே போர் ஏற்பட வழிகோலியது.

4. செப்டம்பர் படுகொலை பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • 1792ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரிஸ் கம்யூன் அரசருடைய அரண்மனையை தாக்க ஆணை பிறப்பித்தது.
  • எனவே அரசர் தன்னுடைய சுவிட்சர்லாந்து நாட்டுக் காவலர்களை, மக்களை நோக்கிச் சுடுமாறு ஆணை
    பிறப்பித்தார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சுவிட்சர்லாந்து காவலர்களின் செயல்களால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் அரச ஆதரவாளர்களை மாரட் என்பவரின் தலைமையில் வேட்டையாடினர்.
  • மூன்று நாட்களில் மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 1500 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
  • விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி செப்டம்பர் படுகொலை என அழைக்கப்படுகிறது.

5. பிரான்சின் மூன்று வர்க்கங்களின் அமைப்பு (Three Estates) பற்றி எழுதுக.
விடை:
முதல் வர்க்கம் : மதகுருமார்
இரண்டாவது வர்க்கம் : பிரபுக்கள்
மூன்றாம் வர்க்கம் : வழக்கறிஞர்கள், பணம் படைத்த வர்த்தகர்கள், வணிகர்கள், வங்கியாளர்கள்,
நிலவுடையாளர்கள் ஆகியோர் அடங்கிய பொதுமக்கள். இவர்கள் மூன்றாவது வாக்கத்தினர் பிரபுக்களுக்குத் தலைவணங்கவும் அரசரின் ஆணைகளுக்கு பணியவும் மறுத்தனர்.

6. பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக.
விடை:

  • லஃபாயட் என்பவர் மக்களாட்சிக் கோட்பாடுகளோடு நாடு திரும்பி, பிரெஞ்சுப் படையில் முக்கியப்பங்கு வகித்தார்.
  • இவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பரிவுக்கு தலைமையேற்றார்.
  • ஜெபர்சன் உதவியோடு இவர் ‘மனிதன் மற்றும் பிரகடனம்’ என்பதை எழுதினார்.

7. பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?
விடை:

  • அரசரால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர்.
    அவர்களைக் கலைக்க அரசர் தனது படை வீரர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர்கள் பணிய மறுத்தனர்.
  • மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் அயல் நாட்டுப் படையினரை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
  • இதை அறிந்த மக்கள் கிளர்ச்சியில் இறங்கி, பாஸ்டில் சிறையைத்தகர்த்தி அங்கேசிறைவைக்கபட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர்.

8. பிரெஞ்சு புரட்சியின் போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?
விடை:

  • டித் (தசமபாகம்)
  • டெய்லே (நிலவரி)
  • காபெல்லே (உப்புவரி)

VI. விரிவான விடையளிக்கவும்:

1. ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
விடை:

  • ஏழாண்டுப் போரினால் இங்கிலாந்து பெருமளவு பணம் செலவு செய்ய நேர்ந்தது. செலவான தொகையில் ஒரு பகுதியை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இங்கிலாந்து விரும்பியது.
  • எனவே குடியேற்ற நாடுகள் மீது ஒன்றன்பின் ஒன்றாக பல வரிகள் விதிக்கப்பட்டன.
  • 1764 ஆம் ஆண்டின் சர்க்கரைச் சட்டத்தினை அமெரிக்கர்கள் எதிர்த்தனர். சர்க்கரைச் சட்டத்தின் முகவுரையே “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை ” எனும் முழக்கம் உருவாகக் காரணமாயிற்று.
  • தங்களின் கருத்துக்களைக் கேட்காமல் உருவாக்கப்படும் கொள்கைகளுக்கு வரி கட்டமுடியாது என்ற
    வாதத்தைக் குடியேற்ற மக்கள் எழுப்பினர்.
  • பல்வேறு புதிய சட்டங்கள் மூலம் பல புதிய வரிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டன. * தங்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கள் மீது வரி விதிக்கும் ஆங்கில நாடாளுமன்றத்தின் உரிமைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
  • “பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பில்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது. இதுவே அமெரிக்க சுதந்திரப் போருக்கு முக்கியக் காரணமாயிற்று.

2. 1789ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பினை விளக்கவும்.
விடை:

  • பிரான்சில் பதினெட்டாம் நூற்றாண்டில் பல தத்துவஞானிகளும், எழுத்தாளர்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் வால்டேர், ரூசோ, மாண்டெஸ்கியூ ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
  • வால்டேர் : வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார். வால்டேரின் புகழ் பெற்ற நூல் ‘கான்டீட்’ என்பதாகும்.
  • ரூசோ : இவருடைய அரசியல் கருத்துக்கள் பலரது மனங்களைக் கவர்ந்து புதிய முடிவுகளை எடுக்கச் செய்தன. பிரெஞ்சுப் புரட்சியில் இவரது சிந்தனைகள் முக்கியப் பங்காற்றின. சமூக ஒப்பந்தம் என்ற நூலில் மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • மாண்டெஸ்கியூ : இவர் ‘சட்டத்தின் சாரம்’, ‘பாரசீக மடல்கள்’ என்னும் நூல்களை எழுதினார். சுதந்திரத்திற்கு ஆதரவாக வாதாடினார். அவர் அதிகாரப் பிரிவினை என்னும் கோட்பாட்டை முன் வைத்தார். எந்த ஓர் அரசியலில் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அங்குதான் தனிமனிதனின் சுதந்திரம் சிறப்பாகப் பாதுகாக்கும் என்று எடுத்துரைத்தார்.

Other Important links for 9th Social Science Book Back Solutions:

Click Here to Download 9th Social Science Book Back Answers – 9th Social Science Book Back Answers

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *