06 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 4 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 4 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 4 – மின்னூட்டமும் மின்னோட்டமும் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 4 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Physics questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 04: மின்னூட்டமும் மின்னோட்டமும் Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 04 – மின்னூட்டமும் மின்னோட்டமும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
அ. எலக்ட்ரான்களின் ஏற்பு
ஆ. புரோட்டான்களின் ஏற்பு
இ. எலக்ட்ரான்களின் இழப்பு
ஈ. புரோட்டான்களின் இழப்பு

2. சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்
அ. மின்னூட்டங்கள் உருவாக்கப்ப டுகின்றன
ஆ. மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன
இ. அ அல்லது ஆ
ஈ. இரண்டும் அல்ல

3. மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில்________, எதிர் மின்னூட்டத்தில் _____.
அ. தொடங்கி; தொடங்கும்
ஆ. தொடங்கி; முடிவடையும்
இ. முடிவடைந்து; தொடங் கும்
ஈ. முடிவடைந்து; முடியும்

4. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்ப டும் ______________ அளவாகும்.
அ. விசையின்
ஆ. திறமையின்
இ. போக்கின்
ஈ. வேலையின்

5. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய் விற்குக் காரணம் ______________
அ. எலக்ட்ரான்கள்
ஆ. நேர் அயனிகள்
இ. அ மற்றும் ஆ
ஈ. இரண்டும் அல்ல

6. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ________ என அழைக்கப்ப டும்.
அ. ஜூல் வெப்பமேறல்
ஆ. கூலூம் வெப்பமேறல்
இ. மின்னழுத்த வெப்பமேறல்
ஈ. ஆம்பியர் வெப்பமேறல்

7. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ. வெப்ப விளைவு
ஆ. வேதி விளைவு
இ. பாய்வு விளைவு
ஈ. காந்த விளைவு

8. ஒரு கம்பியின் மின்தடை எதைப் ப�ொறுத்து அமையும்?
அ. வெப்ப நிலை
ஆ. வடிவம்
இ. கம்பியின் இயல்பு
ஈ. இவையனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. எலக்ட்ரான்கள் _______ மின்னழுத்தத்திலிருந்து _________ மின்னழுத்தத்திற்கு நகரும்.

2. எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த் திசையில் நகர்வது ___ மின்னோட்டம்
எனப்படும்.

3. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் __________ க்கு ஒப்பானது.

4. இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் __________ Hz அதிர்வெண்
கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.

விடை:

  1. அதிக, குறைந்த
  2. மரபு
  3. இறைப்பான்
  4. 150 Hz

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. மின்னியல் நடுநிலைஎன்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.
விடை: சரி

2. ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும்.
விடை: தவறு

3. மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறி உடையது.
விடை: தவறு

4. மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.
விடை: சரி




IV. பொருத்துக.

1. மின்னூட்டம்                            அ. ஓம்
2. மின்னழுத்த வேறுபாடு ஆ. ஆம்பியர்
3. மின்புலம்                                   இ. கூலூம்
4. மின்தடை                                  ஈ. நியூட்டன் கூலூம்–1
5. மின்னோட்டம்                       உ. வோல்ட்

விடை: 1 – இ; 2 – உ; 3 – ஈ; 4 – அ; 5 – ஆ

V. கருத்துரு வினாக்கள்.

1. உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது. எப்ப டி?
விடை:

  • உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது. ஏனெனில் ஒரேகம்பியில் இருப்பதால் மின் சுற்று பூர்த்தியாகாது.
  • மின்னழுத்த வேறுபாடு சுழி ஆகும்.
  • இதே பறவை மற்றொரு காலை (அ) இறகை அருகிலுள்ள கம்பியில் மோதச் செய்தால் மின்சுற்று பூர்த்தியடைந்து பறவை எரிந்துவிடும்.

2. சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா? கலந்தாய்வு செய்க.
விடை:

  • சூரிய மின்கலத்தில் மின்னழுத்தம் எப்போதும் ஓரே சீராக இருக்காது.
  • சூரிய மின்கலம் ஒளி மின்னழுத்த விளைவு தத்துவத்தில் செயல்படுகிறது.
  • இதனால் மின்னோட்டம், மின்னழுத்தம், மின் தடை ஆகியவை மாறுபடும். சூரிய கதிர் குறைந்த செறிவிலிருந்து, உயர் செறிவிற்கு செல்லும்.

3. மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா? காரணம் கூறு.
விடை:

  • மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியாது.
  • காலத்தைப் பொறுத்து மின்னோட்டத்தின் திசை மாறிக் கொண்டே இருக்கும். எனவே A.C ஐக் கொண்டு மின் முலாம் பூச முடியாது.
  • எனவே மின்முலாம் பூச நேர்த்திசை மின்னோட்டத்தை (DC) பயன்படுத்த வேண்டும்.

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *