07 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 23 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 23 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 23 – பொருளாதார உயிரியல்  Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 23 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Biology questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 23: பொருளாதார உயிரியல் Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 23 – பொருளாதார உயிரியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
அ) பிஸ்ஸி கல்ச்சர்
ஆ) செரிகல்ச்சர்
இ) அக்வா கல்ச்சர்
ஈ) மோனா கல்ச்சர்
விடை: அ) பிஸ்ஸி கல்ச்சர்

2. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
அ) ஜெர்சி
ஆ) ஹேல்ஸ்டீ ன் – பிரிஸன்
இ) ஷகிவால்
ஈ) ப்ரௌன் சுவிஸ்
விடை: இ) ஷகிவால்

3. பின்வருவனவற்றில் எது இத்தாலியன் இன தேனீ
அ) ஏபிஸ் மெல்லிபோரா
ஆ) ஏபிஸ் டார்சோட்டா
இ) ஏபிஸ் ப்ளோரா
ஈ) ஏபிஸ் சிரானா
விடை: அ) ஏபிஸ் மெல்லிபோரா

4. பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை ?
அ) ரோகு
ஆ) கட்லா
இ) மிரிகால்
ஈ) சின்காரா
விடை: ஈ) சின்காரா

5. தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
அ) கருவுறாத முட்டை
ஆ) கருவுற்ற முட்டை
இ) பார்த்தினோஜெனிஸிஸ்
ஈ) ஆ மற்றும் இ
விடை: அ) கருவுறாத முட்டை

6. கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
அ) ஹோல்ஸ்டீன் ஃபிரிஸன்
ஆ) டார்ஸெட்
இ) ஷகிவால்
ஈ) சிவப்பு சிந்தி
விடை: அ) ஹோல்ஸ்டீ ன் – ஃபிரிஸன்

7. தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
அ) ஏபிஸ் டார்சோட்டா
ஆ) ஏபிஸ் ப்ளோரா
இ) ஏபிஸ் பெல்ல பெரா
ஈ) ஏபிஸ் இண்டிகா
விடை: ஈ) ஏபிஸ் இண்டிகா

8. மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை
அ) தோட்டக்கலை
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்
இ) போமாலஜி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்

9. பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை
அ) லைக்கன்
ஆ) ரைசோபியம்
இ) மைக்கோரைசா
ஈ) அசிட்டோபாக்டர்
விடை: இ) மைக்கோரைசா

10. காளான்களின் தாவர உடலம் என்பது
அ) காளான் விதை
ஆ) மைசீலியம்
இ) இலை
ஈ) இவை அனைத்தும்
விடை: ஆ) மைசீலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு:

1. குயினைன் மருந்து _____ லிருந்து பெறப்படுகிறது.
விடை:
சின்கோனா அபிசினாலிஸ்

2. கேரிக்கா பப்பையா இலை ____ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.
விடை:
டெங்கு காய்ச்சல்

3. மண்புழு உரத்தை உருவாக்குவது _____ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
விடை: மண்புழுக்களில் சுரக்கும்

4. _____ கோழை வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.
விடை: கடல் நீர்வாழ் உயிரி

5. தேன் கூட்டில் உள்ள வளமான தேனீ ____ ஆகும்.
விடை: இராணி தேனீ

6. ____ தேனைப் பதப்படுத்துகிறது.
விடை: பார்மிக் அமிலம்

7. _____ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.
விடை: பலவகை மீன் வளர்ப்பு

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக:

1. மைக்கோரைசா ஒரு பாசி.
விடை:
தவறு – மைக்கோரைசா ஒரு பூஞ்சை

2. பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
விடை:
தவறு – இருபயன் விலங்குகள் விவசாயம் மற்றும் போக்கு வரத்திற்கு பயன்படுகின்றன.

3. ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.
விடை:
தவறு – ஏபிஸ் டார்சேட்டா என்பது பாறைத்தேனீ

4. ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.
விடை:
தவறு – ஓங்கோல் கால்நடைகள் ஒரு இந்தியநாட்டு இனம்.

5. வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.
விடை: சரி




IV. பொருத்துக:

பெரிய கடல் நண்டு கடல் மீன்
கட்லா முத்து
கொடுவா மீன் ஓடு மீன்
பொக்காலி துடுப்பு மீன்
பிளிரோட்டஸ் சிற்றினம் சோரியாஸிஸ்
சர்ப்பகந்தா சிப்பி காளான்
ஒலேரி கலச்சர் ரெஸ்பிரைன்
ரைட்டா டிங்டோரியா காய்கறிப் பண்ணை

 

V.கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக:

1. அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்

விடை:
9th Science Book Back Answers in Tamil

ஆ. மகரந்தம் மற்றும் தேன் ரசம்

விடை:

9th Science Book Back Answers in Tamil

 

இ. இறால் மற்றும் நன்னீர் இறால்

விடை:

9th Science Book Back Answers in Tamil

ஈ. தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு

9th Science Book Back Answers in Tamil

VI. சுருக்கமாக விடையளி:

1. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
விடை:
மருத்துவத் தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருள்கள் எ.கா. ஆல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள்.

2. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
விடை:

  • சமையலறைத் தோட்டங்கள் – இது நமக்குத் தேவையான காய்கறிகளை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் வளர்ப்பதாகும். எ.கா. பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், தக்காளி.
  • வணிகத்தோட்டங்கள் – சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கத்தோடு பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறை.
  • செயற்கைக் காய்கறித் தோட்டங்கள் – இது கட்டடங்கள் பசுமை வீடுகள் குளிர்சாதனப் பண்ணைகள் மற்ற பிற செயற்கையான சூழ்நிலைகளில் காய்கறிகளை வளர்க்கும் முறையாகும்.

3. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
விடை:

  1. குளிர்வித்தல் – காளான்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுகிறது. எனவே அதிக நாட்கள் கெடாமல் பதப்படுத்த முடியும்.
  2. உலர்த்துதல் – உணவு உலர்த்தியில் வைத்து காளான்களை உலர்த்தி நீரை வெளியேற்றுவது.

4. வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது என்பதைப் பட்டியலிடு.
விடை:

  1. இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தினை அளிக்கிறது.
  2. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளடக்கியது.
  3. கரிமப் பொருட்கள் மண்ணில் சிதைவடைவதை மேம்படுத்துகிறது.
  4. நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அற்றது.

5. மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள் யாவை?
விடை:

  • பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ் (இந்திய நீலவண்ண மண்புழு
  • எஸ்செனியாபெடிடா (சிவப்பு மண்புழு)
  • யூட்ரிலஸ் யூஜீனியே (ஆப்ரிக்க மண்புழு)

6. தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.
விடை:

  1. தேன் புரைத் தடுப்பானாகவும் பாக்டீரிய எதிர்ப்பு பொருளாகவும் இரத்தத்தை தூய்மையாக்கவும் பயன்படுகிறது.
  2. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
  3. ஆயுர்வேதம் யூனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.
  4. இருமல் சளி காய்ச்சல் தொண்டை வறட்சியை நீக்க பயன்படுகிறது.
  5. நாக்கு குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.
  6. செரிமானத்திற்கும் பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.

VII. விரிவாக விடையளி:

1. மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
விடை:
நிறைகள்:

  1. ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.
  2. கட்டுப்படுத்தப்பட்ட தாவர வளர்ச்சி காணப்படும்.
  3. பாலை வனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.

2. காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
விடை:
தாவர விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும்.

காளான் வளர்த்தலின் நிலைகள்:

  1. கலத்தல்: வைக்கோலுடன் மாட்டுச்சாணம் கரிமக் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 50°C வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது.
  2. காளான் வித்து: ஸ்பான் என்பது காளான் விதையாகும். இந்த ஸ்பான் விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
  3. உறையிடுதல்: விதைகலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றன. இது ஈரப்பதத்தை வழங்கி வெப்பநிலையைச் சீராக்குகின்றன.
  4. பொருத்துதல்: குண்டூசி போன்ற வெண்மையான காளான் மொட்டுகளுக்கு ஊசிகள் என்று பெயர்.
  5. அறுவடை செய்தல்: ஒரு வாரத்தில் 15 – 23°C வெப்பநிலை 3 செ.மீ. உயரம் வரை வளர்கிறது. மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
  6. பதப்படுத்துதல்: இந்த காளான்கள் குளிர்வித்தல் உலர்த்துதல் கலனில் அடைத்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல் முறையில் பதப்படுத்தப்படுகின்றன.

3. மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
விடை:

  1. விவசாயக் கழிவுகள்
  2. பயிர்க்கழிவுகள் – நெல் வைக்கோல் அரிசி உமி நார்க்கழிவு
  3. இலை குப்பைகள்
  4. பழம் மற்றும் காய்கறிகள் கழிவுகள்
  5. விலங்கு கழிவுகள்
  6. சாண – எரி வாயு கழிவுகள்

4. மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
விடை:
அ) இனப்பெருக்க குளம்: ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கேற்ற முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்கள் சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றது.

ஆ) குஞ்சு பொரிக்கும் குழிகள்: இனப்பெருக்க குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன.

இ) நாற்றங்கால் குளங்கள்: 2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு இளம் மீன் குஞ்சுகள் 60 நாட்கள் வரை 2 – 2.5 செ.மீ. அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.

ஈ) வளர்க்கும் குளங்கள்: இளம் மீன்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மூன்றுமாதம் வரை 10 முதல் 15 செ.மீ. நீளமுடைய மீனாக வளரும் வரை இங்கு வளர்க்கப்படுகின்றன.

உ) இருப்புக்குளங்கள்: விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

5. பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
விடை:
கால்நடை இனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்

1. பால் உற்பத்தி இனங்கள்
2. இழுவை இனங்கள்
3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

1. பால் உற்பத்தி இனங்கள் :

  • பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.
  • “பசுக்கள்” அதிகளவு பால் தருபவை உள்நாட்டு இனங்கள் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • உள்நாட்டு இனங்கள் எ.கா. சாகிவால், சிவப்பு சிந்தி மற்றும் கிர். இவ்வகை இனங்கள் வலுவான கால்கள்
    நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது மற்றும் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
  • “அயல்நாட்டு இனங்கள்” ஜெர்ஸி ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை.

2. இழுவை இனங்கள் :
இவ்வகை இன மாடுகள் உழுதல், பாசனம், வண்டியிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய உதவுகிறது.
எ.கா. காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி
இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் பசுக்கள் குறைந்த அளவு பாலினைக் கொடுக்கிறது.

3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

  • இவ்வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவும் பயன்படுகின்றன.
  • இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
  • எ.கா. அரியானா மாடுகள், ஓங்கோல் மாடுகள்
  • இந்தியாவில் எருமை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பசுக்களைவிட எருமைகளே அதிகளவு பாலினைக் கொடுக்கின்றன. எ.கா. முரா எருமை, மெசானா மற்றும் சுர்தி எருமை

VIII. சிந்திக்க:

1. உயிரி உரமிடல் விவசாயத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது நிரூபி.
விடை:

  1. உயிர் உரமானது தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும்.
  2. இலைகள் தாவர விலங்கு கழிவுகள் மற்றும் நுண்ணுயிர்களால் உருவாகின்றன.

2. ஒவ்வொரு தேன் கூடும் அறுங்கோண அறைகளைக் கொண்டிருக்கும். அவை எதனால் ஆக்கப்பட்டிருக்கும்? அதன் சிறப்பம்சம் என்ன?
விடை:

  1. தேன் கூடுகள் வேலைக்காரத் தேனீயின் வயிற்றுப்புற சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் உருவாக்கப்படுகிறது.
  2. அறுங்கோண வடிவம் என்பது ஒரு பயனுள்ள அமைப்பு.
  3. இராணித் தேனீயின் முட்டைகள் மகரந்தம் மற்றும் தேனீனை சேமிக்க உதவுகிறது.
  4. இவ்வமைப்பு ஒரு திடமான அமைப்பு
  5. குறைந்த பொருள்களைக் கொண்டு அதிக இடத்தினை இவ்வறுங்கோணம் உருவாக்குகிறது.

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *