Samacheer Kalvi 9th Science Unit 19 Book Back Questions Tamil Medium with Answers:
Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 19 – தாவர உலகம் – தாவர செயலியல் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 19 Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:
9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:
Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Biology questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.
அலகு 19: தாவர உலகம் – தாவர செயலியல் Book Back Answers in Tamil
Science (அறிவியல்)
அலகு 19 – தாவர உலகம் – தாவர செயலியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ________
அ) ஒளி சார்பசைவு
ஆ) புவி சார்பசைவு
இ) தொடு சார்பசைவு
ஈ) வேதி சார்பசைவு
விடை:
இ) தொடு சார்பசைவு
2. ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்
இ) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்
ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
விடை:
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது
3. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது _____ எனப்படும்.
அ) நடுக்கமுறு வளைதல்
ஆ) ஒளிசார்பசைவு
இ) நீர்சார்பசைவு
ஈ) ஒளியுறு வளைதல்
விடை:
இ) நீர்சார்பசைவு
4. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வேதி சார்பசைவு
ஆ) நடுக்கமுறு வளைதல்
இ) ஒளி சார்பசைவு
ஈ) புவிஈர்ப்பு சார்பசைவு
விடை:
இ) ஒளி சார்பசைவு
5. தாவரத்தின் வேர் ____ ஆகும்?
I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) 1 மற்றும் IV
விடை:
ஆ) II மற்றும் III
6. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது _____ எனப்படும்.
அ) வெப்ப சார்பசைவு
ஆ) வெப்பமுறு வளைதல்
இ) வேதி சார்பசைவு
ஈ) நடுக்கமுறு வளைதல்
விடை:
ஆ) வெப்பமுறு வளைதல்
7. இலையில் காணப்படும் பச்சையம் ____ க்கு தேவைப்படும்.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ) சார்பசைவு
ஈ) திசை சாரா தூண்டல் அசைவு
விடை:
அ) ஒளிச்சேர்க்கை
8. நீராவிப் போக்கு ____ ல் நடைபெறும்.
அ) பழம்
ஆ) விதை
இ) மலர்
ஈ) இலைத்துளை
விடை:
ஈ) இலைத்துளை
II. கோடிட்ட இடங்களை நிரப்பு
1. ______ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
விடை:
ஒளிச்சார்பசைவு
2. _____ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
விடை:
வேர்
3. தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி _____ எனப்படும்.
விடை:
பச்சையம்
4. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____ எனப்படும்.
விடை:
ஒளியுறு வளைதல்
5. புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ______ எனப்படும்.
விடை:
புவிசார்பசைவு
6. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன ஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்கு ______ தேவைப்படும்.
விடை:
ஆக்ஸிஜன்
III. பொருத்துக.
A | B |
1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்பது |
A. நேர் ஒளிசார்பசைவு |
2. தண்டு ஒளியை நோக்கி வளர்வது |
B. எதிர் புவிசார்பசைவு |
3. தண்டு மேல் நோக்கி வளர்வது | C. எதிர் ஒளி சார்பசைவு |
4. வேர் சூரியஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது | D. நேர் புவிசார்பசைவு |
விடை: 1 – D; 2 – A; 3 – B; 4 – C
IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
1. வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.
விடை: – தவறு
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிசார்பசைவு எனப்படும்.
2. தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர்புவி சார்பசைவு உடையது.
விடை: – சரி
3. வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.
விடை: – தவறு
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளைகள் திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கும்.
4. ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.
விடை: – தவறு
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் O2, உற்பத்தியாகும்.
5. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை: – சரி
6. தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது நீர் இழப்பு ஏற்படும்.
விடை: – தவறு
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் திறந்திருக்கும்போது நீர் இழப்பு ஏற்படும்.
V. மிகச் சுருக்கமாக விடையளி.
1. திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால் என்ன?
விடை:
அசைவுகள் திசைத் தூண்டுதலின் ஒரு திசையை சார்ந்து அமையாதிருத்தல்.
2. பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
விடை:
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
வேர்
ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
தண்டு
3. ஒளிசார்பசைவு (phototroism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.
விடை:
4. ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறது
அ) X மற்றும் Y என்றால் என்ன?
ஆ) பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்டமுறையை கொண்டவை? ஏன்?
விடை:
அ) X-சூரிய ஒளி Y-வேதியாற்றல்
ஆ) தனக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்கிறது.
5. நீராவிப் போக்கு – வரையறு.
விடை:
நீர் தாவரத்தில் மேல் பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் வழியாக நீராவியாக வெளியேற்றப்படும் நிகழ்ச்சி.
6. இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல் எது?
விடை:
காப்பு செல்கள் இலைத்துளை மூடித் திறப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
Other Important links for 9th Science Book Back Answers in Tamil:
Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil