07 May 2022

Samacheer Kalvi 9th Science Unit 18 in Tamil

Samacheer Kalvi 9th Science Unit 18 Book Back Questions Tamil Medium with Answers:

Samacheer Kalvi 9th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 9 Science New Syllabus 2022 Unit 18 – திசுக்களின் அமைப்பு Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 9th Std Science Book Portion consists of 25 Units. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 9th Science Unit 18 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Science, and Social Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Tamil Book Back Answers and 9th Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




9th Samacheer Kalvi Science Book Back Answers in Tamil Medium PDF:

Tamil Medium 9th Samacheer Kalvi Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check 9th Science Biology questions for Tamil Medium and English Medium. Take the printout and use it for exam purposes.

அலகு 18: திசுக்களின் அமைப்பு Book Back Answers in Tamil

Science (அறிவியல்)

அலகு 18 – திசுக்களின் அமைப்பு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. உயிருள்ள மெல்லிய சுவருடைய பல கோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு.
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) ஸ்கிளிரன்கைமா
ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை
விடை:
அ) பாரன்கைமா

2. நார்கள் கொண்டுள்ளது
அ) பாரன்கைமா
ஆ) ஸ்கிளிரன்கைமா
இ) கோலன்கைமா
ஈ) ஏதும் இல்லை
விடை:
ஆ) ஸ்கிளிரன்கைமா

3. துணை செல்கள் ____ வுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
அ) சல்லடைக் கூறுகள்
ஆ) பாத்திரக் கூறுகள்
இ) ட்ரைக்கோம்கள்
ஈ) துணை செல்கள்
விடை:
அ) சல்லடைக் கூறுகள்

4. கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) சைலம்
ஈ) ஸ்கீளிரன்கைமா
விடை:
இ) சைலம்

5. ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
அ) தொற்று தாவரம்
ஆ) நீர்வாழ் தாவரம்
இ) சதுப்பு நில தாவரம்
ஈ) வறண்ட தாவரம்
விடை:
ஆ) நீர்வாழ் தாவரம்

6. மிருதுவான தசை காணப்படுவது
அ) கர்ப்பப்பை
ஆ) தமனி
இ) சிரை
ஈ) அவை அனைத்திலும்
விடை:
ஈ) அவை அனைத்திலும்

II. பொருத்துக.

  1. ஸ்கிளிரைடுகள்        – (i) குளோரன்கைமா
  2. பசுங்கணிகம்              – (ii) ஸ்கிளிரைன்கைமா
  3. எளியதிசு                         – (iii) கோளன்கைமா
  4. துணைசெல்                  – (iv) சைலம்
  5. டிரக்கீடுகள்                   – (v) ஃபுளோயம்

விடை: 1 – ii; 2 – i; 3 – iii; 4 – v; 5 – iv




III. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. உள்ளுறுப்புகளுக்கு _____ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
விடை:
கோலன்கைமா

2. பாரன்கைமா, குளோரன்கைமா கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா எளிய ஆகியவை _____ வகை திசுக்களாகும்.
விடை:
எளிய

3. _____ மற்றும் ____ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.
விடை:
சைலம், புளோயம்

4. குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் _____ பகுதியில் உள்ளன.
விடை:
சுவாச குழாய்

5. சிறுகுடலின் புறணி ____ ஆல் ஆனது.
விடை:
தூண் எபிதீலியம்

6. மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும் உண்டு ஒத்திசைவான குரோமோசோம் போது, ____ குரோமோசோம்கள்
விடை:
ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.
விடை: – சரி

2. எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.
விடை: – தவறு
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ஆதார இணைப்புத் திசுவின் இரு வகையாகும்.

3. பாரன்கைமா ஒரு எளிய திசு
விடை: – சரி

4. ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.
விடை: – தவறு
ஃபுளோயம் சல்லடைக் குழாயினால் ஆனது.

5. கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.
விடை: – தவறு
சைலத்தில் நாளங்கள் காணப்படுகின்றன

V. சுருக்கமாக விடையளி

1. இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத் திசுக்களிலிருந்து வேறுபடுகின்றன.
விடை:
விளக்கம் :

  • முதல் நிலை ஆக்குத் திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கிடையே இவை காணப்படுகின்றன.
  • இடையில் காணப்படுவதால் இடை ஆக்குத்திசு எனப்படுகிறது. இருப்பிடம் :
    1.  இலையடி – (எ.கா) பைனஸ் தாவரம்
    2.  கணுவிடைப் பகுதியின் அடி (எ.கா) புற்கள்

2. கூட்டுத்திசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.
விடை:
வரையறை :
ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை செல்கள் – ஒன்றாக தொகுப்பாக ஒரு பணியைச் செய்கின்றன.
வகைகள் : இருவகைப்படும்
1) சைலம் – (நீரைக் கடத்தும் திசு)
2) புளோயம் – (உணவைக் கடத்தும் திசு)

1) சைலம் கூறுகள் : –

  1. சைலம் டிரக்கீடுகள்
  2. சைலம் நார்கள்
  3. சைலம் குழாய்கள்
  4. சைலம் பாரன்கைமா

2) புளோயம் கூறுகள் :

  1. சல்லடைக்குழாய்
  2. துணைசெல்கள்
  3. புளோயம் பாரன்கைமா
  4. புளோயம் நார்கள்

3. அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.
விடை:
1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை),
2. மென்தசை (வரியற்ற தசை)

1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை)

  • நம் உடலில் அதிகம் காணப்படுகிறது.
  • இவை எலும்புடன் ஒட்டி உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளதால் எலும்புச் சட்டகத்தசை எனப்படுகிறது.
  • இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால். இவை இயக்க (தன்னிச்சை) தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இவைகளில் இருண்ட மற்றும் இருளற்ற பட்டைகள் மாறி மாறி காணப்படுவதால் இவை வரித்தசை-கள் எனப்படுகிறது.
    எ.கா. கை, கால்களில் காணப்படும் மூட்டுத் தசைகள்

2. மென்தசை (வரியற்ற தசை)

  • இத்தசைகள் கதிர் வடிவில் உள்ளது. மையப்பகுதி அகன்றும் முனைப் பகுதி சுருங்கியும் உள்ளது.
  • இத்தசைகளில் கோடுகள் மற்றும் வரிகள் கிடையாது.
  • இவை நம் இச்சைகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. எனவே இவை இயங்கு தசைகள் என அழைக்கப்படுகிறது.
    எ.கா. இரத்த நாளம், இரப்பை, சுரப்பிகள், சிறுநீர்ப்பை

4. எலும்பு இணைப்புத்திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செயல்பட உதவுகின்றன?
விடை:
எலும்புத் திசு :
இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.

செயல்பாடுகள் :

  • உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது.
  • மென்மையான திசுக்களுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது.

5. பாலினப் பெருக்கத்தின் போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
விடை:

  • பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இருமய நிலை டிப்ளாய்டு) செல்கள் காணப்படுகிறது.
  • கேமீட்டுகள் உருவாக்கம் மைட்டாசிஸ் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை இரட்டிப்படையும் – அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது.

குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம் :

  • குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குரோமோசோம் எண் சரி பாதியாக குறைக்கப்படுகிறது. (n)
  • கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து டிப்ளாய்டு (2n) (இருமைய) நிலையைப் பெறுகிறது.
  • இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

6. மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதியில் அமைகின்றன? எப்படி?
விடை:

  • மெட்டா நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையத்தில் உள்ளது.
  • குரோமோசோமில் உள்ள சென்டிரோமியர்கள் ஸ்பிண்டில் இழைகளால் இணைக்கப்பட்டிருப்பதால், குரோமோசோம் செல்லின் மையத்தில் உள்ளது.

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – 9th Science Book Back Answers in Tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *