8th Tamil unit 2.2 – கோணக்காத்துப் பாட்டு Book Back Questions with Answers:
Samacheer Kalvi 8th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 8th New Tamil Book Back Answers Unit 2.2 – கோணக்காத்துப் பாட்டு Tamil Book Back Solutions/Answers are available for English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Tamil Book Portion consists of 09 Units. Check Unit-wise and Full Class 8th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Tamil Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Books Back One and Two Mark Questions and Answers available in PDF. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Tamil guide Book Back Answers PDF. See below for the New 8th Tamil Book Back Questions with Answer PDF:
8th Samacheer Kalvi Book – unit 2.2 கோணக்காத்துப் பாட்டு Tamil Book Back Answers/Solution PDF:
Samacheer Kalvi 8th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
8th Tamil Samacheer Kalvi Book Back Answers
Chapter 2.2 – கோணக்காத்துப் பாட்டு
1. மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
Answer:
நில நடுக்கங்கள் :
நில நடுக்கங்கள் ஏற்படும் பொழுது மக்களையோ அல்லது விலங்குகளையோ அது பாதிப்பதில்லை. நில நடுக்கத்தின் காரணமாக, இரண்டாம் பட்ச நிகழ்வுகளான கட்டிடங்கள் பாழடைந்து சரிதல், சுனாமி உருவாகுதல், எரிமலை வெடித்தல் போன்ற நிகழ்வுகளின் பின்னணியில் மக்களுக்குப் பேரழிவுகளுடன் பேரிழப்பும் ஏற்படுகிறது.
எரிமலை வெடித்துச் சிதறுதல் :
ஒரு எரிமலை, வெடித்துப் பேரழிவாக சிதறும் போது ‘லார்வா’ தீக்குழம்பு வெளிப்படும். அதில் மிகையான வெப்பத்துடன் கூடிய உள்ளிருக்கும் பாறைகள் இருக்கும். அதனுள் பல்வேறு வேறுபட்ட வடிவங்கள் மென்மைத் துகளாகவும், பிசு பிசுப்பாகவும் இருக்கும். இது எரிமலையில் இருந்து சிதறும் போது எதிரில் காணும் கட்டடங்கள் மற்றும் தாவரங்கள் எல்லாவற்றையும் பொசுக்கி அழித்துவிடும்.
வெள்ளப் பெருக்கு :
நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சேதம் உண்டாக்குகிறது.
சுனாமி :
சுனாமி என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் மிகுதியாகப் பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம், மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூல காரணிகளாகும். இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும்.
சூறாவளி, புயல் :
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சூறாவளியின் போது உருவாகும் மழை மேகங்கள் குறுகிய காலகட்டத்தில் அதிக அளவு மழையையும் பலத்த காற்றையும் கொண்டு வரும். இதனால் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் அதிகமாக ஏற்படும்.
காட்டுத் தீ:
காட்டுத் தீ என்பது, எரியக் கூடிய தாவரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும். இதன் பெரிய அளவு தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம் எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை; சாலைகள், ஆறுகள் போன்ற இடைவெளிகளைக் கடந்து செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறுபடுத்துகின்றன. இதனால் பல உயிர்கள் எரிந்து சாம்பலாகின்றன. கடந்த ஆண்டு குரங்கனி காட்டுத்தீ பாதிப்பு நாம் அறிந்ததே.
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் கரு …………………. தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
ஈ) கயல்
Answer: அ) முகில்
2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் …………….. யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
ஈ) நலத்தை
Answer: ஆ) காலனை
3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
Answer: இ) விழுந்தது + அங்கே
4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்து + இறந்த
Answer: ஈ) செத்து + இறந்த
5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) பருத்தி எல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
Answer: ஆ) பருத்தியெல்லாம்
குறுவினா
1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
Answer:
எமனைப் போல வந்த பெருமழையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததன் காரணமாகும்.
2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
Answer:
தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகப் புயல்காற்றால் ஒடிந்து விழுந்தன.
3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
Answer:
சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.
சிறுவினா
1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
Answer:
வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Answer:
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.
சிந்தனை வினா
1. இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
வெள்ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றோரமோ, நீர்நிலைகள் அருகிலோ வசிப்போர்கள் மேட்டுப் பகுதிக்குச் சென்று தங்குதல் வேண்டும்.
எரிமலை வெடிக்கும் சூழலில், மலைக்கு அருகில் வசிப்போர், பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்குதல் வேண்டும்.
காட்டுத் தீ ஏற்படும் சூழலில், காட்டிற்கு அருகில் வசிப்போர் நகர்ப்புறத்தில் வந்து தங்குதல் வேண்டும்.
சுனாமி ஏற்படும் போது கடற்கரையில் வசிப்போர், கடலை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று தங்குதல் வேண்டும்.
நிலநடுக்கம் ஏற்படும் சூழலில், கட்டடத்தை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் தங்குதல் வேண்டும்.
Other Important links for 8th Tamil Book Back Solutions:
Click here to download the complete Samacheer Kalvi 8th Tamil Book Back Answers – 8th Tamil Book Back Answers