18 May 2022

Samacheer Kalvi 8th Tamil Unit 1.5 Book Back Answers

8th Tamil unit 1.5 – ஏழுத்துகளின் பிறப்பு Book Back Questions with Answers:

Samacheer Kalvi 8th Standard New Tamil Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Tamil uploaded and available below. The Samacheer Kalvi Class 8 New Tamil Book Back Answers Unit 1.5 – ஏழுத்துகளின் பிறப்பு Tamil Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Tamil Book Portion consists of  09 Units. Check Unit-wise and Full Class 8th Tamil Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Tamil Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Tamil guide Book Back Answers PDF. See below for the New 8th Tamil Book Back Questions with Answer PDF:




8th Samacheer Kalvi Book – unit 1.5 ஏழுத்துகளின் பிறப்பு Tamil Book Back Answers/Solution PDF:

Samacheer Kalvi 8th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

8th Tamil Samacheer Kalvi Book Back Answers

Chapter 1.5 – ஏழுத்துகளின் பிறப்பு

கற்பவை கற்றபின்

1. ‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
விடை:
8th tamil book back questions with answer

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ……………….
அ) இ, ஈ
ஆ) உ, ஊ
இ) எ, ஏ
ஈ) அ, ஆ

2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………..
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) தலை
ஈ) மூக்கு

3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ……………
அ) தலை
ஆ) மார்பு
இ) மூக்கு
ஈ) கழுத்து

4. நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள். ………………..
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) ப், ம்

5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து …………
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்

பொருத்துக

1. க், ங் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
2. ச், ஞ் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
3. ட், ண் – நாவின் முதல், அண்ண த்தின் அடி
4. த், ந் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
விடை:
1. க், ங் – நாவின் முதல், அண்ண த்தின் அடி
2. ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
3. ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
4. த்,ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

சிறுவினா

1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
விடை:
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.

2. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
விடை:
மெய் எழுத்துகளின் இடப்பிறப்பு :
(i) வல்லின மெய்கள் க் ச்ட்த்ப்ற் ) – மார்பு
(ii) மெல்லின மெய்கள் (ங் ஞ் ண் ந்ம்ன் ) – மூக்கு
(iii) இடையின மெய்கள் (யார் ல் வ் ழ் ள்) – கழுத்து

3. ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு முயற்சி பற்றி எழுதுக.
விடை:
(i) ழகரம் – மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும்.
(ii) லகரம் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும்.
(iii) ளகரம் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும்.




மொழியை ஆள்வோம்

கேட்க :

1. தமிழ்மொழியை வாழ்த்திப் பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
விடை:
மாணவர்கள் தாங்களாகவே தமிழ்மொழியை வாழ்த்தி பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களை கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

1. தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்
விடை:
அவையோர்க்கு வணக்கம்!
நாம் செந்தமிழில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறோம். இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்த எழுத்துகள் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதனைப் பார்ப்போம்.

மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான். மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை உருவாக்கினான். மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். காலப்போக்கில் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். பிறகு அவை பண்பட்டு பேச்சுமொழி உருவானது.

மனிதன் வருங்காலத் தலைமுறையினருக்குக் கருத்துகளைத் தெரிவிக்க பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். அங்குத் தோன்றியது எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை. பின்பு ‘ஓவிய எழுத்து’ என்றும் ‘ஒலி எழுத்து நிலை’ என்றும் பெயர் பெற்றது.

காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகு எழுத்துகள் நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன. பழைய வரிவடிவங்களான வட்டெழுத்து, தமிழெழுத்துகளைக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணலாம்.

சேர, பாண்டிய மண்டலங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே காணப்படுகின்றன. பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்றழைக்கப்பட்டன.

எழுத்துகள் காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.

ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளுக்கு மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவை நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.

எழுத்துகளை வேறுபடுத்திக்காட்ட எழுத்துகளின் மேலும் எழுத்துகளுக்கு பக்கத்திலும் புள்ளிகளைப் பயன்படுத்தினர். நெடிலைக் குறிக்க துணைக்கால், ஐகார உயிர்மெய்யைக் குறிக்க இணைக்கொம்பு, ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க கொம்புக்கால் ஆகியவை புள்ளிகளுக்குப் பதிலாக தற்காலப் பயன்பாட்டில் உள்ளன.

ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். இதனால் எழுத்துகளை அறிவதில் சிக்கல் இருந்தது. இவ்விடர்பாட்டைக் குறைக்க எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தார். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு, இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

இவரைத்தொடர்ந்து ஈ.வெ.ரா. பெரியார் அவர்களால்ணா , றா, னா ஆகிய எழுத்துகளும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளும் உருவாயின. அச்சுக் கோப்பதில் இருந்த இடர்களைக் களைந்தார்.

காலந்தோறும் ஏற்பட்ட இவ்வாறான வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் உருவாகியுள்ளது.

இன்னும் பல மாற்றங்களைப் பெற்று தமிழ்மொழி. நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும் எனக் கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி!

சொல்லக்கேட்டு எழுதுக

உலக மொழிகளின் எழுத்து வரலாற்றை உற்று நோக்கினால் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அறியலாம். அவை ஒரு வரிவடிவத்தை விட்டு மற்றொரு வரிவடிவத்தை ஏற்றுக் கொள்ளுதல்; இருக்கின்ற வரிவடிவத்தில் திருத்தம் செய்து கொள்ளுதல்; எழுத்து எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுதல் ஆகியனவாகும். வரிவடிவ மாற்றம், வரிவடிவத் திருத்தம், எழுத்துகளின் எண்ணிக்கை மாற்றம் ஆகியவற்றை எழுத்துச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகிறோம்.

அகரவரிசைப்படுத்துக

எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.

1. அழகுணர்ச்சி
2. ஆரம்நீ
3. இரண்டல்ல
4. ஈசன்
5. உரைநடை
6. ஊழி
7. எழுத்து
8. ஏழ்கடல்
9. ஐயம்
10. ஒலிவடிவம்
11. ஓலைச்சுவடிகள்
12. ஔகாரம்

அறிந்து பயன்படுத்துவோம்

மரபுத் தொடர்கள்

தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.

பறவைகளின் ஒலிமரபு
8th tamil book back questions with answer

தொகை மரபு
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 3

வினை மரபு
8th Tamil Book Back Questions with answer

சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கோழி கொக்கரிக்கும். (கூவும்/கொக்கரிக்கும்)
2. பால் பருகு. (குடி/பருகு)
3. சோறு உண். (தின்/உண்)
4. பூ கொய். (கொய்/பறி)
5. ஆ நிரை. (நிரை/மந்தை )

மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்தவுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.




கட்டுரை எழுதுக

1. நான் விரும்பும் கவிஞர் – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை:
முன்னுரை :
நம் தமிழகத்தில் புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்கள் மறைந்தும், நம்முடன் அவர்களின் கவிதைகள் மூலமாக வாழ்கிறார்கள். அவ்வரிசையில் ‘கவிமணி’ என்ற பட்டப் பெயருக்குச் சொந்தக்காரரான தேசிக விநாயகம் பிள்ளை அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இவர் பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், தேசியப் பாடல்கள் எனப் பல வகையான பாடல்களால் அறியப்படுகிறார்.

பிறப்பும் பெற்றோரும் :
தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூரில் 1876ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவதாணுப் பிள்ளை, ஆதிலட்சுமி அம்மாள் ஆவர். இவருடைய துணைவியாரின் பெயர் உமையம்மை.

கல்வி :
கவிமணி எம்.ஏ. படித்துவிட்டு ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்று தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இலக்கியப் பணி :
இவர் இயற்றிய முதல் நூல் அழகம்மை ஆசிரிய விருத்தம். காந்தளூர்ச் சாலை எனும் . வரலாற்று நூலும் இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும். குழந்தைகளுக்கு ஏற்ற தமிழ்ப் பாவியற்றும் திறமிக்கவர். வெண்பா இயற்றுவதில் வல்லவர். இவர் இயற்றிய “மலரும் மாலையும்” என்னும் நூல் எளிய தமிழில் அரிய கருத்துக்களைக் கொண்ட அருமையான கவிதை இலக்கியமாகும்.

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி.”
என்ற இப்பாடலைப் பாடி மகிழாத குழந்தைகள் இருக்கமாட்டார்கள்.

மொழிபெயர்ப்புப் பணி :
ஆங்கில அறிஞர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய ‘ஆசிய ஜோதி’ (Light of Asia) என்ற கு நூலை தேசிக விநாயகம் பிள்ளை இனிய நடையில் தமிழில் எழுதியுள்ளார். பிறமொழித் தாக்கம் சிறிதும் இல்லாமல் அவருடைய சொந்தப் படைப்புப் போலவே புதுமையும் சுவையும் கலந்து விளங்குகின்றன.

பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்று புத்தர் ஓர் ஏழைச் சிறுவனுக்கு எடுத்தியம்பும் திறன் இனிமை பயக்கின்றது.
“ஓடும் உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீ ரில்
தேடிப் பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ அப்பா ?
எவர் உடம்பினிலும் – சிவப்பே
இயற்கைக் குணமப்பா!
பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா.”

பிற பாடல்கள் :
மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் மூலம் நாஞ்சில் நாட்டு மக்கள் சமுதாயத்தை எள்ளி நகையாடுகிறார். இந்நூல் ஒரு நகைச்சுவை இலக்கியம்.

“ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம்
போளிக்காக புத்தகம் பணயம்”
என மருமகள் பள்ளியில் படிக்கும் அழகைச் சுட்டுகிறார்.

முடிவுரை :
“தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம், ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகச் செண்டு” என்று ரசிகமணி டி.கே.சி. அவர்கள் கவிமணியைப் பாராட்டியுள்ளார். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல கவிமணியின் பாடல்களில் இருந்த சில பாடல்களைக் குறிப்பிட்டுள்ளேன். இவற்றால் எனக்கு மிகவும் பிடித்த கவிஞராக கவிமணி விளங்குகிறார்.

மொழியோடு விளையாடு

பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.

கல், பூ, மரம், புல், வாழ்த்து , சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.

8th Tamil Book Back Questions with Answer

ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக

(எ.கா.) அணி – பல அணிகளை அணிந்த வீரர்கள், அணி அணியாய்ச் சென்றனர்.

1. படி – கண்ணன் மாடிப்படியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

2. திங்கள் – சித்திரைத் திங்களில் முழுதிங்கள் தோன்றும் நாள் திங்கட்கிழமை மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது.

3. ஆறு – ஆறுபேர் கொண்ட குழு ஏரி, ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளைப் பற்றி ஆய்வு செய்து.

சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக

1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.
விடை:
வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்.

2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
விடை:
உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.

3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
விடை:
பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
விடை:
உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.

5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
விடை:
அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. எழுத்துகளைச் சரியான வரிவடிவத்தில் எழுதுவேன்.
2. அறிவிப்புப் பலகைகளில் உள்ள பிழைகளை உரியவரிடம் கூறித் திருத்தச் செய்வேன்.

கலைச்சொல் அறிவோம்

1. ஒலிப்பிறப்பியல் – Articulatory Phonetics
2. மெய்யொலி – Consonant
3. மூக்கொலி – Nasal consonant sound
4. கல்வெட்டு – Epigraph
5. உயிரொலி – Vowel
6. அகராதியியல் – Lexicography
7. ஒலியன் – Phoneme
8. சித்திர எழுத்து – Pictograph

Other Important links for 8th Tamil Book Back Solutions:

Click here to download the complete Samacheer Kalvi 8th Tamil Book Back Answers – 8th Tamil Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *