8th Social Science Geography Unit 4 Book Back Questions Tamil Medium with Answers:
Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 8 Social New Syllabus 2022 Geography Unit 4 – இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Social Science History Book Portion consists of 08 Units, Geography Book Portions Consists of 08 Units, Civics Book Portions Consists of 07 Units, Economics Units Consists of 02 Units. Check Unit-wise and Full Class 8th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Geography Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 8th Social Science Book Back Questions with Answer PDF:
8th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:
Tamil Medium 8th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.
அலகு 04: இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Book Back Answers in Tamil
Geography (புவியியல்) – அலகு 04
இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. மக்கள் __________ லிருந்து ____________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
இ) மலையிலிருந்து சமவெளிக்கு
ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடை:
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ________ எனப்படுகிறது.
அ) குடிபுகுபவர்
ஆ) அகதி
இ) குடியேறுபவர்
ஈ) புகலிடம் தேடுபவர்
விடை:
இ) குடியேறுபவர்
3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது. ___________
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடை:
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
4. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ___________ ஐ சார்ந்தது.
அ) மக்களியல்
ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்
இ) அரசியல்
ஈ) பொருளாதாரம்
விடை:
இ) அரசியல்
5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ____________
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி
ஆ) கால்நடை வளர்ப்பு
இ) மீன் பிடித்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை:
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. நகரமயமாதல் …………………… எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன
விடை:
மூன்று
2. …………………… என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்
விடை:
வேலையின்மை .
3. இந்தியாவின் …………… மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
விடை:
புதுதில்லி
4. ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ………….. இடம்பெயர்வு எனப்படும்.
விடை:
தன்னார்வ
5. நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ……………….. வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
விடை:
தொழில்புரட்சி
III. பொருத்துக
1. குடியேற்றம் | குடிபுகுபவர் |
2. குடியிறக்கம் | வெளியேறுதல் |
3. இழுக்காரணி | வேலை வாய்ப்பின்மை |
4. உந்து காரணி | சமூக மற்றும் பண்பாடடு இடம் பெயர்வு |
5. திருமணம் | வேலை வாய்ப்பு |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஈ |
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.
1. குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
விடை:
சரி
2. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.
விடை:
சரி
3. நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடை:
தவறு
4. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
விடை:
சரி
5. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
சரி
V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.
கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் : கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
VI. சுருக்கமாக விடையளி
1. ‘இடம் பெயர்தல்’ – வரையறு.
விடை:
“ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல்” எனப்படும்.
ஐ.நா. அமைப்பின் வரையறை : “இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒரு வகையான மக்கள்தொகை நகர்வாகும். இது பொதுவாக இருப்பிடத்தில் ஒரு வகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது”.
2. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:
கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள்:
- வேலைவாய்ப்பு
- கல்வி
- பொழுதுபோக்கு வசதிகள்
3. சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :
- எரிமலை வெடிப்பு
- நில அதிர்வு
- வெள்ளம்
- வறட்சி
4. இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
விடை:
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகள்:
- பொருளாதாரக் காரணிகள்
- வேலைவாய்ப்பிற்கேற்ற சூழல்கள்
- மக்கள்தொகை காரணிகள்
- குறைவான மக்கள்தொகை
5. நகரமயமாக்கம் என்றால் என்ன?
விடை:
நகரமயமாதல்:
“நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் என்கிறோம்.”
6. உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.
விடை:
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்கள்:
- டோக்கியோ (ஜப்பான்) – 37 மில்லியன்
- புதுதில்லி (இந்தியா) – 29 மில்லியன்
- சாங்காய் (சீனா) – 26 மில்லியன்
- மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) – 22 மில்லியன்
- சா பாலோ (பிரேசில்) – 22 மில்லியன்
VII. விரிவான விடையளி
1. இடம் பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக.
விடை:
I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள் :
உள்நாட்டு இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடம்பெயர்வு உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படும்.
- ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
- நகர்ப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
- ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
- நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
- சர்வதேச இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து நடக்கும் இடம்பெயர்தல் சர்வதேச இடம் பெயர்தல் என அழைக்கப்படும்.
II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல் :
- தன்னார்வ இடம்பெயர்வு (தனிநபரின் விருப்பம், முயற்சி மற்றும் முன்னெடுத்தல்)
- தன்னர்வமில்லா / கட்டாய இடம்பெயர்வு (இடம் பெயர்பவரின் விருப்பத்திற்கு மாறாக)
III. இடம்பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல் :
- குறுகிய கால இடம்பெயர்வு (இடம்பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில நாட்கள் முதல் சில மாதங்கள் மட்டுமே தங்குவர்)
- நீண்டகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில வருடங்களாவது தங்குவர்)
- பருவகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குறிப்பிட்ட பருவகாலத்தின் போது குடிபெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி விடுவர்) – கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்கு குடியேறுதல், வேளாண் தொழிலாளர்கள் விதைக்கும் பருவங்களில்
இடம்பெயர்தல் மற்றும் ‘மந்தை இடமாற்றம்’ (Transhumance) ஆகியவை பருவகால இடம்பெயர்வுகளாகும்.
2. இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.
விடை:
- சூழியல் (அல்லது) இயற்கை காரணங்கள் :
- சூழியல் இடம்பெயர்வுக்கு எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை முக்கிய காரணிகளாகும்.
- இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. (நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள், மாசற்ற நிலைகள் இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகள்)
- பொருளாதார காரணங்கள் :
- வளமான வேளாண் நிலம், வேலைவாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன.
- பெருந்திரள் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.
- சமூக – பண்பாட்டுக் காரணங்கள் :
- பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு, புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் ஆகியவை சமூக பண்பாட்டுப் பழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவை.
- மக்கள்தொகை சார்ந்த காரணங்கள் :
- மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம்பெயர்வுக்கான முக்கிய காரணங்களாகும்.
- பிற பிரிவினரை விட இளையோர் இடம்பெயர்வு அதிகம். திருமணத்திற்கு பின் பெண்கள் புலம் பெயர்கிறார்கள். அதிக மக்கள் தொகை ஓர் உந்து காரணி. குறைவான மக்கள்தொகை ஓர் இழுகாரணி.
- அரசியல் காரணங்கள் :
- காலங்காலமாக காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை இடம்பெயர்தலில் முக்கிய பங்குவகிக்கின்றன. பழங்காலத்திலிருந்தேபோர்கள் இடம்பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணமாகும்.
3. நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.
விடை:
குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள் :
நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பால் குடியிருப்பு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. தரமற்ற குடியிருப்புகள் உருவாகின்றன. விரைவான நகரமயமாக்கலால் குடிசைப்பகுதிகள் உருவாகின்றன.
மக்கள் நெரிசல் :
அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழலுக்கு வழிவகுக்கிறது. மக்கள் நெரிசல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.
தண்ணீ ர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம் :
எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதும் நீர் விநியோகம் இல்லை. வடிகாலமைப்பு மோசமாக உள்ளது. குப்பைகளை அகற்றுதல் கடினமான பணியாக உள்ளது.
போக்குவரத்து மற்றும் நெரிசல் :
இருசக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. போதுமான திட்டங்களும், கட்டமைப்புகளும் இல்லை .
மாசடைதல் :
பல நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.
Other Important Links for 8th Social Science Book Back Answers Tamil Medium:
Click Here to download Samacheer Kalvi’s 8th Social Science Book Back Answers Tamil – 8th Social Science Book Back Answers Tamil Medium