06 Jun 2022

Samacheer Kalvi 8th Science Unit 8 Answers in Tamil

Samacheer Kalvi 8th Science Unit 8 Book Back Answers in Tamil:

Samacheer Kalvi 8th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 8 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள் அலகு 8 – அண்டம் மற்றும் விண்வெளி Answers/Solutions are provided on this page. 8th Std Science Book consists of 23 units, All Science Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  Samacheer Kalvi 8th Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Class 8th Standard Science Book Back Answers PDF. Check the Science book back Answers below. See below for the 8th New Science Syllabus Book Back guide/Answers free PDF download:




Samacheer Kalvi 8th Science Book Back Solutions in Tamil PDF:

8th Science Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 8th Science Unit 8 Answers in Tamil are given below.

அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள்

அலகு 8 – அண்டம் மற்றும் விண்வெளி

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?
அ) சூரியன்
ஆ) சந்திரன்
இ) விண்மீன்கள்
ஈ) இவை அனைத்தும்

2. மங்கள்யான் …………………..க்கு அனுப்பப்பட்டது.
அ) சந்திரன்
ஆ) செவ்வாய்
இ) வெள்ளி
ஈ) புதன்

3. சந்திரயான் – I விண்ணில் செலுத்தப்பட்ட நாள்
அ) 2008 அக்டோபர் 22
ஆ) 2008 நவம்பர் 8
இ) 2019 ஜூலை 22
ஈ) 2019 அக்டோபர் 22

4. சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது ………………..
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) பூமி
ஈ) செவ்வாய்

5. ராக்கெட்டில் பயன்படும் தத்துவம் ……………………….
அ) நியூட்டனின் முதல் விதி
ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி
இ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஈ) இவை அனைத்தும்

6. கிரியோஜெனிக் எரிபொருள் ………. எவ்வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படும்?
அ) அறை
ஆ) குறைந்த
இ) மிகக்குறைந்த
ஈ) மிக அதிக

7. நாசாவின் ……….. திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
அ) அப்போலோ – 5
ஆ) அப்போலோ – 8
இ) அப்போலோ – 10
ஈ) அப்போலோ – 11

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. விண்மீன்களைப் பற்றியும், கோள்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு …….
விடை: வானியல்

2. சூரியன் ……….. விண்மீ ன் திரளைச் சார்ந்தது.
விடை: பால்வெளி

3. செவ்வாய்க்கோள் …….. நாட்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.
விடை: 687

4. பிற கோள்களுக்கு விண்கலனை அனுப்பிய முதல் இந்திய விண்வெளித் திட்டம்
விடை: மங்கள்யான்

5. நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் ………….. ஆவார்.
விடை: நீல் ஆம்ஸ்ட்ராங்

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

1. சூரியன் மற்றும் இதர வான்பொருள்கள் சேர்ந்து சூரியக் குடும்பத்தை உருவாக்குகின்றன.
விடை : சரி

2. சந்திராயன் – I ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
விடை: சரி

3. செவ்வாய்க் கோள் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள் ஆகும்.
விடை: தவறு – செவ்வாய்க் கோள் சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டாவது சிறிய கோள் ஆகும்.

4. PSLV மற்றும் GSLV ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக் கோள்கள் ஆகும்.
விடை: சரி

5. ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்மநிலையில் மட்டுமே காணப்படும்.
விடை: தவறு – ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்ம, நீர்ம மற்றும் திரவநிலை வாயுக்களாக காணப்படுகின்றன.




IV. பொருத்துக

samacheer kalvi 8th science book back questions with answer in tamil

V. சுருக்கமாக விடையளி

1. வான்பொருள்கள் என்றால் என்ன?
விடை:
வானத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள், சந்திரன் மற்றும் விண்கற்கள், வால்மீன்கள்
போன்ற பிற பொருட்கள் ஆகியவை வான்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

2. விண்மீ ன் திரள் – வரையறு.
விடை:
தங்களுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசையினால் பிணைக்கப்பட்ட லட்சக்கணக்கான விண்மீன்களைக் கொண்ட தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும்.

3. சந்திரயான் – 1 திட்டத்தின் நோக்கங்கள் யாவை?
விடை:

  • சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறித.
  • சந்திரனில் உள்ள தனிமங்களை கண்டறிதல்.
  • சந்திரனில் ஹீலியம் – 3 இருப்பதை ஆராய்தல்.
  • சந்திரனின் முப்பரிமான வரைபடத்தை உருவாக்குதல்.
  • சூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்தல்.

4. மங்கள்யான் திட்டத்தின் நோக்கங்களை வரிசைப்படுத்துக.
விடை:

  • கோள்களுக்கு இடையேயான விண்வெளித் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
  • செவ்வாயின் மேற்பரப்பை ஆராய்தல்.
  • செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள பகுதிப் பொருள்களை அறிதல்.
  • எதிர்காலத்தில் செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளையும். கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளுதல்.

5. கிரையோஜெனிக் எரிபொருள் என்றால் என்ன?
விடை:

  • இந்த வகை இயக்கு பொருள்களின் எரிபொருள் அல்லது ஆக்ஸிகரணி அல்லது இரண்டும் திரவநிலை வாயுக்களாக இருக்கும்.
  • இவை மிகக்குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
  • இவ்வகை இயக்கு பொருள்களை எரியூட்ட தனியான அமைப்புகள் தேவை இல்லை.
  • இவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கும்போது, அவை ஒன்றோடொன்று வினைபுரிந்து எரியத் தொடங்குகின்றன.

6. நாசாவில் பணியாற்றிய சில இந்தியர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • கல்பனா சாவ்லா
  • சுனிதா வில்லியம்ஸ்

VI. விரிவாக விடையளி

1. சந்திரயான் – 1ன் சாதனைகள் யாவை?
விடை:

  • சந்திரனின் மணற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது.
  • சந்திரன் முற்காலத்தில் உருகிய நிலையில் இருப்பதை உறுதி செய்தது.
  • அமெரிக்காவின் விண்கலங்கள் அப்போலோ – 15 மற்றும் அப்போலோ – 11 ஆகியவை தரையிறங்கிய இடங்களின் படங்களை பதிவு செய்தது.
  • சந்திரனின் கனிம வளம் பற்றிய தகவல்கள் உயர்திறன் கொண்ட நிறமாலைமானி மூலம் பெறப்பட்டன.
  • X-கதிர் படக்கருவியின் மூலம் சந்திரனில் அலுமினியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் இருப்பது கண்டறியப்பட்டது.
  • சந்திராயன் – I புகைப்படக் கருவியின் மூலம் 75 நாட்களில் எடுக்கப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டன.
  • நிலவில் உள்ள மேடுகள் மற்றும் பள்ளங்களைக் கொண்ட படங்களிலிருந்து சந்திரனின் மேற்பரப்பு கிண்ணக்குழிகளைக் கொண்டது என கண்டறியப்பட்டது.
  • சந்திரயான் – I பூமியின் முழு வடிவத்தையும் முதன் முதலாக பதிவு செய்து அனுப்பியது.
  • சந்திரயான் – I நிலவின் பரப்பில் மனிதர்களுக்கு உறைவிடமாகப் பயன்படும் பல குகைகளை கண்டறிந்தது.

2. ராக்கெட்டின் பகுதிகளை விளக்குக.
விடை:
I- கட்டமைப்பு அமைப்பு :

  • இவை ராக்கெட்டை உள்ளடக்கிய சட்டம் ஆகும்.
  • இவை மிகவும் வலிமையான, ஆனால் எடை குறைந்த டைட்டானியம் அல்லது அலுமினியம் போன்ற பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.
  • ராக்கெட் பறக்கும் போது அதற்கு நிலைப்புத் தன்மை ஏற்படுத்துவதற்காக, சில ராக்கெட் சட்டத்தின் அடிப்பகுதியில் துடுப்புகள் இணைக்கப்படுகின்றன.

II – பணிச்சுமை அமைப்பு:

  • சுற்று வட்டப்பாதையில் விடப்படுவதற்காக ராக்கெட்டினால் சுமந்து செல்லப்படும் செயற்கைக் கோள்கள் பணிச்சுமை ஆகும். இவை திட்டப்பணிகளை சார்ந்தது.
  • இவை தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, உளவு பார்த்தல், கோள்களை ஆராய்தல் மற்றும் கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன.

III – வழிகாட்டு அமைப்பு :

  • இவ்வமைப்பானது, ராக்கெட் செல்ல வேண்டிய பாதை குறித்து வழிகாட்டுகிறது.
  • இவை உணர்விகள், கணினிகள், ரேடார் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.

IV – உந்துவிசை அமைப்பு :

  • இது எரிபொருள் தொட்டிகள், இறைப்பான்கள் மற்றும் எரியூட்டும் அறை ஆகியவற்றை கொண்டுள்ளது.
  • i) திரவ உந்துவிசை அமைப்பு மற்றும் ii) திட உந்து விசை அமைப்பு என இரண்டு முக்கியமான உந்துவிசை அமைப்புகள் உள்ளன.

3. நாசாவின் அப்போலோ திட்டங்கள் குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • அப்போலோ விண்வெளி திட்டங்கள் நாசாவின் மிகப்புகழ்பெற்ற திட்டங்கள் ஆகும்.
  • இவற்றின் மூலம், அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்கினர்.
  • இது ஒட்டுமொத்தமாக 17 திட்டங்களைக் கொண்டது. இதில் அப்போலோ – 8 மற்றும் அப்போலோ – 11 ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
  • அப்போலா – 8 என்பது முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும். இதில் விண்கலம் நிலவைச் சுற்றிய பின் மீண்டும் பூமிக்கு வந்தடைந்தது.
  • அப்போலா – 11 திட்டமானது முதன்முதலில் மனிதனை நிலவில் தரையிரங்க செய்த திட்டம் ஆகும். இவ்விண்கலமானது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20ம் நாள் நிலவில் தரையிறங்கியது. அப்போலா – 11ல் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலில் நிலவின் மேற்பரப்பில் காலடி வைத்தார்.

VII. உயர்சிந்தனை வினாக்கள்

1. நாம் எப்போதும் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏன்?
விடை:

  • நிலவானது பூமியை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருகிறது.
  • இதனால் ஏற்படும் ஒத்திசைவின் காரணமாகவே நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டும் காண முடிகிறது.

Other Important links for 8th Science Book Back Answers in Tamil:

Click here to download the complete 8th Science Book Back Solutions – Samacheer Kalvi 8th Science Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *