Samacheer Kalvi 8th Science Unit 15 Book Back Answers in Tamil:
Samacheer Kalvi 8th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 8 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா– விடைகள் அலகு 15 – அன்றாட வாழ்வில் வேதியியல் Answers/Solutions are provided on this page. 8th Std Science Book consists of 23 units, All Science Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and Samacheer Kalvi 8th Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Class 8th Standard Science Book Back Answers PDF. Check the Science book back Answers below. See below for the 8th New Science Syllabus Book Back guide/Answers free PDF download:
Samacheer Kalvi 8th Science Book Back Solutions in Tamil PDF:
8th Science Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 8th Science Unit 15 Answers in Tamil are given below.
அறிவியல் பாடப்புத்தக வினா–விடைகள்
அலகு 15 – அன்றாட வாழ்வில் வேதியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் …………………………..
அ) மெத்தனால்
ஆ) எத்தனால்
இ) கற்பூரம்
ஈ) மெர்காப்டன்
2. தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?
அ) சதுப்பு நில வாயு
ஆ) நீர்வாயு
இ) உற்பத்தி வாயு
ஈ) நிலக்கரி வாயு
3. ஒரு எரிபொருளின் கலோரி மதிப்பின் அலகு …………………………..
அ) கிலோ ஜுல்/மோல்
ஆ) கிலோ ஜுல்/கிராம்
இ) கிலோ ஜூல்/கிலோ கிராம்
ஈ) ஜுல்/கிலோ கிராம்
4. ………………………. என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.
அ) பீட்
ஆ) லிக்னைட்
இ) பிட்டுமினஸ்
ஈ) ஆந்த்ரசைட்
5. இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் ……………………
அ) மீத்தேன்
ஆ) ஈத்தேன்
இ) புரோப்பேன்
ஈ) பியூட்டேன்
II. கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.
1. உற்பத்தி வாயு என்பது, ………………………. மற்றும் ……………………….. ஆகியவற்றின் கலவையாகும்.
விடை: கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன்
2. ………………………. சதுப்பு நில வாயு எனப்படுகிறது.
விடை: மீத்தேன்
3. பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது …………………………
விடை: பாறை எண்ணெய்
4. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது …………………….. எனப்படும்.
விடை: சிதைத்து வடித்தல்
5. படிம எரிபொருளுக்கு ஒரு உதாரணம் ………………………..
விடை: நிலக்கரி
III. பொருத்துக
IV. சுருக்கமாக விடையளி
1. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன?
விடை:
ஹைட்ரோ கார்பன்களின் கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேதிப்பிணைப்புகளை உருவாக்கி பெரிய எண்ணிக்கையிலான சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்குவது சங்கிலி தொடராக்கம் எனப்படும்.
2. இயற்கை வாயுவின் நிறைகள் யாவை?
விடை:
இயற்கை வாயு,
- எளிதில் எரியக்கூடியது.
- பெருமளவில் வெப்பத்தை வெளிவிடக்கூடியது.
- எரியும்போது புகையை வெளிவிடாததால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
- குழாய்கள் மூலம் எளிதில் எடுத்துச்சென்று சேர்க்க முடியும்.
- நேரடியாக எரிபொருளாக வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தமுடியும்.
3. CNG என்பதை விரிவு படுத்தி எழுதுக. அதன் இரு பயன்களை எழுதுக.
விடை:
- CNG -அழுத்தப்பட்ட இயற்கை வாயு.
- எரிபொருள்
- தானியங்கி வாகன எரிபொருள்.
4. தொகுப்பு வாயு என்று அறியப்படும் வாயுவைக் கண்டறிந்து எழுது. அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
- தொகுப்பு வாயு – கார்பன்மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவை.
- மெத்தனால் மற்றும் எளிய ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்ய பயன்படுவதால் இது தொகுப்பு வாயு எனப்படுகிறது.
5. ஏன் ஆந்த்ரசைட் வகை நிலக்கரி மிகவும் உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது? அதற்கான காரணம் தருக.
விடை:
- ஆந்த்ரசைட்டில் கார்பனின் சதவீதம் 86-97% ஆகும்.
- இது பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது.
- ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான தூசியினையும் தருகிறது.
- எனவே ஆந்த்ரசைட் நிலக்கரி உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது.
6. ஆக்டேன் எண் – சீட்டேன் எண் – வேறுப்படுத்துக.
விடை:
ஆக்டேன் எண்
1 இம்மதிப்பு பெட்ரோலுக்கு பயன்படுத்தப்படுகிறது
2. பெட்ரோலிலுள்ள ஆக்டேனின் அளவை குறைக்கிறது.
3. பென்சீன் அல்லது டொலுவீனை சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
4. உயர்ந்த ஆக்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருளின் சீட்டேன் எண் குறைவாக இருக்கும்.
சீட்டேன் எண்
– இம்மதிப்பு டீசலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
– டீசல் எஞ்சினிலுள்ள பற்றவைப்பு எரிபொருளின் நேரத்தைக் குறிக்கிறது.
– அசிட்டோனை சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
– உயர்ந்த சீட்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருளின் ஆக்டேன் எண் குறைவாக இருக்கும்.
7. தமிழ்நாட்டில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்களை எழுதுக.
விடை:
கயத்தாறு, ஆரல்வாய்மொழி, பல்லடம் மற்றும் குடிமங்களம்
8. சூரிய ஆற்றல் எப்பொழுதும் தீராத ஒரு ஆற்றல் மூலமாகும். இக்கூற்றை நியாயப்படுத்துக.
விடை:
- சூரிய ஆற்றல் முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலமாகும்.
- இது இயற்கையில் தீர்ந்து விடாத ஆற்றல் மூலமாகும்.
- இது விலையில்லா மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாகும்.
- இது சுற்றுச்சூழலை பாதிக்காதது.
- படிம எரிபொருட்களை பதிலீடு செய்யக்கூடிய ஆற்றல் வளமாகும்.
- இது பயன்படுத்த எளிதாகவும், ஆற்றல் சார்ந்த இன்றைய பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் உள்ளது.
- சூரிய ஆற்றல் ஒரு பரிசுத்தமான ஆற்றலாகும்.
V. விரிவாக விடையளி
1. நிலக்கரியின் பல்வேறு வகைகளைப் பற்றி விளக்குக.
விடை:
I. லிக்னைட்:
- இது பழுப்பு நிறமுடைய மிகவும் தரம் குறைந்த நிலக்கரியாகும்.
- கார்பனின் சதவீதம் 25 – 35%
- அதிக அளவு நீரைக் கொண்டது.
- மொத்த நிலக்கரி இருப்பில் ஏறக்குறைய பாதியளவினை கொண்டுள்ளது.
- மின்சார உற்பத்தி, தொகுப்பு முறையிலான இயற்கை வாயு, உரப்பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
II. துணை – பிட்டுமினஸ்:
- லிக்னைட் அடர்நிறமாகவும் கடினமாகவும் ஆகும்பொழுது துணை-பிட்டுமினஸ் நிலக்கரி உருவாகிறது.
- இது கருமை நிறமுடைய குன்றிய நிலக்கரி வகை.
- லிக்னைட்டை விட உயர் வெப்ப மதிப்பைக் கொண்டது.
- கார்பனின் சதவீதம் 35 – 44%
- மற்ற நிலக்கரிகளைவிட குறைந்த அளவு சல்பர் உள்ளது.
- தூய்மையாக எரியக்கூடியது.
- முதன்மையாக மின்சார உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுகிறது.
III. பிட்டுமினஸ் நிலக்கரி:
- நிறைய இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் துணை பிட்டுமினஸ் நிலக்கரி பிட்டுமினஸ் வகை நிலக்கரியாக மாற்றம் பெற்றுள்ளது.
- இது அடர்கருமை நிறமும், கடினத் தன்மையும் கொண்டது
- கார்பனின் சதவீதம் 45 – 86%
- அதிக வெப்ப ஆற்றல் மதிப்பை பெற்றுள்ளது.
- மின்சாரம் உற்பத்தி செய்ய, இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு கல்கரி வழங்குகிறது.
இவ்வகை நிலக்கரியிலிருந்து கிடைக்கும் உப விளைபொருட்கள் பெயிண்டுகள், நைலான் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
IV. ஆந்த்ர சைட்:
- இது மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி வகையாகும்.
- மிகுந்த கடினத்தன்மையும், அடர்கருமை நிறத்தையும் கொண்டது.
- மிகவும் இலேசானது.
- உயர்ந்த வெப்ப ஆற்றலை கொண்டது.
- பளபளக்கும் தன்மை கொண்டது.
- கார்பனின் சதவீதம் 86 – 97%
- பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது.
- நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும், குறைவான தூசியினையும் தருகிறது.
2. சிதைத்து வடித்தல் என்றால் என்ன? பெட்ரோலியத்தை பின்னக்காய்ச்சி வடிக்கும் போது கிடைக்கும் பொருட்களைப் பற்றி எழுதுக.
விடை:
- காற்றில்லா சூழலில் நிலக்ரியை வெப்பப்படுத்துவது சிதைத்து வடித்தல் எனப்படும்.
- பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள்.
3. பல்வேறு எரிபொருள் வாயுக்களைப் பற்றி எழுதுக.
விடை:
I. திட எரிபொருட்கள்:
- திடநிலையில் உள்ள மரம் மற்றும் நிலக்கரி போன்றவை திட எரிபொருட்கள் எனப்படும்.
- முதன்முதலில் மனிதனால் பயன்படுத்தப்பட்டது.
- எளிதில் சேமிக்கவும், கொண்டு செல்லவும் முடியும்.
- உற்பத்தி செலவுக் குறைவு.
II. திரவ எரிபொருட்கள்:
- பெரும்பாலான திரவ எரிபொருட்கள் இறந்த தாவர விலங்குகளின் படிமங்களில் இருந்து பெறப்படுகின்றன.
- எரியும் பொழுது அதிக ஆற்றலைத் தருகின்றன.
- சாம்பலை தராமல் எரிகின்றன.
- (எ.கா.) பெட்ரோலிய எண்ணெய், கரித்தார், ஆல்கஹால்.
III. வாயு எரிபொருட்கள்:
- எளிதில் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லமுடியும்.
- சுற்றுச்சுழலை மாசுபடுத்தாது.
- (எ.கா.) நிலக்கரி வாயு, எண்ணெய் வாயு, உற்பத்தி வாயு, ஹைட்ரஜன் வாயு.
Other Important links for 8th Science Book Back Answers in Tamil:
Click here to download the complete 8th Science Book Back Solutions – Samacheer Kalvi 8th Science Book Back Answers