02 Jun 2022

Samacheer kalvi 7th Science Term 3 Unit 4 Answers in Tamil

Samacheer Kalvi 7th Science Term 3 Unit 4 Book Back Questions and Answers:

Samacheer Kalvi 7th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 7th New Syllabus Science Term III book back question & answer solutions guide available below for Tamil Medium. 7ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 3 அலகு 4 – அன்றாட வாழ்வில் வேதியியல் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 7th Science Term 3 Unit 4 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard Science பருவம் 3 அலகு 4 – அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions with Answer PDF:

For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 7th Science Book Back அலகு 4 பருவம் 3 Solutions Guide PDF:

Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அறிவியல் – பருவம் 3

அலகு 4 – அன்றாட வாழ்வில் வேதியியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து. …………………
அ) ஸ்ட்ரெப்டோமைசின்
ஆ) குளோரோம்பெனிகால்
இ) பென்சிலின்
ஈ) சல்பாகுனிடின்

2. ஆஸ்பிரின் ஒரு ………………………
அ) ஆண்டிபயாடிக்
ஆ) ஆண்டிபைரடிக்
இ) மயக்க மருந்து
ஈ) சைக்கீடெலிக்

3. …………………. என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
அ) அமிலநீக்கி
ஆ) ஆண்டிபைரடிக்
இ) வலிநிவாரணி
ஈ) ஆண்டிஹிஸ்டமின்

4. ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் ……………………. என அழைக்கப்படுகிறது.
அ) கொதிநிலை
ஆ) உருகுநிலை
இ) சிக்கலான வெப்பநிலை
ஈ) எரிவெப்பநிலை

5. மெழுகுவத்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது ……………
அ) நீலம்
ஆ) மஞ்சள்
இ) கருப்பு
ஈ) உள் பகுதி

II. வெற்றிடங்களை நிரப்பவும்

1. பென்சிலின் முதன் முதலில் கண்டுபிடித்தவர்………………….
விடை: Dr. அலெக்சாண்டர் பிளெமிங்

2. உலக ORS தினம் ………………..
விடை: 29 ஜூலை

3. எரிதல் என்பது ஒரு வேதிவினை, இதில் பொருள் …………………. உடன் வினைபுரிகிறது.
விடை: ஆக்சிஜன்

4. நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை ………….
விடை: அதிகம்

5. எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை ………………ஆல்கட்டுப்படுத்த முடியாது
விடை: நீர்

III. சரியா அல்லது தவறா? தவறு என்றால் சரியான பதிலைக் கொடுக்கவும் 

1. சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யும்
விடை: தவறு – சரியான விடை : சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாது

2. வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்
விடை: தவறு – சரியான விடை : ஆண்டிபைரடிக்குகள் என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்

3. அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன
சரியான விடை : அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குவதில்லை
விடை: தவறு

4. எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்
விடை: சரி

Question 5. மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்றுமாசுபடுகிறது.
விடை: சரி




IV. பொருத்துக.

1. ஆண்டிபைரடிக் அ. வலியைக் குறைக்கும்
2. வலி நிவாரணி ஆ. உடல் வெப்பநிலையைக் குறைக்கும்
3. ஆன்டாசிட் இ.  தன்னிச்சையான எரிப்பு
4. பாஸ்பரஸ் ஈ. ORS தீர்வு
5. கார்பன் டைஆக்சைடு உ. சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – உ

V. ஒப்புமை

1. சுடரின் உள்மண்ட லம் …………….. சுடரின்
வெளிமண்ட லம் ………………
விடை:
குறைந்த வெப்ப பகுதி, வெப்பமான பகுதி

2. டிஞ்சர் ……………….
ஹிஸ்டமைன் …………..
விடை:
அன்டிசெப்டிக் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து

VI. ஓரிரு சொற்களில்

1. மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ்நோய் …………… (மஞ்சள்காய்ச்சல் / டெங்குகாய்ச்சல்)
விடை: மஞ்சள் காய்ச்சல்

2. ORS – ன் விரிவாக்கம் …………………….
விடை: Oral Re-hydration Solution (வாய்வழி நீரேற்று கரைசல்)

3. கிருமி நாசினியாகவும் ஆண்டிசெப்டிக் ஆகவும் பயன்படக்கூடிய ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிடுக?
விடை: ஃபீனால்

4. டெட்டாலின் முக்கிய கூறுகள் யாவை?
விடை: குளோரோசைலினால் மற்றும் ஆல்பா டெர்பீனியால்

5. எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பின் அலகு என்ன?
விடை: கிலோ ஜூல்/கிலோகிராம்

6. எத்தனை வகையான எரிதல் உள்ளது?
விடை: மூன்று வகையான எரிதல் உள்ளது

  • வேகமாக எரிதல்
  • தன்னிச்சையான எரிதல்
  • மெதுவாக எரிதல்

7. நெருப்பை உற்பத்தி செய்வதற்கான அத்தியாவசிய தேவைகள் யாவை?
விடை: நெருப்பை உற்பத்தி செய்ய தேவையானவை

  • எரிபொருள்
  • காற்று (ஆக்சிஜனை வழங்க)
  • வெப்பம் (வெப்பநிலையை உயர்த்த)
  • எரிதல் வெப்பநிலை




VII. குறுகிய விடையளி

1. மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் ஏன் மருந்துகள் எடுக்கக்கூடாது?
விடை:

  • குறிப்பிட்ட நோய்க்கான மருந்து எது என்பது நமக்குத் தெரியாது.
  • எடுக்க வேண்டிய மருந்தின் அளவு நமக்குத் தெரியாது.
  • குறிப்பிட்ட மருந்து நமக்கு தீங்கு விளைவிக்குமா என்பது தெரியாது
  • எனவே மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் மருந்துகள் எடுக்கக்கூடாது.

2. கிருமிநாசினிகள் ஆண்டி செப்டிக்லிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
விடை:
7th science book back questions with answer in tamil

3. எரிதல் வெப்பநிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை அதன் எரிதல் வெப்பநிலை எனப்படும்.

4. 4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 180000kg என அளவிடப்படுகிறது என்றால், கலோரிஃபிக் மதிப்பு என்ன?
விடை:
7th science book back questions with answer in tamil

VIII. விரிவாக விடையளி

1. ஆண்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி பற்றிச் சுருக்கமாக விளக்குங்கள்?
விடை:
ஆண்டிபயாடிக்குகள் :
சில தாவரங்களும், நுண்ணியிரிகளும் மற்ற உயிரினங்களை அழிக்க உதவும் நச்சுதன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. அவை ஆன்டிபயாடிக்குகள் எனப்படுகின்றன.
(எ.கா) பெனிசிலின், குளோரம்பினிகால், டெட்ராசைக்களின்

வலி நிவாரணிகள் :

  • வலி நிவாரணிகள் என்பன நமது உடலிலிருந்து வெளியாகும் வலி குறைக்கும் வேதிப் பொருளாகும்.
  • அவை வெளியேறி வலி என்ற உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
  • மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத நிலையில் குறிப்பாக இவ்வகை வலி நீக்கிகள் செயல்படுகிறது.
  • அவை இருவகைப்படும் :
    1. போதைத்தன்மையற்ற வலி நீக்கிகள். (எ.கா) ஆஸ்பிரின்
    2. போதைத்தன்மை வாய்ந்த வலி நீக்கிகள். (எ.கா) கோடீன்

2. மெழுகுவத்தி சுடரின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க.
விடை:
7th science book back questions with answer in tamil

IX. படம் சார்ந்த கேள்வி

1. அருளும், ஆகாஷும் ஒரு பரிசோதனையைச் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பீக்கரில் தண்ணீரை சூடாக்க வேண்டும். அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் மஞ்சள் பகுதியில் திரியின் அருகே வைத்திருந்தார். ஆகாஷ் பீக்கரை வெளிப்புறத்தில் உள்ள சுடரில் வைத்திருந்தார். குறுகிய நேரத்தில் யாருடைய நீர் சூடாகும்?
7th science book back questions with answer in tamil
விடை:

  • குறுகிய நேரத்தில் ஆகாஷ் வைத்த நீர் சூடாகும்
  • ஏனெனில் வெளிப்புற நீல நிறச்சுடர் அதிக வெப்பமான பகுதி
  • எனவே வெளிப்புறச் சுடரில் வைக்கப்பட்ட நீர் குறுகிய நேரத்தில் சூடாகும்.

Other Important links for 7th Science Book Back Answers:

For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil

For Tamil Nadu State Board Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *