Samacheer Kalvi 7th Science Term 1 Unit 2 Book Back Questions and Answers:
Samacheer Kalvi 7th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 7th New Syllabus Science Term I book back question & answer solutions guide available below for Tamil Medium. 7ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 2 – விசையும் இயக்கமும் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 7th Science Term 1 Unit 2 Answers in Tamil Medium Questions and Answers can check below.
We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard Science பருவம் 1 அலகு 2 – விசையும் இயக்கமும் Book Back Questions with Answer PDF:
For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil
Samacheer Kalvi 7th Science Book Back அலகு 2 பருவம் 1 Solutions Guide PDF:
Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அறிவியல் – பருவம் 1
அலகு 2 – விசையும் இயக்கமும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
அ) சுழி
ஆ) r
இ) 2r
ஈ) r2
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது
அ) சீரான இயக்கத்தில் உள்ளது.
ஆ) ஓய்வு நிலையில் உள்ளது.
இ) சீரற்ற இயக்கத்தில் உள்ளது.
ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.
3. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது.
விடை:
4. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
அ) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.
ஆ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.
இ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.
ஈ) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.
5. ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
ஆ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.
இ) பொருளின் உயரத்தினை அதிகரித்தல்.
ஈ) பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ___________ எனப்படும்.
விடை: இடப்பெயர்ச்சி
2. திசைவேகம் மாறுபடும் வீதம் ___________ ஆகும்.
விடை: முடுக்கம்
3. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______________ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்.
விடை: நேர் முடுக்கம்
4. வேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு ____________ மதிப்பனைத் தருகிறது.
விடை: முடுக்கம்
5. ஒரு பொருள் நகர்த்தப்படும்போது ______________ சமநிலையில் அதன் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.
விடை: நடுநிலை
III.பொருத்துக
IV. ஒப்புமை தருக
1. திசைவேகம் : மீட்டர்/விநாடி :: முடுக்கம் : ____________
விடை: மீட்டர்/விநாடி
2. அளவுகோலின் நீளம் : மீட்டர் :: வானூர்தியின் வேகம் : ___________
விடை: நாட்
3. இடப்பெயர்ச்சி/காலம் : திசைவேகம் :: தொலைவு/காலம் : ___________
விடை: வேகம்
V. மிகச் சுருக்கமாக விடையளி
1. சஃபைரா மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள். அவளது இயக்கத்தை தொடர்புபடுத்தி எழுதவும்.
விடை:
அவள் சீரான திசைவேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள்.
2. முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது என்று உன் நண்பன் கூறுகின்றான். இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.
விடை:
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு “திசை வேகம் மாறுகிறது.
. “திசைவேகம்” ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகம் மாறுகிறது என்பதனைப் பற்றிய கவலை நமக்கு அளிக்கிறது.
VI. சுருக்கமாக விடையளி
1. பின்வரும் நிகழ்வுகளுக்கு தொலைவு – காலம் வரைபடத்தினை வரையவும்.
அ) மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து
ஆ) சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து
விடை:
அ) மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து ஒன்று சமமான கால இடைவெளியில் சம அளவு தொலைவைக் கடந்துள்ளது என்பதை கீழ்வரும் தொலைவு – காலம் வரைபடம் விளக்குகிறது.
ஆ) சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்தின் மாறாத தொலைவை பொருத்து அதன் நேரமானது அதிகரிக்கும் இதனை பின்வரும் படத்தின் – (தொலைவு – காலம்) மூலம் அறியலாம்.
2. வேகம் மற்றும் திசைவேகம் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டினைக் கூறுக.
விடை:
3. சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது?
விடை:
ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைத்தல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.
4. ஈர்ப்பு மையம் என்றால் என்ன?
விடை:
ஈர்ப்பு மையம்- எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.
VII. விரிவாக விடையளி
1. சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
சமநிலை மூன்று வகைப்படும்
அ) உறுதிச் சமநிலை:
- கூம்பானது மிக அதிக கோணத்திற்குச் சாய்க்கப்பட்டுப், பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.
- கூம்பு சாய்க்கப்படும் போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது.
- ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது.
- எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.
ஆ) உறுதியற்ற சமநிலை:
- கூம்பானது சிறிது சாய்க்கப்பட்டாலும் கவிழ்ந்து விடும்.
- கூம்பினைச் சாய்க்கும் போது ஈர்ப்பு மையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
- ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
இ) நடுநிலை சமநிலை:
- கூம்பானது உருள்கிறது.
- ஆனால் அது கீழே கவிழ்க்கப்படுவதில்லை .
- கூம்பினை நகர்த்தும் போது அதன் மையத்தின் உயரம் மாறுவதில்லை
- கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
2. ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணும் சோதனையை விவரி.
விடை:
- தேவையான பொருள்கள்: ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டை நூல், ஊசல் குண்டு, தாங்கி
- ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையில் மூன்று துளைகளை இடவும்.
- படத்தில் காட்டியவாறு ஒரு துளையினைத் தாங்கியில் பொருத்தி அட்டையினைத் தொங்க விடவும்.
- தாங்கியில் இருந்து அட்டையின் மேற்புறமாக அமையுமாறு குண்டு நூலினை தொங்க விடவும்.
- அட்டையின் மேல் குண்டு நூலின் நிலையினை ஒரு கோடாக வரைந்து கொள்ளவும்.
- மேற்கூறியவாறு மற்ற இருதுளைகளையும் தாங்கியில் இருந்து தொங்கவிட்டுக் கோடுகள் வரைந்து கொள்ளவும்.
- மூன்று கோடுகளும் வெட்டும் புள்ளியின் நிலையினை X எனக் குறித்துக் கொள்ளவும்.
- X. என்ற பள்ளியே ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையின் ஈர்ப்பு மையம் ஆகும்.
- மீட்டர் அளவு கோலின் ஈர்ப்பு மையம்: அளவு கோலானது ஒரு தாங்கியின் மீது அதன் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தம்படும் போது சமநிலையில் நிற்கிறது.
- ஒழுங்கான வடிவமுடைய பொருளான அளவுகோல் போன்ற பொருள்களுக்கு அதன் வடிவியல் மையமே ஈர்ப்பு மையம் ஆகும்.
- ஈர்ப்பு மையம் தவிர வேறு புள்ளியில் தாங்கியின் மீது வைக்கப்படும் போது அளவுகோலானது கவிழ்ந்துவிடுகிறது.
VIII. கணக்கீடுகள்
1. கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்றடைகிறாள். சென்றடைகிற மிதிவண்டியின் வேகம் 2மீ/வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவினைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
மிதிவண்டியின் வேகம் : 2 மீ/வி
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு அடைய
எடுத்துக் கொண்ட நேரம் : 15 நிமிடம்
தீர்வு:
நிமிடம் = 15 × 60M = 900வி
தொலைவு = வேகம் × காலம்
= 2மீ/வி × 900வி = 1800மீ
= 1.8 கிலோ மீட்டர்
கீதாவின் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு
= 1.8 கி. மீட்டர்
2. ஒரு மகிழுந்து ஓய்வு நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர்/விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?
விடை:
கொடுக்கப்பட்டவை :
திசைவேகம் = 20 மீட்டர்/விநாடி
காலம் = 10 விநாடி
தீர்வு :
தொடக்க திசைவேகம் μ = மீ/விநாடி
= முடிவு திசைவேகம் (v) = 20மீ/வி
= எடுத்துக் கொண்ட காலம் =10 விநாடி
= முடுக்கம் (a) = (v – μ)/t
= (20 – 0)/10
= 2மீ/விநாடி2
3. ஒரு பேருந்தின் முடுக்கம் 1மீ/வி2 எனில் அப்பேருந்தானது 50 கிமீ/வி என்ற வேகத்தில் இருந்து 100 கிமீ /வி என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொள்ளும் காலத்தினைக் கணக்கிடுக.
விடை:
a = 1 மீ/வி2
V = 100)
μ = 50
a=v−μt
1=100−50t
t = 50 விநாடி
ஃபேருந்து 50கிமீ/வி என்ற வேகத்தில் இருந்து 100கிமீ/வி என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொண்ட காலம்
t = 50 விநாடி
IX. பின்வரும் அட்டவணையை நிரப்புக
Other Important links for 7th Science Book Back Answers:
For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil
For Tamil Nadu State Board Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF