31 May 2022

Samacheer kalvi 7th Science Term 1 Unit 1 Answers in Tamil

Samacheer Kalvi 7th Science Term 1 Unit 1 Book Back Questions and Answers:

Samacheer Kalvi 7th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 7th New Syllabus Science Term I book back question & answer solutions guide available below for Tamil Medium. 7ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 1 – அளவீட்டியல் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 7th Science Term 1 Unit 1 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard Science பருவம் 1 அலகு 1 – அளவீட்டியல் Book Back Questions with Answer PDF:

For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 7th Science Book Back அலகு 1 பருவம் 1 Solutions Guide PDF:

Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அறிவியல் – பருவம் 1

அலகு 1 – அளவீட்டியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
அ) நிறை
ஆ) நேரம்
இ) பரப்பு
ஈ) நீளம்

2. பின்வருவனவற்றுள் எது சரி?
அ) 1L = 1cc
ஆ) 1L = 10cc
இ) 1L = 100cc
ஈ) 1L = 1000cc

3. அடர்த்தியின் SI அலகு
அ) கிகி/மீ2
ஆ) கிகி/மீ3
இ) கிகி/மீ
ஈ) கி/மீ3

4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
அ) 1:2
ஆ) 2:1
இ) 4:1
ஈ) 1:4

5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
அ) தொலைவு
ஆ) நேரம்
இ) அடர்த்தி
ஈ) நீளம் மற்றும் நேரம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமனை அளக்க___________ விதி பயன்படுகிறது.
விடை: நீர் இடப்பெயர்ச்சி

2. ஒரு கன மீட்டர் என்பது ___________ கன சென்டிமீட்டர்
விடை: 1,000,000 cm3 (or) (100 cm3)

3. பாதரசத்தின் அடர்த்தி ____________
விடை: 13.6 gkm3 (or) 13.600 kg/m3

4. ஒரு வானியல் அலகு என்பது ____________.
விடை: 1.496 × 1011m

5. ஓர் இலையின் பரப்பை ____________ பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை: வரைபடத் தாள்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

1. ஒரு பொருளின் எல்லை அடைத்துக் கொள்ளும் இடமே அப்பொருளின் பரப்பளவு ஆகும்.
விடை: தவறு – காரணம் : ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பளவு எனப்படும்

2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
விடை: சரி

3. நீர் மண்ணெண்ணெயை விட அதிக அடர்த்தி கொண்டது.
விடை: சரி

4. இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
விடை: சரி

5. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்.
விடை: தவறு – காரணம் : ஓரலகு பருமனின் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்வு குறைவுடைய பொருள் எனப்படும்.

IV. பொருத்துக

அ)

7th science book back questions with answer in tamil

விடை:

1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – ஈ

ஆ)

7th science book back questions with answer in tamil
விடை:

1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ

V. பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும்

1. 1L, 100cc, 10 L, 10 cc
விடை:
10cc, 100cc, 11, 10L

2. தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு
விடை:
அலுமினியம், இரும்பு, தாமிரம், தங்கம்.




VI. ஒப்புமையைக் கொண்டு நிரப்புக.

1. பரப்பு: மீ : கன அளவு:
விடை: மீ3

2. திரவம்: லிட்டர்: திடப்பொருள் :
விடை: கிலோகிராம்

3. நீர்:: மண்ணெண்ணெய்:: : அலுமினியம்.
விடை: இரும்பு

VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க

1. கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

2. கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும்.
காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

3. கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.
காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

VIII. மிகச் சுருக்கமாக விடையளி

1. ஒருசில வழி அளவுகளைக் கூறுக.
விடை:

  • பரப்பு
  • கன அளவு (அ) பருமன்
  • வேகம்
  • மின்னூட்டம்
  • அடர்த்தி

2. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.
விடை:
ஒரு ஒளி ஆண்டு = 9.46 × 1015மீ.

3. ஓர் உருளையின் கன அளவைக் காண. உதவும் சூத்திரத்தை எழுதுக.
விடை:
ஓர் உருளையின் கன அளவை கண்டறிய
பயன்படும் சூத்திரம்
= π × r2 × h
(h என்பது உயரம்)
= πr2h

4. பொருள்களின் அடர்த்தியைக் காண்பதற்கான வாய்ப்பாட்டைத் தருக.
விடை:
7th science book back questions with answer in tamil

5. எந்தத் திரவத்தில் இரும்பு மூழ்கும்?
விடை:
நீரில் இரும்பு குண்டு மூழ்கும்.

6. வானியல் பொருள்களின் கொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக.
விடை:

  • வானியல் அலகு
  • ஒளி ஆண்டு

7. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?
விடை:
தங்கத்தின் அடர்த்தி : 19,300கிகி/மீ3.

IX. சுருக்கமாக விடையளி காம்

1. வழி அளவுகள் என்றால் என்ன?
விடை:

  • அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.
  • எ.கா : பரப்பு, கன அளவு
  • வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும்.

2. ஒரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.
விடை:
7th science book back questions with answer in tamil

3. பொருள்களின் அடர்த்தியை வரையறு.
விடை:

  • ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம் ஆகும்.
  • SI அலகு கிகி/மீ3

4. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?
விடை:

  • ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவே ஆகும்.
  • ஒளி ஆண்டு = 9.46 × 1015m.

5. ஒரு வானியல் அலகு – வரையறு.
விடை:

  • ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
  • வானியல் அலகு = 149.6 × 106 கிமீ ‘
    =1.496 × 1011மீ.

X. விரிவாக விடையளி

1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத்தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரிபாப்
விடை:

  • உன் வீட்டின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மரத்திலிருந்து ஓர் இலையை எடுத்துக் கொள்க.
  • அந்த இலையை ஒரு வரைபடத் தாளின் மீது வைத்து அதன் எல்லைக் கோடுகளை ஒரு பென்சில்லைக் கொண்டு வரைந்து கொள்க.
  • இலையை நீக்கினால் அதன் எல்லைக் கோட்டை வரைபடத்தாளின் மீது காணலாம்.

ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருளின் பரப்பு :

  • இப்போது இலையின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கைளை M எனக்
  • பிறகு பாதி அளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை N எனக் கொள்க.
  • அடுத்து பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை A எனக் கொள்க.
  • இறுதியாக பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை Q எனக் கொள்க
  • M = 51செ.மீ
    N = 11 செ.மீ
    P = 8 செ.மீ
    Q =  9 செ.மீ.
  • இலையின் தோரயமான பரப்பு
    = M+(34) N + (12) P+ (14) Q சதுர. செ.மீ.
    = 51 + (0.75) 11 + (0.5) 8 + (0.25) 9
    = 51 + 8.25 + 4 + 2.25
    = 65.5மீ2
    இலையின் பரப்பு = 65.5மீ2

2. ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
விடை:

  • ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும்.
  • நீரின் கன அளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும் அதனை V எனக்குறிக்கவும்.
  • இப்போது ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அதை ஒரு நூலினால் கட்டவும்.
  • நூலைப் பிடித்துக் கொண்டு கல்லை நீரினுள் மூழ்கச் செய்யும். இவ்வாறு மூழ்கச் செய்யும் போது கல் குவளையின் சுவர்களில் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது குவளையில் நீரின் மட்டம் : உயர்ந்து இருக்கும்.

  • நீரின் கன அளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும்.
  • அதனை V2 எனக் குறிக்கவும்.
  • கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கன அளவிற்குச் சமம்.
  •  V1 = 30மீ’, V2 = 40 மீ3
    கல்லின் கனஅளவு = V2 – V1
    = 40 – 30 = 10 மீ3
    7th science book back questions with answer in tamil

Other Important links for 7th Science Book Back Answers:

For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil

For Tamil Nadu State Board Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *