03 Jun 2022

Samacheer Kalvi 7th History Term 1 Unit 3 Answers in Tamil

Samacheer Kalvi 7th History Term 1 Unit 3 Book Back Questions and Answers in Tamil:

Samacheer Kalvi 7th Standard Social Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 7th New Syllabus Social Science Term I book back question & answer solutions guide available below for Tamil Medium. 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 3 – தென் இந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 7th History Term 1 Unit 3 Answers in Tamil Medium can check below.

We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard History பருவம் 1 அலகு 3 – தென் இந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Book Back Questions with Answer PDF:

For all three-term of 7th standard Social Science Book Back Answers Tamil Medium – Samacheer Kalvi 7th Social Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 7th Social Science History Book Back Unit 3 Term 1 Solution Guide PDF in Tamil:

TN Class 7th Social Science History Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

சமூக அறிவியல் –  வரலாறு

பருவம் 1 – அலகு 3

தென் இந்தியப் புதிய அரசுகள்:

பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
அ) விஜயாலயன்
ஆ) முதலாம் ராஜராஜன்
இ) முதலாம் ராஜேந்திரன்
ஈ) அதிராஜேந்திரன்

2. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
அ) கடுங்கோன்
ஆ) வீரபாண்டியன்
இ) கூன்பாண்டியன்
ஈ) வரகுணன்

3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
அ) மண்ட லம்
ந ஆ) நாடு
இ) கூற்றம்
ஈ) ஊர்

4. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) வீர ராஜேந்திரன்
ஆ) ராஜாதிராஜா
இ) ஆதி ராஜேந்திரன்
ஈ) இரண்டாம் ராஜாதிராஜா

5. சோழர்களின் கட்டக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
அ) கண்ணாயிரம்
ஆ) உறையூர்
இ) காஞ்சிபுரம்
ஈ) தஞ்சாவூர்

6. கீழக்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
அ) சோழமண்டலம்
ஆ) பாண்டிய நாடு
இ) கொங்குப்பகுதி
ஈ) மலைநாடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _______________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

2. _______________ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
விடை: முதலாம் ராஜேந்திரன்

3. _____________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
விடை: ஐடில பராந்தக நெடுஞ்சடையன்

4. பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________ என அறியப்பட்டது.
விடை: எழுத்து மண்டபம்

III. பொருத்துக.

7th science book back questions with answer in tamil

IV. சரியா? தவறா?

1. டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.
விடை: சரி

2. ‘கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.
விடை: சரி

3. சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
விடை: தவறு – காவிரியின் கழிமுகப் பகுதி

4. முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
விடை: சரி

5. சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
விடை: சரி




V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க

பொருத்தமான விடையை (✓ டிக் இட்டுக் காட்டவும்.

1. பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்

அ) i), ii) மற்றும் iii)
ஆ) ii), iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) i), iii) மற்றும் iv)
விடை:
இ) i), ii) மற்றும் iv)

2. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.
ii) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
iii) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
iv) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

அ) i) மற்றும் ii)
ஆ) iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

3. கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம் : நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

4. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
1. நாடு
2. மண்ட லம்
3. ஊர்
4. கூற்றம்
விடை:
1. மண்டலம்
2. நாடு
3. கூற்றம்
4. ஊர்

5. கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
1) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
2) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
3) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
4) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன்.
5) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
6) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
விடை:
4, 1, 2, 5, 6, 3

6. கண்டுபிடிக்கவும்.
7th social science book back questions with answer in tamil
விடை:
7th social science book back questions with answer in tamil

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

1. சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
விடை:

  • சந்தனக் கட்டை
  • கருங்காலிக் கட்டை
  • சுவையூட்டும் பொருட்கள்
  • விலையுயர்ந்த ஆபரணக் கற்கள்
  • மிளகு
  • எண்ணெய்
  • நெல்
  • தானியங்கள்
  • உப்பு

2. ‘சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
விடை:
பாண்டிய அரசர்களும், உள்ளூர் தலைவர்களும் பிராமணர்கள் குடியிருப்புகளை உருவாக்கினர். அக்குடியிருப்புகள் சதுர்வேதி மங்கலம்’ என அழைக்கப்பட்டன.

3. ‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
விடை:

  • சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
  • மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
  • இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூலிக்கப்பட்டது.

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

1. சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
விடை:

  • சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்ற சோழர்களின் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு மிகச் சிறந்த அம்சமாகும்.
  • சோழ மன்னர்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பல வாய்க்கால்களை வெட்டினர்.
  • அவர்கள் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய இடங்களில் கோயில்களைக் கட்டினர்.
  • நடனம், இசை, நாடகம், கட்டக்கலை மற்றும் ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
  • சோழப் பேரரசர்கள் கல்விப்பணிக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். பல கல்லூரிகளை நிறுவினர்.

VIII. உயர் சிந்தனை வினா

1. ‘சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ – இக்கூற்றை உறுதி செய்க.
விடை:

  • சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
  • முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார். அங்கு 14 ஆசிரியர்கள் மற்றும் 340 மாணவர்கள் இருந்தனர்.
  • அங்கு வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன.
  • திருபுவனை, திருமுக்கூடல் ஆகிய இடங்களிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன
  • பெரிய புராணம் மற்றும் கம்பராமாயணமும் சோழர் காலத்தவையேயாகும்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

நான் யார்?
1. மாலிக்கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு நானே பொறுப்பு.
2. நான் பதினாறு மைல் நீளமுள்ள தடுப்பு அணையைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டினேன்.
3. நான் நீர் விநியோகம் செய்வதற்காகக் கட்டப்பட்டவன்.
4. நான் திருமுறையைத் தொகுத்தேன்.
5. நான் ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகம். மார்க்கோபோலோ என்னை இருமுறை காணவந்தார்.
7th social science book back questions with answer in tamil

X. கட்டக வினாக்கள்

1. சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களை எழுதுக.
விடை: கொற்கை

2. முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது?
விடை: பெரிய புராணம், கம்பராமாயணம்

3. காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன?
விடை: தங்க நாணயங்கள்

4. காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: தூத்துக்குடி

5. முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்?
விடை: இரண்டாம் ராஜ சிம்மன்

6. புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது?
விடை: மதுரை

XI. களப்பயணம் (மாணவர்களுக்கானது)

1. சோழர்கள் அல்லது பாண்டியர்களால் கட்டப்பட்ட ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று அதன் உன்னதத்தைப் பார்க்கவும்.

Other Important links for 7th Social Science Book Back Answers in Tamil:

For all three-term of 7th standard Social Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Social Science Book Back Answers in Tamil

For Tamil Nadu State Board Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *