Samacheer Kalvi 7th Geography Term 1 Unit 3 Book Back Questions and Answers in Tamil:
Samacheer Kalvi 7th Standard Social Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 7th New Syllabus Social Science Term I book back question & answer solutions guide available below for Tamil Medium. 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 3 – மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 7th Geography Term 1 Unit 3 Answers in Tamil Medium can check below.
We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard Geography பருவம் 1 அலகு 3 – மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் Book Back Questions with Answer PDF:
For all three-term of 7th standard Social Science Book Back Answers Tamil Medium – Samacheer Kalvi 7th Social Science Book Back Answers in Tamil
Samacheer Kalvi 7th Social Science Geography Book Back Unit 3 Term 1 Solution Guide PDF in Tamil:
TN Class 7th Social Science Geography Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
சமூக அறிவியல் – புவியியல்
பருவம் 1 – அலகு 3
மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
1. காக்கச இனத்தை _____________ என்றும் அழைக்கலாம்.
அ) ஐரோப்பியர்கள்
ஆ) நீக்ரோய்டுகள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
2. _____________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.
அ) காக்கச இனம்
ஆ) நீக்ரோக்கள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
3. உலக மக்கள் தொகை தின ______________ ஆகும்.
அ) தொகை 1
ஆ) ஜூன் 1
இ) ஜூலை 11
ஈ) டிசம்பர் 2
4. கிராமப்புறக் குடியிருப்புகள் ____________ அருகில் அமைந்துள்ளது.
அ) நீர்நிலைகள்
ஆ) மலைப் பகுதிகள்
இ) கடலோரப் பகுதிகள்
ஈ) பாலைவனப் பகுதிகள்
5. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) தலைநகரம்
4) இணைந்த நகரம்
அ) 4, 1, 3, 2
ஆ) 1, 3, 4, 2
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தென் ஆப்பிரிக்காவின் ___________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகிறது.
விடை: கலஹாரி
2. மொழியின் பங்கு என்பது __________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
விடை: மொழிக்
3. ____________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
விடை: நகர
4. _____________ நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.
விடை: செயற்கைகோள்
5. ______________ குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
விடை: யாத்திரைக்
III.
அ. பொருத்துக.
IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்
1. கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.
காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
2. கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
V. பொருந்தாதை வட்டமிடுக.
1. மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்
விடை: வங்கி அலுவல்
2. இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை
விடை: கங்கை
3. சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்
விடை: காஞ்சிபுரம்
VI. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்
1. இனங்களின் வகைகள்யாவை?
விடை: இனங்களின் வகைகள் : > காக்க சாய்டு (ஐரோப்பியர்கள்) > நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்) > மங்கோலாய்டு (ஆசியர்கள்) > ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)
2. மொழி என்றால் என்ன?
விடை:
சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றாருவருடன் தொடர்பு கொள்வதற்கு (எழுத்து வடிவம் அல்லது ஒலி வடிவம்) பயன்படுத்தப்படுகிறது.
3. குடியிருப்பு வரையறு.
விடை:
குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம்மற்றும்பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர்.
4. நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
நகர்ப்புற குடியிருப்புகள் வகைப்படுத்தலின் அடிப்படை
- மக்கள் தொகையின் அளவு
- தொழில் அமைப்பு
- நிர்வாகம்
5. பொலிவுறு நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
நகர்ப்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே பொலிவுறு நகரமாகும்.
தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
VII. காரணம் கூறுக
1. மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
விடை:
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
ஏனெனில்
- மும்பை 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மிகப்பெரிய நகரமாகும்.
- மும்பை ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படுகிறது.
2. இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
விடை:
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
ஏனெனில்
- இமயமலைப் பகுதியில் காலநிலை, மலைப்பாதை, அடர்ந்த காட்டுப் பகுதி, புல்வெளிகள், தீவிர சாகுபடி பிரதேசங்கள் காணப்படுகிறது.
- வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுகிறது.
VIII. வேறுபடுத்துக.
1. மொழி மற்றும் மதம் – மொழி
விடை:
2.நீக்ரோ இனம் மற்றும் மங்கோலிய இனம்
விடை:
3. பெருநகரம் மற்றும் நகரம்
விடை:
4. நகர்ப்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு
விடை:
IX. பத்தியளவில் விடையளி
1. நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
நான்கு முக்கிய மனித இனங்கள்:
ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் மனித இனம் ஆகும்.
காக்கசாய்டு:
- ஐரோப்பிய இனத்தவர்கள்
- யூரேஷியாவில் காணப்படுகிறார்கள்.
- வெள்ளை நிறத்தோல், அடர்பழுப்பு நிறக் கண்கள், அலை போன்ற முடி, நீளமான மூக்கு உடையவர்கள்.
நீக்ராய்டு:
- ஆப்பிரிக்க இனத்தவர்கள்,
- ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகிறார்கள்.
- கருமை நிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, தடித்த உதடுகள் கொண்டவர்கள்.
மங்கோலாய்டு:
- ஆசிய அமெரிக்க இனத்தவர்கள்
- ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
- வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தோல் , நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை, மத்திமமான மூக்கு உடையவர்கள்.
ஆஸ்ட்ரலாய்டு:
- ஆஸ்திரேலிய இனத்தவர்கள்.
- ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறார்கள்.
- அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்புநிறத் தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்கள், ‘குட்டையானவர்கள்.
2. கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
விடை:
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள்:
- இயற்கையான நிலத்தோற்றம்
- உள்ளூர் தட்பவெப்பநிலை
- மண்வளம் மற்றும் நீர்வளங்கள்
- சமூக நிறுவனங்கள்
- பொருளாதார நிலை
3. கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்:
கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நேர்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நேர்கோட்டு குடியிருப்பு:
சாலைகள், இருப்புப்பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேர்கோட்டு குடியிருப்பு எனப்படும்.
எடுத்துக்காட்டு :
இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி மலைத்தொடர்.
செவ்வக வடிவக் குடியிருப்பு:
இவ்வகைக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர்கோணத்திலும் சந்தித்துக் கொள்ளும். செவ்வக வடிவக் குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள், மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டு : சட்லஜ்
வட்டவடிவக் குடியிருப்பு:
ஒரு மையப்பகுதியை சுற்றி வட்ட வடிவமாகக் காணப்படும் குடியிருப்புகளை வட்டவடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இவை ஏரிகள், குளங்களைச் சுற்றிக் காணப்படும்.
X. செயல்முறைகள்
Other Important links for 7th Social Science Book Back Answers in Tamil:
For all three-term of 7th standard Social Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Social Science Book Back Answers in Tamil
For Tamil Nadu State Board Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF