Samacheer Kalvi 7th Civics Term 3 Unit 3 Social Book Back Question and Answers:
Samacheer Kalvi 7th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 7 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் – குடிமையியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 3 அலகு 3 – சாலைப் பாதுகாப்பு Answers/Solutions are provided on this page. 7th Std Social Book is of 1st Term consists of 10 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and 7th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 7th Social Science Civics Book Back Unit 3 Term 3 Answers PDF in Tamil:
Samacheer Kalvi 7th Social Civics Book Back Unit 3 Term 3 Answers/Solutions Guide PDF:
7th Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
சமூக அறிவியல் – குடிமையியல்
பருவம் 3 – அலகு 3
சாலைப் பாதுகாப்பு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது.
அ) வழிப்போக்கர்கள்
ஆ) ஓட்டுநர்கள்
இ) பொதுமக்கள்
ஈ) சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
விடை: ஈ) சாலையைப் பயன்படுத்தவோர் அனைவருக்கும்
2. சாலை விபத்துகள் ஒரு நாட்டின் …………….. பாதிக்கின்றன.
அ) முன்னேற்றத்தை படிக்க
ஆ) வாழ்வை – பக்கம்
இ) பொருளாதாரத்தை பாது
ஈ) மேற்கூறிய அனைத்தையும்
விடை: ஈ) மேற்கூறிய அனைத்தையும்
3. அனுமதி என்பது
அ) இயக்குவதற்கு அனுமதி
ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்
ஈ) வாகனத்தை பதிவு செய்ய சான்றிதல்
விடை: அ) இயக்குவதற்கு அனுமதி
4. ரக்ஷா பாதுகாப்பு
அ) பாதசாரிகள்
ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள் பாகம் தனது
இ) கார் இயக்குபவர்கள்
ஈ) பயணிகள்
விடை: இ) கார் இயக்குபவர்கள்
5. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
அ) 1947
ஆ) 1990
இ) 1989
ஈ) 2019
விடை: இ) 1989
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு …………………. ஆகும்.
விடை: சக்கரம்
2. நமது வாழ்க்கைப் பயணத்தில் ………………யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
விடை: சாலை
3. சாலைகளில் அதிகமான வாகனங்களால் ……………. மற்றும் ……………. மாசுபாடும் ஏற்படுகின்றன.
விடை: போக்குவரத்து நெரிசலும், அதிகமான
4. …………………… குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்.
விடை: வருவாய் ஆதரவாளர்
5. மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ………………….. எண்ணை அழைக்கலாம்.
விடை: 108
III. பொருத்துக:
விடை:
IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு:
1. கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணமும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை: ஆ) கூற்று சரி, காரணமும் சரி
V. பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி:
1.
அ) கார்
ஆ) டிரக்
இ) டெம்போ
ஈ) ஏரோப்ளேன்
விடை: ஈ) ஏரோப்ளேன்
VI. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதைக் கண்டுபிடி:
அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.
விடை: சரியானவை : ஆ, இ
VII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி:
1. வாகனம் இயக்கும் போது ஏற்படக்கூடிய கவனச்சிதறல்கள் எவை?
விடை:
கைப்பேசியில் பேசுவதோ, அதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ மற்ற பல செயல்களில் ஈடுபடுவதோ கவனத்சிதறலுக்கு வழிவகுக்கிறது.
2. பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதற்கு இரண்டு பாதுகாப்பு முறைகளைக் கூறு.
விடை:
- இருசக்கர வாகனங்கள் இயக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
- நான்கு சக்கர வாகனம் இயக்கும் போது இருக்கைப்பட்டை அணிவது.
3. இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏன்?
விடை:
- இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏனெனில்
- கட்டுப்படுத்த முடியாத தூக்கம், அதிக தூரம் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சோர்வு.
- சாலையில் குறைந்த வெளிச்சம் ஆகியவை ஆகும்.
4. ஒரு வாகனத்தை இயக்குவதற்குரிய உரிமம் எப்போது ஒருவருக்குக் கிடைக்கும் ?
விடை:
- இந்திய சட்டப்படி ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது 18 ஆகும்.
- ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர் தனக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
5. பொதுமக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஊடகம் என்ன செய்ய வேண்டும்.
விடை:
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் போன்ற ஊடகங்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது.
VIII. விரிவான விடையளி:
1. ஓர் இந்தியன் வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான ஆவணங்கள் எவை?
விடை:
வாகனம் இயக்குபவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :
- ஓட்டுநர் உரிமம்
- வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
- காப்பீட்டுச் சான்றிதழ்
- வாகன வரி கட்டியதற்கான சான்றிதழ்
- அனுமதி மற்றும் தகுதிச்சான்றிதழ்
2. பள்ளிப்பாடத்திட்டத்தில் சாலைப்பாதுகாப்புக் கல்வியை இணைத்திடும் தேவை என்ன?
விடை:
- குழந்தை பருவத்திலிருந்தே போக்குவரத்துக் கல்வியை கற்று தருவதால் விபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- மாணவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் பற்றிய அறிவும் பெறுகின்றனர்.
- இது மாணவர்களை வழிநடத்தவும், சாலைகளை பாதுகாப்பாக கடக்கவும், தேவையான கல்வியறிவு கிடைக்கச்செய்கிறது.
3. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சாலைப்பாதுகாப்பு விதிகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?
விடை:
- இளம் வயதினருக்கு சாலைப்பாதுகாப்புக் கல்வியைத் தருவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
- போக்குவரத்து குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் அறிந்திட உதவுங்கள்.
- சரியான குறியீட்டிற்காக காத்திருந்து பாதசாரிகளுக்கான வரிக்குதிரை பாதையின் வழியாகச் சாலையை கடந்திட அறிவுறுத்துங்கள்.
- சாலைகளில் அங்கும் இங்குமாகவோ, குறுக்காகவோ ஓடுதல் கூடாது என்பதை எச்சரிக்கை செய்யுங்கள்.
- சாலைகளில் நடந்து செல்லும் போது நடைபாதையை பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.
IX. உயர் சிந்தனை வினா:
1. சாலைப்பாதுகாப்பு விதிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட நீங்கள், உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள் இடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.
விடை:
- நான் போக்குவரத்து குறியீடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
- சாலை விதிகள் பின்பற்றுவதன் தேவையை புரிந்துக்கொள்ளச் செய்வேன்.
- வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டைகள் அணிதல், கைப்பேசியில் பேசுவதை தவிர்த்தல் போன்றவைகளை அறிந்திடச் செய்வேன்.
2. சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்து எவ்விதமாக இருந்திருக்கும்?
விடை:
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்தக்கு கழுதைகளையும், ஒட்டகங்களையும், குதிரைகளையும் நாம் பயணிப்பதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி இருப்போம்.
X. செயல்பாடுகள்:
1. போக்குவரத்துக் குறியீடுகள் பற்றிய ஆல்பம் தயாரித்தல்
2. பொது மக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவையான வாசகங்களைத் தொகுத்து எழுதுக.
3. சாலைப்பாதுகாப்பு பற்றிய போட்டிகளை நடத்துக.
Other Important links for 7th Social Science Book Back Answers in Tamil:
Click here to download the complete 7th Social Book Back Solution in Tamil – Samacheer Kalvi 7th Social Science Book Back Answers