Samacheer Kalvi 6th Science Term 1 Unit 2 Book Back Questions and Answers:
Samacheer Kalvi 6th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 6th New Syllabus Science Term 1 book back question & answer solutions guide available below for Tamil Medium. 6ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 2 – விசையும் இயக்கமும் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 6th Science Term 1 Unit 2 Answers in Tamil Medium Questions and Answers can check below.
We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Science பருவம் 1 அலகு 2 – விசையும் இயக்கமும் Book Back Questions with Answer PDF:
For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil
Samacheer Kalvi 6th Science Book Back Chapter 2 Term 1 Solution Guide PDF:
Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அறிவியல் – பருவம் 1
அலகு 2 – விசையும் இயக்கமும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. வேகத்தின் அலகு _____அமீ
அ) மீ
ஆ) விநாடி
இ) கிலோகிராம்
ஈ) மீ/வி
2. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
அ) பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்
ஆ) நிலவு பூமியைச் சுற்றி வருதல்
இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
3. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு
அ) வேகம்=தொலைவு × காலம்
ஆ) வேகம்= தொலைவு / காலம்
இ) வேகம் = காலம் /தொலைவு
ஈ) வேகம் = 1/ (தொலைவு × காலம்)
4. கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1 : கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி
அ) கூற்று 1 மட்டும் சரி
ஆ) கூற்று 2 மட்டும் சரி
இ) இரண்டு கூற்றுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் _____
விடை:
நேர்க்கோட்டு இயக்கம்
2. புவிஈர்ப்பு விசை _____ விசையாகும்.
விடை:
தொடா விசை
3. மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ______ இயக்கமாகும்.
விடை:
தற்சுழற்சி இயக்கம்
4. ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் ______
விடை:
சீரான இயக்கம்
III. கீழ்க்க ண்ட கூற்றுகள் சரியா/தவறா எனக் கூறு.தவறு எனில் சரியான விடைகள் விடையை எழுதுக.
1. மையப் புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.
விடை: சரி
2. அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை: சரி
3. மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும்.
சரியான விடை : இது சீரற்ற இயக்கம்
விடை: தவறு
4. வருங்காலத்தில் மனிதர்களின் பதிலியாக ரோபாட்டுகள் செயல்படும். அக உணர்வு நிலையில் இருக்காது
விடை: தவறு
IV. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக.
1. பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல்: _____
விடை: தொடா விசை
2. தொலைவு : மீட்டர் :: வேகம் : _____?
விடை: மீ/வி
3. சுழற்சி இயக்கம்: பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : ___?
விடை: தனிஊசல்
V. பொருத்துக.
விடை: 1 – இ; 2 – ஈ; 3 – ஆ; 4 – அ; 5 – உ
VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒருயானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையை பூர்த்தி செய்க.
விடை:
VII. அட்டவனையைப் பூர்த்தி செய்க:
விடை:
VIII. ஒரு வார்த்தையில் விடையை எழுதுக.
1. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் ___
விடை: தொடா விசை
2. காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது _____
விடை: இயக்கம்
3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம் _____ எனப்படும்.
விடை: அலைவு இயக்கம்
4. சம கால இடைவெளியில், சமதொலைவை கடக்கும் பொருளின் இயக்கம் _____
விடை: சீரான இயக்கம்
5. நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் _____
விடை: செயற்கை நுண்ணறிவு
IX. சுருக்கமாக விடையளி.
1. விசை – வரையறு.
விடை:
விசை என்பது பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.
2. பொருள் நகரும் பாதையைப் பொறுத்து இயக்கங்களை எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:
- நேர்க்கோட்டு இயக்கம்
- வளைவுப்பாதை இயக்கம்
- வட்டப்பாதை இயக்கம்
- தற்சுழற்சி இயக்கம்
- அலைவு இயக்கம்
- ஒழுங்கற்ற இயக்கம்
3. நீ இயங்கும் மகிழுந்தினுள் உட்கார்ந்திருக்கும் போது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப்பொறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்?
விடை:
இயங்கும் மகிழுந்தினுள் நானும் என் நண்பனும் உட்கார்ந்திருக்கும் போது, என் நண்பனும், நானும் ஓய்வு நிலையில் இருப்போம் என கருதுகிறேன்.
4. பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும் – விவரி
விடை:
ஒரு குறிப்பிட்டட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். எனவே, புவியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும்.
5. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.
விடை:
X. கணக்கிடுக.
1. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?
தீர்வு :
XI. விரிவான விடையளி.
1. இயக்கம் என்றால் என்ன?
விடை:
இயக்கம்:
- இயக்கம் என்பது காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் என்கிறோம்.
- இயங்கும் பாதையின் அடிப்படையில் இயக்கத்தை வகைப்படுத்தலாம்:
- நேர்க்கோட்டு இயக்கம்
பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும். (உம்) நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன். தானாகக் கீழே விழும் பொருள். - வளைவுப்பாதை இயக்கம்
பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்.(உ.ம்) பந்தினை வீசுதல் - வட்டப்பாதை இயக்கம்
ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் (உம்) கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல். - தற்சுழற்சி இயக்கம்
ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் (உம்): பம்பரத்தின் இயக்கம். - அலைவு இயக்கம்
ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல் – (உ.ம்) தனிஊசல். - ஒழுங்கற்ற இயக்கம் ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.
2. பொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம்?
விடை:
எடுத்துக்காட்டுடன் விளக்குக. பொருளின் இயக்கத்தை நாம் காலம் மற்றும் வேகத்தைப் பொறுத்து வகைப் படுத்தலாம். கால இடைவெளி அடிப்படையில்:
1. கால ஒழுங்கு இயக்கம்
2. கால ஒழுங்கற்ற இயக்கம்
1. கால ஒழுங்கு இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை நாம் கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். (எ.கா) புவியை சுற்றிய நிலவின் இயக்கம்.
2. கால ஒழுங்கற்ற இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாது. இவ்வியக்கம் கால ஒழுங்கற்ற இயக்கம். சீரான வேகத்தின் அடிப்படையில்
1. சீரான இயக்கம்
2. சீரற்ற இயக்கம்
1. சீரான இயக்கம்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை சீரான இயக்கம் என்கிறோம். (எ.கா) தொடர்வண்டியின் இயக்கம்.
2. சீரற்ற இயக்கம்.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் சீரற்ற இயக்கம் என்கிறோம். (எ.கா) வாகன இயக்கம்.
XII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.
விடை:
Other Important links for Class 6th Book Back Answers:
Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF
For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil