Samacheer Kalvi 6th History Term 3 Unit 4 Social Book Back Question and Answers:
Samacheer Kalvi 6th Standard New Social Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 6 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 3 அலகு 4 – தென்னிந்திய அரசுகள் Answers/Solutions are provided on this page. 6th Std Social Book is of 1st Term consists of 08 units, 2nd Term consists of 07 units and Term 3rd consists of 10 Units. All Units/Chapters of Term 1st, 2nd, 3rd Social Book Back One, and Two Mark Solutions are given below.
Check Unit wise and 6th New Social Book Back Question and Answers Guide/Solutions PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Questions and Answers available in PDF. Check Social Science – History, Geography, Civics, Economics below. See below for the Samacheer Kalvi 6th Social Science History Book Back Unit 4 Term 3 Answers PDF in Tamil:
Samacheer Kalvi 6th Social History Book Back Unit 4 Term 3 Answers/Solutions Guide PDF:
Social Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
சமூக அறிவியல் – பருவம் 4
வரலாறு – அலகு 3 தென்னிந்திய அரசுகள்
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) தந்திவர்மன்
ஈ) பரமேஸ்வரவர்மன்
விடை: ஆ) இரண்டாம் நந்திவர்மன்
2. கீழ்க்காண்பனவற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
அ) மத்தவிலாசன்
ஆ) விசித்திரசித்தன்
இ) குணபாரன்
ஈ) இவை மூன்றும்
விடை: ஈ) இவை மூன்றும்
3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அ) அய்கோல்
ஆ) சாரநாத்
இ) சாஞ்சி
ஈ) ஜூனாகத்
விடை: அ) அய்கோல்
II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை மக் செய்யவும்:
1.
கூற்று (i) : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
கூற்று (ii) : காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
அ. கூற்று i தவறு
ஆ) கூற்று ii தவறு
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை: இ. இரு கூற்றுகளும் சரி
2. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுக்களைச் சிந்திக்கவும்
கூற்று (i) : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று (ii) : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்
அ: கூற்று i மட்டும் சரி
ஆ) கூற்று ii மட்டும் சரி
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை: இ. இரு கூற்றுகளும் சரி
3. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைச் சிந்தித்து அவற்றில் எவை சரியா ன கூற்றென்று கண்டறியவும்
விடை:
1. இவ்வம்சத்தை நிறுவியர் தந்திதுர்கா
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2,3 சரி
இ) 1,3 சரி
ஈ) மூன்றும் சரி
விடை: ஈ) மூன்றும் சரி
4. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை
அ) எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்
அ) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்
ஈ) பட்டடக்கல் – சாளுக்கியர்கள்
விடை: இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்
5. தவறான இணையைக் கண்டறியவும்
அ) தந்தின் – தசகுமார சரிதம்
அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
இ) பாரவி – கிரதார்ஜூனியம்
ஈ) அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்
விடை: அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. …….. ஹர்ஷவர்த்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
விடை: இரண்டாம் புலிகேசி
2. …….. வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்
விடை: முதலாம் நரசிம்மவர்மன்
3. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ……… ஆவார்
விடை: ரவி கீர்த்தி
4. ……… முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாவார்
விடை: பரஞ்சோதி (சிறுத்தொண்டர்)
5. ……………. ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
விடை: குடுமியான்மலை, திருமயம்
IV. பொருத்துக:
V. சரியா /தவறா என எழுதுக:
1. புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்
விடை: சரி
2. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி
விடை: தவறு
3. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்
விடை: சரி
4. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது’
விடை: தவறு
5. விருப்பாஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
விடை: தவறு
VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்:
1. கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- ஆதிகவி பம்பா
- ஸ்ரீ பொன்னா
- ரன்னா
2. பல்லவர் கட்டடக் கலையை நாம் எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:
- பாறை குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
- ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் – மாமல்லன் பாணி
- கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி மற்றும் நந்திவர்மன் பாணி
3. கடிகை பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:
- காஞ்சியிலிருந்த கடிகை பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
- அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்த்தது.
- அங்கு நியாயபாஷ்யா நூலாசிரியர் ஆசிரியராக இருந்தார்.
4. பஞ்சபாண்டவர் ரதங்கள் ஒற்றைப் பாறைக்கல் ரதங்கள் ஆகும் – விளக்குக.
விடை:
- பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில் கட்டட பாணியை உணர்த்துகின்றன.
- ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக்கல்லிலிருந்து செதுக்கப் பட்டிருக்கின்றன. எனவே அவை ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன.
5. தக்கோலம் போர் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:
- மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசராவார்.
- அவர் தக்கோலம் போர்க்களத்தில் சோழர்களைத் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். (தக்கோலம் தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ளது)
VII. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்:
1. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க
விடை:
பல்லவர்காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்ற காலம். மாமல்லபுரம் 1984ல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டது. பல்லவர் கால கலையின் கலை அழகிற்கு எடுத்துக்காட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், பிறகோவில்கள், வராகர் குகை.
மகேந்திரவர்மன் பாணி : (பாறை குடைவரைக் கோவில்கள்)
மகேந்திரவர்மன் பாணி குகைக் கோவில்கள் மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
மாமல்லன் பாணி : (ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும்)
- மாமல்லன் பாணி ஒற்றைக்கல் ரதங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு மாமல்லபுரத்திலுள்ள பஞ்ச பாண்டவர் ரதங்கள். மகிஷாசுர மர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை மாமல்லன் கட்டிய பிரபல மண்டங்கள்.
- மகாபலிபுர திறந்த வெளிக் கலையரங்கம் மிக முக்கியமானது சிவபெருமான் தலை கங்கை நதி, அர்ச்சுனன் தபசு ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.
ராஜசிம்மன் பாணி : (கட்டுமானக் கோவில்கள்)
ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) பாணி கோவிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகும். இக்கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
நந்திவர்மன் பாணி (கட்டுமானக் கோவில்கள்)
நந்திவர்மன் பாணி பல்லவ கோவில் கட்டடக்கலையின் இறுதிக்கட்டம். காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் நந்திவர்மன் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
எலிபெண்டா தீவு :
- எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இதன் இயற்பெயர் ஸ்ரீபுரி, உள்ளூர் மக்களால் காரபுரி என்று அழைக்கப்படுகிறது.
- போர்த்துகீசியர்கள் உருவத்தை கண்ணுற்றபின் எலிபெண்டா எனப் பெயரிட்டனர்.
- திரிமூர்த்தி சிவன் சிலை மற்றும் துவாரபாலகர்களின் சிலைகள் ஆகியவை குகை கோவிலில் காணப்படுகின்றன.
கைலாசநாதர் கோவில் – எல்லோரா :
- முதலாம் கிருஷ்ணர் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார். இது எல்லோராவில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் ஒன்று.
- இக்கோவில் 60000 சதுர அடிகள் பரப்பளவையும் விமானம் 90 அடிகள் உயரமும் கொண்டது.
- திராவிடக் கட்டடக் கூறுகளைக் கொண்டுள்ள இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது.
VIII. உயர் சிந்தனை வினா:
1. கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.
விடை:
- கல்யாணி மேலைச் சாளுக்கியர், கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த வாதாபிச் சாளுக்கியர்களின் வழித் தோன்றல்கள்.
- கி.பி. 973ல் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டுவந்த இரண்டாம் தைலப்பர், மாளவ அரசர் பராமாரரை தோற்கடித்தார்.
- இரண்டாம் தைலப்பர் கல்யாணியைக் கைப்பற்றியபின் இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது.
- முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார். மேலைச் சாளுக்கியர்களும் சோழர்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டனர்.
- நர்மதை ஆற்றுக்கும் காவேரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் சாளுக்கியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
IX. வாழ்க்கைத்திறன்கள் (மாணவர்களுக்கானது):
1. பல்லவர், சாளுக்கியர், ராஷ்டிரகூடர் ஆகியோரின் கோவில் கட்டடக் கலை குறித்த படங்களைச் சேகரிக்கவும், ஒவ்வொன்றுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை வேறுபடுத்தவும்.
2. களப்பயணம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடவும்.
X. செயல்பாடு (மாணவர்களுக்கானது):
1. முதலாம் மகேந்திரவர்மன், இரண்டாம் புலிகேசி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுக.
விடை:
- அர்ச்சுணன் ஒற்றைக் காலில் தவமிருக்கிறார். மத்தியில் பாம்பு வடிவ மனித உருவம் உள்ளது. தேவகணங்கள் சூழ சிவன் காணப்படுகிறார். வேடர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் காணப்படுகின்றன.
- மேலும் யானைக்கூட்டத்தையும் காண முடிகிறது.
2. படத்தைப் பார்த்து அது குறித்துச் சில வாக்கியங்கள் எழுதவும்.
XI. கட்டக வினா:
விடை:
Other Important links for 6th Social Science Answers in Tamil:
Click Here to download complete 6th Social Science solutions Tamil Medium – Samacheer Kalvi 6th Social Science Answers