14 Apr 2022

Samacheer Kalvi 10th Tamil Unit 9.5 Book Back

10th Tamil Unit 9.5 – அணி Book Back Answers:

Samacheer Kalvi 10th Standard Tamil Book Back Questions with Answers PDF uploaded and the same given below. Class-tenth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 10th Std Tamil Book Back Questions & Answers இயல் 9.5 – அணி Solutions are given below. Check the complete Samacheer Kalvi 10th Tamil இயல் Unit 9.5 Answers below:

We also provide class 10th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 10th standard Tamil Unit 9 Book Back Questions with Answer PDF:

For the complete Samacheer Kalvi 10th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers Guide




10th Tamil Book Back Answers Unit 9.5 – அணி Solution PDF:

Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

For Samacheer Kalvi 10th Tamil Book PDF, check the link – 10th Tamil Book PDF

Chapter 9.5 – அணி

கற்பவை கற்றபின்

1.முன் வகுப்புகளில் கற்ற அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்து ஒப்படைவு ஒன்றை உருவாக்குக.
விடை:
உவமையணி:
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

பிறிது மொழிதலணி:
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்”

வேற்றுமையணி:
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”

சொற்பொருட்பின்வரு நிலையணி: :
“உதவி வரைத்தன் றுதவி
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.”

2. மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு

  1. Education is what remains after one has forgotten what one has learned in School. – Albert Einstein.
    விடை:
    ஒரு பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்னே!
  2. Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb
    விடை:
    இவ்வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே அதிக வேலைப்பளு உள்ளது.
  3. It is during our darkest moments that we must focus to see the light. – Aristotle
    விடை:
    நம் இருண்ட தருணங்களிலும் ஒளியைப் பார்ப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
  4. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts. – Winston Churchill.
    விடை:
    வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பதும் விதியல்ல. இரண்டுக்காகவும் தொடர்ந்து முயற்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்படுவதே எண்ணப்படும்.

3. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

  1. தாமரை இலை நீர் போல
    விடை:
    என் நண்பன் தாமரை இலைநீர் போலப் பட்டும் படாமலும் பழகுவான்.
  2. மழைமுகம் காணாப் பயிர்போல
    விடை:
    தாயை இழந்த கருணையன் மழை முகம் காணாப் பயிர்போல வாடினான்.
  3. கண்ணினைக் காக்கும் இமைபோல
    விடை:
    இறைவன் அனுதினமும் நம்மைக் கண்ணினைக் காக்கும் இமைபோலக் காத்துக் கொண்டு இருக்கிறார்.
  4. சிலை மேல் எழுத்து போல
    விடை:
    சிறுவயதில் கற்கும் அறக்கருத்துகள் சிலைமேல் எழுத்து போல் மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்வை வழி நடத்தும்.

4. பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

சேரனின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
விடை:

வாழ்த்துரை எழுதுக.

5. உம் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்கவிழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்குக.
விடை:

” இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்”
ஆம்! அன்பார்ந்த மாணவர்களே!

நாளைய தலைவர்களான உங்களை இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மூலம் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நவீன பாரதத்தை உயர்த்துபவர்களே!
“நூறு இளைஞர்களைக் கொடுங்கள்: இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகின்றேன்” என்றார் சுவாமி விவேகானந்தர் அன்று. அவர் இன்று இருந்திருந்தால், இந்த முகாமிலுள்ள உங்களை வைத்து நவீன பாரதத்தையே வடிவமைத்திருப்பார். நவீன பாரதத்தை உயர்த்தும் உன்னத தூண்கள் நீங்கள்தான்.

சேவைச் செம்மல்களே!
மக்கள் தொண்டே! இறைவன் தொண்டு என்பார்கள். அதைப்போலவே நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய காத்திருக்கும் சேவைச் செம்மல்களே! அன்னை தெரஸாவின் உள்ளங்களே! சேவை செய்ய பணம் தேவை இல்லை. நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை அறிந்து செயல்படும் செல்வங்களே! உங்களை மனம் நெகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.

நாளைய கலாம்களே!

“தூக்கத்தில் வருவது கனவன்று
உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு”

என்றார் டாக்டர். அப்துல் கலாம். நாட்டைத் தூய்மையாக்குவதிலும் நாட்டைப் பசுமையாக்குவதிலும் நீங்கள் தூங்காமல் கனவு கண்டு நனவாக்குங்கள். உங்கள் கைகளால் வைக்கப்படும் இந்த மரங்கள்தான் நீங்கள் நாளைய கலாம் என்பதைப் பறைசாற்றும். இன்றைய இளைய கலாம்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டு நலத்திட்டப் பணிபுரியும் வள்ளல் களை மீண்டும் வாழ்த்தி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.





6. பாடலில் இடம்பெற்றுள்ளத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிக.

கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம் புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
விடை:
புலவர் பெயர்கள்

  • கம்பன்
  • உமறுப்புலவர்
  • ஜவ்வாதுப் புலவர்
  • அபுல் காசிம்
  • குணங்குடி மஸ்தான்
  • சேக்கிழார்
  • செய்கு முதலியார்

7. கலைச்சொல் அறிவோம்

Humanism – மனித நேயம்
Cabinet – அமைச்சரவை
Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்

8. பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?
அ) உவமை
ஆ) தற்குறிப்பேற்றம்
இ) உருவகம்
ஈ) தீவகம் குறுவினா
விடை:
இ) உருவகம்

குறுவினா

1.தீவக அணியின் வகைகள் யாவை?
விடை:
தீவக அணி மூவகைப்படும். அவை:

  • முதல் நிலைத் தீவகம்
  • இடைநிலைத் தீவகம்
  • கடைநிலைத் தீவகம் எனப்படும்.

2.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
விடை:

  • இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி நிரல்நிறையணியாகும்.
  • இலக்கணம்: நிரல் – வரிசை: நிறை – நிறுத்துதல்
  • சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.

சிறுவினா

1.கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக் காட்டுக.
விடை:
அணி இலக்கணம்:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை (கருத்தை) ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

எ.கா: “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட”

பாடல் பொருள்:
கோட்டை மதில்மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கைகாட்டியது என்பது பொருள்.

விளக்கம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேல் இருந்த கொடிகள் | காற்றில் இயற்கையாக அசைந்தன.

ஆனால் இளங்கோவடிகள், மதுரையில் கோவலன் கொலை செய்யப்படுவான் எனக் கருதி அக்கொடிகள், கையை அசைத்து இம் மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாக தன் கருத்தைக் கொடியின் மேல் ஏற்றிக் கூறுகிறார். எனவே இப்பாடல் தற்குறிப்பேற்ற அணிக்குச் சான்றாகியது.

Other Important Links for 10th Tamil Book Back Answers solutions:

Click here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – 10th Tamil Book Back Answers

Click here to download the 10th Book Back Answers Guide for all subjects – Samacheer Kalvi 10th Book Back Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *