14 Apr 2022

Samacheer Kalvi 10th Tamil Unit 7.4 Book Back

10th Tamil Unit 7.4 – சிலப்பதிகாரம் Book Back Answers:

Samacheer Kalvi 10th Standard Tamil Book Back Questions with Answers PDF uploaded and the same given below. Class-tenth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 10th Std Tamil Book Back Questions & Answers இயல் Unit 7.4 – சிலப்பதிகாரம் Solutions are given below. Check the complete Samacheer Kalvi 10th Tamil இயல் Unit 7.4 Answers below:

We also provide class 10th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 10th standard Tamil Unit 7 Book Back Questions with Answer PDF:

For the complete Samacheer Kalvi 10th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers Guide




10th Tamil Book Back Answers Unit 7.4 – சிலப்பதிகாரம் Solution PDF:

Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

For Samacheer Kalvi 10th Tamil Book PDF, check the link – 10th Tamil Book PDF

Chapter 7.4 – சிலப்பதிகாரம்

கற்பவை கற்றபின்

1.சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தை அறிந்துவந்து வகுப்பறையில் கூறுக.
விடை:
பதினாறு வயதுடைய கோவலனுக்கும், பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் இனிதே வாழ்கின்றனர்.

கோவலன் கலைகளின் காதலன். ஆடல் பாடல்களில் விருப்பம் கொண்டவன். யாழ் மீட்டுவதில் வல்லவன். ஒரு நாள் ஆடல் அரசி அழகுப்பாவை மாதவியின் ஆடலில் மயங்குகிறான்.

மாதவியின் பசிய மாலையை யார் வாங்குகிறார்களோ அவர்கள் மாதவியை அடையலாம் என்று அவள் இல்லத்தில் ஒருத்தி கடைத்தெருவுக்கு வந்து கூறுகிறாள்.

கோவலன் மாலையை வாங்கி மாதவியை அடைகிறான். மாதவியோடு வாழ்கின்ற காலத்தில் அவன் செல்வம் எல்லாம் கரைகிறது.

மனம் வேறுபட்டு கண்ணகியை வந்தடைகிறான். இழந்தப் பொருளை மீட்டு மதுரைக்குச் சென்று ஆயர்குலப் பெண் மாதரியின் வீட்டில் தங்குகிறான்.

பொருள் ஈட்டுவதற்காக கண்ணகியின் காற்சிலம்பை எடுத்துக்கொண்டு மதுரை வீதிக்குச் செல்கிறான். பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அப்பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடியவன் அதை மறைக்க சமயம் கிடைத்ததை எண்ணி அரண்மனைச் சென்று மன்னனிடம் கோவலன் மீது பழி சுமத்துகிறான். மன்னனின் ஆணையால் கோவலன் கொலை செய்யப்படுகிறான்.

இதைக்கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரசபைக்குச் சென்று வழக்குரைக்கிறாள். உண்மை அறிந்த அரசனும் அரசியும் உயிர் துறக்கிறார்கள். மதுரையும் தீக்கிரையாகிறது.

பின் சேரநாட்டை அடைந்து வேங்கை மர நிழலில் தங்குகிறாள். பிறகு வானுலகோர் சூழ கோவலன் கண்ணகியை அழைத்துச் சென்றதைக் குன்றக் குறவர்கள் கூறுகிறார்கள்.

செங்குட்டுவன் இமயம் வென்று, கல்லெடுத்து கங்கையில் நீராட்டி வஞ்சியில் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான்.

இக்கதையின் மூலம் நாம் அறியும் மூன்று உண்மைகள்:

  1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
  2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

2. சிலப்பதிகாரம் காட்டும் மருவூர்ப்பாக்கம் பற்றிய விவரிப்பை இன்றைய கடைத் தெருவுடன் ஒப்பிட்டு உரையாடுக.
விடை:

உரையாடல்

மாணவர்களே! மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் பற்றிக் கற்றோம் அல்லவா! அதை மனதில் கொண்டு இன்றைய கடை வீதிகளோடு ஒப்பிட்டு உரையாடலாமா? சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை ஒளிப்படங்களாகச் சேகரித்து. வரலாற்றுக் குறிப்பேடாக வைத்துக் கொள்ளுங்கள்.

உரையாடுபவர்கள்: மதன், சுதன், உமா.

மதன் : சுதன், உமா எப்படி இருக்கிறீர்?
இருவரும் : நன்றாக இருக்கிறோம்!
மதன் : இருவரும் விடுமுறைக்கு எங்காவது சென்றீர்களா?
உமா : நான் சென்னை சென்றேன் மதன்.
சுதன் : நான் மதுரைக்குப் போனேன்.
மதன் : நானும் திருச்சிக்குச் சென்று இருந்தேன்.
சுதன் : நான் மதுரைக்குப் போனபோது அங்கு ‘மால்’ என்று சொல்லப்படும் வணிக வளாகத்துக்குச் சென்றேன்.

உமா : சென்னையிலும் பெரிய பெரிய வணிக வளாகங்கள் அதிகமாக உள்ளன.
மதன் : நானும் தான் சென்றேன். அவற்றையெல்லாம் பார்க்கும் போது ஏனோ! என் மனதில் நாம் பாடத்தில் பயின்று தெரிந்து கொண்ட மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளின் காட்சி என் மனதில் வந்து போனது.
சுதன் : ஆமாடா…….. வணிக வீதிகளில் எல்லாப் பொருள்களும் கிடைத்தது போல் இங்கும் கிடைக்கிறது.
உமா : மருவூர்ப்பாக்க வீதியை விட இங்கு ஆரவாரமும், அலங்காரமும் அதிகமாக உள்ளது.

மதன் : அங்கு உற்பத்தியாளரே பொருளைக் கொண்டு வந்து விற்பார். இங்கு முதலீட்டாளர்கள் இடைத்தரகர் மூலம் வாங்கி வந்து விற்பனையாளரை வைத்து விற்கின்றனர்.
சுதன் : அந்தக் காலத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் நியாயமான விலை, பண்டமாற்று முறை இருந்தது.

உமா : தானியங்கள் குவித்து வைத்து அளந்து கொடுத்தனர். ஆனால். இந்த வளாகங்களிலும், அங்காடிகளிலும் வண்ணக் காகிதங்களில் ஏற்கனவே கட்டிவைத்து அடுக்கி வைத்துள்ளார்கள். நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மதன் : மூன்று ஊர்களிலும் பொதுவான முறையில் ஒரு விற்பனை முறை இருந்ததை யாரும் உணர்ந்தீர்களா……
சுதன் : பொதுவான விற்பனை முறையா…… என்னடா அது?
உமா : எனக்குத் தெரிந்து விட்டது. நடைபாதை கடைகளைத்தானே சொல்கிறாய்.

மதன் : ஆமா உமா…. ஒவ்வொரு கடைத்தெருவிலும் கண்ணைக் கவரும் பலமாடிக் கட்டிடங்கள், அலங்கார விளக்குகள் அமைத்து பல் பொருள் அங்காடிகள் இருப்பினும் அதே பொருள்களை நடைபாதைகளில் வைத்து சிறுகுறு வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருளை விற்றல் ஆகிய காட்சிகளையும் காண முடிந்தது தானே……

இருவரும் : ஆம் மதன்! நடைபாதைக் கடைகளிலும் தரமான பொருள் கிடைக்கும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.
மூவரும் : ஒருவருக்கொருவர் …… நேரமாகிவிட்டது போய் வரலாமா….. என்று விடைபெற்றனர்.




பாடநூல் வினாக்கள்

குறுவினா

1. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
விடை:

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
  • பல்நிணவிலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

சிறுவினா

1.பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்;
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்.

அ) இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
விடை:
சிலப்பதிகாரம்

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
விடை:
கர்வனர், ட்டினும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
விடை:
ட்டினும் மயிரினும், கட்டு நுண்வினை

ஈ) காருகர் – பொருள் தருக.
விடை:
நெய்பவர் (நெசவாளர்)

உ) இப்பாடலடியில் காணப்படும் நறுமணப் பொருட்கள் யாவை?
விடை:
சந்தனமும் அகிலும்.

நெடுவினா

1. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
விடை:

  • மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப் பொடி விற்பது போல் இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
  • குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப்பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன. விற்கப்படுகின்றன.
  • பொன், மணி, முத்து, பவளம் ஆகியவை மருவூர்ப்பாக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம்’ விற்கப்படுகிறது.
  • வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்தது தானிய வகைகள்.
  • இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடைபோட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
  • மருவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள். இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.

வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.

மருவூர்ப்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தினவேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பலதிறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.

அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

இலக்கணக்குறிப்பு

வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
பயில்தொழில் – வினைத்தொகை
நுண்வினை, அரும்பௌல் – பண்புத்தொகை
பகருநர் – வினையாலணையும் பெயர்
செறிந்த – பெயரெச்சம்
நன்கலம், வெறுக்கை – பண்புத்தொகை
குழலினும் யாழினும் – எண்ணும்மை

Other Important Links for 10th Tamil Book Back Answers solutions:

Click here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – 10th Tamil Book Back Answers

Click here to download the 10th Book Back Answers Guide for all subjects – Samacheer Kalvi 10th Book Back Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *