Samacheer Kalvi 10th Tamil Unit 2.1 – கேட்கிறதா ஏன்குரல்! Book Back Answers:
Samacheer Kalvi 10th Standard Tamil Book Back Questions with Answers PDF uploaded and the same given below. Class-tenth candidates and those preparing for TNPSC exams can check the Book Back Answers PDF below. The Samacheer Kalvi Class 10th Std Tamil Book Back Answers இயல் Unit 2.1 – கேட்கிறதா ஏன்குரல்! Solutions are given below. Check the complete Samacheer Kalvi 10th Tamil இயல் Unit 2.1 Answers below:
We also provide class 10th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 10th standard Tamil Unit 2 Book Back Questions with Answer PDF:
For the complete Samacheer Kalvi 10th Tamil Book Back Solutions Guide PDF, check the link – Samacheer Kalvi 10th Tamil Book Back Answers Guide
10th Tamil Book Back Answers – Unit 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Solution PDF:
Samacheer Kalvi 10th Tamil Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Tamil Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.
For Samacheer Kalvi 10th Tamil Book PDF, check the link – 10th Tamil Book PDF
Chapter 2.1 – கேட்கிறதா ஏன்குரல்!
கற்பவை கற்றபின்
1. காற்று பேசியதைப் போல நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசுக.
விடை:
நான்தான் நிலம் :
நான் உங்கள் காலடிகளால் மிதிபட்ட போதும் வருந்தாமல் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மனிதர்கள் எனக்கு எதிராக செய்யும் செயல்களை எண்ணி மிகுந்த வேதனையடைகிறேன். நான்தான் நிலம் பேசுகிறேன்.
என்னைக் காப்பாற்றுங்கள் :
மனிதர்களே! நெகிழிப்பைகளை உபயோகிப்பதை நிறுத்துங்கள். தொழிற்சாலைக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துங்கள். குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் போடுங்கள். விவசாயத்திற்குத் தொழு உரங்களைப் பயன்படுத்துங்கள். இச்செயல்களைச் செய்தால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். நான் நலமாய் இருந்தால் மட்டுமே உங்களால் நலமாய் வாழ முடியும். மனிதர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்.
2. 17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்றும் உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணங்களையும் தீர்வுகளையும் கலந்துரையாடுக.
விடை:
மதன் : வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்று உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணம் என்ன ?
சுதன் : ஆக்ராவில் தாஜ்மகாலைச் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலை மற்றும் எண்ணெய் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய தீங்கு விளைக்கும் நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து பரவுவதால் அவை வெள்ளைப் பளிங்குக் கற்களின் மீது பட்டு அவற்றின் நிறத்தையும் தன்மையையும் மாற்றுகிறது.
மதன் : இதற்கான தீர்வுதான் என்ன?
சுதன் : எல்.பி.ஜி. வாயு உருளைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் பொருட்களை எரிக்கக் கூடாது என்று 1995 ஆம் ஆண்டில் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி தாஜ்மகாலைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகள் இன்று வரை இச்சட்டத்தை மதித்து வருகின்றன. ஆகவேதான் அவை மேலும் சேதமடையாமல் காக்கப்பட்டு வருகிறது.
பாடநூல் வினாக்கள்
1. செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 : காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
விடை:
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
2.பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
i) கொண்டல் – 1. மேற்கு
ii) கோடை – 2. தெற்கு
iii) வாடை – 3. கிழக்கு
iv) தென்றல் – 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
விடை:
ஆ) 3, 1, 4, 2
குறுவினா
1.‘நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’
– இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
விடை:
உயிர்களின் சுவாசம் காற்று!
காற்றின் சுவாசம் மரம்!
தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம்!
சிறுவினா
1.உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்……… முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால் ……….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
விடை:
• நானே! நீர்
• உலகில் முக்கால் பாகம் நான்
• நான் இல்லை என்றால் உலகம் இல்லை
• ஆதவனின் அணைப்பில் கருவுற்று
மேகமாய் வளர்ந்து
மழையாய் பிறப்பேன் நான்
• விண்ணிலிருந்து நான் விழுந்தால்
• என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
• மலையில் விழுந்து
நதியில் ஓடி
கடலில் சங்கமிக்கும்
சரித்திர நாயகன் நான்.
2.சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.
விடை:
மின் விசிறிக் காற்று : நண்பா! வா எங்கெல்லாம் சுற்றித் திரிந்து வருகிறாய்? என்னைப் போல் நிலையாக ஓரிடத்திலிருந்து வீசக் கூடாதா.
சோலைக்காற்று : நீ ஓரிடத்தில் இருந்து நிலையாக வீசினாலும் உன்னை இயக்க ஒருவர் தேவை. அது மட்டுமல்லாமல் நீ கொடுக்கும் வெப்பக்காற்றை மனிதர்கள் வேறு வழியின்றி பயன்படுத்துகின்றனர். மின்சாரம் தடைப் பட்டாலும் மனிதர்கள் உன்னை இயக்க முடியாது.
மின் விசிறிக் காற்று : மனிதர்கள் உன்னை விரும்புகிறார்களா?
சோலைக்காற்று : ஆம், நான் மக்களுக்குக் குளிர்ந்த காற்றைக் கொடுக்கிறேன். என்னிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர். காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்திலும் தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது. புதுப்பிக்கக் கூடிய வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
மின் விசிறிக் காற்று : இத்தனை சிறப்புகள் கொண்ட உன்னை வைத்து ஒரு புது மொழியை உலகிற்குக் கூறப்போகிறேன்.
சோலைக்காற்று : அப்படியா! அப்புது மொழி யாது?
மின் விசிறிக் காற்று : “காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள்”.
நெடுவினா
1.மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
– கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
விடை:
காற்றைப் பாராட்டல் :
மலர்ந்த மலராத பாதி மலரையும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.
கவி நயம்:
கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவி நயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
சான்று:
மோனை : வளரும் வண்ணமே
எதுகை : நதியில் பொதிகை
முரண் : மலர்ந்தும் X மலராத
விடிந்தும் x விடியாத
இயைபு : வண்ணமே அன்னமே
அணி : பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமையணி வந்துள்ளது)
Other Important Links for 10th Tamil Book Back Answers solutions:
Click here to download Samacheer Kalvi 10th Tamil Book Back Answers – 10th Tamil Book Back Answers
Click here to download the 10th Book Back Answers Guide for all subjects – Samacheer Kalvi 10th Book Back Answers PDF