Samacheer Kalvi 10th Science Unit 7 Book Back Answers Tamil Medium PDF:
Tamil Nadu State board syllabus 10th Science Book PDF link and Book Back solution guide uploaded in our site governmentexams.co.in. Samacheer Kalvi 10th Standard Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and online link below. TN Class tenth Science New Syllabus Unit 7 – வேதியியல் – அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN class 10th Std Science Full textbook portion consists of 23 units. Check Unit-wise and Full Class 10th Science Book Back Answers Solutions Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 10th Science Unit 7 in Tamil Medium Book back answers below:
Book Back Question & Answers Solutions are listed below unit-wise under Physics, Chemistry, and Biology categories. Students preparing for Board Exam/ TNPSC/ TNTRB/ TET and looking for 10th Science Book Back can see and download the same as PDF.
For complete Samacheer Kalvi 10th Books PDF in English and Tamil Medium – Samacheer Kalvi 10th Books PDF
10th Science Book Back Answers in Tamil Medium:
10th Science Subject 1 Mark and 2 Mark Solutions 2022 are listed in order to make it easy for students to prepare for public exams. Check Physics, Chemistry, and Biology topics question & answers list below.
அலகு 7: அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back Answers in Tamil
Science (அறிவியல்)
அலகு 7 – அணுக்களும் மூலக்கூறுகளும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு :
1. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
அ) 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்
ஆ) 1ஹீலியம் அணு
இ) 2 கி ஹீலியம் அணு
ஈ) 1 மோல் ஹீலியம் அணு
2. கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
அ) குளுகோஸ்
ஆ) ஹீலியம்
இ) கார்பன்டை ஆக்சைடு
ஈ) ஹைட்ரஜன்
3. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2-ன் பருமன்
அ) 22.4 லிட்டர்
ஆ) 2.24 லிட்டர்
இ) 0.24 லிட்டர்
ஈ) 0.1 லிட்டர்
4. 1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை
அ) 28 amu
ஆ) 14 amu
இ) 28 கி
ஈ) 14 கி
5. 1 amu என்பது
அ) C-12ன் அணுநிறை
ஆ) ஹைட்ரஜனின் நிறை
இ) ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
ஈ) 0-16ன் அணு நிறை
6. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
அ) 12 கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஆ) ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஈ) ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
7. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
அ) 11.2 லிட்ட ர்
ஆ) 5.6 லிட்டர்
இ) 22.4 லிட்டர்
ஈ) 44.8 லிட்டர்
8. 20Ca40 தனிமத்தின் உட்கருவில்
அ) 20 புரோட்டான் 40 நியூட்ரான்
ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஈ) 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
9. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
அ) 16 கி
ஆ) 18 கி
இ) 32 கி
ஈ) 17 கி
10. 1 மோல் எந்த ஒரு பொருளும் …. மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்
அ) 6.023 × 1023
ஆ) 6.023 × 10-23
இ) 3.0115 × 1023
ஈ) 12.046 × 1023
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. இரு வேறு தனிமங்களின் அணுக்கள் ………….. நிறை எண்ணையும் ……………. அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.
விடை: ஒத்த, மாறுபட்ட
2. ஒரே ………………….. எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
விடை: நியூட்ரான்) (PTA-4)
3. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக …………….. முறையில் மாற்றலாம்.
விடை: செயற்கை தனிமமாக்கல்
4. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் ……………. எனப்படும்.
விடை: நிறை எண்
5. ஒப்பு அணுநிறை என்பது ……………… எனவும் அழைக்கப்படுகிறது.
விடை: திட்ட அணு நிறை
6. ஹைட்ரஜனின் சராசரி அணு நிறை = ………
விடை: 1.008 amu
7. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை ……….. எனப்படும்.
விடை: ஒத்த அணு மூலக்கூறுகள்
8. ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் …………….. ஆகும்.
விடை: அணுக்கட்டு எண்
9. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ……………. மி.லி. இடத்தை அடைத்துக்கொள்ளக்கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
விடை: 22400
10. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ……….
விடை: 4
III. பொருத்துக.
1. 8 கி O2 | 4 மோல்கள் |
2. 4 கி H2 | 0.25 மோல்கள் |
3. 52 கி He | 2 மோல்கள் |
4. 112 கி N2 | 0.5 மோல்கள் |
5. 35.5 கி Cl2 | 13 மோல்கள் |
விடை ; 1 – D, 2 – A, 3 – B, 4 – E, 5 – E |
IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)
1. இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்
விடை: சரி.
2. மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.
விடை: தவறு – மந்த வாயுக்கள் ஓரணு தனிமங்கள்.
3. தனிமங்களின் கிராம் அணுநிறைக்கு அலகு இல்லை.
விடை: தவறு – தனிமங்களின் கிராம் அணு நிறையை கிராமில் குறிப்பிடலாம்.
4. 1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும்.
விடை: சரி.
5. CO2ன் மூலக்கூறு நிறை 42 கி.
விடை: தவறு – CO2-ன் மோலார் நிறை 44 கி.
V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ள பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.
அ) A மற்றும் R சரி. R, A ஐ விளக்குகிறது
ஆ) A சரி R தவறு.
இ) A தவறு R சரி.
ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.
1. கூற்று A: அலுமினியத்தின் ஒப்பு அணுநிறை 27.
காரணம் R: ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன்-12ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்.
விடை:
ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.
2. கூற்று A: குளோரினின் ஒப்பு மூலக்கூறு நிறை 35.5 amu.
காரணம் R: குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.
விடை:
இ) A தவறு R சரி.
VI. சுருக்கமாக விடையளி
1. ஒப்பு அணுநிறை – வரையறு.
விடை:
- ஒரு தனிமத்தின் ஒப்பு அணுநிறை என்பது அத்தனிமத்தின் சராசரி அணு நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
- இது ‘Ar’ என்று குறிப்பிடப்படுகிறது.
- இதனை திட்ட அணு எடை’ எனவும் அழைப்பர்.
2. ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.
விடை:
ஆக்ஸிஜனின் ஐசோடோப்புகள்
3. அணுக்கட்டு எண் – வரையறு.
விடை:
- மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் ” அணுக்கட்டு எண்’ ஆகும்.
- இவை இரண்டு வகைப்படும். அவை
- ஓரணு மூலக்கூறு,
- ஈரணு மூலக்கூறு,
- மூவணு மூலக்கூறு,
- பல அணு மூலக்கூறு.
4. வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டு கொடு.
விடை:
- HCl (ஹைட்ரஜன் குளோரைடு)
- CO (கார்பன் மோனாக்சைடு)
5. வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
விடை:
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு மோல் வாயுவானது 22.4 லிட்டர் அல்லது 22400 மி.லி. பருமனை ஆக்கிரமிக்கும்.
- இது மோலார் பருமன் எனப்படும்.
6. அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கண்டறிக.
விடை:
அம்மோனியாவின் மூலக்கூறு வாய்ப்பாடு = NH3
NH3ன் கிராம் மூலக்கூறு நிறை
= [(14) + (3 × 1)] = 17 கி
அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபு
அம்மோனியாவின் மூலக்கூறு நிறை அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபு = 82.35%
VII. விரிவாக விடையளி
1. 0.18கிநீர்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
நீரின் நிறை = 0.18கி
தீர்வு:
மூலக்கூறுகளின் எண்ணிக்கை
2. N2 + 3H2 → 2 NH3(N = 14, H = 1)
விடை:
28, 6, 34.
3. மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக.
அ) 27 கி அலுமினியம்
ஆ) 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl
விடை:
அ) 27 கி அலுமினியம்
மோல்களின் எண்ணிக்கை
ஆ) 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl
மோல்களின் எண்ணிக்கை
4. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக. (Sep.20)
விடை:
- அணு என்பது பிளக்கக்கூடிய துகள்
- ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன.
- வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறைகளைப் பெற்றுள்ளன.
- அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக மாற்ற முடியும்.
- அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
- அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்
- ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலை கணக்கிட முடியும்.
5. ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.
விடை:
ஒப்பு மூலக்கூறு நிறை:
ஒரு வாயு அல்லது ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை என்பது ஒரு மூலக்கூறு வாயு அல்லது ஆவியின் நிறைக்கும், ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் இடையே உள்ள விகிதமாகும்.
ஆவி அடர்த்தி:
(i) மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி எனப்படும்.
(ii)
(iii) அவகாட்ரோ விதிப்படி சம பருமனுள்ள வாயுக்கள் அனைத்தும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
(iv)
(v) n = 1 எனக் கொண்டால்
(vi) ஹைட்ரஜன் ஈரணு மூலக்கூறு ஆதலால்,
(vii) நாம் ஆவி அடர்த்தியை மூலக்கூறு நிறையுடன் கீழ்கண்டவாறு தொடர்புபடுத்தலாம்.
(viii) சமன்பாடு 2-ஐ 1-ல் பிரதியிட,
(ix) குறுக்கே பெருக்க, 2 × ஆவி அடர்த்தி = வாயு (அ) ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை (அ) ஒப்பு மூலக்கூறு நிறை = 2 × ஆவி அடர்த்தி
Other Important links for 10th Science Book Answers Solutions in Tamil:
Click Here for Complete 10th Science Samacheer Kalvi Book Back Answers – 10th Science Book Back Solutions in Tamil
For Class 10th standard Science Unit 8 Book Back question and answers, check the link – Samacheer Kalvi 10th Science Unit 8 in Tamil