Samacheer Kalvi 10th Science Unit 20 Book Back Answers Tamil Medium PDF:
Tamil Nadu State board syllabus 10th Science Book PDF link and Book Back solution guide uploaded in our site governmentexams.co.in. Samacheer Kalvi 10th Standard Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and online link below. TN Class tenth Science New Syllabus Unit 20 உயிரியல் – இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN class 10th std Science full textbook portion consists of 23 units. Check Unit-wise and Full Class 10th Science Book Back Answers Solutions Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 10th Science Unit 20 in Tamil Medium Book back answers below:
Book Back Question & Answers Solutions are listed below unit-wise under Physics, Chemistry, and Biology categories. Students preparing for Board Exam/ TNPSC/ TNTRB/ TET and looking for 10th Science Book Back can see and download the same as PDF.
For complete Samacheer Kalvi 10th Books PDF in English and Tamil Medium – Samacheer Kalvi 10th Books PDF
10th Science Book Back Answers in Tamil Medium:
10th Science Subject 1 Mark and 2 Mark Solutions 2022 are listed in order to make it easy for students to prepare for public exams. Check Physics, Chemistry, and Biology topics question & answers list below.
அலகு 20: இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back Answers in Tamil
Science (அறிவியல்)
அலகு 20 – இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
அ) போத்துத் தேர்வு முறை
ஆ) கூட்டுத் தேர்வு முறை
இ) தூய வரிசைத் தேர்வு முறை
ஈ) கலப்பினமாக்கம்
2. பூசா கோமல் என்பது ____________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
அ) கரும்பு
ஆ) நெல்
இ) தட்டைப்பயிறு
ஈ) மக்காச் சோளம்
3. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது _____________ இன் ரகமாகும்.
அ) மிளகாய்
ஆ) மக்காச்சோளம்
இ) கரும்பு
ஈ) கோதுமை
4. தன்னுடைய 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ____________ ஆகும்.
அ) TR 8
ஆ) IR 24
இ) அட்டாமிட்டா 2
ஈ) பொன்னி
5. உயிர்த்தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
அ) உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
ஆ) வாழும் உயிரினங்கள்
இ) வைட்டமின்கள்
ஈ) (அ) மற்றும் (ஆ)
6. DNA வை வெட்டப் பயன்படும் நொதி [PTA-2, Sep.20]
அ) கத்திரிக்கோல்
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
இ கத்தி
ஈ) RNA நொதிகள்
7. r DNA என்பது ____________
அ) ஊர்தி DNA
ஆ) வட்ட வடிவ DNA
இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை .
ஈ) சாட்டிலைட் DNA
8. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _______ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
அ) ஓரிழை
ஆ) திடீர்மாற்றமுற்ற
இ) பல்லுருத்தோற்ற
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்
9. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ____________ என அழைக்கப்படுகின்றன.
அ) அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
ஆ) மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
இ) திடீர் மாற்றம் அடைந்தவை
ஈ) (அ) மற்றும் (ஆ)
10. ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n=6x=42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ஆகும்.
அ) n = 7 மற்றும் x = 27
ஆ) n = 21 மற்றும் x = 21
இ) n = 7 மற்றும் x = 7
ஈ) n = 21 மற்றும் x = 7
II. கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. ______________ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
விடை: தாவர பயிர்ப் பெருக்கம்
2. புரதம் செறிந்த கோதுமை ரகம் _____________ ஆகும்.
விடை: அட்லஸ் 66
3. ______________ என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.
விடை: கால்ச்சிசின்
4. விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை _____________ எனப்படும்.
விடை: உயிரூட்டச் சத்தேற்றம்
5. நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ___________ என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
விடை: அட்டாமிட்டா 2
6. ______________ தொழில் நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்தி செய்ய வழிவகை செய்துள்ளது.
விடை: ஜீன் குளோனிங்
7. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை _____________ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.
விடை: கார வரிசை (பேலின்ட்ரோம் வரிசை)
8. ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ____________ இடையே காணப்படும்.
விடை: ஒற்றைக் கரு இரட்டையர்கள்
9. வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு _____________ ஆகும்.
விடை: குருத்தணுக்கள்
10. ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, _________ உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
விடை: பிளாஸ்மிட் .
III. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக.
1. கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
விடை: சரி.
2. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.
விடை: தவறு – இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மய பயிர்ப்பெருக்கம் எனப்படும்.
3. உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்.
விடை: தவறு – உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படும்.
4. இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
விடை: தவறு – இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் இரும்புச் சத்தின் தரத்தை தீர்மானிக்கிறது.
5. கோல்டன் ரைஸ் ஒரு கலப்புயிரி.
விடை: தவறு – கோல்டன் ரைஸ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி.
6. பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது.
விடை: சரி.
7. செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும்.
விடை: தவறு – செயற்கை கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே (ஆய்வுக்கூடத்தில் நடைபெறும் கருவுறுதலாகும்.
8. DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பவரால் உருவாக்கப்பட்டது.
விடை: சரி.
9. மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.
விடை: தவறு – மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்சன் நொதிகளைக் குறிக்கும்.
IV. பொருத்துக
விடை:
1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ, 6 – ஏ, 7 – ஊ, 8 – எ
V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள்.
பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1. கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.
காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
விடை:
இ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
2. கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
காரணம்: சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை அது ஊக்குவிக்கிறது.
விடை:
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.
3. கூற்று: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது. [PTA-4]
காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத்தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத்தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன.
விடை:
இ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
VI. ஒரே வாக்கியத்தில் விடையளி.
1. அதிக நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த கோதுமை ரகத்தின் பெயரை எழுதுக.
விடை:
டிரிட்டிக் கேல் (6n).
2. நெல்லில் அரைக் குள்ள வகைகள் அறிமுகம் செய்யப்படுள்ளன. இது நெல்லில் காணப்படும் குள்ள மரபணுவால் (ஜீனால்) சாத்தியமானது. இந்த குள்ள மரபணுவின் (ஜீன்) பெயரை எழுதுக.
விடை:
டீ-ஜியோ -வூ-ஜென் (DGWG) என்ற குள்ள நெல் வகையின் ஜீன், sd1(semi-dwarf).
3. மரபுப் பொறியியல் – வரையறு.
விடை:
ஜீன்களை நாம் விரும்பியபடி கையாள்வதும் புதிய உயிர்களை உருவாக்க ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிருக்கு இடம் மாற்றுதலும் மரபுப் பொறியியல் எனப்படும்.
4. குருத்தணுக்களின் வகைகளை எழுதுக. [PTA-2]
விடை:
- கருநிலைக் குருத்தணுக்கள்,
- முதிர் குருத்தணுக்கள் (அ) உடலக் குருத்தணுக்கள்.
5. அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் என்றால் என்ன? [PTA-6]
விடை:
மரபுப் பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது, அல்லது ஜீன்களை விரும்பியபடி கையாள்வது ஆகும். புதிதாக உள் நுழைக்கப்படும் ஜீன் ‘அயல் ஜீன்’ எனப்படும்.
இம்முறையில் மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய ஜீனைப் பெற்ற தாவர, விலங்குகள் மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் எனப்படும்.
VII. சுருக்கமாக விடையளி :
1. நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி. [PTA-6]
விடை:
- வைரஸ்கள், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன.
- இது பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக் கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி அதே வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்திச் செய்வது அவசியமாகிறது.
- பயிர்ப்பெருக்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற சில ரகங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
2. இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக. [PTA-4]
விடை:
- ஹிம்கிரி: இலை மற்றும் பட்டைத்துரு நோய், ஹில்பண்ட் நோய்களுக்கெதிரான எதிர்ப்புத் தன்மை பெற்றது.
- அட்லஸ் 66: புரதம் செறிந்த கோதுமை ரகம்.
- சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா: அதிக மகசூல் தருகிற மற்றும் அரைக் குள்ள உயரமுடைய ரகம்.
3. லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரை எழுதுக. [GMQP-2019]
விடை:
லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச் சோள ரகங்கள்:
- புரோட்டினா
- சக்தி மற்றும்
- ரத்னா .
4. வேறுபடுத்துக.
அ) உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
ஆ) மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்
விடை:
அ)
5. DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.
விடை:
டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் :
- டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை அடையாளம் காணப் பயன்படுகிறது.
- இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பதில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
- இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள் பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.
6. குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல் செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன?
விடை:
- சில நேரங்களில் நமது உடலின் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஜீன் கோளாறுகளினாலோ, நோய்களாலோ அல்லது விபத்தினாலோ நிரந்தரமான சேதமடையலாம்.
- இந்த சூழ்நிலைகளில் மேற்கண்ட குறைபாடுகளை சரிசெய்ய குருத்தணு சிகிச்சை பயன்படும்.
- பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் போன்ற நரம்புச் சிதைவு குறைபாடுகளை குணப்படுத்த நரம்புக் குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டு சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன.
7. உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.
விடை:
VIII. விரிவாக விடையளி
1. விலங்குகளில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை? [PTA-1 & 5]
விடை:
கலப்பின சேர்க்கை மூலம் உயர்தரப் பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ஹெட்டிரோசிஸ் அல்லது கலப்பின வீரியம் எனப்படும்.
விலங்குப் பெருக்கத்தில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் :
- கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரித்தல்.
- கோழிகளில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல்
- உயர் தர இறைச்சியை உற்பத்திச் செய்தல்
- வீட்டு விலங்குகளின் வளர் வீதத்தை அதிகப்படுத்துதல்.
2. சடுதிமாற்றத்தை எடுத்துக்காட்டுடன் விவரி.
விடை:
ஒரு உயிரினத்தின் DNA-வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூ லமாக, உயிரினங்களில் மாற்றங்கனை ஏற்படுத்தும் செயல் ஆகும். சடுதிமாற்றத்துக்கு உட்படும் உயிரினம் “சடுதிமாற்றமுற்ற உயிரினம்” எனப்படும்.
சடுதிமாற்றத்தைத் தூண்டும் காரணிகள் “மியூடாஜென்கள்” அல்லது “சடுதிமாற்றத் தூண்டிகள்” எனப்படும். சடுதி மாற்றத் தூண்டிகள் இரு வகைப்படும். அவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் மற்றும் வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள் ஆகும்.
1. இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும் கதிர் வீச்சுகளான X-கதிர்கள் a, B மற்றும் / கதிர்கள், புறஊதாக் கதிர்கள் மற்றும் வெப்பநிலை போன்றவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும்.
2. வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும் வேதிப்பொருட்கள் வேதியியல்
சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும். எ.கா. கடுகு வாயு மற்றும் நைட்ரஸ் அமிலம். பயிர் மேம்பாட்டிற்கு தூண்டப்பட்ட சடுதிமாற்றத்தைப் பயன்படுத்துவதே “சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம்” எனப்படும்.
சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கத்தின் சாதனைகள்
- ஸொனாரா – 64 என்ற கோதுமை ரகத்தில் இருந்து காமாக்கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டது.
- உவர் தன்மையைத் தாங்கும் திறன் மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத் தன்மை பெற்ற அட்டாமிட்டா 2 அரிசி ரகம்.
- கடினமான கனி உறை கொண்ட நிலக்கடலை ரகம்.
3. உயிரூட்டச் சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
விரும்பத் தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே உயிரூட்டச் சத்தேற்றம் எனப்படும். இதன் மூலம் உருவாக்கப்பட்ட சில பயிர் ரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்களான புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா (இந்தியாவில் உருவாக்கப்பட்டவை).
- புரதம் செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66.
- இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம்.
- வைட்டமின் A செறிந்த கேரட், பூசணி மற்றும் கீரை ரகங்கள்.
4. ஜீன் குளோனிங் தொழில்நுட்பத்தைப் படத்துடன் விவரி.
விடை:
குளோன் என்பது ஒரு உயிரினத்தின் நகல் ஆகும். குளோனிங் என்பது மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறையாகும்.
ஜீன் குளோனிங் முறையில், ஒரு ஜீன் அல்லது டி.என்.ஏ துண்டானது பாக்டீரிய செல்லினுள் செலுத்தப்பட்டு, பாக்டீரிய செல் பகுப்படையும் போது அதனுடன், உட்செலுத்தப்பட்ட டி.என்.ஏ துண்டு நகல் பெருக்கம் அடைவதாகும்.
ஜீன் குளோனிங் செயல் நுட்பத்தின் அடிப்படை நிகழ்வுகளாவன.
- ரெஸ்ட்ரிக்ஸன் நொதியைப் பயன்படுத்தி விரும்பிய டி.என்.ஏ துண்டைப் பிரித்தெடுத்தல்.
- டி.என்.ஏ. துண்டைத் தகுந்த கடத்தியினுள் (பிளாஸ்மிட்) நுழைத்து மறுசேர்க்கை டி.என்.ஏக்களை’ (rDNA) உருவாக்குதல்.
- விருந்தோம்பி பாக்டீரிய செல்லின் உள்ளே மறுசேர்க்கை டி.என்.ஏ வை உட்புகுத்துதல் உருமாற்றம்).
- உருமாற்றமடைந்த விரும்தோம்பி செல்களைத் தேர்ந்தெடுத்து மறுசேர்க்கை டி.என்.ஏ (rDNA) வை பாக்டீரிய செல் பெருக்கம் மூலம் நகல் பெருக்கம் செய்தல்.
- விருந்தோம்பியின் செல்லில் புதிய ஜீன் தனது பண்புகளை வெளிப்படுத்துதல்.
இம்முறையின் மூலம் பல நொதிகள் ஹார்மோன்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கலாம்.
5. மருத்துவ துறையில் உயிர்தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
மரபுப் பொறியியல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பு மிக்க புரதங்கள் அல்லது பாலிபெப்டைடுகள் உருவாக்கப்படுகின்றன. இவை பல நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
rDNA தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள்
- இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
- வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்
- ஹீமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய்க் கட்டுப்பாட்டிற்கான ‘இரத்த உறைதல் காரணிகள்’.
- திசு பிளாஸ்மினோஜன் தூண்டி, (இரத்தம் உறைதலைத் தடுக்கும் காரணி) இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பைத் தவிர்க்க உதவுகின்றது.
- ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெளி நாய்க்கடி (ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்.
IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்
1. பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
விடை:
அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை உற்பத்திச் செய்யும் பயிர்ப்பெருக்க முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- புதிய வகைத் தாவரங்களின் அறிமுகம்
- தேர்வு செய்தல்
- பன்மய பயிர்ப்பெருக்கம்
- சடுதிமாற்றப் பயிர்ப்பெருக்கம்
- கலப்பினமாக்கம்
2. ‘இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது.’ காரணங்கள் கூறு.
விடை:
வளரும் நாடுகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயல்முறையே பசுமைப்புரட்சி ஆகும்.
மேலும் நோய் எதிர்ப்பு பூச்சிகள் மற்றும் தீங்குயில்லா மேம்பட்ட ஊட்டச்சத்து போன்றவற்றின் மூலம் பசுமைப்புரட்சி செய்து அதிக மகசூல் தரும் தாவரங்களை உருவாக்கினர். இதனால் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவை
- சில நிலங்களில் ஒரே வகையான தாவரங்களையே பயிரிடுகின்றனர்.
- பூச்சிக் கொல்லிகள் வேதியியல் சேர்மங்களால் தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துகின்றனர்.
- அதிக விவசாயிகளுக்கு பணம் செலவிட முடியவில்லை
- சில வகையான தாவரங்களை பயிரிடுவதால் மண்ணின் தரம் பாதிக்கப்படுவதாக சூழ்நிலையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது.
- இவை பசுந்தாள் உரம், மண்புழு உரம், வீட்டுக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட உரம், போன்றவற்றை பயன்படுத்துவதால் சூழ்நிலையையும் மண் வளத்தையும் பாதிப்படையச் செய்ய போவதில்லை.
- தாவரங்களின் வேறுபட்ட சிற்றினங்களை வளர்ப்பதால் நோய்த் தடுப்பாற்றல் ஏற்படுகிறது.
- மேலும் ஊடுபயிர் பயிரிடுதல் போன்றவற்றினால் பல்லுயிர் நன்மை பெறுகிறது. எனவே இயற்கை விவசாயம் சிறந்தது.
3. பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது. இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.
விடை:
- இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் பன்மயம் எனப்படும். ஜீன்கள் அதிகமாகின்றன. எனவே காய்கறிகளும் பழங்களும் அளவில் பெரிதாக கிடைக்கிறது.
- மேலும் பழங்களும் காய்கறிகளும் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
- மேலும் அவற்றில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே பன்மயம் இராட்சச தன்மையை பண்புகளால் கொண்டது எனலாம்.
4. P என்ற ஜீன் வைட்டமின் A உற்பத்திக்குத் தேவைப்படுகிறது. இது ‘R’ என்ற மரபுப்பண்பு மாற்றப்பட்ட தாவரத்தை உற்பத்திச் செய்ய ‘Q’ வின் ஜீனோமுடன் இணைக்கப்படுகிறது.
அ) P,Q மற்றும் R என்பன யாவை?
ஆ) இந்தியாவில் Rன் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
அ) P என்பது பீட்டா கரோட்டின் ஜீன்
Q என்பது சாதாரண அரிசி
R என்பது ‘கோல்டன் ரைஸ்’
ஆ) இந்தியாவில் R-ன் முக்கியத்துவம்:
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ பீட்டா கரோட்டினை உற்பத்திச் செய்யும்.
- வைட்டமின் A குறைபாட்டைத் தவிர்க்கும்.
Other Important links for 10th Science Book Answers Solutions in Tamil:
Click Here for Complete 10th Science Samacheer Kalvi Book Back Answers – 10th Science Book Back Solutions in Tamil
For Class 10th standard Science Unit 21 Book Back question and answers, check the link – Samacheer Kalvi 10th Science Unit 21 in Tamil