Samacheer Kalvi 10th Science Unit 12 Book Back Answers Tamil Medium PDF:
Tamil Nadu State board syllabus 10th Science Book PDF link and Book Back solution guide uploaded in our site governmentexams.co.in. Samacheer Kalvi 10th Standard Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and online link below. TN Class tenth Science New Syllabus Unit 12 உயிரியல் – தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN class 10th std Science full textbook portion consists of 23 units. Check Unit-wise and Full Class 10th Science Book Back Answers Solutions Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 10th Science Unit 12 in Tamil Medium Book back answers below:
Book Back Question & Answers Solutions are listed below unit-wise under Physics, Chemistry, and Biology categories. Students preparing for Board Exam/ TNPSC/ TNTRB/ TET and looking for 10th Science Book Back can see and download the same as PDF.
For complete Samacheer Kalvi 10th Books PDF in English and Tamil Medium – Samacheer Kalvi 10th Books PDF
10th Science Book Back Answers in Tamil Medium:
10th Science Subject 1 Mark and 2 Mark Solutions 2022 are listed in order to make it easy for students to prepare for public exams. Check Physics, Chemistry, and Biology topics question & answers list below.
அலகு 12: தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Book Back Answers in Tamil
Science (அறிவியல்)
அலகு 12 – தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் ………… பகுதியில் காணப்படுகிறது.
அ) புறணி
ஆ) பித்
இ) பெரிசைக்கிள்
ஈ) அகத்தோல்
விடை: ஈ) அகத்தோல்
2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலைகள்
ஈ.) மலர்கள்
விடை: ஆ) தண்டு
3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது …………. எனப்படும்.
அ) ஆரப்போக்கு அமைப்பு
ஆ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
இ) ஒன்றிணைந்தவை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: இ) ஒன்றிணைந்தவை
4. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது [GMQP-2019; Sep.20]
அ) கார்போஹைட்ரேட்
ஆ) எத்தில் ஆல்கஹால்
இ) அசிட்டைல் கோ.ஏ
ஈ) பைருவேட்
விடை: ஆ) எத்தில் ஆல்கஹால்
5. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது [PTA-3; Qy-2019]
அ) பசுங்கணிகம்
ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
இ) புறத்தோல் துளை
ஈ) மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
விடை: ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)]
6. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது? [PTA-4]
அ) ATP யானது ADP யாக மாறும் போது
ஆ) CO2 நிலை நிறுத்தப்படும் போது
இ) நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
ஈ) இவை அனைத்திலும்.
விடை: இ) நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
II. கோடிட்ட இடங்களை நிரப்பு:
1. புறணி இதனிடையே உள்ள து ……………
விடை: எபிபிளமா மற்றும் அகத்தோல்
2. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் காணப்படும் வாகுலார் கற்றை ………….
விடை: ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை
3. கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்……………
விடை: சைட்டோ பிளாசம்
4. ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் ……….. லிருந்து கிடைக்கிறது.
விடை: நீர்
5. செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை …..
விடை: மைட்டோகாண்டிரியா
III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக):
1. தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்.
விடை:
தவறு. சரியான கூற்று: தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு சைலம்.
2. தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்.
விடை: சரி.
3. ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பிரியம் காணப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இருவித்திலை தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.
4. இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இருவித்திலைத் தாவர இலையின் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
5. இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.
விடை: சரி.
6. காற்று சுவாசத்தைவிட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் குறைவான ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
IV. பொருத்துக:
விடை:
1-இ,
2- ஈ,
3-அ,
4-உ,
5-ஆ
V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.
1. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
விடை:
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்திருந்தால், அதற்கு ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்று பெயர்.
2. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
விடை:
ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான கார்பன், வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடிலிருந்து பெறப்படுகிறது.
3. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது? (PTA-5)
விடை:
காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி கிளைக்காலிஸிஸ் ஆகும்.
4. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரண மடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
விடை:
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரண மடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் காற்றில்லா சுவாசம்.
VI. சுருக்கமாக விடையளி.
1. இருவித்திலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார் கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
விடை:
- அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த தண்டின் மையப்பகுதி ஸ்டீல் ஆகும். இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் காணப்படுகின்றன.
- வாஸ்குலார் கற்றைகள் : வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை, மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை.
2. இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
இலையிடைத்திசு: மேல்புறத் தோலுக்கும் கீழ்புறத் தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும். இதில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இருவகை செல்கள் உள்ளன.
- பாலிசேட் பாரன்கைமா: மேல்புறத் தோலுக்கு கீழே காணப்படுகிறது. நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள், அதிக பசுங்கணிகங்களுடன் காணப்படுகிறது. இச்செல்கள் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன.
- ஸ்பாஞ்சி பாரன்கைமா: இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது. இதில் கோளவடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
3. ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
விடை:
4. மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
விடை:
தாவரங்களில் உள்ள திசுத் தொகுப்புகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை
- மேல் திசுத்தொகுப்பு அல்லது புறதோல் திசுத்தொகுப்பு.
- அடிப்படை அல்லது தளத்திசு தொகுப்பு.
- வாஸ்குலார் திசுத்தொகுப்பு.
5. 1 ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது? [PTA-3]
விடை:
ஒளிச்சேர்க்கை:
- ஒளிச்சேர்க்கை என்பது தற்சார்பு ஊட்ட உயிரினங்களான, ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகும்.
- இந்த நிகழ்ச்சியில் கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால், சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தில் கார்போஹைட்ரேட் தயாரிக்கப்படுகிறது.
- இந்நிகழ்ச்சியின் போது ஆக்ஸிஜன் வெளியேற்றப்படுகிறது.
குளோரோபில் கார்பன் டை ஆக்சைடு + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன் - ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள்:
பசுந்தாவரங்களில் ஒளிச்சேர்க்கையானது இலைகள், பசுமையான தண்டுகள் மற்றும் மலர் மொட்டுகள் ஆகிய உறுப்புகளில் நடைபெறுகிறது.
6. ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
விடை:
- ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தில் உள்ளே நடைபெறுகிறது. ஒளிசார்ந்த வினை அல்லது ஒளிவினை பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது.
- இந்நிகழ்வு (ஒளிவினை) சூரிய ஒளியின் முன்னிலையில் தைலக்காய்டு சவ்வில் நடைபெறுகிறது. ஒளிச் சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH,-வை உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள் வினைக்குப் பயன்படுகின்றன.
- ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் போது ஒளிசார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH, உதவியுடன் CO2 ஆனது, கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
- எனவே, ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஒளிவினை நடைபெற வேண்டும்.
7. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
விடை:
கார்பன்டை ஆக்சைடு + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன்
VII. விரிவான விடையளி:
1. வேறுபாடு தருக.
அ. ஒரு வித்திலைத் தாவர வேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர் [Sep.20]
ஆ. காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் (GMQP-2019)
விடை:
அ) ஒரு வித்திலைத் தாவர வேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர்
ஆ) காற்று சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் வேறுபாடு
2. காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன ? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
விடை:
காற்று சுவாசத்தின் படிநிலைகள் :
அ. கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு):
- இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும்.
- இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது.
- இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.
ஆ. கிரப்சுழற்சி :
- இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் நடைபெறுகிறது (உட்கூழ்மம் – matrix).
- கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும்.
- இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.
இ) எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு:
- மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு உள்ளது.
- கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH2 மற்றும் FADH2 வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணமடைகின்றன.
- இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP யால் எடுத்துக் கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகிறது.
- இது ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும்.
- இந்நிகழ்ச்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக் கொண்டு நீராக (H2O) ஒடுக்கமடைகிறது.
3. ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விருநிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
விடை:
ஈடுபடும் மூலப்பொருட்கள் : ஒளி சார்ந்த வினை – ஒளிச்சேர்க்கை நிறமி, சூரிய ஒளி ஒளிசாரா வினை – ATP, NADPH2, CO2
இறுதிப்பொருட்கள் : ஒளி சார்ந்த வினை – ATP, NADPH2 ஒளிசாரா வினை – கார்போஹைட்ரேட்
நடைபெறும் இடம் : ஒளிசார்ந்தவினை – கிரானாவில் நடைபெறுகிறது. ஒளிசாரா வினை – ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது.
VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்:
1. ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல் நிகழ்ச்சியாகும்.
அ) ஒளிவினையின் போதும், இருள் வினையின் போதும் மனிதனுக்கு தேவையான முக்கிய பொருள்கள் கிடைக்கின்றன. அவை யாவை? (PTA-5)
ஆ) ஒளிச்சேர்க்கையின் உயிர்வேதி வினையில் ஈடுபடும் சில வினைபடு பொருட்கள் : இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றன. அந்த வினைபடு பொருட்களை குறிப்பிடுக.
விடை:
அ)
ஆ) வினைபடுபொருள்கள் : சூரிய ஒளி, நீர், ஒளிச்சேர்க்கை நிறமி, ATP, CO2 மற்றும் NADPH2
2. பசுங்கணிகத்தின் எந்தப்பகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?
விடை:
- ஒளிச்சார்ந்த செயல் பசுங்கணிகத்தின் கிரானா பகுதியில் நடைபெறுகிறது.
- கால்வின் சுழற்சி பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.
Other Important links for 10th Science Book Answers Solutions in Tamil:
Click Here for Complete 10th Science Samacheer Kalvi Book Back Answers – 10th Science Book Back Solutions in Tamil
For Class 10th standard Science Unit 13 Book Back question and answers, check the link – Samacheer Kalvi 10th Science Unit 13 in Tamil