8th Social Science Geography Unit 5 Book Back Questions Tamil Medium with Answers:
Samacheer Kalvi 9th Standard New Social Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 8 Social New Syllabus 2022 Geography Unit 5 – இடர்கள் Book Back Solutions available for both English and Tamil mediums. TN Samacheer Kalvi 8th Std Social Science History Book Portion consists of 08 Units, Geography Book Portions Consists of 08 Units, Civics Book Portions Consists of 07 Units, Economics Units Consists of 02 Units. Check Unit-wise and Full Class 8th Social Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 8th Geography Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 8th Standard Tamil Book Back Answers and 8th Social Science guide Book Back Answers PDF Tamil Medium. See below for the New 8th Social Science Book Back Questions with Answer PDF:
8th Samacheer Kalvi Social Science Book Back Answers in Tamil Medium PDF:
Tamil Medium 8th Samacheer Kalvi Social Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.
அலகு 05: இடர்கள் Book Back Answers in Tamil
Geography (புவியியல்) – அலகு 05
இடர்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ___________
அ) 78.09%
ஆ) 74.08%
இ) 80.07%
ஈ) 76.63%
விடை:
அ) 78.09%
2. இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______________ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
அ) 1990
ஆ) 2004
இ) 2005
ஈ) 2008
விடை:
ஆ) 2004
3. சுனாமி என்ற சொல் ____________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
அ) ஹிந்தி
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) ஜெர்மன்
விடை:
இ) ஜப்பானிய
4. புவி மேற்பரப்பு நீருக்கு ____________ எடுத்துக்காட்டாகும்.
அ) ஆர்டீசியன் கிணறு
ஆ) நிலத்தடி நீர்
இ) அடி பரப்பு நீர்
ஈ) ஏரிகள்
விடை:
ஈ) ஏரிகள்
5. பருவமழை பொய்ப்பின் காரணமாக ____________ ஏற்படுகிறது.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) வறட்சி
இ) ஆவியாதல்
ஈ) மழைப்பொழிவு
விடை:
ஆ) வறட்சி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இடர்கள் __________ க்கு வழிவகுக்கிறது.
விடை:
பேரழிவு
2. நிலச்சரிவு _________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
இயற்கை
3. இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை _________ வகைகளாகப் பிரிக்கலாம்.
விடை:
எட்டு
4. தீவிரவாதம் __________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
மனிதனால் தூண்டப்பட்ட
5. நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் ____________ மாசுபடுத்திகளாகும்.
விடை:
முதல்நிலை
6. செர்னோபில் அணு விபத்து ___________ ஆண்டில் நடைபெற்றது.
விடை:
1986
III. பொருத்துக பட்டியல்
1. முதல்நிலை மாசுபடுத்திகள் | தீவிரவாதம் |
2. அபாயகர கழிவுகள் | சுனாமி |
3. நில அதிர்வு | காலாவதியான மருந்துகள் |
4. வானிலையியல் வறட்சி | சல்பர் ஆக்ஸைடுகள் |
5. மனிதனால் தூண்டப்பட்ட இடர் | மழைப் பொழிவு குறைதல் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – உ, 5 – அ |
IV. சுருக்கமாக விடையளி
1. ‘இடர்’ – வரையறு.
விடை:
இடர்:
ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் (Hazard) எனப்படும்.
இவை மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவோ அல்லது இயற்கையான நிகழ்வாகவோ இருக்கலாம்.
2. இடரின் முக்கிய வகைகள் யாவை?
விடை:
இடரின் முக்கிய வகைகள் (இந்தியா):
- நில அதிர்வு
- வெள்ளப்பெருக்கு
- சூறாவளிப் புயல்கள்
- வறட்சிகள்
- நிலச்சரிவுகள்
- அபாயகர கழிவுகள்
- காற்று மாசு
- நீர் மாசு (அல்லது)
- இயற்கை இடர்கள்
- மனிதனால் உருவாக்கும் இடர்கள்
- சமூக – இயற்கை இடர்கள்
3. அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
அபாயகரக் கழிவுகள்:
சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கழிவுகள் அபாயகரக் கழிவுகள் எனப்படும்.
முக்கிய அபாயகரக் கழிவுகள்:
- கதிரியக்க பொருட்கள்
- இரசாயனங்கள்
- மருத்துவ கழிவுகள்
- வெடிப் பொருட்கள்
- குடிசார் அபாயகர கழிவுகள்
- எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகள்
4. நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
விடை:
நமது நாட்டில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்:
- வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உத்திரப்பிரதேசம், வட பீகார், மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு.
- கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை இதர பகுதிகள்
5. வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
வறட்சியின் வகைகள்:
- வானிலையியல் வறட்சி
- நீரியியல் வறட்சி
- வேளாண் வறட்சி
6. மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?
விடை:
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் குடியிருப்புகளை அமைக்க கூடாது.
ஏனெனில்
பொதுவாக நிலச்சரவுகள் மலை அடிவாரப் பகுதிகளில் திடீரென்று ஏற்படும் அரிதான நிகழ்வாகும். செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கிய காரணங்களாகும்.
இமயமலைச் சரிவுகள், மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகள் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
V. வேறுபடுத்துக
1. இடர் மற்றும் பேரிடர் இடர்
விடை:
இடர் | பேரிடர் |
1. புவியிலுள்ள உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களை பாதிக்கக்கூடிய நிகழ்வை இடர் என்கிறோம் | வரையறுக்கப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் ஒரு அபாயகரமான நிகழ்வை பேரிடர் என்கிறோம் |
2. குறைவான இழப்பு மற்றும் மீள்வதற்கு குறைவான காலமே தேவைப்படுகிறது. | பேரிழப்பு மற்றும் மீள்வதற்கு நீண்ட காலமும் தேவைப்படுகிறது. |
2. இயற்கை மற்றும் செயற்கை இடர்கள்
விடை:
இயற்கை இடர்கள் | செயற்கை இடர்கள் |
1. இயற்கைக் காரணிகளால் உருவாகின்றன. இவ்வகையான இடர்களில் மனிதனின் பங்கு இருப்பதில்லை | மனிதர்கள் விரும்பத்தக்காத நடவடிக்கைகள் மூலமும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகளின் விளைவாகவும் ஏற்படுகின்றன. |
எகா : நில அதிர்வு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, பயுல்கள், வறிசடசி, நிலச்சரிவு, சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு | எகா : அபாயகரமான கழிவுகள், காற்று, நீர் நிலம் மாசடைதல், அணைக்கட்டு உடைதல், போர், கலவரங்கள், தீவிரவாத செயல்கள் |
3. வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி
விடை:
வெள்ளப்பெருக்கு | வறட்சி |
கனமழை மற்றும் கடல்களில் உருவாகும் பேரலைகளால் புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு பகுதி நீரினால் மூழ்கடிக்கப்படுதல் வெள்ளப்பெருக்கு எனப்படுகிறது | வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில்துறை மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நீர் பற்றாக்குறையே வறட்சி எனப்படுகிறது. |
4. நில அதிர்வு மற்றும் சுனாமி
விடை:
நில அதிர்வு | சுனாமி |
நில அதிர்வு என்பது புவியின் மேலாட்டில் தீடீரென எற்படும் கடும் அதிர்வாகும் | கடலடி நில அதிர்வு, கடலடி நிலச்சரிவு மற்றும் எரிமலை வெடிப்பு ஆகியவற்றின் காரணமாக கடலில் ஏற்படும் பேரலைக்கு சுனாமி என்று பெயர் |
VI. விரிவான விடையளி
1. காற்று மாசுபடுதலைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விடை:
காற்று மாசுபடுதல்:
உட்புற அல்லது வெளிப்புக் காற்றானது சில வாயுக்கள் மற்றும் திடப்பொருட்களின் சேர்க்கையால் அதன் இயற்கை பண்புகள் மற்றும் காற்றின் சதவீதங்கள் மாறுபடுவதை காற்று மாசுபடுதல் என்கிறோம்.
முதன்மை மாசுபடுத்திகள் என்பது ஒரு மூலத்தில் இருந்து நேரடியாக வெளியேற்றப்படும் மாசுவாகும்.
முதன்மை மாசுபடுத்திகள்:
- சல்பர் டை ஆக்சைடு
- நைட்ரஜன் ஆக்சைடு
- கார்பன் டை ஆக்சைடு
- துகள்ம பொருட்கள்
- பிற முதன்மை மாசுபடுத்திகள்
இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் நேரடியாக வெளியேற்றப்படுவதில்லை. ஆனால் மற்ற முதன்மை மாசுக்கள் வளிமண்டலத்தில் வினை புரிவதால் உருவாகுபவை ஆகும்.
இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்:
- தரைமட்ட ஓசோன்
- பனிப்புகை
2. நில அதிர்வை வரையறுத்து அதன் விளைவுகளைப் பட்டியலிடுக.
விடை:
நில அதிர்வு:
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும். இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு அலைகளை ஏற்படுத்துகிறது.
நில அதிர்வின் விளைவுகள்:
- புவிப்பரப்பில் ஏற்படும் அதிர்ச்சிகள்
- தரைப்பரப்பு சேதம்
- நிலச்சரிவுகள் – சுனாமி
- நிலம் அமிழ்தல்
3. நிலச்சரிவிற்கான காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் தருக.
விடை:
நிலச்சரிவுக்கான காரணங்கள்:
நிலச்சரிவு என்பது புவியீர்ப்பு விசையினால் பாறைகள், மண் மற்றும் தாவரங்கள் கீழ்நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வைக் குறிப்பதாகும்.
செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கியக் காரணங்களாகும்.
பலவீனமான தளர்ந்த நில அமைப்பு, காடழிப்பு, நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சுரங்கம் தோண்டுதல், மலைப் பிரதேசங்களில் சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகளின் கட்டுமானம் ஆகியவை நிலச்சரிவுக்கான பிற காரணங்களாகும்.
சுமார் 15% நிலப்பரப்பு இந்தியாவில் நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகள்.
இமயமலைச் சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் காணப்படுகின்றன. கொடைக்கானல் மற்றும் உதகமண்டலம் தமிழ்நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
4. நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க.
விடை:
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்:
- நீர்மாசு என்பது நீரின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
- நீர்மாசு மனித மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது.
- மாசு நிறைந்த நீரை பயன்படுத்துவதால் அல்லது பருகுவதால் மனிதருக்கு பல நோய்கள் உண்டாகின்றன. நீர்மாசு டைபாய்டு, காலரா, மஞ்சட்காமாலை போன்ற பல நோய்களை உண்டாக்குகிறது.
- நீர்மாசு அகற்றப்படாவிட்டால் அது முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை நிலைகுலையச் செய்துவிடும்.
- நீர்நிலைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஆல்காக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இவை ஏரி அல்லது குளங்களின் மேற்பரப்புகளில் அடுக்குகளாக படிந்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் பாக்டீரியாக்கள் நீர்நிலைகளில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கின்றன. இது நீர்நிலை உயிரிகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன.
- நீரிலுள்ள மாசுபடுத்திகளை உணவாக நீர்வாழ் உயிரினங்கள் (மீன், ஷெல் மீன்கள்) பயன்படுத்தும் போதும், நீர்வாழ் உயிரினங்களை மனிதன் பயன்படுத்தும் போதும் உணவுச் சங்கலி பாதிக்கப்படுகிறது.
Other Important Links for 8th Social Science Book Back Answers Tamil Medium:
Click Here to download Samacheer Kalvi’s 8th Social Science Book Back Answers Tamil – 8th Social Science Book Back Answers Tamil Medium
Good