06 Jun 2022

Samacheer Kalvi 8th Science Unit 9 Answers in Tamil

Samacheer Kalvi 8th Science Unit 9 Book Back Answers in Tamil:

Samacheer Kalvi 8th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 8 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள் அலகு 9 – நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Answers/Solutions are provided on this page. 8th Std Science Book consists of 23 units, All Science Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  Samacheer Kalvi 8th Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Class 8th Standard Science Book Back Answers PDF. Check the Science book back Answers below. See below for the 8th New Science Syllabus Book Back guide/Answers free PDF download:




Samacheer Kalvi 8th Science Book Back Solutions in Tamil PDF:

8th Science Subject 1 Mark and 2 Mark Solutions PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 8th Science Unit 4 Answers in Tamil are given below.

அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள்

அலகு 9 – நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்
அ) தாமிரம்
ஆ) பாதரசம்
இ) வெள்ளி
ஈ) தங்கம்
விடை : ஆ) பாரதரசம்

2. இரசவாதிகள் நீரைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய படக்குறியீடு
8th Science Book Back Answers Tamil
விடை :
8th Science Book Back Answers

3. எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை ?
அ) புளூட்டோனியம்
ஆ) நெப்டியூனியம்
இ) யுரேனியம்
ஈ) பாதரசம்
விடை: ஈ) பாதரசம்

4. பாதரசத்தின் குறியீடு
அ) Ag
ஆ) Hg
இ) Au
ஈ) Pb
விடை : ஆ) Hg

5. கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?
அ) நைட்ரஜன்
ஆ) ஆக்ஸிஜன்
இ) குளோரின்
ஈ) கார்பன்
விடை: ஈ) கார்பன்

6. உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?
அ) கம்பியாக நீளும் பண்பு
ஆ) தகடாக விரியும் பண்பு
இ) தகடாக விரியும் பண்பு
ஈ) பளபளப்புத் தன்மை
விடை: ஆ) தகடாக விரியும் பண்பு

7. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
அ) கார்பன்
ஆ) ஆக்ஸிஜன்
இ) அலுமினியம் ஈ) சல்ஃபர்
விடை: அ) கார்பன்

8. கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது
அ) கிராஃபைட்
ஆ) வைரம்
இ) அலுமினியம்
ஈ) கந்தகம்
விடை: அ) கிராஃபைட்

9. மூலக்கூறுகளின் அமைப்பைக் கொண்டு பின்வரும் பொருள்களின் இயற்பியல் நிலைகளைக் அடையாளம் காண்க.
அ) A – வாயு, B – திண்ம ம், C – திரவம்
ஆ) A – திரவம், B -திண்ம ம், C- வாயு
இ) A – வாயு, B – திண்ம ம், C – திரவம் A
ஈ) A – திரவம், B – வாயு, C – திண்ம ம்
விடை: அ) A – வாயு, B – திண்மம், C – திரவம்
8th Science Book Back Answers Tamil

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் – என அழைக்கப்படுகின்றன.
விடை: உலோகப்போலிகள்

2. டங்ஸ்ட னின் குறியீடு
விடை: W

3. பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட
விடை: அதிகம்

4. நீரில் உள்ள தனிமங்கள் ……………… மற்றும் ………………….
விடை: ஹைட்ரஜன், ஆக்சிஜன்

5. ……………….. குறை கடத்தியாகப் பயன்படுகிறது.
விடை: சிலிக்கன் அல்லது ஜெர்மானியம்

III. பொருத்துக:

8th Science Book Back Answers in Tamil




IV. மிகச் சுருக்கமாக விடையளி:

1. கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?
விடை:
உலோகங்களை இழுத்து மெல்லிய கம்பியாக மாற்றும் பண்பிற்கு கம்பியாக நீளும் தன்மை என்று பெயர்.

2. பின்வரும் சேர்மங்களில் உள்ள தனிமங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
அ) கார்பன் மோனாக்சைடு
ஆ) சலவை சோடா
விடை:
8th Science Book Back Answers Tamil

3. பின்வரும் தனிமங்களின் குறியீடுகளை எழுதுக.
அ) ஆக்ஸிஜன்
ஆ) தங்கம்
இ) கால்சியம்
ஈ) காட்மியம்
உ) இரும்பு
விடை:
8th Science Book Back Answers in Tamil

4. நாம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் போது உள்ளிழுத்துக் கொள்வதுமான அலோகம் எது?
விடை:
நாம் உயிர்வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் போது உள்ளிழுத்துக்கொள்வதுமான அலோகம் ஆக்சிஜன் ஆகும்.

5. ஏன் ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன?
விடை:
உலோகங்கள் தட்டப்படும்போது தனித்துவமான ஒலி எழுப்பும் பண்பைப் பெற்றுள்ளதால், ஆலய மணிகள் செய்ய பயன்படுகின்றன.

6. வேதிக்குறியீடுகள் தரும் தகவல்கள் யாவை?
விடை:
வேதிக்குறியிடுகள் தனிமங்களின் பெயர்களை சுருக்க வடிவில் குறிக்கின்றன.

7. உலோகப் போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
உலோகப் போலிகள் : > சிலிக்கன் – போரான்

8. திரவ நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பிடுக.
விடை:
திரவ நிலையில் உள்ள மூன்று சேர்மங்கள்

  • நீர்
  • கந்தக அமிலம்
  • அசிட்டிக் அமிலம் (வினிகர்)

9. உலோகப் போலிகளின் ஏதேனும் மூன்றைக் குறிப்பிடுக.
விடை:
உலோகப் போலிகளின் பண்புகள்:

  • அறை வெப்பநிலையில் உலோகப் போலிகள் அனைத்தும் திண்மங்கள்.
  • உலோகப் போலிகளின் இயற்பியல் பண்புகள் உலோகங்களை ஒத்திருக்கின்றன.
  • உலோகப்போலிகளின் வேதியியல் பண்புகள் அலோகங்களை ஒத்திருக்கின்றன.
  • உலோகப்போலிகள், உலோகங்களுடன் சேர்ந்து உலோகக் கலவைகளை ஏற்படுத்துகின்றன.

V. சுருக்கமாக விடையளி:

1. ஊறுகாயை அலுமினியப் பாத்திரத்தில் வைக்கலாமா? காரணம் கூறுக.
விடை:

  • ஊறுகாயை அலுமினியப் பாத்திரத்தில் வைக்கக்கூடாது.
  • ஏனெனில் ஊறுகாயில் உள்ள அமிலங்கள், உலோக அலுமினியத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளிப்படுத்தும்.
  • இதனால் ஊறுகாய் கெட்டுப் போய்விடும்.

2. உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் ஏதேனும்
நான்கினை அட்டவணைப்படுத்துக.
விடை:
8th Science Book Back Answers in Tamil

3. சமையல் பாத்திரங்கள் ஏன் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன?
விடை:

  • அலுமினியம் மற்றும் பித்தளை சிறந்த வெப்பக் கடத்திகள்.
  • அலுமினியம் மற்றும் பித்தளை பாத்திரங்களின் உட்பகுதியில் வெள்ளீயம் பூசப்படுவதால், உணவுப் பொருட்களுடன் அவ் உலோகங்கள் வினைபுரிவது தடுக்கப்படுகிறது.
  • எனவே சமையல் பாத்திரங்கள் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன.

4. இரசவாதம் வரையறு.
விடை:
குறைந்த மதிப்புடைய உலோகங்களை தங்கமாக மாற்றும் செயலுக்கு இரசவாதம் என்று பெயர்.

5. பின்வரும் குறியீடுகளால் குறிக்கப் பெறும் தனிமங்களின் பெயர்களை எழுதுக.
அ) Na
ஆ) Ba
இ) W
ஈ) Al
உ) U
விடை:
8th Science Book Back Answers Tamil

6. ஏதேனும் ஆறு அலோகங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
விடை:
8th Science Book Solutions Tamil

7. ஏதேனும் நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.
விடை:
8th Science Book Back Answers Tamil

8. அலங்கார நகை தயாரிப்பில் பயன்படும் உலோகங்களைக் குறிப்பிடுக.
விடை:
அலங்கார நகைத் தயாரிப்பில் பயன்படும் உலோகங்கள்

  • தங்கம்
  • வெள்ளி
  • பிளாட்டினம்
  • தாமிரம்.

9. பின்வரும் சேர்மங்களின் பயன்களைக் குறிப்பிடுக.
அ. ரொட்டிசோடா
ஆ. சலவைத்தூள்
இ. சுட்ட சுண்ணாம்பு
விடை:
8th Science Book Back Answers in Tamil

VI. காரணம் கூறுக:

1. பின்வருவனவற்றிற்கான காரணங்களை எழுதுக.
அ) உணவுப் பொருள்களை உறையீடு செய்வதற்கு அலுமினியத் தகடுகள் பயன்படுகின்றன.

  • அலுமினியம் உலோகமாதலால் மெல்லிய தகடாக அடித்து உணவுப் பொருள்களை கட்ட உதவும் உறைகள் செய்யப் பயன்படுகின்றன.
  • மேலும் அலுமினியம் பொதுவாக உணவுப்பொருள்களுடன் வினை புரியாது.

ஆ) திரவங்களை சூடுபடுத்துவதற்கான மூழ்குத் தண்டுகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன.

  • உலோகங்கள் சிறந்த வெப்பக் கடத்திகள், எனவே திரவங்களை சூடுபடுத்துவதற்கான மூழ்குத் தண்டுகள் செய்யப் பயன்படுகின்றன.

இ) சோடியம், பொட்டாசியம் ஆகிய இரண்டும் மண்ணெண்ணெயின் உள்ளே வைக்கப்படுகின்றன.

சோடியம் மற்றும் பொட்டாசியம் காற்றுடன் வினைபுரிந்து ஆக்சைடு மற்றும் கார்பனேட் படலங்களை உருவாக்குவதால் அவற்றின் நிறம் மங்குகிறது. எனவே காற்றுடன் வினைபுரிவதை தடுக்க சோடியமும், பொட்டாசியமும் மண்ணெண்ணெயினுள் வைக்கப்படுகிறது. நீருடன் இவை வினைபுரிவதால் நீரினுள் வைக்க இயலாது.

ஈ) வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்த காரணம்

  • அதன் அதிக அடர்த்தி
  • வெப்பத்தினால் சீராக விரிவடையும் அதன் தன்மை

2. கல் அல்லது மரம் போன்ற பொருள்களில் இருந்து கம்பிகளைத் தயாரிக்க முடியவில்லை , ஏன்?
Answer:
கல் அல்லது மரம் போன்ற பொருள்கள் இழுக்கப்படும் போது மெல்லிய கம்பியாக நீளும் பண்பினை பெறவில்லை. எனவே கல் அல்லது மரம் போன்ற பொருள்களில் இருந்து கம்பிகளை தயாரிக்க முடியவில்லை.

Other Important links for 8th Science Book Back Answers in Tamil:

Click here to download the complete 8th Science Book Back Solutions – Samacheer Kalvi 8th Science Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *