06 Jun 2023

Samacheer Kalvi 8th Science Unit 6 Answers in Tamil

Samacheer Kalvi 8th Science Unit 6 Book Back Answers in Tamil:

Samacheer Kalvi 8th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 8 New Syllabus 2023 to 2024 Book Back Question & Answer available for both English and Tamil Mediums. 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள் அலகு 6 – ஒலியியல் Answers/Solutions are provided on this page. 8th Std Science Book consists of 23 units, All Science Book Back One, and Two Mark Solutions are given below.

Check Unit wise and  Samacheer Kalvi 8th Science Book Back Solutions Answers in Tamil PDF format for Free Download. English, Tamil, Maths, Science, and Social Science Book Back Question and Answer is available in PDF. Class 8th Standard Science Book Back Answers PDF. Check the Science book back Answers below. See below for the 8th New Science Syllabus Book Back guide/Answers free PDF download:




Samacheer Kalvi 8th Science Book Back Solutions in Tamil PDF:

8th Science Subject 1 Mark and 2 Mark Solutions PDF are available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes. Samacheer Kalvi 8th Science Unit 4 Answers in Tamil are given below.

அறிவியல் பாடப்புத்தக வினாவிடைகள்

அலகு 6 – ஒலியியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?
அ) காற்று
ஆ) உலோகங்கள்
இ) வெற்றிடம்
ஈ) திரவங்கள்
விடை: ஆ) உலோகங்கள்

2. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?
i) அதிர்வெண்
ii) கால அளவு
iii) சுருதி
iv) உரப்பு
அ) i மற்றும் ii
ஆ) ii மற்றும் iii
இ) iii மற்றும் iv
ஈ) i மற்றும் iv
விடை: அ) i மற்றும் ii

3. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது.
அ) வேகம்
ஆ) சுருதி
இ) உரப்பு
ஈ) அதிர்வெண்
விடை: இ) உரப்பு

4. சித்தார் எந்த வகையான இசைக்கருவி?
அ) கம்பிக்கருவி
ஆ) தாள வாத்தியம்
இ) காற்றுக் கருவி
ஈ) இவை எதுவும் இல்லை
விடை: அ) கம்பிக்கருவி

5. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
அ) ஹார்மோனியம்
ஆ) புல்லாங்குழல்
இ) நாதஸ்வரம்
ஈ) வயலின்
விடை: ஈ) வயலின்

6. இரைச்சலை ஏற்படுத்துவது.
அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்
ஆ) வழக்கமான அதிர்வுகள்
இ) ஒழங்கான மற்றும் சீரான அதிர்வுகள்
ஈ) ஒழங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
விடை: ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்

7. மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
அ) 2Hz முதல் 2000Hz வரை
ஆ) 20Hz முதல் 2000Hz வரை
இ) 20Hz முதல் 20000Hz வரை
ஈ) 200Hz முதல் 20000Hz வரை
விடை: இ) 20Hz முதல் 20000Hz வரை

8. ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?
அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
ஆ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது.
இ) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
ஈ) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
விடை : அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்

9. இரைச்சலால் ஏற்படுவது எது?
அ) எரிச்சல்
ஆ) மன அழுத்தம்
இ) பதட்டம்
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. ஒலி …………….. ஆல் உருவாக்கப்படுகிறது.
விடை: அதிர்வுகளால்

2. தனி ஊசலின் அதிர்வுகள் ……………… என்றும் அழைக்கப்படுகின்றன.
விடை: அலைவுகள்

3. ஒலி ……………… வடிவத்தில் பயணிக்கிறது.
விடை: இயந்திர அலை

4. உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் . ….. மீயொலி
விடை: எனப்படுகின்றன.

5. ஒலியின் சுருதி அதிர்வுகளின் …………. ஐச் சார்ந்த து.
விடை: வீச்சை

6. அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி
விடை: குறையும்

III. பொருத்துக:

Add New Post ‹ Government Exams — WordPress




IV. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்:

அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு. ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
உ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று : மின்னல் தாக்கும் போது மின்னலைப் பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி கேட்கப்படுகிறது.
காரணம் : ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம்
விடை : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்

2. கூற்று : சந்திரனின் மமற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாது.
காரணம் : சந்திரனில் வளிமண்டலம் இல்லை
விடை : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்

V. சுருக்கமான விடையளி:

1. அதிர்வுகள் என்றால் என்ன?
விடை :

  • அதிர்வு என்பது ஒரு பொருளின் முன்னும் பின்னுமான இயக்கம் ஆகும்.
  • இவ்வியக்கமானது அதிர்வுகளை உண்டாக்கும்

2. ஒளி, ஒலியை விட வேகமாகப் பயணிக்கிறது என்பதை நிரூபிக்க ஒரு உதாரணம் தருக?
விடை :

  • இடி ஓசை கேட்கும் முன் மின்னலை நாம் காண்கிறோம்.
  • ஃபோகார்ன் ஓசை கேட்கும் முன் கலங்கரை விளக்கத்திலிருந்து வெளிச்சம் வருவதை காண்கிறோம்.

3. ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சு எவ்வளவு மாற்றப்பட வேண்டும்?
விடை :

  • ஒலியின் உரப்பு & (அதிர்வுகளின் வீச்சு)-2
  • எனவே ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சை ‘இருமடங்காக மாற்றப்பட வேண்டும்.

4. மீயொலி என்றால் என்ன?
விடை :

  • 20000Hz விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி என அழைக்கப்படுகிறது.
  • வௌவால்கள், நாய்கள், டால்பின்கள் போன்ற விலங்குகள் சில மீயொலிகளை கேட்க முடிகிறது.

5. இசைக்கும் இரைச்சலுக்கும் இடையிலான இரண்டு வேறுபாடுகளைத் தருக.
விடை: இசை

  1.  இசை நம் காதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
  2. சீரான அதிர்வுகளால் இவை உருவாக்கப்படுகிறது.
  3. வயலின், கிட்டார், புல்லாங்குழல் போன்றவற்றிலிருந்து தோன்றும் ஒலி

இரைச்சல்

  1. இரைச்சல் எப்போதும் ஒரு விரும்பத்தகாத ஒலி ஆகும்.
  2.  சீரற்ற அதிர்வுகளால் இவை உருவாக்கப்படுகிறது.
  3.  வாகனங்கள் எழும்பும் ஒலி பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஒலி

6. ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை?
விடை :

  • இரைச்சலானது எரிச்சல், மன அழுத்தம், பதட்டம் மற்றும் தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.
  • இரைச்சல் நீண்ட காலத்திற்கு கேட்கும் கோது ஒரு நபரின் தூக்க முறை மாறுபடும்.
  • இரைச்சல் தொடர்ந்து கேட்கும்போது செவிப்புலன் திறனை பாதிக்கலாம். சில நேரங்களில் இது செவிப்புலன் இழப்புக்கு வழிவகுக்கிறது.
  • திடீரென ஏற்படும் இரைச்சல் மாரடைப்பு மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
  • இது ஒருவரின் வேலையில் கவனமின்மையை ஏற்படுத்து . கா. ம்பு ஒலி பெருக்கிகள், ஒலி பெருக்கிகள் போன்றவற்றின் சத்தம், கவனமின்மையை ஏற்படுத்துகிறது.
  • ஒலி மாசுபாடு ஒருவரின் மன அமைதியை பாதிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் அல்லது சட்டென கோபப்படுதல் போன்ற நோயை ஏற்படுத்துகிறது.

7. ஒலி மாசுபாட்டினைக் குறைக்க எடுக்க வேண்டிய இரண்டு நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
விடை :

  • வாகனம் ஓட்டும் போது அதிகப்படியாக (ஹார்ன்) ஒலி எழுப்பும் கருவிகளைத் தவிர்க்க மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

8. பின்வரும் சொற்களை வரையறுக்கவும்: அ) வீச்சு, ஆ) உரப்பு
விடை :
அ) வீச்சு:

  • அலையின் வீச்சு என்பது மையப்புள்ளியில் இருந்து துகளின் அதி பட்ச இடப்பெயர்ச்சி ஆகும்.
  • இவை’A’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. வீச்சின் அலகு மீட்டர்’ (m).

ஆ) உரப்பு:

  • மெல்லிய அல்லது பலவீனமான ஒலியை உரத்த ஒலியிலிருந்து வேறுபடுத்துவதற்கு உதவும் ஒலியின் சிறப்பியல்பே ‘உரப்பு’ ஆகும்.
  • இதன் அலகு ‘டெசிபல்’ (dB).

9. மரங்களை நடுவது எவ்வாறு ஒலி மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது?
விடை :

  • மரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) மட்டும் உறிஞ்சுவதில்லை . இவை நிழல், மண் அரிப்பு தடுப்பு போன்றவற்றிற்கும் உதவுகிறது. மேலும் மரங்கள் ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும் உதவுகிறது.
  • ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு வழிமுறை ஒலி உறிஞ்சப்படுதல் (மரத்தினால்) ஆகும்.
  • மரத்தின் பகுதிகளான இலைகள், கிளைகள் மற்றும் கட்டைகள் போன்றவை ஒலியை அதிகப்படியாக உறிஞ்சுகின்றன. இதனால் ஒலி மாசுபாட்டை குறைக்கப்படுகிறது.

VI. விரிவான விடையளி:

1. ஒலி வெற்றிடத்தின் வழியாகப் பரவ முடியாது என்பதைக் காட்ட ஒரு சோதனையை விவரி.
விடை :
8th Science Book Back Answers in Tamil

  • மணி ஜாடி மற்றும் அலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அலை பேசியில் இசையை இசைக்க செய்து ஜாடியில் வைக்கவும்.
  • இப்போது ஒரு வெற்றிட பம்பைப் பயன்படுத்தி மணி
    வெற்றிட பம்பு ஜாடியிலிருந்து காற்றை வெளியேற்றவும்.
  • ஜாடியிலிருந்து மேலும் காற்று அகற்றப்படுவதால்
    அலைபேசியிலிருந்து வரும் ஒலி குறைந்து கொண்டே வந்து இறுதியில் நின்று விடுகிறது.
  • இந்த சோதனையிலிருந்து ஒலி வெற்றிடத்தில் பரவ முடியாது என்பது தெளிவாகிறது.

2. அலையின் பண்புகள் யாவை?
விடை :

  • அலை இயக்கத்தில் ஆற்றல் மட்டுமே கடத்தப்படுகிறது துகள்கள் அல்ல.
  • இவ்வியக்கத்தின் வேகம் அதிர்வும் துகளின் திசைவேகத்திலிருந்து வேறுபட்டது.
  • ஒரு இயந்திர அலையின் பரவலுக்கு நிலைமம், சீரான அடர்த்தி, மீட்சி தன்மை , துகள்களுக்கிடையே குறைந்த உராய்வு போன்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

3. ஒலி மாசுபாட்டின் விளைவுகளைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
விடை :

  • சமூக, மத மற்றும் அரசியல் விழாக்களில் ஒலிபெருக்கிகளைக் பயன்படுத்துவதற்கு கடுமையான வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • அனைத்து வாகனங்களும் குறைவான ஒலியெழுப்பும் சைலன்சர் கொண்டிருக்க வேண்டும்.
  • அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் குறைந்த ஒலியில் இயக்கப்பட வேண்டும்.
  • குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்.
  • இரைச்சலான தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்கள் காது பாதுகாப்பான்களை அணிய வேண்டும்.
  • மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி தொழிற்சாலைகளைச் சுற்றி பசுமை தாழ்வாரங்கள் அமைக்கப்பட வேண்டும்.

4. மனித காதின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி?
8th Science Book Back Answers in Tamil
விடை :

  • மனித காதுகளின் வெளிப் புறம் மற்றும் புலப்படும் பகுதி பின்னா ‘ (வளைந்த வடிவத்தில்) என்று அழைக்கப் படுகிறது.
  • இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியை சேகரிக்கும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பின்னர் அது காது கால்வாய் வழியாக காது டிரம்பை டிம்பானிக் சவ்வு) அடையும்.
  • உள் காதிலிருந்து அதிர்வுகள் சிக்னல்கள் வடிவில் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. மூளை அவற்றை ஒலிகளாக உணர்கிறது.




VII. கணக்கீடுகள்:

1. துப்பாக்கியால் சுடப்பட்ட ஒலியை ருத்விக் மற்றும் ருகா ஆகிய இருவரும் 2 வினாடிக்குப்
பிறகு கேட்கிறார்கள். துப்பாக்கி சுடப்பட்ட தொலைவிலிருந்து எவ்வளவு தொலைவில் அவர்கள் இருக்கிறார்கள்? (காற்றில் ஒலியின் வேகம் 331ms-1)
தீர்வு:
துப்பாக்கியால் சுடப்பட்ட பின் கேட்கும் கால அளவு = 2 வினாடிகள்.
காற்றில் ஒலியின் வேகம் 331ms-1
வேகம் = தொலைவு / நேரம்
330 = தொலைவு /2
தொலைவு = 2 × 331 = 662
துப்பாக்கியிலிருந்து 662 m தொலைவில் உள்ளார்

2. ஒரு ஒலி அலை 8 வினாடிகளில் 2000மீ
பயணிக்கிறது எனில் ஒலியின் வேகம்
என்ன ?
தொலைவு d = மீ
காலம் t = 8s
வேகம் v = ?
தீர்வு:
V = d/t
= 2000/8
v = 250 m/s)

3. 500 ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒரு ஒலி அலை 200 மீ/வி வேகத்தில் பரவுகிறது அதன் அலைநீளம் என்ன?
அதிர்வெண் n = 500 Hz (or) s
திசைவேகம் V = 200 m/s
அலைநீளம் λ = ?
தீர்வு:
8th Science Book Solutions Tamil

Other Important links for 8th Science Book Back Answers in Tamil:

Click here to download the complete 8th Science Book Back Solutions – Samacheer Kalvi 8th Science Book Back Answers




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *