01 Jun 2022

Samacheer kalvi 7th Science Term 1 Unit 5 Answers in Tamil

Samacheer Kalvi 7th Science Term 1 Unit 5 Book Back Questions and Answers:

Samacheer Kalvi 7th Standard New Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers PDF uploaded and available below. Class 7 New Syllabus 2021 to 2022 Book Back Question & Answer solutions available for both English and Tamil Medium. 7ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 5 – தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 7th Science Term 1 Unit 5 Answers in Tamil Medium Questions and Answers can check below.

We also provide class 7th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 7th standard Science பருவம் 1 அலகு 5 – தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Book Back Questions with Answer PDF:

For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil




Samacheer Kalvi 7th Science Book Back அலகு 5 பருவம் 1 Solutions Guide PDF:

Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.

அறிவியல் – பருவம் 1

அலகு 5 – தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
அ) பிரையோபில்லம்
ஆ) பூஞ்சை
இ) வைரஸ்
ஈ) பாக்டீரியா
விடை: அ) பிரையோபில்லம்

2. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
அ) ஸ்போர்கள்
ஆ) துண்டாதல்
இ) மகரந்தச் சேர்க்கை
ஈ) மொட்டு விடுதல்
விடை: ஈ) மொட்டு விடுதல்

3. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) மலர்
விடை: ஈ) மலர்

4. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
அ) காற்று
ஆ) நீர்
இ) பூச்சிகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும்

5. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
அ) வெற்றிலை
ஆ) மிளகு
இ) இவை இரண்டும்
ஈ) இவை இரண்டும் அன்று
விடை: இ) இவை இரண்டும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு ………………
விடை: மகரந்தத்தாள்

2. …………….. என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்
விடை: சூற்பை

3. கருவுறுதலுக்குப் பின் சூல் …………….. ஆக மாறுகிறது.
விடை: விதை

4. சுவாச வேர்கள் ……………….. தாவரத்தில் காணப்படுகின்றன.
விடை: அவிசினியா

5. வெங்காயம் மற்றும் பூண்டு ……………. வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை: தரைகீழ்த்தண்டு குமிழம்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

1. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.
விடை: சரி

2. அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்
விடை:
தவறு – மகரந்தத்தூள் சூலக முடியை அடைவது மகரந்தச் சேர்க்கை

3. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்
விடை: சரி

4. இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்
விடை: தவறு – இஞ்சி – தரைகீழ் தண்டு

5. சோற்றுக்கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் பற்றுள்ளதாக உள்ளன.
விடை: சரி

IV. பொருத்துக:

7th Science Book Back Answers
விடை:
7th Science Book Back Answers in Tamil




V. மிகச் சுருக்கமாக விடையளி:

1. தாவரத்தில் காணப்படும் இருவகையான இனப் பெருக்க முறைகளை எழுது.
விடை:
a) பாலினப் பெருக்கம்
b) பாலில்லா இனப்பெருக்கம்

2. மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?
விடை:

  1. மகரந்தத்தாள்
  2. சூலகத்தாள்

3. மகரந்தச் சேர்க்கை – வரையறு.
விடை:
ஒரு மலரில், மகரந்தத்தூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச்சேர்க்கை

4. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?
விடை:

  • காற்று
  • பூச்சிகள்
  • பறவைகள்
  • நீர்

5. கந்தம் மற்றும் கிழங்கு ஆகியவற்றிற்க்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:
கந்தம் – சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
கிழங்கு – உருளைக்கிழங்கு

6. பற்றுக் கம்பிகள் என்றால் என்ன?
விடை:

  • ஏறுகொடிகளில் இலையும், இலையின் பாகங்களும் நீண்ட பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளன.
  • இவை ஏறுகொடிகளைத் தாங்கிகளில் பற்றி எனப்படும்.
    ஏற உதவுகின்றன.
  • எ.கா. பைசம் சட்டைவம் – நுனிச்சிற்றிலை பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

7. முட்கள் என்றால் என்ன?
விடை:
இலைகள் முட்களாக மாறியதால் தண்டு பசுமையாகி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது. எ.கா. கள்ளி

VI. சுருக்கமாக விடையளி:

1. இருபால் மலரை, ஒருபால் மலரிலிருந்து வேறுபடுத்து.
விடை:
7th Science Book Back Solutions

2. அயல் மகரந்தச் சேரக்கை என்றால் என்ன?
விடை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

3. இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.
விடை:
அகேஷியா ஆரி குலி பார்மிஸ் தாவரத்தில் இலைக்காம்பு அகன்று, இலைபோல் மாறி இலை செய்யவேண்டிய ஒளிச்சேர்க்கை வேலையை இலைக்காம்பு மேற்கொள்கிறது. அதே

VII. விரிவாக விடையளி:

1. மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
விடை:
மலரில் மகரந்த தூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
7th Science Answers in Tamil
சேர்க்கை செயற்கை மகரந்தச் சேர்க்கை :
நாம் ஆண்மலரில் உள்ள மகரந்தத் தூளை பெண்மலரில் உள்ள சூலக முடியில் சேர்த்தால் அது செயற்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

இயற்கை மகரந்தச் சேர்க்கை :
இயற்கையாகவே பல்வேறு வழிமுறைகளில் (நீர், காற்று, தேனி, பூச்சிகள், பறவைகள் மூலம்) மலரின் கலக முடியை மகரந்தத்தாள் சென்றடைவது இயற்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

  • புற்கள், லேசான மகரந்தத்தூளை உருவாக்கும்.
  • கரந்தப்பை, மகரந்தத்தூளை உதிர்க்கும் போது காற்று அதை எடுத்துச் சென்று அருகில் உள்ள மலரில் சேர்க்கும்.
  • பூச்சிகள் மற்றும் பறவைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்.
  • தேனீ, வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றி வட்டமிடும்.
  • இவை ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்குச் செல்லும் போது அதன் கால்கள், இறக்கைகள் மற்றும் வயிற்றில் மகரந்தத்தூள்கள் ஒட்டிக் கொள்ளும் இதன் மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கை அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
  • இதே போல் காற்று மலரை அசைக்கும் போது மகரந்தத்தூள் உதிர்ந்து அதே மலரின் சூலக முடியை அடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும். இது பெரும்பாலும் இருபால் மலரில் நடக்கிறது.

2. தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக.
விடை:

  • பொதுவாகத் தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால் சில தண்டுகள் தரைக்கு கீழ் வளர்ந்து உணவைச் சேமிக்கிறது.
  • இத்தகைய தரைகீழ்த் தண்டுகள் பருத்தும், தடித்தும் காணப்படும்.
    தரைகீழ்த் தண்டு நான்கு வகைப்படும்

    1. மட்ட நிலத்தண்டு
    2. கந்தம்
    3. கிழங்கு
    4. குமிழம்

மட்ட நிலத்தண்டு :

  • தண்டு தரைக்குக் கீழ் இருக்கும்.
  • இது கணு மற்றும் கணுவிடைகளோடு தடித்து காணப்படும்.
  • கணுவில் செதில் இலைகள் தோன்றம்
  • இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும் குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும்.
  • இதன் தண்டில் உள்ள மொட்டுகள் முளைத்து புதிய தண்டு மற்றும் இலைகளை உருவாக்கும். எ.டு. இஞ்சி, மஞ்சள்

கந்தம் :

  • இத்தரைக்கீழ் தண்டு வட்ட வடிவில் இருக்கும்
  • மேற்பகுதியும், அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும்.
  • இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து ஒன்று அல்லது பல மொட்டுகள் உருவாகும்.
  • ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய்த் தாவரங்களை உருவாக்கும். எ.டு. சேனை, சேப்பங்கிழங்கு

கிழங்கு :

  • இது கோள வடிவில் உணவைச் சேமிக்கும் தரைகீழ்த் தண்டாகும்.
  • இதன் தண்டில் வளர்வடங்கிய மொட்டுகள் காணப்படும் (கண்கள்)
  • இக்கிழங்கின் ஒரு பகுதியை அதன் மொட்டோடு வெட்டி நடுவதன் மூலம் அவை முளைத்து புதிய தாவரத்தைத் தரும் எ.டு. உருளைக்கிழங்கு.

குமிழம் :

  • இதன் தண்டு மிகவும் குறுகியது. தட்டு போன்றது.
  • இதன் சதைப்பற்றான இலைகள் உணவைச் சேமிக்கும்.
  • இதில் இரண்டு வகை இலைகள் உள்ளன.
    1. சதைப்பற்றுள்ள இலை
    2. செதில் இலை
  • குமிழத்தின் உள்ளே உள்ள இலைகள் உணவைச் சேமிக்கும். எ.கா. பூண்டு, வெங்காயம்




VIII. உயர் சிந்தனை வினாக்கள்:

1. இஞ்சி என்பது தண்டு. அது வேர் அல்ல ஏன்?
விடை:

  • ஆம் இஞ்சி என்பது தண்டின் மாற்றுருவாகும்.
  • இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும், குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும்.
  • இந்த தரைகீழ்தண்டு உணவைச் சேமிக்கும்.
  • இது கணு மற்றும் கணுவிடைகளோடு இருக்கும்.

2. ரோஜா மலரின் மகரந்தத் தூள், லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் என்ன – நடைபெறும்? அதில் மகரந்தத் தூள் வளர்ச்சியடையுமா? ஏன்?
விடை:

  • ரோஜா மலரின் மகரந்த்தூள் லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் அது வளர்ச்சி அடையாது.
  • மேலும் லில்லி மலரின் சூலக முடியானது அதன் இனத்தின் மகரந்தத் தாளினை மட்டும் இனங்கண்டு மகரந்தச் சேர்க்கை நடந்து கருவுறுதல் நிகழும். ரோஜா மலரின் மகரந்தத்தை ஏற்றுக் கொள்ளாது.

IX. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி:

1. கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

2. கூற்று : கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.
காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
விடை: இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

X. படம் சார்ந்த கேள்விகள்:

1. பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களைக் குறிக்கவும்.
7th Science Book back Answer
விடை:
7th Science Book in Tamil\\
சூலகமுடி சூலகம் மகரந்தக்கம்பி சூல் புல்லி மகரந்தத்தாள் அல்லி சூலகத்தண்டு மகரந்தத்தாள் சூற்பை

ii. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு தாவரங்களை அடையாளம் காண்க.
பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.
Samacheer Kalvi 7h Science Book Back Answers in Tamil
விடை:
7th Science Book in Tamil

Other Important links for 7th Science Book Back Answers:

For all three-term of 7th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 7th Science Book Back Answers in Tamil

For Tamil Nadu State Board Class 7th Standard Book Back Guide PDF, Click the link – 7th Book Back Questions & Answers PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *