Samacheer Kalvi 6th Science Term 1 Unit 1 Book Back Questions and Answers:
Samacheer Kalvi 6th Standard Science Book Back 1 Mark and 2 Mark Question & Answers uploaded online and available PDF for free download. Class 6th New Syllabus Science Term 1 book back question & answer solutions guide available below for Tamil Medium. 6ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள் பருவம் 1 அலகு 1 – அளவீடுகள் Solutions are provided on this page. Students looking for Samacheer Kalvi 6th Science Term 1 Unit 1 Answers in Tamil Medium Questions and Answers can check below.
We also provide class 6th other units Book Back One and Two Mark Solutions Guide on our site. Students looking for a new syllabus 6th standard Science பருவம் 1 அலகு 1 – அளவீடுகள் Book Back Questions with Answer PDF:
For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil
Samacheer Kalvi 6th Science Book Back Chapter 1 Term 1 Solution Guide PDF:
Science Subject 1 Mark and 2 Mark Solutions Guide PDF available below. Click the Download option to download the book back 1 Mark & 2 Mark questions and answers. Take the printout and use it for exam purposes.
அறிவியல் – பருவம் 1
அலகு 1 – அளவீடுகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.
அ) மீட்டர் அளவு கோல்
ஆ) மீட்டர் கம்பி
இ) பிளாஸ்டிக் அளவுகோல்
ஈ) அளவு நாடா
2. 7மீ என்பது செ.மீ -ல்
அ) 70 செ.மீ
ஆ) 7 செ.மீ
இ) 700 செ.மீ
ஈ) 7000 செ.மீ
3. ஒரு அளவை அளவிடும் முறைக்கு என்று பெயர்
அ) இயல் அளவீடு
ஆ) அளவீடு
இ) அலகு
ஈ) இயக்கம்
4. சரியானதைத் தேர்ந்தெடு
அ) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
ஆ) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
ஈ) கி.மீ > செ.மீ > மீ > மி.மீ
5. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும் போது, உனது கண்ணின் நிலை _____ இருக்க வேண்டும்.
அ) அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக
ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
இ) புள்ளிக்கு வலது புறமாக
ஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்
II. சரியா தவறா என எழுதுக.
1. நிறையை 126 கிகி எனக் கூறுவது சரியே.
விடை: சரி
2. ஒருவரின் மார்பளவை அளவுகோல் பயன்படுத்தி அளவிட முடியும்.
விடை: தவறு
3. 10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்.
விடை: சரி
4. முழம் என்பது நீளத்தை அளவிடும் நம்பத் தகுந்த முறையாகும்.
விடை: தவறு
5. SI அலகு முறை என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அலகு முறையாகும்.
விடை: சரி
III. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. SI அலகு முறையில் நீளத்தின் அலகு _______
விடை: மீட்டர்
2. 500 கிராம் = _____ கிலோகிராம்.
விடை: 0.5.
3. டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு _____ என்ற அலகால் அளக்கப்படுகிறது
விடை: கிலோ மீட்டர்
4. 1மீ = _____ செ.மீ என அளவிடப்படுகிறது.
விடை: 100
5. 5 கி.மீ = ______ மீ.
விடை: 5000
IV. ஒப்புமை தருக.
1. சர்க்கரை : பொதுத்தராசு; எலுமிச்சை சாறு : ______ ?
விடை: அளவுசாடி.
2. மனிதனின் உயரம் : செ.மீ; கூர்மையான பென்சிலின் முனையின் நீளம் : ______?
விடை: மி.மீட்டர்
3. பால் : பருமன்; காய்கறிகள் : _____
விடை: எடை
V. பொருத்துக.
VI. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
1. மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
விடை:
1 மில்லிமீட்டர், 1 சென்டிமீட்டர், 1 மீட்டர், 1 கிலோ மீட்டர்.
VII. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக
1. 10-3 என்பது
விடை: மில்லிமீட்டர்
2. காலத்தின் அலகு
விடை: விநாடி
3. சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது
விடை: பிழை
4. கடிகாரம் காட்டுவது
விடை: நேரம்
5. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
விடை: நிறை
6. பல மாணவர்களின் பதிவுகளிலிருந்து கடைசியாக எடுக்கப்படும் ஒரு தனி அளவீடு
விடை: சராசரி
7. _____ என்பது ஒரு அடிப்படை அளவு
விடை: நீளம்
8. வாகனங்கள் கடக்கும் தொலைவைக் காட்டுவது
விடை: ஒடோமீட்டர்
9. தையல்காரர் துணியைத் தைக்க அளவிடப் பயன்படுத்துவது.
விடை: நாடா
10. நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு.
விடை: லிட்டர்
VIII. ஓரிரு வார்த்தைகளில் விடை தருக.
1. SI என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை:
பன்னாட்டு அலகு முறை [International System of units]
2. நிறையை அளவிடப் பயன்படும் ஒரு கருவி.
விடை:
பொதுத்தராசு.
3. பொருந்தாததைத் தேர்ந்தெடு.
விடை:
கிலோகிராம், மில்லி மீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்.
4. நிறையின் SI அலகு என்ன?
விடை:
கிலோகிராம்.
5. ஒரு அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் என்ன?
விடை:
- பன்மடங்கு
- துணைப் பன்மடங்குகள்.
IX. ஓரிரு வரிகளில் விடையளி:
1. அளவீடு – வரையறு.
விடை:
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது ‘அளவீடு’ எனப்படும்.
2. நிறை வரையறு.
விடை:
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும்.
3. இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக.
விடை:
தொலைவு = 43.65 கி.மீ (1 கி.மீ = 1000 மீட்டர்)
தொலைவு = 43650 மீட்டர் (1 மீட்டர் = 100 செ.மீ)
தொலைவு = 4365000 செ.மீ
4. அளவுகோலில் அளவிடும் போது, துல்லியமான அளவீடு பெறப் பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன?
விடை:
- இடமாறு தோற்றப் பிழையைத் தவிர்க்கவும்.
- அளவீட்டை கீழ்நோக்கி செங்குத்தாகப் பார்ப்பதன் மூலம் துல்லியமான அளவீட்டை பெறலாம்.
X. கீழ்க்கண்டவைகளைத் தீர்க்க.
1. உனது வீட்டில் இருந்து உனது பள்ளிக்கு இடையே உள்ள தொலைவு 2250மீ. இந்தத் தொலைவினை கிலோமீட்டராக மாற்றுக.
விடை:
வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு = 2250 மீ
தொலைவு = 2.250 கிலோமீட்டர்.
2. கூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும் போது அளவு கோலின் ஒரு முனை 2.0 செ.மீ மற்றும் அடுத்த முனை 12.1 செ.மீ என்ற இரு அளவுகளைக் காட்டினால் பென்சிலின் நீளம் என்ன?
விடை:
அளவு கோலின் ஒரு முனை = 2.0 செ.மீ
அடுத்த முனை = 12.1 செ.மீ
பென்சிலின் நீளம் = 10.1 செ.மீ (அல்லது) 10 செ.மீ மற்றும் 1 மி.மீ
XI. விரிவாக எழுதுக.
1. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.
விடை:
1. ஆவது முறை:
- ஒரு வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்கவும்
- கம்பியானது வளைகோட்டின் எல்லாப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்ய வேண்டும்.
- வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும் முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்க வேண்டும்.
- கம்பியை நேராக நீட்டி குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும், முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிடவும்.
- இதுவே வளைகோட்டின் நீளமாகும்.
2. ஆவது முறை :
- கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
- வளைகோட்டின் ஒரு முனையிலிருந்து கவையை வைத்து தொடங்கவும். மறுமுனை வரை அளந்து குறிக்க வேண்டும்.
- வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரிக்கவும். குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிட வேண்டும்.
- வளைகோட்டின் நீளம் = (பாகங்களின் எண்ணிக்கை × ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம்.
2. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக்
விடை:
Other Important links for Class 6th Book Back Answers:
Tamil Nadu Class 6th Standard Book Back Guide PDF, Click the link – 6th Book Back Questions & Answers PDF
For all three-term of 6th standard Science Book Back Answers Tamil Medium – Samacheer kalvi 6th Science Book Back Answers in Tamil